JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 3

Subageetha

Well-known member
அன்றில் அத்யாயம் 3

வீட்டின் பெரியவர்கள் ,ஒருவர்பின் ஒருவராய் மறைய ,உறவுகளுக்குள் இருந்த பிணைப்பும் குறையலாயிற்று. போக்குவரத்து குறைவதும்,அந்தஸ்தை வைத்து கொடுக்கப்படும் மரியாதைகளும்,பாலா –ராமனுக்கு மட்டுமல்ல,ஆனந்துக்கும் மன சலிப்பையே உண்டுபண்ணியது!

ரகு தனது அத்தை பெண் ஜானகியை திருமணம் செய்துகொண்டு திருச்சியில் குடுத்தனம்.ஜானகியிடம் அவன் எதையும் மறைக்க விரும்பினான் இல்லை. வாழ்க்கையை பகிரவென வந்துவிட்டு,

தனது மன நிலையை அவளிடம் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை. இலை மறைவு காயாக அந்த பெண்ணிர்க்கு தெரிந்திருந்த விஷயங்களை அவள் கணவனே கூறிவிட, நிதர்சனம் இதுவென புரிந்துகொண்ட இருவரும் வாழ்க்கையை தொடங்கினார். அவனது தங்கைகள் திருமணமாகி சென்றுவிட,ஒற்றைபெண்ணாக சொத்தோடு இருக்கும் தங்கை மகளை ரகுவிர்க்கு நிச்சயித்தார் அவர் அப்பா. அதற்கு ஈடாக அவர் வாங்கியிருந்த கடன்களில் பெரும்பான்மை பகுதியை ஜானகியின் அப்பா அடைத்துவிட்டார். நெருடல்களோடு ஆரம்பித்தாலும்,அந்த திருமணத்திலும்,மனங்கள் இணையத்தானே வேண்டும்? அவர்களின் புரிதலுக்கு பரிசாய் ஒரு பெண்குழந்தை.

அம்மா வழியில் வந்த நிலத்தை விற்று தாங்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே இரு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை வாங்கினார்..!

இவ்வளவிர்க்கும் நடுவில் ,தன் கணவன் சம்பாதியத்தில் மட்டுமே தனக்கும் குழந்தைகளுக்கும் உணவு உடை..தன் சம்பளம் குழந்தைகளின் படிப்பிற்க்காக மட்டுமே என்பதில் வெகு தீர்மானமாக இருந்த மனைவியை நினைத்து கர்வத்தில் நிமிர்ந்து நின்றது அந்த ஆணின் மனம்...நடப்பவை சரியா,மனைவியும் குழந்தைகளும் தங்களை சுருக்கிக் கொள்ள வேண்டுமா என்பன போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் அவரிடம் பதில் இல்லைதானே?

அவரது சம்பள பணத்தில் அவரது மனைவி பட்டாடை உடுத்த முடியாது. குழந்தைகள் ஆடம்பரங்களை நினைக்க முடியாது...ஆனாலும்,அவர்களது குடும்பம் சிரிப்பை தொலைக்கவில்லை....ஏக்க பெருமூச்சு விட்டதில்லை..அவர்கள் நால்வருக்கான தனி உலகம்.

பாலாவின் சமுகநிலை நிச்சயம் அதிகம்தான்....காரணம் ராமனின் அனுசரணையும்,அன்பும்தான்! மனைவி அவரைவிட அதிகம் சம்பாதிக்கிறாள்.நல்ல வேலை என பிறர் பேசுவதை அவர் மனதில் நிறுத்தியதில்லை.

அவருக்கு தெரியும் ...புற உலக நிகழ்வுகள் அவர்களிருவருக்குள் வராது என்று...

சண்டை வந்தால் அதிக பட்சம் ஒருவாரம் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.குழந்தைகள் தூது போகணும். வார்த்தைகளை கொட்டிவிட்டால் அள்ள முடியாது எனும் தெளிவு இருவருக்குள்ளும். திருமணம் முடிந்து இத்தனை வருஷங்களில் அவர்கள் படுக்கயறை வாக்குவாதங்களை கேட்டதில்லை!

இங்கு அனுவின் கணவன் ,சம்பத் குடித்துவிட்டு,அவளை கடுமையாக நடத்தினான்.பெண் குழந்தை பிறந்த பின்னர்,அவன் நடத்தை நிறைய மாறி இருக்கிறது. மனைவி மகளுடன் அதிக நேரம் கழிப்பதில்லை.

சம்பள பணம் வந்தால்,குடும்பத்திர்க்கு அதிகம் கொடுப்பதில்லை.அவன் நினைவுகளில் பாலா,பாலா,பாலா மட்டுமே!

உள்ளூர நொறுங்கி காணப்பட்ட அனு,இரண்டாம் குழந்தைக்கு தயாரில்லை.பெற்றுக்கொண்டே போனால்,வளர்ப்பவர் யார்?

என்னங்க, இன்னிக்கி,அனு வந்திருந்தா...

ம்‌ம்‌ம்...சொல்லு.,

சம்பத் குடும்பத்த கவனிக்க மாட்டுறானாம்..ஒரே அழுகை.

அவனுக்கு, நீ கிடைக்கலன்னு ஆத்திரம். நீயோ,இந்த மடையன முன்னமே,கல்யாணம் கட்டிக்கிட்ட.ராமனின் குரலில் அவரது,ஆற்றாமை வெளிப்படும்.

அவரது வாயை விரல் கொண்டு மூடியவள்,உங்ககிட்ட நா மரியாத குறைவா நடந்துகிட்டேனா மாமா...என்றவளின் கண்களில் நீர் கோர்க்க,

பைத்தியம்,சும்மா கேலிக்கு சொன்னேன். இந்த நொடி வரை சுகமான வாழ்க்கை வாழுரெண்டி உன்கூட...ராமனின் குரலில் பெருமிதமும் காதலும் வழிய, அறையில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளும் வெளியே வந்து, அம்மா-அப்பாவை கட்டிப்பிடிக்க அங்கு சிரிப்பு சத்தம் பெரியதாகக் கேட்டது.

இரண்டு நாட்கள் கழித்து,

பாலா, அனு அவளோட குழந்தைக்கு என்ன வேணுமோ செய்யு,ஆனா,குடும்ப செலவ சம்பத்துதான் பாக்கணும்.நா சொல்லுறது புரியுதா என்றவர் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள் மனைவி. அவள் மனதை அழுத்தும் பாரமல்லவா அவள் தங்கை.

வார இறுதியில்,பாலாவை பார்க்க அனு ,தன் குழந்தை வாணியுடன் வர, இந்தக் குழந்தையிடமா வெறுப்பு? என உள்ளூர வியந்தார் ராமன். சம்பத் மீது அவருக்கு கோவம் வந்தது. ஆனால், அவர்கள் குடும்ப விஷயம் தான் தலையிட முடியாது என வாணி ,ஆனந்த் சிவா மூவரையும் வெளியே விளையாட அழைத்து சென்று விட்டார்.

சம்பத் குடும்பத்துல,யாருமே,சரியா என்கிட்ட பேச தயாரில்ல. அவரையும் கண்டிக்க அங்க ஆளிள்ள...சம்பத் அடித்த தடங்களை அனு காண்பிக்க, பாலா கண்கள் கண்ணீரை பொழிந்தது.

சம்பத் திருந்தும் ஆள் இல்லை. தங்கை வாழ்க்கை?

இரண்டு வருஷங்கள் பெண்குழந்தையை பெற்றுவிட்டோமே என பொறுத்துக்கொண்டவள்,கணவன் நினைவு முழுதும்,தனது தமக்கையின் நினைவுகள் என்பதை அவனது உளறல்களில் புரிந்துகொண்டாள். பெற்றவர்கள் காலமானபின்னர்,அவளது ஆதரவு அக்கா-அத்தான் மட்டுமே. உடன்பிறந்தவள் வாழ்க்கை தன்னால் சிக்கலில் மாட்டுமோ என அஞ்சியவளாக,ஒரு முடிவுக்கு வந்தவளாக, குடும்ப நீதி மன்றத்தை அணுகினாள்.

தனது சாமான்களுடன் திடீரென வந்த அனுவை,வாணியை நிச்சயம் பாலா எதிர்பார்க்கவில்லை.ராமன் வெகு காலமாக இது ஒரு நாள் நடக்கும் என நினைத்திருந்தார். அவர்கள் வீட்டின் மாடியில் காலியாய் இருந்த வீட்டை வாடகை பேசி அவர்களுக்கு ஒதுங்க வழி செய்து கொடுத்தாள் பாலா. சிறு பெண்ணை தனியாக விட அவளுக்கு தைரியம் இல்லை.ராமனை உலகம் வேறு மாதிரி பேசலாம். ஆனால், தன் உடன் பிறந்தவளாய் கருதும் அந்த சிறு பெண்ணை நடுத்தெருவில் நிறுத்த அவருக்கு இஷ்டமில்லை.

+2 முடித்திருந்த அந்த பெண்ணை மேலே கல்லூரியில் சேர்த்துவிட்டாள் பாலா. இருபத்திரண்டு வயதில் அவள் இளங்கலை கணினி துறையில் முதலாமாண்டு சேர்ந்தாள்.அவள் வாழ்க்கையும் விடிவு பெற்றுத்தானே ஆகணும்?

இப்பொழுது,முதுநிலை முடித்துவிட்டு,அந்தக் கல்லூரியில் விரிவுரையாளராக பணி செய்கிறாள் அனு.பல பிரச்சனைகளை செய்து கடைசியாக,வேலை பறிபோய், சம்பத் அவளுக்கு திருமண பந்தத்திலிருந்து விடுதலை கொடுத்தான். ராமனுக்கு அனுவிர்க்கும் தொடர்பு இருக்கிறது என பரப்பினான். அனு அசரவில்லை. இருபத்தெட்டு வயதாகிறது அவளுக்கு. அவளது மகளும் ,ஒன்பது வயதில் இருக்கும் மகள்.அவளை கரை சேர்ப்பது அவள் பொறுப்பு. அனு மனம் முழுதும் இந்த எண்ணங்களே. பிரசாத் ,உடன் பணி புரியும் முப்பது வயது ஆண்மகன். எந்த குறையும் சொல்ல முடியாது. மனைவியை இழந்தவர். ஒரு மகன் உண்டு. ஐந்து வயதில் . இவளை திருமணம் செய்துக்கொள்ள கேட்டிருக்கிறார். இவள் யோசிக்கிறாள்.

இந்த திருமணத்தில்,தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை. இளம் வயதுக்குரிய உணர்வுகளை அவள் மறுத்து வாழ்வதில் எனக்கு சம்மதமில்லை. ராமனும் பாலாவும் இந்த திருமணத்தை நடத்திவிட முயல்கிறார்கள். பார்ப்போம்.!

குழந்தைகள் வளர வளர அவர்களது தேவை அதிகமானது! இரண்டு படுக்கை அறைகளுக்கு பதிலாக மூன்று தேவை பட நிலைமை அனுசரித்து இந்த வீட்டை மாற்றும் சமயம் ராமனின் கண்கள் கலங்கியது....யாரும் அறியாவண்ணம் துடைத்துவிட்டாலும் அவரது மனைவிக்கு புரியாதா? ஆனாலும்,இப்பொழுது வேறு வழி நிச்சயம் இல்லை....ஆனாலும்,மனதில் முடிவெடுத்த பாலா வேறொன்றும் பேசாமல் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

இவர்களது வீடு வாடகைக்கு விடப்பட்டது....நிலைமை சற்று இறங்கியது என்பதால் நிறைய உறவினர்கள் இவர்களிடம் உறவு கொண்டாடுவதை தவிர்திருந்தனர் பல வருடங்களுக்கு முன்னரே.....ராமனுக்கு இது ஏற்கனவே பழகியநிலை....அதனால் அவருக்கு இவை பெரிதல்ல...ஆனால்,இடைப்பட்ட காலத்தில் உறவினர்களின்,நடத்தை பாலாவிற்க்கு அதிர்ச்சியாக இருந்தது..ஒரு சிறு மனபுழுக்கம் மனதின் ஓரத்தில்....

மனதை கிழிக்கும் வார்த்தைகள். மனிதர்களின் சுய முகம் அறிந்துகொள்ள அவளுக்கான பாடம்...ஆனால்,குழந்தைகளும் இந்த வித முகத் திருப்பல்களை கற்றது காலத்தின் கோலமே! மனிதர்களை புரிந்துகொள்ளவும், தேவையற்ற விஷயங்களை ஒதுக்குவதுமான அடிப்படை பாடங்களை அவர்கள் கற்கவும் அவசியமான வாழ்க்கை பாடம்!

தனிமை வாட்ட, அனு, பிரசாத்தை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தாள்.பாலா குடும்பம் இடம் பெயர்ந்தவுடன், அனு ,வாணி இருவரும் வெகுவாக சிரமப்பட,தனக்காக,ஒரு குடும்பத்தை,அமைத்துக்கொள்ள,அவள் விரும்பினாள்.குட்டி தம்பிக்காக,வாணியும்,வயதில் மூத்த அக்காவிர்க்காக,பிரசாத்தின் மகன் அபிஷேக்கும் தயாராயினர்.

பணத்தின் நிலை மனிதர்களைவிட முக்கியம் என்று இள வயதிலேயே கற்ற ஆனந்த் சிவா இருவருமே சுய முன்னேற்றத்திற்காக ஆழ்ந்து படித்தனர்....மூத்தவன் மருத்துவன்..மேல் கல்விக்காக இந்தவருடம் லண்டன் சென்றுள்ளான்.

சிவா பொறியியல் முடித்து பெங்களூருவில் வேலை ..கால சக்கரம் தான் அச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது! ஆனந்த் படித்து முடித்த பிறகு,தான் வெளிநாடு போவதா...இல்லை இங்கேயே ஐ‌ஐ‌எம் இல்லையெனில் ஐ‌ஐ‌டி செல்ல யோசிப்பதாக முடித்துவிட்டான் ...அதிக பணம் செலவழித்து அங்கு செல்வதைவிட இந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது நலம் என்பது அவன் எண்ணம்...அதற்காக தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறான்!

வாணி இளங்கலை பொறியியல்.அபிஷேக், பத்தாம் வகுப்பு.

பிரசாத் வசதியான இடம், அதனால் ,அனு பொருளாதார நிலையில் நன்றாக இருக்கிறாள். ஆரம்பத்தில்,அவளது இரண்டாம் திருமணத்தை இளக்காரமாய் பேசிய அண்ணி கூட,இப்பொழுது அவளை, தாங்குகிறாள்.



ஒரு மத்திய வர்க குடும்பம் முன்னுக்கு வர எவ்வளவு கஷ்டங்கள்...நஷ்டங்கள் ....உப்ஸ்....அவர்கள் நால்வருக்குள்ளுமான நெருக்கம் மட்டுமே அவர்களை இன்னும் தாக்குபிடித்து மேலேறி வர அவர்களுக்கான உந்துக்கோல்..ஆனாலும், அவர்களுக்கான வாழ்க்கை தேர்வுகள் மிச்சமுண்டு.!



மீண்டும் அடுத்தப் பதிவுடன் சந்திக்கிறேன்.

உங்கள் தோழி,

சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top