• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

இன்று அன்றி(ல்)லை 31

Subageetha

Well-known member
அன்றில் 31

அந்த பெண்மணியின் வீடு ஞாயிற்று கிழமை ஆதலால் எந்த ஆர்ப்பாட்டங்களும் இன்றி இலகு தன்மையுடன் கூடிய காலைவேளை.
அருகில் மகளை அமர்த்திக்கொண்டு அவளின் மழலை மழை பொழியும் போலே, அவளின் சிறார் பள்ளியில் பயிற்றுவித்த சிறார் பாடல்களின் லயத்தை, குரலை அனுபவித்தவாறே, அடுத்த வாரத்தில் உடுத்தும் புடவைகளையும் ரவிக்கைகளையும் இஸ்திரி போட்டுகொண்டு இருந்தாள் ரம்யா. அவள் உடுத்தியிருந்த ஆரஞ்சு வர்ண சுரிதார் அவள் நிறத்தை இன்னும் பிரகாசமாய் காட்டியது.

மகளுடன் நாள் முழுவதும் கழிப்பதுதான் ஞாயிறுகளில் ரம்யாவின் முக்கிய வேலை.பெரும்பாலும் இந்த நேரங்களில் வீட்டு மனிதர்கள் இருவருக்குள்ளும் வருவதில்லை.

அனு தன் குடும்பத்துடன் உள்ளே நுழைய வீட்டில் வரவேற்க ஆளின்றி கூடம் வெறிச்சோடி இருந்தது. மருமகள் பிரசவம் முடிந்து பிறந்தகத்தில் இருக்க குழந்தையையும், மனைவியையும் பார்க்கவென மகன் சென்றிருந்தான். அடுக்களையில் மும்மொரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் ரம்யாவின் அம்மா.

குழந்தையின் குரல் மட்டும் சத்தமாய் ஒலிக்க, கேட்ட குரலாய் இருக்கே என மெல்ல மயங்கினான் ஆனந்த். ராகவியின் குரல் அவனுக்கு பரிச்சயம் தான். ஆனால், இங்கே அவன் ம்ஹும்... நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

அனுவுக்கு, 'சொல்லாமல் வந்துவிட்டோமே ' என்றிருந்தது. சமாளித்துக் கொண்டாள். மெல்ல ரம்யாவின் அம்மாவை அழைக்க, சப்தம் கேட்டு தன் அறை உள்ளிருந்து வந்த ரம்யாவை கண்டு திகைத்தான் ஆனந்த். அவனை கண்டவளுக்கும் அதே நிலை.

ரம்யாவின் அம்மா வெளியே வர, அவர் முகத்திலிருந்து நிச்சயம் அனுவை மொத்த குடும்பத்துடன் அவர் இன்று எதிர்பார்க்கவில்லை என புரிந்தது.

சற்றே திகைத்தாலும் சுதாரித்துகொண்டவர் விருந்துபசாரங்களை முடித்து, சற்றே பேசிக்கொண்டு இருக்க ரம்யா அம்மா மீதம் வைத்திருந்த சமையல் வேலைகளை முடித்தாள்.
வந்தவர்களுடன் பேச அவளுக்கு அதிகம் ஒன்றும் இல்லை.
ஆனந்த் தெரிந்தது போல் காண்பித்துக் கொள்ளவில்லை.
சற்று நேரம் வெளியே சென்று நின்றுவிட்டு வந்தான்.

பேச்சு மெல்லமாய் ரம்யா பக்கம் சென்றுகொண்டிருந்தது. அனு தன் மனதில் இருப்பதை நல்ல வேளையாக சொல்லியிருக்கவில்லை.

'ரம்யா ஒரு இளம் விதவை', அங்கிருக்கும் குழந்தை அவளதுதான் 'என்பதை அறியும் சமயம் எப்படி உணர்ந்தாள் அனு என்று வார்த்தை கொண்டு சொல்ல முடியாது. நிச்சயம் ஏமாற்றமே! தான் பெற்றவளாக இருந்தால், நிச்சயம் ரம்யாவை ஆனந்துக்கு கேட்டிருப்பாள். அக்கா மகனுக்கு? இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு அனுவும் அவள் குடும்பமும் கிளம்பியது. அதுவரை, ரம்யா ராகவி இருவரும் வெளியே வரவில்லை.
வந்தவர்கள் நோக்கம் ரம்யா, அவள் அம்மா இருவருக்குமே நன்கு புரிந்திருந்தது. அந்த புரிதல் காரணமாகதான், பேச்சு எழும் முன்பே ரம்யா பற்றி சொல்லிவிட்டார் அவள் அம்மா.

அறைக்குள் நுழைந்த ரம்யாவுக்கு மூச்சே வரவில்லை. ஆனந் வாயிலில் நின்று வேடிக்கை பார்ப்பதையும், இவள் பார்த்துக்கொண்டே சமயல் செய்தவளுக்கு கூடத்தில் அம்மா பேசுவதும் தெளிவாய் கேட்டது.

அவள் முதன்முதலாய் நீண்ட பெருமூச்சை வெளியேன்றினாள். ஆனந்த் வெகு நாட்களாக அவளை
அலைக்கழிக்கிறான். எந்த விதத்தில் எனில் ஏதோ ஒரு விதத்தில் என்பது தான் பதில். நிறைய கேள்விகளுக்கு அவளிடம் மட்டுமல்ல, அவனிடம் கூட பதில் இல்லை.
சுயம் எனும் பெயரில் அவனிடமிருந்து நகர முயற்சி செய்கிறாள்.
அவனது பாராமுகம் அவளுக்கு சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள மறுக்கிறாள். நடப்பவை நிஜமாய் இருக்க கூடும் என்பது அவளை பொறுத்த மட்டில் கனவு.
நந்தன் சொன்னவை, அதன் தாக்கம் அவளிடம் உண்டு.

எத்தனை முறை தனக்கு தானே அறிவுறுத்தி கொண்டாலும், ஆனந்த் விழி வழியே சொல்லும் செய்திகளை கடக்க ரம்யாவால் முடியாது.அதே சமயம் அந்த செய்திகளுக்கான பதில், அதை தரவும் அவளால் இயலாதே?

வரவேற்புக்கு அழைக்க ஆனந்த் அழைத்த பொழுது,டாக்டர் ஆனந்தனை தான் அவள் சந்திக்க சென்றாள். நண்பனை கூட அல்ல. இதை எல்லாம் யாரிடம் சொல்ல முடியும்?

அவன் உயரம் வேறு... தன் நிலைமை வேறு. நினைக்க நினைக்க கண்கள் குளம் கட்டியது ரம்யாவுக்கு. காரணம், அதுவுமேதான் புரிந்து தொலைகிறதே?
தன் நெஞ்சறிய பொய்யற்க... அவளால் ராகவியை தாண்டி இத்தனை வருஷங்களில் வேறு யாரையும் தன் அந்தரங்க வாழ்வுக்குள் அனுமதிக்க யோசனை வந்ததில்லை.

தனிமை, துன்பம் என்றோ, இளமை பாரம் என்றோ கருதியதும் இல்லை.
இன்று இளமை சுமை என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கென்று வெளி சொல்ல முடியாத பெரும் அழுத்தம் வேறு இருக்கிறதே?

அவ்விடயம் அவளை மட்டும் சேர்ந்ததில்லையே... ராகவியையும் உட்படுத்தும் கடுமையான கொடுமையான விடயம் அல்லோ?
ஆனந்திடம் எவ்வாறு இதை சொல்வது... கடைப்பரப்பும் சாதாரண செய்தியா இது?

ரம்யாவின் மனம், திருமண பேச்சு எடுக்கும் முன்னரே ஆயிரம் கற்பனைகளை விதைத்து, கேள்வி பதில்களை நடத்தி தோல்வியுற்றது.

காரணம், அவள் மனதில் ஆனந்த் என்பது மட்டுமே... உள்ளங்கை நெல்லிக்கனி.
தாங்க முடியா மனபாரம்... அதை தாங்கும் அழுத்தமான தோள்களில் சாய்ந்து ஓய்வெடுக்க அவள் அவனை தேடி தேடி சோர்ந்து போகிறாள்.

மறுநாள், வழக்கம் போல் விடியும் திங்கள். அவசர கதியில் தயாராகி, குழந்தையை சிறார் பள்ளியில் விட்டு, வேலைக்கு கிளம்பினாள்.
ஆனந்தனை பார்த்தால்...என்று மனதின் ஒரு பக்கமும், டாக்டரை பார்க்கவேண்டும் என்று மனதின் இன்னொரு பக்கமும் வாதாட தவித்து போனாள். அவள் பதட்டம் வெளிப்படையாக வெளியே தெரிய... உடன் பணி செய்யும் தோழி பிரியாதான் தண்ணீர் கொடுத்து அவளை ஆஸ்வாச படுத்த வேண்டியிருந்தது.

உணவு எடுத்து வர மறந்ததனால் இன்று கான்டீன் உணவு சாப்பிட வேண்டிய நிலை.
ஆனந்த் இன்னும் சில மருத்துவர்களோடு சாப்பிட்டு கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன் இவளை கவனிக்கவில்லை. ரம்யா கவனித்துவிட்டாள்.
அவன் கிளம்பும் சமயம் இவள் இரண்டு டேபிள்கள் தள்ளி அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, யோசனையுடன் சென்று விட்டான். இரண்டு நாட்கள் இதே கண்ணாமூச்சி ஆட்டம் தொடர இனி ஆனந்த் பற்றி பதற தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்திருந்தாள். ஆனந்த் ஒரு பக்கம் ரம்யா பற்றிய யோசனை இருந்தாலும் மருத்துவமனை கட்டும் வேலையில் தீவிரமாய் இருந்தான். அவன் வேலை செய்யும் மருத்துவ மனையில் நெருக்கடியான சூழ்நிலை அவனுக்கு.
மருத்துவ மனை கட்டி முடிக்க இன்னும் இரண்டு வருஷங்கள் ஆகும். வேறு தேட யோசனை அவனை ஆக்ரமித்தது. சிக்கலான சூழ்நிலை.

பிரியா மூலமாக விஷயம் ரம்யா காதுகளை எட்ட ரம்யா தன்னையே நொந்து கொண்டாள்.
அவனுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம் என்று அவளை குத்தியது மனம். ஆனால், கோவம் கொண்டவன் அவன் அல்லவா... அவன் ஆசை நிராசை ஆன நாளை அவனால் ஏற்க முடியவில்லை. வருவாள் என்று ஆயிரம் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தான். ஏனோ ரம்யா தன்னை விலக்க, உணர்வுகளுடன் விளையாடுவதாக எண்ணிகொண்டான். இரண்டு வாரங்களில் வேறு வேலை தேடிக்கொண்டு சென்று விட்டான். ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறதாம் என்றாள் பிரியா.

மெல்ல தன்னை மீட்டு எடுத்துக் கொண்ட ரம்யா, தன்னுள் ஏற்பட்ட சலனத்தை நினைத்து வெட்கினாள். ராகவி மட்டும் தான் இனி என் வாழ்வின் இறுதி வரை என்று தன்னுள்ளே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள்.
இடரி, இடம் மாறிய இதயம் தன்னை மாற்றி கொள்ள முடியாமல் தவித்தது. ஆனந்த் திருமண உறவுக்கு கேட்டிருந்தால் விடை என்ன என்பது பற்றி ரம்யாவுக்கு தெளிவு இல்லை. மனம் எதை எதிர்பார்க்கிறது? ஆனால், கேட்கவும் இல்லை. ஒரு வேளை நம் கற்பனையாக இருக்குமோ?

ஆனந்த் வீட்டில் ராமன் வேலை ஓய்வு பெற, ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த பாலாவுக்கும் ஓய்வு கிடைத்து விட்டது.

இத்தனை வருஷங்களில் இருவரும் தனியாக வெளி சென்று வந்ததில்லை. அதுவே பாலாவுக்கு ஏக்கம் உண்டு. ஆனந்த் பெற்றோருக்கென தனியாக மகிழுந்து வாங்கி பரிசளித்திருந்தான். இருவரும் சென்னை சுற்றி இருக்கும் கோவில்களுக்கு சென்று வருவதை வழமை ஆக்கி கொண்டார்கள்.

மாதங்கள் நகர, ஜூனியர் பாலா வெகுவாக சோர்ந்து காணப்பட்டாள். ஊருக்கும் பெற்றோரை காண செல்லாமல், சிவாவிடமும் அதிகம் பேசாமல், வேலை உண்டு தான் உண்டு என்று இருந்து கொண்டாள். சிவாவுக்கு வேலை பளு, அதனால் பெரியதாக அவள் விலகல் தெரியவில்லை. பெற்றோர் நிலை?

ஜூனியர் பாலாவோ வீடியோகாலில் பேச முயற்சி செய்யும் பெற்றோருக்கு முகத்தை காட்ட மறுத்தாள். ரகு ஜானகியால் இந்த நிலை ஒப்பு கொள்ள முடியவில்லை. ரகு ஒரு முடிவுக்கு வந்தவராக, ஜானகியுடன் சென்னை வந்துவிட்டார். மறுப்பு வருவதாக இருந்தால் சிவா பெற்றோர் மறுக்கட்டும். நாங்கள் மறுக்க போவதில்லை என்பதாக இருந்தது அவர் நடப்பு.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ராமன் வீட்டுக்கு மனைவி ஜானகியுடன் ரகு வந்தது பாலாவுக்கும் பெரிய அதிர்ச்சிதான். ஆனால், சமாளிக்க முயன்றாள்.

ரகு ஒரு வழியாக ஜூனியர் பாலா -சிவா காதலுக்கு எங்கள் தரப்பில் பச்சை கொடி என்று பேச ராமன் பாலா இருவரிடமும் ஆழ்ந்த மௌனம்.

திருமணம் என்பது பெற்றோரால் நிச்சயம் செய்ய படுகிறதா, இல்லை காதலர்கள் நிச்சயம் செய்கிறார்களா?

எப்படியும் சொர்க்கத்தில் நிச்சயம் செய்ய படுகிறது.

ஆனந்த் வேறு மருத்துவ மனையில் பணிக்கு சேர்ந்து விட்டான். பாலா சிவா காதலும் ஊசல் ஆடுகிறதே?


மீண்டும் சந்திப்போம்

தோழி சுகீ.
 
asasa11
asasa11

Members online

Latest Updates

Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}