JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை-19

Subageetha

Well-known member
அன்றில்-19

தன்னை மறந்த நிலையில் ரஞ்சன், இனிப்பால் ஈர்க்கப்பட்ட எறும்பைப்போல் அவளிடமே, திரும்பத் திரும்ப தனது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். நிச்சயம் அவனால் அந்த அந்த மதி முகத்தை தவிர்த்து வேறு எங்கும் பார்க்க முடியவில்லை. வாணி அவனை உதாசீன படுத்தினாள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஏதோ ஒரு ஈர்ப்பினால் அவனை நோக்கி அவள் மனம் படர்வதை விரும்பவும் இல்லை. நிச்சயம் அவள் மனதில் அவன் முகம் பதிந்து இருக்கவில்லை. பல்வேறு தரப்பட்ட காரணங்களால் திருமணம் என்ற ஒரு விஷயத்தை அவள் மனம் பயத்துடனேயே அணுகிகொண்டிருந்தது. திருமணம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் ஒரு விஷயமாகவே போதிக்கப்பட்டு இருந்தாலும்., தனிப்பட்ட காரணங்களால் ஒருவித பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. அவள் பிறப்பிற்கு காரணமான சம்பத் பற்றிய எண்ணங்கள், தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியதை அந்த சிறு பெண்ணுக்கு சொல்லி கொடுத்திருக்கிறது. அந்த பயம் ஆண்களிடமிருந்து அவளை தள்ளி நிறுத்தி இருந்தது. மனக் கூட்டுக்குள் குடும்ப நபர்களை தவிர வேறு எந்த அந்நிய நபர்களையும் இந்த நொடி வரை அவள் அனுமதித்ததில்லை. ரஞ்சனை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்திருந்த முகம் என்று தோன்றினாலும் அவனால் அவள் ஈர்க்கபடுவதை அவள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், எங்கு பார்த்தோம் என்றுகூட அவளால் ஞாபக அடுக்குகளில் அவனை தேட முற்படவில்லை.

பழச்சாறு கோப்பையை கையில் ஏந்தி வந்தவனை அவள் வினோதமாக பார்ப்பதற்கும் தள்ளி நிறுத்துவதற்கும் அவளது தனிப்பட்ட காரணங்களே போதுமானதாக இருக்கிறது. ஆனால் அவளுடைய பாராமுகம் மனோரஞ்சனை ஆழ்மனம்வரை சென்று தாக்கியது.

அவளால் ஈர்க்கபடவில்லை, பெற்றோர் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்ய முடியாது, காதல் மீது நம்பிக்கை உண்டு., பரிதாபம் திருமணத்திற்கு அடிப்படை அல்ல, இப்படியே அவனுள் எத்தனையோ காரணங்கள் இருக்கிறது தான். ஆனால், பெண் பார்க்க சென்ற அன்றே 'ரஞ்சன்'எனும் ஒரு அழைப்பு அவன் இரவு தூக்கத்தை கெடுக்க போதுமானதாக இருந்தது. அடிக்கடி பாராமல் இருந்தாலும் அந்த பால் முகம் அவன் மனதை விட்டு அகலாமல், வேறு வேலையும் செய்யவிடாமல், அலைக்கழித்த தருணங்களை மறுக்க அவன் விருப்பம் கொள்ளவில்லை.
இன்னொரு பெண்ணை இவளை மனதில் வைத்துக்கொண்டு அனுமதிக்க முடியாது என்பதே நிஜம். அவன் ஒப்புக்கொள்ள கால அவகாசம் தேவை.

பழச்சாறை கையிலேந்தி நின்றவனை ஒற்றை புருவத் தூக்கலில், சரணடைய செய்திருந்தாள் பெண்.

' நோ தேங்க்ஸ், என்று அவன் கண்களை நேராக சந்தித்து கூறியவளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உங்களுக்கு பழச்சாறு பிடிக்காதா? ரொம்ப நேரமா நான் உங்கள கவனிச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க தண்ணி கூட குடிக்கவில்லை, என்றவனை பார்த்தவள் முகத்தில் நட்புணர்வு இல்லை. தன்னை ஒரு ஆடவன் வெகுநேரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வை அசூயையாக உணர்ந்தாள் வாணி.

அவள் கண்கள் சற்றே கோபத்தில் மின்னின. அந்த கோபம் அவளை ரஞ்சனிடம் உஷ்ணமாகவே பேச வைத்தது.
'முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட இருந்து நான் எதையும் வாங்கிக் கொள்வது இல்லை, நன்றி என்றுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்.அவள் பின்னரே சென்றான் ரஞ்சன். தன்னையும் மறந்து (? ) அவனால், இந்த நிராகரிப்பு ஒப்பு கொள்ள முடியவில்லை. ஏன், என்று யோசிக்க அவனுக்கு நேரம் இல்லை.

"சிறுவயது முதலே முன்னேபின்னே தெரியாதவர்களிடம் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது, வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னை காத்துக் கொள்வது என்பது பெண்களின் கைகளில்தான் உள்ளது. எளிதில் யாரையும் நம்ப கூடாது"என்றெல்லாம் போதிக்கப்பட்டு வளர்ந்தவள் வாணி. அவ்வகையில் அவள் சொல்வது சரியே!

ஆனால், ரஞ்சனுக்கு அவள் தன்னை தெரியவே தெரியாது, இதற்கு முன்னர் பார்த்தது கிடையாது என்பது போல சொன்னது சீண்டி விட்டது போல் ஆகிவிட்டது. 'அவளுடன் திருமணம் வேண்டாம் என்று சொன்னது இவ்வளவு பெரிய குற்றமா? என்று அவன் மனம் யோசிக்க ஆரம்பித்தது.
அவளை விட மனமில்லாமல் சென்னையில் இருக்கும்போது உங்கள பொண்ணு பாக்க வந்தேன், ஞாபகம் இல்லையா? என்றான் ரஞ்சன்.

ஒரு நொடிக்கும் கீழான கால அவகாசத்தில் யோசித்தவள், தன்னை விட்டுக்கொடுக்காமல் சோ வாட்?
பொண்ணு பார்க்க வந்தீங்க, வேண்டாம்னு சொல்லிட்டீங்க. அதற்கப்புறம் உங்களோட எனக்கு என்ன ரெலேஷன்ஷிப்?
என்றவளை பார்த்து அவனுக்கு கோபமும் வியப்புமான கலவையான உணர்வு.

உங்கள புடிக்கலைன்னு சொன்னா, என்னய தெரியாதுன்னு ஆயிடுமா என்று பதில் கேள்வி கேட்டான் ரஞ்சன்.
சற்றே தணிந்து ஒலித்தது வாணியின் குரல். 'சேச்சே அப்படியெல்லாம் இல்லீங்க, நெஜமாவே எனக்கு பார்த்ததாக ஞாபகம் இல்லை. பழக்கமில்லாத உங்ககிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறது தப்புன்னு சொல்ல முடியாது.'என்றுவிட்டாள். அவள் பதிலில் ரஞ்சனின் விழி பிதுங்கியது. ரொம்ப தெளிவா இருக்கீங்க என்று முணுமுணுத்தான். அவள் காதுகளில் தெளிவாக விழுந்தது. 'தெளிவு தான் ' என்றவள் தூரத்தில் இருந்து மற்ற நட்புக்களுக்கு கையசைத்தாள்.

இதற்கு மேல் அவளை பின்தொடர்ந்து சரியல்ல என்று யோசித்தவன், சாரி உங்களை தொந்தரவு பண்ணதுக்கு, என்றுவிட்டு நகர்ந்தான்.

அதற்குப் பிறகு, ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள்...அங்கிருந்து விட்டு கிளம்பினாள் வாணி.
'சிவா வந்திருந்தால் பரவாயில்லை. மணி வேறு ஆகிவிட்டது. ஏழு மணி ஆகப்போகிறது, என்று அவள் மனம் மந்திரித்தது.இதற்குமேல் வீட்டுக்குப்போய் சமைப்பது கடினம், பசி வேறு வாணியின் அடி வயிற்றை கிள்ளியது. கிளம்பும் அவசரத்தில் அரைகுறையாக இரண்டு தோசைகள், விழுங்கிவிட்டு வந்தாள். தனியாக ஒரு கேப் எடுத்துக் கொண்டு பயணம் செய்ய சிறிது யோசனை.
இவள் தனியாக கிளம்புவதை பார்த்து அவசரமாக இவள் பின்னாடியே ஓடி வந்தான் ரஞ்சன். ஒல்டு ஏர்போட் ரோட்திலிருந்து பி டி எம் லே-அவுட் இரண்டிற்குமான தொலைவு அவனுக்கு தெரியும். ஒருவேளை சரியாக வண்டி எதுவும் அமையாத நிலையில் அவளை வீட்டில் கொண்டுவிட வேண்டும் என்று அவன் உள்ளே தவித்தது.

அவள் மீது கோபம் தான். ஆனாலும் அவளை தனியே விட முடியாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், குடும்ப நண்பர்கள் என்று அம்மா சொன்னார்களே, எனில் தெரிந்த வீட்டு பெண்ணை எவ்வாறு தனியே விடமுடியும்? என்று தனக்குத்தானே சாக்குகளை சொல்லிக்கொண்டான் ரஞ்சன். அவள் ஏதேனும் கேட்டாலும் இதையே சொல்வது என்றும் தீர்மானித்துக் கொண்டான்.
கேப் டிரைவரை நம்பி அவ்வளவு தூரம் தனியே செல்ல முடியும், என்னை நம்பி வரக்கூடாதா என்ற ஆதங்கம் நிச்சயம் அவன் உள்ளே உண்டு.

எதற்கும் அவசியம் இல்லாமல், வெளியே அவளது அண்ணன் சிவா நின்று கொண்டிருந்தான். அண்ணனை பார்த்த நொடியில் வாணியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். டேய் அண்ணா, எப்படி தனியா வீட்டுக்கு போக முடியும் நீ வந்தா பரவாயில்லை, அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.நல்ல வேளை, நீ வந்துட்ட...
என்று அவள் பேச்சை வளர்க்க, பின்னாலேயே வந்த ரஞ்சனை சட்டென அடையாளம் கண்டு கொண்ட சிவா, ஹாய் ரஞ்சன், எப்படி இருக்கீங்க? என்ன இந்த பக்கம்? என்று பேச்சை வளர்த்தினான்.

வாணி, சற்று ஆச்சரியம் அடைந்தாலும் எதுவும் சொல்லவில்லை. சற்று நேரத்தில், வாணி சிவாவின் காதுகளில் டேய் அண்ணா பசிக்குது டா, போலாமா? என்றாள்.

ஆமாம் சிவா, அவங்க பார்ட்டியில் தண்ணி கூட குடிக்கல... என்று வாணி காக பேசினான் ரஞ்சன். அவள் நிஜத்தில் எப்படி? இவ்வாறுதான் நடந்து கொள்வாளா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரஞ்சனிடம்.

ஆமாம் என்றான் சிவா. வெளி இடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு கடுமையான முறையில் கடை பிடிக்கிறாள் என் தங்கை என்று கேலியாக கூறினாலும் அவன் முகம் முழுவதும் பெருமிதம்.

சுத்தம்... என்று மனசுல நினைத்தவன், வெகுவாக ஆச்சரியம் அடைந்தான். படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரிக யுவதியிடம் இந்த கட்டு பட்டித்தனத்தை நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை(? )

நல்லவேளை, நா தப்பிச்சேன் என்று நினைத்துக்கொண்டவன், சிவா சாப்பிட அழைத்ததை மறுக்கவில்லை.வாணியின் மீதான ரசிப்பில் உணவை மறந்திருந்தவனுக்கும் பசித்தது. மூவரும் சிறிது தூரத்தில் இருக்கும் உணவு விடுதிக்கு சென்றார்கள். தன் காரிலேயே சிவா -வாணியை ஏற்றி க்கொண்டான் மனோரஞ்சன்.

இன்று எப்படியும் அவர்கள் இருப்பிடம் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் அவனது தீர்மானம் !

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

தோழி சுகீ

































Page 3 of 5 Page 1 of 5
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top