JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 12

Subageetha

Well-known member
அத்யாயம் 12

‘வாணிக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து வாராங்க ஆனந்த். வீட்டோட மூத்த பையனா நீ கூட இருந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும்’. சித்தப்பாவின் கோரிக்கை இது. அவன் மதிக்கும் சிறந்த மனிதர்களுள் அவன் சித்தப்பாவும் ஒருவர்.

அனு சித்தியை அவர் திருமணம் செய்து கொள்ளும்பொழுது அவன் சிறுவன் என்று சொல்ல முடியாதுதான்.!

முழு விவரமும் தெரியாத பருவம். அரும்பு மீசை மெல்ல பச்சை நிறத்தில் அரும்பி இருக்க, கூச்சம் மிக,மெல்ல மெல்ல அவரின் அருகே போய் நின்றவனை,வெகுநட்புடன் தலையை கோதி கொடுத்தவர். இன்றுவரை,அவனை நட்புக் குறையாமல்தான் நடத்துகிறார். அவர் இருக்கும் கல்வித்துறை அவரை கொஞ்சமே கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என கிண்டல் செய்ய வைத்தாலுமே,அவரை வயது பாகுபாடு இன்றி ஒரு நட்பாக நடத்த முடியும்.பழக இலகுவானவர்.



தான் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டெடுத்தவன், ‘சரிங்க சித்தப்பு,’ என சிரித்தான். இரண்டு நாட்களுக்கு விடுப்பு தெரிவித்துவிட்டு,சித்தப்பா சித்தியுடன் நேரம் செலவிட்டான்.

வாணி,என்றுமே சிவா அளவுக்கு இவனுடன் இழைந்தது கிடையாது. அதிகம் சிரிக்க மாட்டான். அரட்டையெல்லாம் சிவாவுடன் மட்டும்தான். வாணியை வளர்ந்த தங்கையாய் அவனால் இன்னுமே பார்க்க முடியவில்லை. அனு சித்தியின் இடுப்பில் இருக்கும் கைகுழந்தை. அந்த குழந்தைக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் எனும் எண்ணமே அவனுக்கு சிரிப்பாய் இருந்தது.

‘அவளுக்கு கல்யாண வயசு ஆகிடுச்சாம்மா? என்னால சுத்தமா நம்ப முடியல என்று சொல்லி சொல்லி மாஞ்சு போனான்.

அடப்போடா,பொண்ணுங்க வளர்ரது நம்ம கண்ணுக்குத்தான் தெரியாது. ஊருக்கே தெரியும்.என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமன்.பணி முடிந்து வீடு திரும்பிய களைப்பு அவருள் தெரிந்தது.மெல்ல அதை கவனித்தவன்யோசனையாகவே,

ஆமாப்பா,அவள குட்டி பொண்ணா பாத்தது. கல்யாண பொண்ணா யோசிக்க முடியலப்பா...என்றான் ஆனந்த்.

நீதான் ஆனந்த்,எல்லாத்தையும் விலக்கி நிறுத்தின,என்ற வார்த்தையை உள்ளே முழுங்கினாள் பாலா. ராமனுக்கு,தவறுகளை சுட்டிக்காட்டி பேசினால் பிடிக்காது.

‘மனுஷனா பொறந்தவன் தப்பு தவறு செய்யாமல் வாழ முடியாது. அப்படி வாழ்ந்தா அவன சாமின்னு ,ஞாநின்னு சொல்லுவாங்க!தவறுதலும்,அதை சரி செயுறதும் இயல்பு என்பார்.

அத்தானுக்கு,மெச்சூரிட்டி ஜாஸ்தி. உனக்கு பத்தாது பாலாக்கா என்பாள் அனு. அது தெரிஞ்சது தானே,என்றுவிட்டு முகவாயை தோளில் இடித்துக்கொண்டு போவாள் பாலா. அவளுக்கு தெரியாத ராமனா? ம்ஹூம்...மனுஷன் ஆழமும் ஜாஸ்திதான்.இன்றுவரை ஆனந்தனை அவர் ஒரு கேள்வியும் கேட்கவில்லையே?

பெற்ற மனமோ,மகனுக்கும் திருமணம் செய்து பார்க்க விழைகிறது. அவனோ,முப்பதுகளில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான்.

வாணியை அழைத்துக்கொண்டு, பெண்பார்க்கும் ஸம்ப்ரதாயம் முன்னிட்டு சிவா சென்னை வந்தான்.அவளை நல்ல அழகு நிலையம் அழைத்துசென்று, முகத்திர்க்கு பேஷியல்,கை,கால்கள் பெடிக்யுர்,மெனிக்யூர் என எல்லா வேலைகளும் செய்து அழைத்துவரும் பொறுப்பை சிவா ஏற்றான்.

அண்ணனும்,தங்கையுமாக, ஆக்டிவாவில் செல்வதை பெருமூச்சுடன் சாளரம் வழியே பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த்.

‘சிவாவால எப்படி பொண்ணுங்க விஷயத்துல இவ்வளவு பொறுமையா இருக்க முடியுது? அதுவும் பார்லர் போனா மூணு மணி நேரமாவது ஆகாது? ஆனந்தின் மனம் தம்பியின் பொறுமையில் நிஜமாகவே ஆச்சர்யம் கொண்டது. நீண்ட பெருமூச்சை வெளியேற்றி விட்டு,சித்தப்பாவுடன் வெளியே கிளம்பினான்.

பெண்ணும் அவர்கள் பையனும் நேரில் பார்த்து பிடித்திருந்தால்,அந்த வார இறுதியில் நிச்சயம் என்பதாகவே பேச்சு.மிக நெருங்கிய நட்பு வட்டம் என அனு சித்தி ஏற்கனவே சொல்லி இருந்ததால் அநேகமாக திருமணம் உறுதி செய்யப்படும் நிலைதான்!

அவர்கள் வீட்டில் தங்கள் பையனுக்கு இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் முடியாவிட்டால், இரண்டு வருஷங்கள் ஆகும் என்று ஜோசியர் சொல்லிவிட்டாராம்.

அபிஷேக் கல்லூரியில் பரீட்சை என்பதால் அவனால் இந்த விஷயங்களில் கலந்துகொள்ள முடியாமல் தவித்தான்.

நீங்க எல்லாரும் எஞ்ஜோய் பண்ணுறீங்க,நா எக்ஸாம் அடுத்த செம்ல எழுதறேன் என்று அடம் பிடித்தவனை,அனுதான் சமாளித்து,அபிகண்ணா, இன்னும் ரெண்டு பேப்பர் தானே ,முடிச்சிர்ரா...என்று கெஞ்சி சம்மதிக்க வைத்திருந்தாள்.

வாணிக்கு, நெஞ்சம் முழுதும் பயம் ,இதுவரை சந்திக்காத ஒன்றை முதன்முதலில் சந்திக்கிறாள். அவனின் புகைப்படம் பார்த்திருந்தாள் தான். பிடிதிருக்கிறது. ஆனால்,திருமணம் நிச்சயம் ஆக அது மட்டும் போதுமா?

அவள் அம்மாவின் முதல் திருமணம் ,கடுமையான தோல்வியில் முடிந்தது. இரண்டாம் திருமணம் நல்ல விதமாக ஓடிக்கொண்டிருந்தாலும், தன் திருமணத்தால்,அம்மா அப்பா குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டுமோ?

நான் திருமணம் செய்துகொண்டால், வரும் மணாளன் பிரசாத் அப்பாவை போல் நல்லவனாக இருப்பானா? இல்லை சம்பத் அப்பாவை போலவா?

சொல்ல முடியாத ஆயிரம் எண்ணங்கள் அவள் முகத்தில் சோர்வை கூட்டியது. சிவாவினால் அவளை புரிந்துகொள்ள முடிகிறதுதான். பெண்ணை எவ்வளவு நாட்கள் திருமணம் செய்யாமல் வீட்டில் வைத்திருக்க முடியும்?

திருமண பந்தம்,மற்ற அனைத்து உறவுகளையும் பின்னுக்கு தள்ளி,வாழ்நாள் முழுவதும் கூட வரும்,உடலும்-உணர்வுமான பிணைப்பு. இந்த சின்ன பெண்ணுக்கு எதை சொல்லி தேற்றுவது என வார்த்தைகளை தேடினான் சிவா.

ஹோய்...முகத்தை குரங்கு மாதிரி வச்சுக்காத...கொஞ்சம் சிரிடி..என அவளை வம்புக்கிழுத்தான். அவள் உதடுகள் கண்ணுக்கு எட்டா சிரிப்பை உதிர்த்தது.

அவள் தோளில்,கைகளை போட்டு,தன்னுடன் அணைத்தவன்,உங்க அம்மா மேல தப்பில்லனு யாரால புரிஞ்சுக்க முடியுமோ அந்த இடம் பார்ப்போம். கவல படாத...காலம் ரொம்ப மாறிடுச்சு..என தேற்றினான்.

அவள் தெளிந்தாளா என்பது அவளின் ரகசியம்.



வாணியும்,சிவாவும் சென்னை சென்ற பிறகு மிகவும் தனியாக உணர்ந்தால் பாலா. வாணி, எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தாள். இரண்டு நாட்களா? இல்லை ஒருவாரமா? இதுதான் இப்போதைய கேள்வி. இந்த திருமணம் கைகூடனும் கடவுளே என்று பாலா மனதினுள் ஓயாத பிரார்த்தனை. ஏன் தான் இவ்வளவு தவிக்கிறோம் என்று அவளுக்கே வியப்பாக இருந்தது. மனதை வகுப்பில் நிலைக்கச் செய்வது அவளுக்கு பெரிய சவாலாக இருந்தது.

சிவாவோ, நோட்ஸ் எடுத்து வை பாலா, கிளாஸ் ஒழுங்கா கவனி. நா வந்த பிறகு நீதான் ஹெல்ப் பண்ணனும் என்று ஒரு நமுட்டு சிரிப்புடன் சென்றிருந்தான். நினைக்கும் பொழுதே,கண்களில் மயக்கம் தெரிந்தது பால சரஸ்வதி கண்களில்..

போக்கிரி, அவனோட ஃபிரண்ட்ஸ் கிட்டத்தான் வாங்கிக்க போறான்,என்னய ஓட்றான் என்று சிரித்துக்கொண்டாள்.

அடுத்த நாள், ரம்யாவுக்கு ஆனந்த் விடுப்பில் உள்ளான் எனும் தகவல் தெரிவிக்கப் பட்டது. தன் விதியை நினைத்து நொந்து கொண்டாள். வேறு மருத்துவரிடம் காண்பிக்கலாமா என்றும் அவளுக்குள் தோன்றாமல் இல்லை.

குழந்தையை வீட்டில் விட்டு வந்திருக்கிறாள்.நினைவு முழுதும் ராகவி ஆக்ரமித்திருக்க ,பிரியாதான் இவளை நிதானப் படுத்தினாள்.

நானும் ரெண்டு நாள் லீவ் எடுக்கலாம்னு யோசிக்கிறேன் ப்ரீ..குழந்தையோட இருக்கணும் ...வீட்டில் ஒருவழியாக ரம்யாவின் அம்மாவும் அண்ணியும் குழந்தையை பார்த்துக்கொள்ள சம்மதம் சொல்லி இருந்தார்கள். இன்றுவரை,அவள் அண்ணனுக்கு குழந்தை இல்லை. அன்னிக்கு,ராகவிமேல் என்ன உணர்வு என்று இன்று வரை புரியவில்லை.

சில சமயங்களில்,ரம்யா கண்ணில் படாமல் அள்ளி அணைப்பாள்.ரம்யாவிடம் குழந்தையை பிடிக்காது என நடந்து கொள்வாள். ரம்யா,அபூர்வமாய் ராகவியை அண்ணி கொஞ்சி பார்த்திருக்கிறால்தான்.

அந்த தைரியத்தில்தான் விட்டு வந்ததே. குழந்தையின் சோர்வு அவள் அண்ணியை உலுக்கி இருப்பது நிஜம்தான்!

மனிதர்களை,அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாது.

“எழுநூறு மில்லியன் மனிதர்கள்,ஒவ்வொருவர்க்கும் ஒவொரு குண கலவை. இயற்கை விதைத்த பேரதிசயங்களில் இதுவும் அடங்கும்!”

மீண்டும்

சுகீ.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top