JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 6

அத்தியாயம் - 6

அவள் எதிர்கொண்ட மனிதர்கள், பின் தன் பிள்ளையின் மனநிலை தற்சமயம் நிலை இல்லாது இருப்பது இவை அனைத்தையும் சிந்தித்து தன் சுயம் மறந்து பிள்ளையின் அருகில் சரிந்தாள்.
இவளின் நிலை அறிந்தவனோ கோவத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

பின் மோகனிடம்

"யூ ******* இடியட் , என்ன மேன் செய்துகொண்டு இருக்க நீ , நா பார்த்துக்குறேன் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு இப்படியா?"

"கண்டிப்பா இப்படி நடக்குமென்று நான் எதிர் பார்க்கல பாஸ், அவளை டாக்டர் செக் பண்ணிட்டு இருக்கார் ."

"இப்போது நான் அங்க வந்தா அவ வேறுமாதிரி ரியாக்ட் பண்ணுவா டா அடமென்ட் அடமென்ட்"

"BOSS கொஞ்சம் பொறுமையா இருங்க. இவளுக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை இப்படி வலுக்கட்டாயம் பண்ணக் கூடாது ".

" இதுக்கும் மேல எப்படி மேன் பொறுமையா இருக்கறது . இன்னும் ஒரு வாரம் அதற்குள் என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, அவ இங்க வரனும் ".

"பாஸ் அது இம்பாஸிபிள் "

"மேக் இட் பாஸிபிள் மேன் "

"தென், குழந்தைக்கு டாக்டர் என்ன சொல்றாங்க அதை எனக்கு அப்டேட் பண்ற"

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் ஆணை இட்டுவிட்டு ,மற்ற ஒரு பீர் பாட்டில் எடுத்து தொண்டையை நிரப்பிக் கொண்டான்.

"ஏ அழகி ஏன் டீ ஏன் இப்படி இருக்க. உனக்கு ஏன் பிடிவாதம். அப்படி என்ன டீ உனக்குக் காதல் மேல் நம்பிக்கை இல்லாத இருக்க ? உன்ன பார்க்கும் வரைக்கும் நானும் அப்படி தான் டீ. ஒன் நைட் ஸ்டாண்ட் போயிட்டே இருப்பேன் . நா இப்படி முழுசா மாறினதுக்கு நீ தான் டீ காரணம். எவ்வளவோ உன்ன என்பக்கம் வரவைக்க முயற்சி செய்தேன். ம்ம்ம்ம் ... திமிர் திமிர். உன்னையும் அவள் மாதிரி நான் உன்ன ச்ச."

"என்ன பார்த்து எப்படி நீ அப்படிச் சொல்லலாம். நான் உன்ன இதற்காகவா அழகி லவ் பண்ணேன் இல்ல நா பார்க்காததா ."

கடலும் பாறையும் அவனைச் சுற்றி இருந்தது . கடல்பாறையின் மேல் கட்டப்பட்டு இருந்த அவனின் அழகிய வீடு, கண்ணாடியால் மட்டுமே கட்ட பட்டிருந்தது . அதன் அழகினை மேலும் அழகூட்ட இரவில் நிலா வெளிச்சம் மட்டும் போதும். அதன் ஒளியில் மட்டுமே அந்த வீடு முழுவதும் பிரகாசிக்கத் தொடங்கிவிடும் . வீட்டினை பார்ப்பவர்களுக்கு மனதினை கவரக்கூடியதாக இருந்தது . ஆனால் இவனுக்கோ அதன் அழுகு கவனத்திற்குக் கூட கவரவில்லை. இயற்கையின் அழகோ தன் வீட்டின் அழகோ எதுவும் அவன் மதியில் இல்லை .
கையில் பீர் பாட்டிலுடன் பாறையில் மேல் படுத்திருந்தான். படுத்திருந்தவன் கண்ணில் துடங்கிய மெல்லிய ஈரக் கோடு அவனின் கன்னம் தாண்டி வழிந்தது. ஆண் மகன் அழுவதும் ஒரு அழகுதான் அதுவும் ஒரு பெண்ணிற்காக.


மருத்துவமனையில் மயங்கியவளை மருத்துவர்கள் பரிசோதித்து மோகனிடம்

"அவங்க இப்போ ரொம்ப டிப்ரெஸ்ஸன்ல இருப்பதனால் பீபி அதிகமா இருக்கு அண்ட் டீஹைடிரேட் ஆயிருக்காங்க. முதலில் அவங்களுக்கு நல்ல ஓய்வு தேவை, பிரஷர் குறைய தகுந்த மருந்தையும் ஐவி மூலம் போட சொல்லிருக்கிறேன். அவங்களுக்கு தேவை கொஞ்சநேரம் ரெஸ்ட் சோ தூங்கட்டும். மனநல மருத்துவர் வருவார் வந்து அவங்கல பரிசோதித்து என்ன சொல்றார் பார்ப்போம். பிறகு நான் வந்து உங்களை பார்க்கிறேன்."

"அப்போ, டாக்டர் குழந்தை இப்போ எப்படி இருக்கிறான்."

"mr. மோகன் குழந்தை இப்போ நார்மல் தான் இருக்கான் . அவங்க அம்மா எழுந்துக்குற வரைக்கும் அவன் மைன்ட் ரிலாக்ஸ் செய்வதற்கு நீச்சல் குளம் இருக்கு , பக்கத்தில் ப்பிலே ஏரியா இருக்கு அங்க போங்க . இந்த சூழ்நிலை வேண்டாம். அவங்க அம்மாவை பார்த்து இன்னும் அழ துடங்கிவிடுவான். அவங்க எழுந்ததும் பையனுக்கும் அம்மாவுக்கும் ஒரு மெடிக்கல் கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். குழந்தைக்கு கவுன்சிலிங் அப்போ குழந்தையின் தாய் அருகில் இருப்பது மிகவும் அவசியம்"

என்றுரைத்தார் மருத்துவர் .

இதனை பக்குவமாக சுசீலா அம்மா விடமும் அவர்களின் நிலையை எடுத்து சொல்லிருந்தான் மோகன். மறந்தும் அவரிடம், அவள் சந்தித்த மனிதனை பற்றியோ அல்லது அவளின் மனதில் உள்ள குழப்பத்தின் காரணத்தை பற்றியோ பேசவில்லை. சுசீலா அம்மா மோகனைப் பார்த்து

"தம்பி அவளுடைய வாழ்க்கை இப்படியே போய்விடுமோ பயமா இருக்கு பா . இவ பெத்த குழந்தையின் வாழ்க்கை அதையாவது யோசித்துப் பார்க்கலாம் இவள். ஏன் தான் இப்படி இருக்கிறாளோ.----------------------------------------------------------------------------- ". புலம்ப துடங்கி விட்டார் சுசீலா அம்மா .
தூக்கத்திலிருந்தவளின் நினைவலைகள் பின்னோக்கி சென்றது.

அவள் கூறிசென்ற செய்தியை உணர்ந்தவன் இருதயத்தில் வலியுடன், கண்ணிலும் ஈரம் உண்டானது . நிலாவை தன் காரின் முன் இருக்கையில் உட்காரவைத்து அவனின் வீட்டிற்கு சென்று விட்டான். நிலாவுடன் தன் வீட்டிற்குள் வந்தவனை வரவேற்றாள் அவனுடைய இனியாள் அகத்திற்கும் அவளே இனியாள் .

" ஓஈ.... என்ன சார் முகமே சரி இல்லாமல் இருக்கு , என்ன விஷயம் "?

"அம்மா" என்று அந்த குழந்தை தந்தையை விட்டு தாயிடம் தாவியது .

"என்ன பேபி இவளோ சீக்கிரம் வந்துட்ட. போன காரியும் என்ன ஆச்சு? பாத்திங்களா? அங்கதான் இருக்காங்க? சரி வாங்க சாப்பிடலாம் " குழந்தையை கையில் ஏந்தி கொண்டே அவனுக்கு உனக்கு எடுத்துவைத்திருந்தால் . ஆனால் இவளின் பேச்சை எதுவும் கேட்டகத்தவன் நின்ற இடத்திலே நின்றி இருப்பதாய் உணர்த்தவள் அவனின் அருகில் சென்று

"நான் பாட்டுக்க பேசிகிட்டே போறேன் நீ ஒன்னும் சொல்ல மாற்றே . ஏன் பேபி உம்..னு இருக்க."

என்று அவனுடைய வலது கன்னத்தில் தன் இடது கையை ஆதூரமாக வைத்து கேட்டாள் .

" ஒன்றும் இல்ல குழந்தையை பார்த்துக்கோ எனக்கு கொஞ்சநேரம் தனிமையா இருக்கனும்"

"ஏன் இப்படி பேசுற? சரி விடு குழந்தைக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது கேக் ஆர்டர் செய்ய சொன்னேன் சொல்லிட்டு வந்தியா?"

"இல்ல நாளைக்கு போகலாம் , இப்போது நான் கொஞ்சநேரம் தனியா இருக்கணும் தலைவலிக்குது "

"தலைவலியா என்ன ஆச்சு பேபி ?"
பதறியவள் அவனின் நெற்றியில் தன் கையை வைத்து தடவிக்கொடுத்தாள்

"எல்லா கேள்வியும் வெளியிலிருந்து வந்ததும் கேட்டுவிடுவியா ? கொஞ்சநேரம் அமைதியா இரு . இப்போதைக்கு என்ன ஒன்னும் கேட்காத , தனியாவிடு சொன்ன கேளு ப்ளீஸ் "

"ம்... சரி நீ போ "

என்று அவள் சொன்னதும் குழந்தையுடன் சேர்த்து அவளையும் அணைத்து விட்டு தன் அறையை நோக்கிச் சென்றான். செல்லும் அவன் முதுகையே பார்த்தவளுக்கு ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்டு இனி அவனை தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லாமல் உணவை எல்லாம் மூடிவைத்துவிட்டு கையிலிருந்த குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தாள் .

தன் அறைக்கு வந்தவன் படுக்கையில் விழத்தான் . அவள் சொன்ன சொல் வண்டாக அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்தது . அவளை பற்றிய சிந்தனை இல்லை அவள் சொன்ன "சிங்கிள் மதர்" என்ற வார்த்தையில் தான் அவனின் யோசனையி சுற்றிக்கொண்டிருந்தது. அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அதுமட்டும் அல்லாது தனி ஒரு தாயாய் ஒரு குழந்தையை வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று அவனுக்கு புரியாதா என்ன?

கண் மூடி தன் பழைய நினைவுகளை அலசத் துவங்கினான் . அவன் யோசித்தது போல் இருந்தால் அவன் வாழ்க்கையில் சூறாவளிக்காற்று அடிப்பது உறுதி.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மூவர் சிந்தனையோடு நாமும் பயணிப்போம் .



தொடரும் .
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top