JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 16

Subageetha

Well-known member
அன்றில் 16



அண்ணியின் கண்கள் அழுது சிவந்து முகம் முழுவதும் வீங்கி பார்க்க பாவமாய் இருக்க அவள் கண்கள் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தன. பிஞ்சின் முகம் பார்த்து ஆறுதல் கொள்ள அவள் மனம் விரும்பியது.
செய்வது என்ன என்பது வீட்டில் யாருக்கும் புரியவில்லை. மௌன நாடகம் அரங்கேறும் நாட்கள் இவை.

குடும்பம் என்பது இப்படித்தான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வகை. இரண்டு பெரிய பிரச்சனைகள் பூதாகாரமாய்.

ரம்யா, தன் அறைக்கு செல்ல யோசித்தவளாக ஹாலில் அமர்ந்து கொண்டாள். அம்மாவிடம் காபி கேட்டு வாங்கி கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டாள். அண்ணனுக்கு திருமணம் முடிந்து ஏற குறைய ஐந்து இல்லை ஆறு வருஷங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. அண்ணி ரம்யாவின் குழந்தை பிறப்பு வரை அவளிடம் நட்புடன்தான் இருந்திருக்கிறாள். மறுக்க ஒன்றும் இல்லை. குமார் இறப்புக்கு பிறகு எல்லாம் மாறி விட்டதே?

பொதுவாகவே மனித மனம் நடப்புக்கு ஏற்றவாறு தன் உருவம், குணம் இரண்டையும் மாற்றிக்கொள்ளும். பச்சோந்தி என பொதுவாக வருணிக்க பட்டாலும், என்னை பொறுத்தவரை நீரின் தன்மை போல்.' வாழ அவசியமான ஒன்று தான்.சரி தவறு சொல்ல இயலாது. ஒருவருக்கு சரியானது மற்றவருக்கு முரணாகிறது. '
பொல்லாதவள் என அண்ணிக்கு முத்திரை இட முடியாது. மொத்த வீட்டு நபர்களும் ஒரே போல் நடக்க, வீட்டுக்கு வாழ வந்தவளை மட்டும் குற்றம் சொல்ல வழி இல்லை.

யோசித்தவாறே, காபி குடித்தவள் சூடு கவனிக்க தவறினாள். ஞாபகம் தானாகவே அண்ணனிடம் சென்றது. சூடான காபி நாக்கை பதம் பார்க்க வீட்டின் நபர்கள் நடத்தை மனதை சூடு கொள்ள செய்த வெப்பம் நிறைந்த நாட்கள். நாவினால் சுட்ட வடு, உள்ளாறாதே, காரணம் எதுவாகிலும்?

கீழே அண்ணனின் குரல் கேட்க சற்று நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தாள். தன்னை ஸ்திர படுத்தி கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிய விஷயம் இல்லை.

ஒரு வழியாக டாக்டர்.ஆனந்த் சொன்னதை ஒன்று விடாமல் ரம்யா சொல்ல, ரம்யாவின் அம்மாவும், அண்ணியும் மூச்சு விட மறந்து சமைந்தனர்.

பிரசவம் பார்த்து, கையில் குழந்தையை ஏந்திய நாட்கள் ரம்யாவின் அம்மாவை உலுக்க, அவர் கண்ணீர் வழிய உள்ளே சென்றுவிட்டார்.
அண்ணன் அண்ணி முகத்தில் குழப்ப ரேகை. அண்ணன் முகம் அப்பட்டமான பயத்தை காட்ட இவன் எப்படி நமக்கு துணைக்கு வருவான் எனும் எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் வேறு வழி இல்லையே?

அடுத்த நாளே அண்ணனுடன் டாக்டர். ஆனந்தை சந்திக்க சென்றாள். கையில் குழந்தை சிணுங்க, அதை அவள் அண்ணன் வாங்கிக்கொண்டான்.

ஆனந்த், ரம்யாவை பார்த்து ஒன்றும் பேசவில்லை. அவள் அண்ணனிடம், சின்னதா பிளாக் இருக்க வாய்ப்புண்டு. சில டெஸ்ட் எடுக்கணும். அவங்க ரொம்ப மனசளவுல சோர்வாக இருக்காங்க., என ரம்யாவை காண்பித்து சொன்ன டாக்டர் நீங்க அவங்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க, டெஸ்ட்ஸ் எடுக்கும் சமயம் கூடவே இருங்க... ரிப்போர்ட் கொண்டு வாங்க...பாப்போம், என்றுவிட்டு கிளம்பினான். கிளம்பும் முன் 'ரம்யா, தேவை பட்டா லீவு எடுத்து குழந்தையோட கொஞ்சம் இருங்க. மனசு லேசாகும்'என கூறி சென்றவன் குரலில் வெகுவாக அக்கறையும், பரிவும் இருந்தது.

லேசான தலையசைப்புடன், அண்ணணனை அழைத்துக் கொண்டு, மேற்கொண்டு லேப் இருக்கும் கட்டடத்துக்குள் நுழைந்தாள். அலைபேசியில் ஹெச் ஆர் நாராயணனை அழைத்து நிலையை சொல்ல, அவர் இவளுக்கு ஒரு வார விடுப்பு கொடுத்தார்.
மருத்துவ மனை ஊழியர் என்பதால் நிறைய கட்டண சலுகைகள் கிடைத்தது. லேப் ஊழியர்கள் தெரிந்தவர்கள் என்பதால், பரிதாப பார்வைகளை தவிர்க்க முடியவில்லை.

இரண்டு நாட்கள் டெஸ்டுகள் எடுப்பதில் கழிய,
இரண்டாம் நாள் இரவு, தன் அறையில் இருந்து வெளியே வாட்டர் போத்தலில் நீர் நிரப்ப வந்தவள் அண்ணியின் விசும்பலை கேட்க நேரிட்டது.
'ஏங்க, நா குழந்தை இல்லாதவ, ராகவியை கொஞ்ச போய், அவளுக்கு ஏதாவது ஆகிடும்னு தானே விலகி விலகி ஓடினேன். இப்போ, அவளுக்கு உடம்பு படுத்தல்?

அண்ணன் சமாதானம் செய்ய, செலவு எவ்ளோ ஆகும்? என்றாள் அண்ணி.

ப்ச்.. தெரியல டி என்றவன், எப்புடி அவ சமாளிப்பாளோ தெரியல... என்றான். ரொம்ப நிலைமை முத்தி போயிட்டுன்னா என்னோட என்னோட நகை சிலது எடுத்துக்கோங்க என்றாள் அண்ணி.

உன்கிட்ட இருக்கற நகைகள் பெரும்பாலும் கடன் அடைக்க குடுத்துட்ட... இப்போ உன் வீட்டுலேந்து உன் பங்குன்னு வந்தது மட்டுந்தான் மிச்சம், என அலுத்துக்கொண்டான் அண்ணன். மனைவியின் நகைகளை அடமானம் வைத்து தங்கை கல்யாண கடனுக்கு உபயோக படுத்திய குற்ற உணர்ச்சி அவனின் குரலில்.

"இது சகஜம் தானே "என்ற மனைவியின் எண்ணம் அவனுக்கு புதிராய் இருந்தது.

ரம்யா புருஷன் சொத்து அப்படியே கேக்க ஆளில்லாம கிடக்கு. அவனோ ரொம்ப நல்லவனா இவள தன்னோட வாரிசுன்னு எழுதி வச்சிருக்கான்.

மஹா ராணி அந்த சொத்தை எடுத்து கடன் அடைக்க, ராகவி மருத்துவ செலவுக்கு செலவு செஞ்சா என்ன?

இவ்ளோ கடன் இவ புருஷன் கேக்குறான்னு தானே வாங்கினோம்?

அவன் செத்தா நம்ம கடன் போயிருமா? என தன் ஆதங்கத்தை அண்ணன் வெளிப்படுத்தி கொண்டிருந்தான்.

ரம்யா மனது இன்று ஏனோ அண்ணானுக்கு வக்காலத்து வாங்கியது.

அண்ணியிடம் பங்காக வந்த நகைகள் தவிர வேறு இல்லை என்பது புது தகவல்.

மூன்றாம் நாள் மீண்டும் ஆனந்தனை சந்திக்க வேண்டும். இறுக்கம் சூழ இருவரும் ஆனந்தனிடம் ரிபோர்டுகள் அடங்கிய கோப்பை கொடுக்க, அதில் சற்று தன்னை அமிழ்த்திக்கொண்டவன், சர்ஜரி அளவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. சின்ன ஒரு அடைப்பு. மெடிசின் போதும். நீங்க ராகவிய இனி ஹார்ட் கன்சல்டண்ட் கிட்ட கூட்டி போங்க... என்று தன் கணினியில் குழந்தையின் நிலை பற்றி ஒரு குறிப்பு எழுதி பிரிண்ட் எடுத்து கொடுத்தான்.

லேசான முறுவல் கொண்டு, நீங்க எப்போ திரும்ப ஜோஇன் பண்றீங்க ரம்யா? என்று ஆனந்த் கேட்ட விதம் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லை. கவலை படாதே!என்றது.

இன்னும் ஒரு நாளாவது ராகவிகூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் டாக்டர் என்றாள் ரம்யா.

அவள் உணர்வு அங்கிருந்த இரு ஆண்களுக்குமே புரிந்தது. சிரித்தவாறே விடை கொடுத்தான் ஆனந்த்.

அங்கு டியூட்டி பார்க்கும் ப்ரியா மனதில் அவன் சிரிப்பு ஆழமாக பதிந்தது. இவன் ஏன் அதிகம் சிரிப்பதில்லை என யோசிக்க தொடங்கியது அவள் மனம்.

அன்றே ஆனந்தின் கடிதத்துடன், இன்னோர் இதய சிகிச்சை நிபுணரை பார்த்துவிட்டு அவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர மதியம் இரண்டு ஆகியது. மருந்துகளே குணப்படுத்திவிடும் என மருத்துவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இருவருக்குள்ளும் அகல் விளக்கு போல் ஒளியை ஏற்றி உள்ளது.

ரம்யாவின் அம்மாவும் அண்ணியும் இருப்பு கொள்ளாமல் சாப்பிடாமல் வீட்டில் காத்திருந்தனர்.

விஷயங்களை அண்ணன் சொல்லச் சொல்ல ரம்யா அமைதியாய் இருந்தாள். அவள் மனம் பல்வேறு கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தது.

அவள் செய்வது, செய்யப்போவது, சரியா என்பது ரம்யாவால் தெளிய முடியவில்லை.
சில சமயங்களில் காலம் நம்மை இப்படித் தான் சுழற்றும். முடிவெடுக்க, அதை செயல்படுத்த? எல்லோருக்கும் இது போல் சமயங்கள் நேருவது இயற்கை.


சாதகமான விஷயம், குழப்பம் கொடுக்கும் இயற்கை அதற்கான உபாயம் கொடுக்க தவறுவதில்லை.

அது போல் ஒன்று, குமாரின் சித்தி தனது பெண்ணின் திருமணத்திற்கு அழைக்கவென்று ரம்யாவின் அம்மா வீட்டிற்கு தனது கணவர் சகிதமாக வந்தவர் தனிமையில் ' குமாரின் சொத்துக்கள் கேட்பாரற்று கிடக்கிறது. நீ வாரிசு என அவன் எழுதி வைத்திருக்க, இந்த கஷ்ட நிலை ஏன் என கேள்வி எழுப்பினார்.

யார் மூலமோ, ரம்யாவின் பிறந்தக கடன் பற்றி கேள்வி பட்டிருந்தவருக்கு மனது அடித்து கொண்டது. குமாரின் ஆட்டங்கள். அவருக்கு அத்துப்படி. திருமணம் நிகழ்வதை தடுக்க முடியா சூழ்நிலை கைதியாக அவர் அன்று நின்றிருந்தார்.

நிதர்சனமான நிலையில் அவருக்கு குற்ற குறுகுறுப்பு, இந்த பெண்ணின் நிலை இவ்வாறு ஆக தானும் காரணமோ என்று. பெண்ணை பெற்றவர் ஆயிற்றே?

அவர்கள் சென்ற பிறகும், உள்ளுறும் வலியை மீண்டும் உணர்ந்தவளாக யோசிக்கலானாள்.

விளைவு?

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

உங்கள் தோழி சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top