• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

இன்று அன்றி(ல்)லை 39

Subageetha

Well-known member
அன்றில் 39

ஆனந்த் -ரம்யா திருமண ஏற்பாடுகள் வேகமாய் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க இன்னொரு புறம் மருத்துவமனை கட்டுமான பணிகள், அறுவை சிகிச்சைகள் என்று ஆனந்த் தன்னை மறந்து ஓடிக்கொண்டிருந்தான். திருமணம் முடிந்து பதினைந்து நாட்கள் ஓய்வு எடுத்து ரம்யாவுடன் இருந்து, நேரம் செலவழிக்கவும், நிதானமாக அவளுடன் பழகி அவளை புரிந்து கொள்ள வேணும் என்றும் முடிவெடுத்துள்ளான்.
'ரம்யா தான் முதல் திருமணம் தோற்றது இங்கு இதே இடத்தில் தான் 'என்று சொன்னதிலிருந்து அவன் மனதில் தவிப்பு... அவளை மீட்டு கூட்டிக்கொண்டு இதே இடத்தில் சந்தோஷமாய் சிரித்த முகமாக வலம் வர இதயம் துடித்தது.
தான் மீண்டும் ஒரு பெண்ணுக்காக உருகுவோம், அவள் தன் வாழ்வில் மையப் புள்ளி ஆவாள் என்றெல்லாம் சத்தியம் செய்தாலும் நம்பியிருக்க மாட்டான். ஆனால், நிஜமாய் நடக்கிறதே!

திருமண வேலைகள் முழுவதும் வீட்டினரே செய்ய வேண்டிய நிலை.
ஒரு அரை நாள் மட்டும் ஒதுக்கி பெண்ணுக்கு கூரை சேலையும் திருமாங்கல்யமும், எடுக்க வந்தான். அவன் உடைகள் தேர்வை ரம்யா -சிவா இருவரிடமும் ஒப்படைத்துவிட்டான்.
ரம்யாவுக்கு ஏக வருத்தம்.
தனிமையில் பேசும்போது தனது மனதில் உள்ளவற்றை ரம்யா அவனோட பகிர்ந்து கொள்ள, 'இனிமே என்னோட நிறைய அந்தரங்க விஷயங்களை நீதான் பாத்துக்க பழகிக்கணும்'என்று சற்றே இடைவெளி விட்டு நிறுத்த பெண்ணுக்குள் விவரிக்க முடியாத உணர்வு அவளை தத்தளிக்க செய்ய முகமெல்லாம் சிவந்து, அவளது மனம் செய்யும் கற்பனைகள்... அப்பப்பா....வீடியோ காலில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்துக்கோ, திருமணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதே... இன்னும் ஏன் அவளுடன் இந்த இடைவெளி? என்று ஏங்க ஆரம்பித்து விட்டான்.அவளின் வெட்கம் அவனை பித்தனாக்கியது.
தன்னை முயன்று சரிசெய்து கொண்டு,' அந்த அந்தரங்கத்தில் என்னுடைய டிரஸ் விஷயமும் உண்டு... நீ என்ன மாதிரி டிரஸ் சூஸ் பண்ணாலும் நான் போட் டுப்பேன். கிசுகிசுப்பாய் அவள் காதுகளை வருடிசெல்லும் அவன் குரல் அவன் மீசையின் குறுகுறுப்பை அவளை உணரச்செய்ய புலன்கள் வேலை நிறுத்தம் செய்வதை போல் உணர்ந்தாள் ரம்யா.
'என்னுடைய ரசனை உனக்கு கொஞ்சமாவது தெரியணும்,புரியனும்னு உதவிக்கு தான் சிவா உன்கூட வரான் என்று விளக்கம் சொல்லி முடித்தான் ஆனந்த்.
இருவருக்கும் ஒன்றாக சென்று சேர்ந்து உடைகள் எடுக்க நினைத்திருந்தாள் ரம்யா. அவன் 'நீ எடுக்கும் ஆடையை நா போட்டுப்பேன்... என் அந்தரங்கம் உன்னை சேர்ந்தது'என்று அவளுக்கு அவன் கொடுத்த உரிமை கண்களில் கண்ணீரை வரச் செய்தது

சாதாரண மணப்பெண்ணாக அவள் மனம் இந்த திருமண உறவை எதிர்பார்க்க தொடங்கியிருந்தது.

ஒப்பு தாம்புலம் அன்று ஆனந்தை பார்த்தது. பிறகு அலைபேசியில் பேசிக் கொள்வதுடன் சரி. நடுவில் அரை நாள் அவனோடு...அவனது கூடவே வேலை பார்த்தவள் ஆதலால் அவன் நிலை தெரியும். வீடியோ காலில் பேசுபவளின் கண்கள் சொல்லும் ஏக்கம்,அவனுக்குள்ளும் அதன் பிரதிபலிப்பு உண்டு. அவளை தேற்றும் சாக்கில் தன்னையும் தேற்றிக் கொண்டான். அவளுக்கு புரிந்தது, அவன் மனம். அவனிடம் பேசும் சமயங்களில் கலகலப்பு குறையாமல் பார்த்து கொண்டாள். இருவருக்குள்ளும் காதல் பயிர் செழிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவள் அவனை முழுமையாக நம்பத் தொடங்கி விட்டாள். தன்னை அவனிடம் ஒப்படைக்க தயாராகிவிட்டாள். அவளது ஏமாற்றங்களுக்கு வடிகால் அவர்களது திருமண உறவு. அவனின் காதல் தோல்விக்கு மருந்து அவள்.

பெரும்பாலும் அவர்கள் பேசும் நேரம் இரவு, ஆதலால் ராகவி தூங்கிவிடுவாள். இப்போதெல்லாம் வீடியோ காலில் பார்க்கும் சமயங்களில் ஆனந்தை 'அப்பா' என்றே அழைக்க தொடங்கியிருந்தாள் குழந்தை. யாரும் வற்புறுத்தி சொல்லாமலே இது நிகழ்ந்தது.

நடுவில் ஒரு நல்ல நாளில் திருமணம் பதிவு செய்து, குழந்தையை ஆனந்த்
தத்தெடுத்துக் கொண்டான். சாத்திர முறை படி அவன் கைகளில் தானும் அடைக்கலம் புகுவது என்று என ஏங்கியது பேதை மனம்.

பத்திரிக்கை அடித்து மிகவும் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மட்டும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப் பட்டு ரகு குடும்பத்தையும் 'வருங்கால சம்மந்தி' என்ற முறையில் அழைப்பதாக இருந்தார் ராமன். அவர் மனதில் வேறு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனந்த் திருமணம் முடிந்த உடனேயே, சிவா -பாலா இருவரின் திருமண நிச்சயதார்த்தத்தை
சூட்டோடு சூடாக நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம்.போனில் பேசும் போது இதை ரகுவிடம் வெளிப்படுத்தி இருந்தார் ராமன்.
ஆனால்,இன்னமும் பாலாவிடம் சிவாவுடன் கல்யாணம் பற்றி பேசவில்லை ரகு. பாலா அவர்கள் கையில் சிக்காமல் நழுவி கொண்டே இருந்தாள். அவள் மனதில் சிவாவுடன் திருமணம் பற்றி நிறைய குழப்பங்கள். வேறு வழியின்றி திருமணத்திற்கு செல்லும் முன் உறையூருக்கு வருவதாக வாக்களித்திருந்தாள் மகள்.
ரகுவுக்கு உள்ளூர வருத்தம் தான்.
காதலுக்கு சிறிது மறுப்பு எனும்பொழுது தங்களிடம் சற்றுத் தள்ளியே நிற்கப் பழகிய மகள் காதலித்த பையனையே திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொன்ன பிறகும் எதற்காக இந்த தொலைவு? அவரால் இவற்றை ஜீரணிக்க முடியாமல் சிவாவுக்கே அழைத்தார்.

சென்னை வீட்டிலிருந்தும், வேலை செய்ய இரண்டு மாதங்களுக்கு அனுமதி வாங்கி இருந்தான் சிவா. ஆனந்த் மிகவும் வேலை அழுத்தத்தில் இருந்ததால் சிவாவும் சேர்ந்து திருமண வேலைகளை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

ரகு சொன்ன பிறகுதான் பாலா தன்னிடமும் சரியாக பேசுவதில்லை என்றே உறைத்தது அந்த மடையனுக்கு. காரணம் தெரியாமல், எதனால் இவ்வாறு என்றும் புரியாமல் குழப்பத்தில் தலை வெடித்துவிடும் போல் இருக்க லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டான். சற்றே யோசித்தவனாக, மும்பை செல்ல சனிக்கிழமை காலை நேர விமானத்தில் அனுமதிசீட்டுக்கு பதிவு செய்துவிட்டு பாலாவிடம் சென்று மும்பை செல்வதாக மட்டும் சொன்னான். பாலா சிரித்துகொண்டே சரி என்றது அவனுக்கு சங்கடத்தை கொடுத்தது.

பத்திரிகை வந்தவுடன் ராமன் பாலா ஆனந்த் இருவருடன் ஞாயிறு அன்று குல தெய்வ கோவிலுக்கு சென்று வந்தார்கள். ரம்யா வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று பத்திரிக்கைகளை கொடுத்த பின் மற்றவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தொடங்கினார்கள் ராமனும் பிரசாதும். பாலாவுக்கு சற்றே சோர்வாய் இருந்ததால் வேலைகளை குறைத்துக் கொண்டு ஓய்வு எடுக்க டாக்டர் ஆனந்த் அறிவுறுத்தி இருந்தார். அதனால் பாலா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

மும்பையில், ஜூஹு கடற்கரையில் அமர்ந்தகொண்டு கடலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள் சிவா -பாலசரஸ்வதி இருவரும். கடல் ஆர்ப்பரிப்பை விட இருவரின் மனதும் அதிகம் ஆர்ப்பரித்தது. பாலா கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். சிவாவுடன் இருக்கும் மகிழ்ச்சி அவள் முகத்தில் இல்லை. மெலிந்து, கண்கள் சுற்றி லேசான கருவளையத்துடன் காதலியை கண்டவனுக்கு நெஞ்சு அடைத்தது.

என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு சம்மதம் இல்லையா பாலா... என்னை காதலிச்சு தப்பு பண்ணிட்டதா யோசிக்கிறாயா?என்றவனை வெறித்து பார்த்தவள் பளார் என்று அறைந்துவிட்டாள் பாலா. "எங்க வேலை கிடைச்சாலும் கிளம்பு, வேலைதான் முக்கியம்னு சொன்ன ராஸ்கல் நீ, இப்போ பிளேட்டை திருப்பி போட்டு பாக்கறியா, வேற எவளும் சிக்கிட்டாளா உன்னை கல்யாணம் செஞ்சுக்க... என்றவளின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது. சிவாவுக்கு புரிந்தது அவள் மனம். "கல்யாணம் பண்ணிட்டு நீ வீட்டுல எனக்கு பொண்டாட்டியா இரு போதும். வேலைக்கு போகவும் வேணாம், என்னை தவிக்க விடவும் வேணாம்" என்றவன் சட்டென்று அவளை அருகில் இழுத்து அமர்த்திக் கொண்டு விளக்க ஆரம்பித்தான்.
எனக்கு வேலை கிடைக்க லேட்டானாலும் உன் காரியர் முக்கியம்னு நினச்சேன் டியர்... நா என்ஜினீயர் அதோட சேர்ந்த மேல் படிப்பு... ப்ரொபைல் மேட்ச் ஆகி வேலை கிடைக்க தாமதமானாலும், உனக்கு கஷ்டம் ஆக கூடாதுன்னு யோசிச்சேன். வேலை இல்லாம பொண்ணு கேட்டு வர முடியாது... எங்க வீட்ல ஒரு வருஷம் வெயிட் பண்ண சொன்னாங்க. ஒரு வேளை நீ வேலைக்கு போகாம வீட்டிலிருந்தா வேற மாப்பிள்ளை பாத்து உனக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பிடுவாங்கன்னு பயம்... அதான் கிடைச்ச வேலைய விடாதேன்னு சொன்னேன். இப்போ தான் வீட்ல ஓகே சொல்லிட்டாங்க இல்ல.. அப்புறம் என்னடி? என்று அலுத்துக் கொண்டான்.
'அப்போ கல்யாணம் முடிஞ்சா நா வேலைக்கு போக மாட்டேன், பரவாயில்லையா என்றவளை சிரித்துக்கொண்டே, ம்ம்ம் போக வேணாம். என் சம்பளமே போதும் நாம சந்தோசமா வாழ என்றவனை ஏக்கம் தீர இறுக்கிக் கொண்டு முத்த மழை பொழிய தொடங்கிவிட்டாள் பாலா. காதலிக்க தொடங்கி இத்தனை வருஷங்களில் அவர்களுள் முத்த பரிமாற்றம் நிகழ்ந்ததில்லை. இன்று அவள் தன் கட்டுப்பாடுகளை உடைத்து, அவனுக்கு முத்தங்களை வாரி வழங்குவதில் அவளின் ஏக்கம் குழப்பம் எல்லாம் புரிந்தது அந்த காதலனுக்கு. அவள் தன்னை சுதாரிக்க அனுமதித்து, வீட்டுக்கு போன் பண்ணு... உங்கப்பா ரொம்ப தவிக்கிறார். காதல் எவ்வளவு முக்கியமோ, அப்பா அம்மாவும் முக்கியம்.. அதோட நம்ம நிச்சயத்துக்கும் ரெடியாகி சென்னை வா என்றுவிட்டு அவளை எழுவதற்கு கை கொடுத்தான் சிவா. புன்னகை முகம் காட்டும் சிவாவிடம் எப்போதும் போல் தன் வசம் இழந்தாள் பாலா.

ஞாயிறு காலை சிவா சென்னை திரும்ப, பாலா தன் அப்பா ரகுவுக்கு போன் செய்து தான் வருவது பற்றியும், நிச்சயம் செய்ய சம்மதத்தையும் சொல்லி விட்டு அலுவலத்தில் விடுப்பு கேட்டு மெயில் அனுப்பி காத்திருந்தாள். தான் செய்த தவறு அவளுக்கு புரிந்தது. சிவா அவள் வாழ்வின் நீராதாரம். மகள் குரலில் தெரிந்த மகிழ்ச்சி ரகுவுக்கு சிவா மீது நல்ல அபிப்ராயம் கொள்ள செய்தது. மகளின் மகிழ்ச்சி அவன் தான், என்று தெளிவாய் புரிந்து கொண்டார். காலம் முழுவதும் இருவரும் இணை பிரியாமல் வாழ பெற்றவர் மனம் வாழ்த்தியது. நல்ல மரு(மகன்) கிடைப்பது பெரும் பேறு. அது ரகு -ஜானகிக்கு
வாய்த்துள்ளது.

மீண்டும் திருமணத்தில் சந்திப்போம்
சுகீ.
 
asasa11
asasa11

Members online

No members online now.
Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}