JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 14

Subageetha

Well-known member
அன்றில் 14

மாலை ஐந்து மணியளவில் மனோ ரஞ்சன் அவனுடைய பெற்றோர் மற்றும் சில உறவினர்களுடன் வந்தான். வெறும் பெண் பார்க்கும் படலமாக இல்லாமல் வந்திருந்த பெண்களுடன் பாலா, அனு இருவரும் பரஸ்பரம் நட்பு கொண்டாடியது இளமை பட்டாளங்களுக்கு சற்றே வித்தியாசமாய் பட்டாலும் வாணியும் சரி, ரஞ்சனும் சரி, ஏதோ ஒரு விதத்தில் ஆசுவாசமாய் உணர்ந்தார்கள். வீட்டின் மற்ற ஆண்களும் தங்களை சகஜமாக்கி பேச ஆரம்பித்தனர்.

ரஞ்சனின் பெரியப்பா 'வாணியை நா பெங்களூருலேயே ஏதாவது பொது இடத்துல வச்சு மீட்
பண்ணிக்கிறேன்னு மனோ சொன்னான்'. நாங்க தான் அது முறை ஆகாதுன்னு இங்க வர சொன்னோம் என்று ஆழம் பார்த்தார்.

உள்ளறையில், ம்ஹும்... அவன் கூப்பிட்டாலும் இவ போயி பாத்துட்டுதான் மறு வேலை... என்னை கூட வரவச்சு செய்வா' என்று சற்று சத்தமாகவே சிவா வாணியிடம் சொல்ல, அறை வாசலுக்கருகில் உட்கார்ந்து இருந்த ரஞ்சன் காதுகளில் தெளிவாக விழுந்து தொலைத்தது. அவன் மனமோ, 'பொண்ணு கொஞ்சம் பழைய டைபோ, நமக்கு ஒத்து வருமா...என்று கேள்வி எழுப்ப, அவளுடன் தனியாக பேசணும், இன்னிக்கே முடிவு சொல்ல சொன்னா அதுக்கு நா ஆளில்லை என்று வெகு தீர்மானமாக அவனிடம் வாதிட்டது.

அவன் வாழும் இடம், பணிபுரியும் வட்டம் அவனுக்குள் விதைத்த சில விஷயங்கள் நாகரீகம் பற்றி அவனுக்கு புரிய வைத்திருக்கும் விதம் வாணிக்கு சொல்லி கொடுக்க பட்டிருக்கும் சில பழக்க வழக்கங்களுக்கு முரண் ஆனது. இருவருக்கும் இருக்கும் எண்ணங்கள் சரி - தவறு என்று முத்திரை இட முடியாது.

வெளியே வாணியை அழைத்து வந்தான் சிவா. வாணியின் தலை குனிந்திருக்கவில்லை. எல்லோரையும் பார்த்து பொதுவாக கை கூப்பினாள். பொதுவாக பேச்சு நகர்ந்தது. மனோ அவள் தன்னிடம் பேச முயற்சி செய்வாளா என ஒரு நோட்டம் விட்டான். அவன் பக்கம் வாணி நேரடியாக பார்க்கவில்லை. அவன் முகபாவம் அவளுக்கு புரிந்தது. மெல்ல சிவா காதில் மந்தரித்தாள்.

சிவா சிரித்து கொண்டே, சிறிது பொறுத்து, ' மனோ உங்களுக்கு வாணிக்கிட்ட ஏதாவது பேசணும்னு யோசிச்சா மொட்டை மாடி காலியா இருக்கு, நாங்க யாரும் தொந்திரவு செய்ய மாட்டோம் ' என்றுவிட்டு, வாணியை பார்த்தான். இருவரும் பார்த்த பார்வை சரியா என்றது.
சிறிது கழித்து 'ஆமாம், எனக்கு அவங்களோட பேசணும் என்றவன் வெளிப்பக்கம் இருக்கும் படி வழியே மாடிக்கு செல்ல வீட்டின் உள்பக்க படிகளில் ஏறி பெண் மாடிக்கு வந்தாள். பாதி படிகளில் ஏறியவன் சற்றே திரும்பி பார்க்க வாணி பின்னால் வரவில்லை.
மாடியில், சுவரில் சாய்ந்து வேடிக்கை பார்க்க மனோ எத்தனிக்க லேசாக தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்.

கீழே தெரியாத அவள் அழகு, மாடியில் அந்தி மாலை சூரியனின் ஆரஞ்சு நிற கதிர்களுடன் தக தகவென அவள் மேனி மீது மின்ன சூழலில் ஆட்பட்டவனாய் பேச்சற்று விழித்தான் மனோ. தன்னை சமன் செய்தவன் தன் வேலை, விருப்பம் வெறுப்பு கொள்ள வைக்கும் விஷயங்கள் என சொல்ல சொல்ல, இவளும் தனது விருப்பம், எரிச்சல் கிளப்பும் விஷயம் என பேசிக்கொண்டு இருக்க இருவருக்கும் புரிந்தது தாங்கள் எதிர் எதிர் துருவங்கள் என.

சற்றே தன்னை நிதானித்து கொண்டு, 'வாணி, பாருங்க வீட்ல ஜாதகம் -ஜோசியம் னு கல்யாணம் செய்ய அவசரம் காட்டுறாங்க. பட், அவசரத்துல கல்யாணம் செய்ஞ்சு அவகாசதுல அழ எனக்கு இஷ்டம் இல்ல.
எஸ், ஆஃ கோர்ஸ் நீங்க ரொம்ப அழகு. நிதானமா, பொறுமையா முடிவு செயிரீங்க. உங்க அண்ணா மூலமா நாம பேச ஏற்பாடு செஞ்சீங்க, கவனிச்சேன்.
கல்யாணம் செய்ய இவை மட்டும் போதுமா?
நிறுத்தி அவளை ஆழம் பார்த்தான். அவள் முகம் எந்த உணர்வையும் காட்டவே இல்லை. அமைதி மட்டுமே இருவருக்கும் நடுவில்.

'எனக்கு நிச்சயம் பிரச்சனை இல்லை ரஞ்சன். உங்க போட்டோ பாத்தேன். ஹாண்ட்சமா இருக்கீங்க. பொண்ணு பாக்கணும்னு உங்க வீட்டுல சொன்னாங்க. எங்க வீட்டுல கேட்டதுக்கு ஓகே சொன்னேன். அதுக்கு அர்த்தம் அடுத்த கட்டத்துக்கு தாவனும்னு இல்ல. அவள் பார்வை நிச்சயம் ரசனை தெரிந்தது. அதற்கு மேல் எந்த ஆர்வமும் இல்லை.

எனக்கு யோசிக்க நேரம், அவகாசம் நிச்சயம் வேணும் வாணி. இப்போவே பதில் சொல்ல என்னால் முடியல...

அவன் குரலில் இருக்கும் தயக்கம் அவளை வியப்பு கொள்ள செய்தது. ஹேய்.. இட்ஸ் ஓகே..என்றாள் அவள்.

உங்களுக்கு வருத்தம் இல்லையே? என்றான் அவன்.

உப்ஸ், நிச்சயம் இல்லீங்க . என்னை பொறுத்த வரையில் ஒரு முறை தான் இந்த உறவு. அது சரியா இருக்கணும். அமையனும். நா காத்திருக்கேன். அவள் குரலில் வலியும், உறுதியும் இருந்தது. அவள் பின்புலம் கேள்வி பட்டு இருந்தான். வெறும் பரிதாபங்கள் கல்யாணம் வெற்றி பெற வழி செய்ய போவது இல்லை.

இருவரும் தங்கள் வேலை, இருப்பிடம், பொழுதுபோக்கு என்று மேலும் சற்று நேரம் பேசி கொண்டிருந்தார்கள். குடும்ப நண்பர்கள்னு பெரியம்மா சொன்னாங்க... பட் நமக்கு சரியான அறிமுகம் இல்லையே என்றாள் வாணி.
ம்ம்... சரிதான். ஆனால், முதலிலேயே அறிமுகம் ஆகியிருந்தா இன்னிக்கி மீட் பண்ணியிருக்க முடியாது. உங்கள இவ்ளோ அழகா, கிட்டத்தட்ட மணப்பெண் அலங்காரத்துல பாத்திருக்க மாட்டேன் என்று கவர்ச்சியாக சிரித்து வைத்தான் மனோ.

அவனை புன்னகை முகமாக பார்த்து கொண்டிருந்த வாணியை, கண்டவனுக்கு தான் அதிகமாக பேசிவிட்டோமோ என்று சிறிதே லஜ்ஜை அடைந்தவனாக, சாரி வாணி, நா ஏதும் தப்பா சொல்லல தானே? என்றவனுக்கு சிரித்த முகமாகவே இல்ல என்றவளிடம் யோசனை கூடிய மௌனம்.

சரிங்க வாணி, கீழே போலாம். எல்லோரும் வைட்டிங் நம்ம பதிலை எதிர் பார்த்து என்றவாறே படிகளில் இறங்கினான். அவள் உள்வழி பாதையில் சென்று விட்டாள்.

தன் பதிலை யோசித்து சொல்வதாக மனோ சொல்ல, எல்லோர் முகமும் ஏமாற்றத்தை பிரதிபலித்தது. வாணி முகமோ எனக்கு கவலை இல்ல என்றது.

அன்று இரவே சிவா, இருவருக்கும் அடுத்த நாள் பெங்களூரு செல்ல பயண சீட்டு புக் செய்தான். காலை ஆறு மணிக்கு பேருந்து நிலையம் சென்றாக வேண்டும்.

அனு, மிகுந்த சஞ்சலம் கொண்டாள். அவள் உணர்வுகள் அவளை அலைக்கழித்து வேடிக்கை பார்த்தது. தெரிந்த இடமே அமையல... இன்னும் எவ்வளவு?

மற்ற உறவினர் கிளம்ப ராமன் குடும்பம் அங்கேயே தங்கியது. வாணி, சிவா இருவரும் சீக்கிரம் தூங்க சென்று விட பெரியவர்களுடன் ஆனந் பேசிக்கொண்டு இருந்தான். மறுநாள் மதியம் அவன் மருத்துவமனை சென்றால் போறும்.

மனோ இரவு ஆழ்ந்து உறங்க, வழக்கத்துக்கு மாறாக,' ரஞ்சன் ' என்று அழைப்பது போல் கேட்க திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான். எல்லோரும் மனோ என அழைக்க, அவள் ஒருத்தி மட்டுமே ரஞ்சன் என்றாள்.

மறுநாள் காலை அவனும் கிளம்ப வேணும். காரில், அவனே ஒட்டிக்கொண்டு, சரியாக தூங்கியாக வேண்டிய கட்டாயம்.

ரம்யா, அவள் இரண்டு நாட்களும் தீயில் தவமிருந்தாள். குழந்தை பற்றிய உடல் நிலை கவலைகள் அவள் உயிரை தின்றது.

"எனக்கு குழந்தை தர உயிரணு இல்லையாம். எனக்கு அப்பா ஆகணும். என் ஆண்மையை உலகத்துக்கு காட்டணும். அதான், இப்படி செஞ்சேன்".

அந்த குரலும், வார்த்தைகளும் என்றாவது அவளது காதுகளை தீண்டாமல் போகுமா?

என்ன விலை கொடுத்து குழந்தை வரம் பெற்று இருக்கிறாள்? இந்த வரம் நிலைக்குமா? என் குழந்தையை என்னிடம் விட்டு விடு இறைவா என அவள் மனம் கடவுளிடம் மண்டி இட்டது.
அவள் இழந்தது? அவள் பெற்றது? காத்திருப்பது?

அடுத்த நாள் அவள் ராகவியின் மருத்துவ குறிப்புகளை டாக்டர் ஆனந்திடம் காட்டியாக வேண்டும். ஒரே நெஞ்சில் பயம் எனும் கருப்பு கல் அழுத்துகிறது.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

உங்கள் தோழி சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top