• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

இன்று அன்றி(ல்)லை 20

Subageetha

Well-known member
அன்றில் 20

மனோரஞ்சன், அவனது தீர்மானங்கள் எதுவாகினும் அதைப் பற்றி கவலைப்படும் இந்நிலையில் நிச்சயம் சிவாவோ வாணியும் இருக்கவில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே நிகழ்ந்தது. இரவு தாமதமாக காரணத்தினாலே ரஞ்சனது காரிலேயே வாணியும் சிவாவும் வீடு வந்து சேர்ந்தனர்.'இன்னோர் சமயம் சற்று முன்னதான நேரத்தில் வரும்படி அழைப்புடன் இருவரும் இறங்கி செல்ல ஏனோ, அந்த பெண்ணுக்கருகில், அவளுடன் தான் செல்ல வேண்டும் எனும் பேரலை எழும்பி அவனை அலைக்கழித்தது. இந்த எண்ணம் ஏன் வந்தது இதை எப்படி அடக்குவது என்பது போன்ற குழப்பங்களுக்கு அப்பாற்பட்டு அவன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டான். மாடிக்குச் சென்ற வாணி, பால்கனி வழியே கீழே பார்க்க ரஞ்சனின் கார் அங்கேயே நின்று கொண்டிருந்தது. சிறிது குழப்பம் கொண்டிருந்தாலும் ஏனோ அவளது ஆழ் மனதில் கூட ஒரு உற்சாக குமிழி.அவளுக்குள் அப்படிப்பட்ட உணர்வு, இருந்தாலும் அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்க அவளுக்கு பயமாய் இருந்தது. அடிவயிற்றில் ஏற்படும் ஒரு வித படபடப்பு. அவளையுமறியாமல் அங்கேயே நின்றுகொண்டு கீழே அமர்ந்திருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எது நடக்கவேண்டாமென அவள் விரும்பினாளோ, அதுவே நடக்கிறது அவள் விருப்பமாய். அவள் அவன்பால் ஈர்க்க பட்டுவிட்டாள்.சட்டென உள்ளுணர்வு உந்த காரின் சாளரம் வழியே ரஞ்சன் வெளியே பார்க்க அவன் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட பின்னரும் தன்னை சமன் செய்து கொள்ள முடியாதவனாய் தன் காரை கிளப்பினான் ரஞ்சன்.வீட்டின் இருப்பிடம் தெரிந்துவிட்டது. அவளுக்கு அலுவலக முகவரியும் அவனிடம் உண்டு. பெண் பார்க்கச் செல்லும் முன் அவன் அம்மா பெங்களூருவில் தான் அந்தப்பெண் வேலை செய்கிறாள் என்று அவனிடம் கொடுத்த தகவல்களில் ஒன்று வாணியின் செல்போன் நம்பரும் அவளது அலுவலக முகவரியும். இன்று வரை அவள் அலைபேசி எண்ணை அவன் உபயோகிக்கவில்லை.வேலை நேரத்தை விட்டுவிட்டு வெளியே சுற்ற முடியாது என்றாலும்,ஏனோ அவளது அலுவலகம் வரை சென்று பார்க்க அவனது இதயம் அவனை தொல்லை படுத்த வேறு வழியில்லாமல் மதியத்திற்கு மேல் அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு தன் காரை கிளப்பி விட்டான். அவன் நேரே சென்று நின்று கொண்டது அவள் அலுவலக வாயிலில் தான்!அத்தனை பெரிய அலுவலக கட்டடத்தை பார்த்த பின்னர் தான் அவனுக்கு உறைத்தது தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று.இத்தனை பெரிய அலுவலக வளாகத்தில் அவள் எந்த பிரிவில் வேலை செய்கிறாள்,எப்பொழுது வருவாள்,அவள் வேலை நேரம் என்ன? போன்ற எந்த விஷயமுமே தெரியாமல் மதியத்திலிருந்து எத்தனை நேரம்தான் அந்த வளாகத்தில் வாயிலில் தவம் இருக்க முடியும்?சற்று வெட்கம் மிக்கவனாக, ஆனாலும் தன் முயற்சியில் இருந்து வெளியே வர முடியாதவனாக இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற உந்துதலில், தவிப்புடன் தவமிருக்க ஆரம்பித்துவிட்டான் ரஞ்சன்.அலுவலக வாயிலில் இருந்து வெளியே வருவது தெரியும் அளவில் சற்று தள்ளி நின்றுகொண்டான். காவலாளி கழுத்தை பிடித்தால் அசிங்கமாயிற்றே.அவளை வேண்டாம் என்று சொன்னவன் அவன் தான். இந்த நிமிடம் எந்த விலை கொடுத்தேனும் அவளை காண வேண்டும் என்று அவன் இதயம் ❤துடியாய் துடித்தது. அவள் இதை எப்படி ஏற்றுக் கொள்வாள், அவளிடம் தன் விருப்பத்தை எப்படி தெரிவிப்பது? அவளைத்தான் விரும்புகிறோமா,என்ற பல்வேறு குழப்பங்கள் அவனை ஆட்டிப் படைத்தது. அவனுக்குத் தனது முடிவு பற்றி நிறைய குழப்பங்கள் தான்.ஆனாலும் அவளை காணாமல் இருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.ஜாதகம் ஜோசியம் என்ற பல்வேறு விஷயங்களால் அவனது திருமணம் விரைவாக முடிய வேண்டும் என்ற அவனது பெற்றோர் எந்த முயற்சியும் மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவனை மணந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு தேவைப்படுவது வாணியின் சம்மதம் மட்டுமே! ஆனால் முதலில் வேண்டாம் என்று விட்டு திரும்பவும் அவள்தான் வேண்டுமென்று போய் நின்றால் தான் ஒரு குழப்பவாதி என்று முடிவுகட்டி விடுவாளோ?

எண்ணங்கள் உந்தித் தள்ள அவன் தன் சுயம் இழந்து அங்கேயே காத்திருக்க அவன் இதயத்தை அத்தனை நேரம் அலைக்கழித்த அந்தப் பெண் வெளியே தனது தோழிகளுடன் அலுவலகப் பேருந்திற்காக வந்து நின்றாள். அவளிடம் நெருங்கி செல்லலாமா வேண்டாமா என்று சற்று நிதானித்தவன் அவளிடம் பேச வேண்டும் என்ற தீர்மானம் வெற்றிகொள்ள மெல்ல அவளிடம் சென்றான்.

அவளிடம் அவனை எதிர்பார்க்காத திகைப்பு ஒரு புறம் என்றால் அவனைப் பார்த்த சந்தோஷம் என ஒரு புறமாக அவள் முகம் திடீரென்று கிடைத்த மகிழ்ச்சியில் சற்று சிவந்தது. அந்த பின்மாலை பொழுதில், அலுவகங்களின் விளக்குகள் ஊதா கலந்த வெண்மை நிறத்தில் மின்ன. வந்து கொண்டிருந்த பேருந்துகளின் மின்விளக்கு மஞ்சளுமாய், அவள் முகத்தை வேறு பரிமாணத்தில் காட்ட அவளை மொத்தமாய் தன்னுள் சுருட்டிக்கொள்ளும் தாகம் ரஞ்சனிடம்.

நிச்சயம் அவன் வரப் போகிறான் என்று அவளுக்குத் தெரியாது.'அவன் திருமணம் வேண்டாம்'என்று அவளிடம் சொன்ன அந்த நொடி அவளுக்கு நிச்சயம் நினைவடுக்குகளில் இல்லை. இந்த சந்தோஷம் தெரிந்த நபரை பார்த்து சந்தோஷம் அல்ல.அதற்கும் மீறி ஏதோ ஒன்று, உணர்வுகள் அவளை ஆட்டிப்படைக்க மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் சற்றே தன்னை சுதாரித்துக் கொண்டு,'ஹாய்'என்ன இந்த பக்கம் என்று உணர்ச்சிகளை உற்சாகத்தை வழியவிட்டு அவனிடம் முகமன் விசாரித்தாள். அவள் அகமும் முகமும் அவளை சட்டமாய் காட்டி கொடுத்தது என்னவோ உண்மைதான்.
அவளது முகத்தை கண்டவுடன் குழப்பங்கள் சட்டென விலக அவளை நிமிர்ந்து பார்த்தவன் திகைப்பின் உச்சிக்கே சென்று விட்டு அந்த முகம் அவ்வளவு சந்தோஷத்தை காட்டிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கண்கள் மட்டும் பளிச் பளிச்சென்று மின்னல்.இந்த மின்னலின் ஒளியில் தன்னை வாழ்நாள் முழுவதும் மொத்தமாய் தொலைக்க தயாராகிவிட்டான் மனோரஞ்சன்.
'வீட்டுக்கு நான் கொண்டு போய் விடவா' என்றால், இல்லை... அது, நான்... என்று ஏகத்துக்கும் தடுமாறி அவனைஒரு சுழற்று சுழற்றி, பின்னர் ஒருவழியாக இல்லை இல்லை நான் பிரண்ட்ஸோட பஸ்ல போறேன், என்ற பெண்ணை உரிமையுடன் தன்னகம்(தன் +அகம் இதயம் என பொருள் கொள்ளலாம்)(தன் இருப்பிடம்)கூட்டிச்செல்ல உரிமை வேண்டும் என்று தொடங்கிய மனத்தை அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என்று சொல்லி அமைதிப் படுத்தி அவளிடமிருந்து அழைத்துச் சென்றான் ரஞ்சன்.

மனோரஞ்சன் தன்னை காண அலுவலகம் வந்ததை சிவாவிடம் சொல்வதற்கு உள்ளூர தயங்கினாள் வாணி.

தான் இத்தனை பலவீனமானவள் என்று அவளால் நம்பவே முடியவில்லை. நேற்று பார்ட்டியில் பார்த்தபோது தனக்கு அவனை தெரியாது என்று விட்டாள். இந்த நிமிடம் அவனைத்தவிர அவள் கண்களுக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை. இந்த காதல் நீறு பூத்த நெருப்பாய் அவனை முதன்முதலாய் பார்த்த பொழுதே அவள் மனதில் படர்ந்து இருந்திருக்க வேண்டும். ரஞ்சனுக்கும் கூட அவள் மீதான ஈர்ப்பு குறையவே நிறைய நாட்கள் ஆனது. மீண்டும் அவளைப் பார்க்கும் போது அதே ஈர்ப்பு, மூளையின் எதிர்ப்பையும் மீறி ஏதோ ஒன்று அவளை நோக்கி அவனை கூட்டிச் சென்றது. அவன் முகத்தை மறந்திருந்தவளுக்கு அவனை மறக்க முடியவில்லை. ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டது நிஜமானால், காதலில் இதுவும் சகஜமோ? "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ".

காதல் ஒருவனை கைப்பிடிக்கும் வரம் எல்லோருக்கும் அமைவதில்லையே!

இந்த காதல் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

தோழி சுகீ
 
asasa11
asasa11

Members online

No members online now.
Top