JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 18

Subageetha

Well-known member


அன்றில் 18



'கடற்கரை காற்று சிவா பாலா இருவருக்குள்ளும் விதைத்த எண்ணங்கள், உணர்வுகளை அவர்கள் இருவரையும் தவிர மூன்றாம் நபரால் புரிந்து கொள்ள முடியாது. காதல்ஆத்மார்தமானது. இதயங்களை இடம் மாற செய்வது. நீ- என்பது- நான்-என்பது?

விடுமுறை நாட்கள் முடிந்து இருவரும் தங்கள் வேலையை கவனிக்க பயணம் செய்தார்கள்.சில சமயங்களில் இதுபோல ஆவதுண்டு. வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் பயணம் செய்யும் திசைகள் மாறினாலும், நீ என்பதும் நான் என்பதும் வேறல்ல.

காலம் தன் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறது. நதி நிற்காமல் ஓடுவதும் நாட்கள் மாதங்களாக ஓடுவதும் இந்த வகையில்தான். மூன்று மாதங்கள் இவ்வாறே ஓடியதோ?

அன்று தனது வக்கீலின் துணைக்கொண்டு, ரம்யா ஏறத்தாழ பதினைந்து லட்சம் ரூபாய்களை தனது அண்ணனின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியவள், ராகவியின் மருத்துவ செலவிற்காக சில லட்சங்களையும் ஒதுக்கி வைத்தாள். ராகவிக்கு என அவள் வருங்கால நலனுக்காக

குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து மீதம் உள்ள சொத்துக்களை ஒரு ட்ரஸ்ட் ஏற்படுத்தி ஏழை இதய நோயாளிகளுக்கு செலவு செய்ய முனைந்தாள்.

தனக்கென, தனது சுய லாபத்திற்கு என, தன் கணவனது சொத்துக்களில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுத்துக் கொள்ளாமல் மற்ற விஷயங்களில் ஈடுபாடு செலுத்தி பொதுநல நோக்கில் மற்றவர்கள் நலனுக்கு உதவும், செலவு செய்ய துணியும் அந்த இளம்பெண்ணை காணக்காண

வக்கீல் நந்தனின் மனதில் அவளை பற்றிய மரியாதை அதிகமாகிக்கொண்டே சென்றது. தன் தந்தை அட்வகேட் மணிவண்ணன் மூலம், அவளது (இறந்த) கணவன் குமார் பற்றியும்,அவனது சொத்து விவரங்கள் பற்றியும் தெரிந்து கொண்டிருந்த நந்தனின் மனதில் ஏற்கனவே இந்த இளம்பெண் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டிருந்தாள். தன் தந்தையிடம், தானே ‘இந்த விஷயங்களை கையாள நினைப்பதாக சொல்லி, தன் கையில் எடுத்துக்கொண்டான்.

அவள் தனியாக உழைத்து அதன் வருவாயில் மட்டுமே வாழ்கிறாள் என்பதைக் கேள்வியுற்ற அந்த நிமிடத்தில் இருந்து அவள் பற்றிய மரியாதை நந்தனிடம் கோபுரம் அளவு உயர்ந்துவிட்டது.

பொதுவில், நந்தனுக்கு பெண்கள் மீது அபிப்ராயம் வேறானது.

ரம்யாவை நேரில் கண்ட அந்த நொடி அவனுள் நிகழ்ந்த மாற்றங்களை சொற்களால் வடித்து புரிய வைக்க முடியாது.அவளிடம் நிமிர்வு, அமைதி. கண்கள் சொன்ன நேர்மை.

அவளைப் பற்றிய மரியாதை காரணமாகவே அவளுக்கு என்னென்ன உதவிதேவைப்பட்டாலும் செய்வதற்கு, ஒரு நண்பனாய் தன்னைத்தானே நந்தன் தயார் செய்துகொண்டான். வழக்குரைஞர் என்பதை மீறி அவன் உள்ளே இருக்கும் நந்தனாக அவளிடம் பழகஅவனுக்கு பிடித்தது. ரம்யாவிடம் எப்போதுமே எட்டி நின்று பேசவே அவள் உடல் மொழி அறிவுறுத்தும். பெண்களுக்கான பாதுகாப்பு உணர்வு அவளுக்கு எப்போதுமே ஒரு கேடயம்

தான். நந்தன் தன் எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சி செய்யும் போதெல்லாம் ஏதோ ஒருமுட்டுக்கட்டை? அவள் பக்கத்தில் இருந்து வந்து கொண்டே இருந்தது. கண்களுக்கு அகப்படாத மாயக்கட்டு!

மற்றொருபுறம்,வாணி தனது பயிற்சி முடிந்து இந்தியா வந்து விட்டாள். பெங்களூருவில் அவள் பணி அடுத்த நிலையை எட்டியிருந்தது. பிரமோஷன் காரணமாக அவளுக்குவேலைப்பளு அதிகம் தான். முன்னர் போல் அதிகம் சென்னை வருவதற்கு அவளால் முடியவில்லை. சிவாவும் தனது பணியில் முழுமூச்சாக இறங்கிவிட்டான். இன்னும் அவன்பயிற்சிக்கு மூன்று மாதங்களே மீதம்.வாரம் ஒரு முறை சென்னை வருகை பதினைந்து நாட்களாக மாறி, இப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும்போது சென்னை வருகை என்ற நிலையை எட்டியுள்ளது.அண்ணன் -தங்கை இருவருக்கும் பொதுவான விடுமுறை நாட்களில்,வேலைப்பளு குறைவாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வது என்று வழக்கமானது.

அபிஷேக் பொறியியல் மூன்றாமாண்டு வந்துவிட்டான். அவனுக்கும் வேலைப்பளு அதிகம்தான். தன் வீடு, கல்லூரி, நேரம் கிடைக்கும் பொழுது பெரியம்மா வீடு இப்படி அபியும் பிஸியாகஆனந்தின் வாழ்க்கை எந்த சலனமுமின்றி ஓடிக் கொண்டிருப்பதாக அவன் மனதுக்குள் ஒரு எண்ணம்.

வீட்டின் பெரியவர்களுக்குவாணிக்கும் இன்னும் திருமணம் கைகூடவில்லை, ஆனந்தனும்திருமணம் செய்து கொள்ளவில்லை போன்ற எண்ணங்கள் குழப்பி அடித்தது. இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளும் வாணியோ, ஆனந்தனோ இல்லை.

ஜூனியர் பாலா வீட்டில் பாலாவிற்கு திருமணம் செய்ய அவள் பெற்றோர் முயற்சி செய்ய எந்தவித காரணமும் சொல்லாமல் பெரிய முட்டுக்கட்டையை போட்டாள் பாலா. ஏனோ அவளுக்கு சிவாவை பற்றி சொல்வதற்கு மனதினில் ஒரு தயக்கம். பெற்றோர் ஒப்புக்கொள்வார்களா என்ற பயம். இதைப்பற்றி சிவாவிடம் சொல்லும்போது சிவா பொங்கிவிட்டான். என்ன, கழட்டி விட்டு வேறொத்தன கல்யாணம் செய்யும் எண்ணமா? என்றவன்அவள் பதிலை கேட்க இஷ்டம் இன்றி வைத்துவிட்டான். பாலாவுக்கு அவன் சொற்கள்,’இதயத்தில் பாய்ந்து கண்ணீராய் வெளியே வந்தது.’

இன்னும் ஒரு சில மாதங்களில் பயிற்சி முடியும் எனும் நிலையில் தன் பெற்றோரிடம்சிவாவை பற்றி தெரிவிப்பதில் இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று முடிவு செய்தவளாய்தன் அப்பாவுக்கு அழைத்தாள் பாலா.

இங்கு பெங்களூரில் வீடு, சிவாவின் உணர்ச்சிகளை அவன் நேரடியாகவாணியிடம் காண்பித்தான்.‘டேய் சிவாண்ணா, இன்னிக்கு சாயங்காலம் என்னோட பிரண்டோட பர்த்டே பார்ட்டி இருக்கு.கூட துணைக்கு வர முடியுமா? என்று மாலை 5 மணிக்குள் வந்து நின்றாள் வாணி.

ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் இருக்கும் ஒரு பிரபலமான ஹோட்டலில் தான் பார்ட்டி. இவர்கள் இருக்கும் பி டி எம் லே அவுட்டிலிருந்து அந்த ஹோட்டல் இருக்குமிடம் கொஞ்சம் தொலைவு தான். இரவு வருவதற்கு நேரமாகும் என்பதால் தான் வாணி சிவாவை அழைத்ததே சிவாவின்

கோபம் கொண்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் அவனுக்கு தனிமை தேவை என்பதை புரிந்தவனாக சரி, கத்தாதே... நானே கேப் புக் செஞ்சு போய்க்கிறேன் என்றுவிட்டு கிளம்பினாள்.

சிவாவைப் பற்றி நன்றாகவே அறிந்தவன் என்பதால் ஹோட்டலின் முகவரியையும் இன்னபிற விவரங்களையும் சிவாவுக்கு வாட்ஸ்அப் செய்துவிட்டு பார்ட்டிக்கு சென்று விட்டாள்.

நிரஞ்சன் தனது நண்பனின் அழைப்பின் பெயரில் அவன் தங்கையின் பிறந்தநாள் பார்ட்டியில்கலந்துகொள்ள வந்திருந்தான். அவனுக்கு வாணியின் முகம் எளிதில் மறக்க கூடியதாகஇல்லை. ஆனால், வாணிக்கோ அவனை சுத்தமாகவே நினைவில் இல்லை.நிரஞ்சனைசுத்தமாக அவள் மறந்திருந்தாள். அறிமுக புன்னகையை அவன் வாணியை நோக்கி வீச,

அவளோ எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை. ஆறுமாத வெளிநாட்டுவாசம் வாணியிடம்மெருகு கூட்டி இருந்தது. நிரஞ்சன் அவள் தோற்றத்தில் மயங்கியது உண்மை. அன்றும் சரிஇன்றும் சரி. ஆனால், அன்று ஆர்வமாய் இவனை பார்த்த கண்கள் இன்று அந்த ரசிப்பைகாண்பிக்கவில்லை. அது கூட பரவாயில்லை. குறைந்தபட்ச அறிமுக புன்னகை?


கண்களை அகற்ற முடியாமல் அவளை பின்பற்றி சென்று கொண்டிருந்த கண்களில்வெகுநேரமாய் அவள் தண்ணீர் கூட அருந்தாமல் சுற்றிகொண்டிருப்பது கண்ணில் பட,அவளுடன் பேசும் சாக்கை விட மனதின்றி, ஒரு பழச்சாறு கோப்பை எடுத்துக்கொண்டு அவளருகே சென்றான்.

நிரஞ்சனுக்கு வியப்பு, என்னவென்றால் வாணி எதுவும் அருந்தவில்லை என்பது ஆழ்ந்துபார்த்தாலேயொழிய பிறருக்கு கண்களில் படாது.

கைகளில் பழச்சாறுடன் நெருங்கிய நிரஞ்சனை ஒற்றை புருவம் தூக்கி கேள்வியாய் பார்த்தாள் வாணி.

கேள்விகளின் முடிச்சுகள் அவிழும் சமயம் எப்பொழுது?


மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.

தோழிசுகீ.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top