JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 4

Subageetha

Well-known member
அன்றில் அத்யாயம் 4

ஆனந்த் லண்டன் வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் முடிந்தது. தினமும் இரவு வீடூ வந்தவுடன் இந்திய நேரப்படி ,வீட்டிற்க்கு அழைப்பான். எல்லோர் முகத்தையும் பார்த்தபிறகு ,ஒரு சந்தோஷம். ஆனாலும், அம்மாவின், மடிசுகம், அப்பாவின் தட்டிக்கொடுக்கும் குரல், சிவாவின், குறும்பு, வம்பிழுக்கும் வானரம். அனு சித்தி, குட்டித் தங்கை ,பின்னே சுற்றும் தம்பி...இவ்வளவு தொலைவில் இருக்கும் தனக்கு இவர்களுடன் பிரிவென்பதே விழுங்க முடியாத பெரிய மாத்திரைதான்.

படிக்க வந்துவிட்டு ,சங்கடப் படுவது சரி இல்லைதான்!

ஆனாலும்,குடும்பத்தினருடன் அரவணைப்பில் இத்தனை வருஷங்கள் கழித்தவன். அவன் நேரம், சென்னையின் அரசு மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைக்க விடுதியில் வசிக்கும் நிலையும் இருந்ததில்லை . வெளிநாடு சென்று படிக்க முடிவு எடுத்தது அவன்தான். இத்தனை வருஷங்களாக மத்திய வர்கமாக இருந்த குடும்பத்தை மேல்தட்டுக்கு அழைத்து செல்லும் வெறி. அப்பா அம்மா பட்ட அவமானங்களை துடைக்கும் வெறி.

தங்களை தள்ளி நிறுத்திய உறவினரை ,நிமிர்ந்து பார்க்கவைக்கும் வேகம். படித்து முடித்து சில வருஷங்கள் இங்கேயே இருந்துவிட்டு இந்தியா சென்றுவிட வேண்டும். கொஞ்சம் பணமும், வெளிநாட்டு மருத்துவ படிப்புடன் ,கொஞ்ச காலம் வேலையும் செய்தால் ,நல்ல மருத்துவ மனையில் வேலை கிடைக்கலாம். பிறகு ,வசதி குறைந்தோர்க்கும் இலவசமாகவோ, குறைந்த செலவிலோ,மருத்துவமும் பார்க்க முடியும். இவ்வாறெல்லாம் யோசித்துதான் அவன் இங்கு வந்ததே.

தனிமையில், தவித்திருந்தவனுக்கு, இந்திய வம்ஸாவளியை சேர்ந்த நிகிலாவுடன் காதல், உண்டானது ... நிச்சயம் வரமா அவனது பூர்வீக கர்ம வினையா? நிச்சயம் என்னால் கணிக்க முடியவில்லை.

அவளுடன் உறவு ஏற்பட்டவுடன் ,வீட்டில் பேசுவதை குறைத்திருந்தான். பாரிஸில் நிகிலாவினது பெற்றோர் இருக்க,இவள் ஒரு அடுக்ககத்தில் அறை எடுத்திருந்தாள். ஆனந்துடன் உறவு என்றானவுடன் தனது அறையை விடுத்து இங்கேயே வந்துவிட்டாள்.

படிப்புடன்,இவர்களது உறவும், கட்டிலை பகிரும் அளவிர்க்காய் வளர்ந்திருந்தது. இருவரும் குடும்பத்தை பிரிந்திருந்த தனிமை ,அணைத்து ஆறுதல் சொல்ல ஏதுவாய்!

திருமணமற்ற இந்த உறவில் ஆனந்திர்க்கு தயக்கம், ஆனால் அவனது தேவை அவனது நியாய உணர்வை புறந்தள்ளியது. தேவை என்றுமே அப்படித்தானே? சரி என்பதும்,தவறேண்பதும்,அவரவர் மனதின் கோலங்களோ?

நிகிலா, அவள் பூர்வீகம் இந்தியா .,எனினும்,அவள் மனது முழு வெளிநாட்டு தன்மையுடன். அவளுக்கு லிவ்-இன் தவறாக படவில்லை.

ஒன்றாக படிக்கவும் உணர்வுகளை பகிரவுமான ஒரு முழு காதல் வாழ்க்கை. அவர்கள் உலகமே வேறாயிற்று.ஆனாலும், அவளுமே அவளுடைய பெற்றோரிடமும்,உடன்பிறப்புக்களிடமும் இதைப் பற்றி கூறியிருக்கவில்லைதான்..

நிகிலா வெளியே செல்லும் பொழுது ஆனந்த் தனது வீட்டிர்க்கு அழைப்பான். படிக்க நிறைய உள்ளதென சொல்லி விரைவில் வைத்தும் விடுவான். பெற்றோரிடம் அவன் வாழும் நிலையை சொல்ல வாய்தான் வரவில்லை. குற்ற உணர்ச்சியா எனத் தெரியவில்லை..

இரண்டு வருஷங்களும் நிமிடங்களாய் ஓடினவா.,இல்லை வருத்தங்களுடன் கழிந்தனவா என்பதை ராமன் தம்பதிதான் சொல்ல முடியும். வாணி பொறியியல் முடித்துவிட்டு அவளுக்கும் பெங்களூருவில் வேலை கிடைத்து சென்றுவிட்டாள்.

பிராசத்துக்கு சொந்தாமான வீடு பி‌.டி.‌எம்.லேஅவுட்டில் இருக்கிறது .அங்குதான் சிவா தங்கியுள்ளான். அங்கேயே வாணியும் தங்கப்போகிறாள்.

அபிஷேக் மட்டும்தான் அம்மா,பெரியம்மா என சுற்றிக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதலாய்.அவனும் பொறியியல் சேர்ந்துவிட்டான்.

காலம் நிற்கப் போவதில்லை.



காலை பரபரப்புடனேயே,ரம்யா தனது வேலைகளை முடித்துவிட்டு,தனது இரண்டு வயது ராகவியை தயார் செய்து,அருகில் உள்ள காப்பகத்தில் விட்டுவிட்டு ,ஓடினாள் அவள் வேலைசெயீயும் மருத்துவ மனைக்கு. எம்.எஸ்.சி சைகோலோஜி படித்தவள்.நோயாளிகளின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை,அறுவை சிகிச்சைக்கும் அதன் பின்னர்,மன ஆரோக்யத்திர்க்கும் தேவையான மனத் தெம்பளிக்கும் பொறுப்பு அவளினது.

வீட்டில்,அம்மா, அண்ணன் அண்ணி எல்லோரும் இருந்தும், அவள் மகள் ராகவி தனியாகத்தான் கழித்தாகவேண்டும். விடுமுறை நாட்களில் கூட, அம்மாவும் மகளும் வீட்டில் இருக்க முடியாது. அவர்கள் வாங்கிய வரம்.

கணவன் இறந்து,பிறகு அவனது சொத்துக்கள் வேண்டாம் என மறுத்துவிட்டு வந்த பிறகு ,அம்மா முதற்கொண்டு அவளை தூர நிறுத்தியதுதான் கொடுமை. ராகவி பிறப்பிர்க்காக ரம்யா பிறந்தகம் வந்த சமயம் குமார் இறந்துவிட்டான். பிறகு, அவன் சம்மந்தபட்ட எதிலும் ரம்யா ஈடுபடவில்லை.

ஏறக்குறைய ஐந்து லகரங்கள் கடன் வாங்கியிருந்தான் ரம்யாவின் அண்ணன் ரமணன். சொத்து வேண்டாமெனில்,அவற்றை விற்று கடனை பைசல் செய்திருக்கலாம் என்பது வீட்டாரின் கருத்து.

அவள் இவ்வாறு முடிவெடுக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கும் எண்ணம் எவருக்குமில்லை.பணம் என்று வரும்பொழுது,மனித குணங்கள் மாறுவது சகஜம்தானே!

ரம்யா அன்று சந்திக்க வேண்டிய நோயாளிகளின் குறிப்புக்களில் தன்னை பொருத்திக்கொண்டாள்.உள்ளூர என்னமாதிரியான நினைவுகள் படுத்தினாலும், வேலை என்று வந்துவிட்டால் சுய அலசலை குப்பையில் போட்டால்தானே வண்டி ஓடும்?


ஆனந்த் லண்டனிலேயே சில வருடங்கள் இருந்து கடன்களை அடைக்க யோசிக்க...இளையவன் பெங்களூருவில் பிரபல நிர்வாக கல்லூரியில் சேர அவனுக்கு அழைப்பு, வந்துவிட்டது.கல்லூரி அவன் இருக்கும் வீட்டினருகேதான். அவன் சம்பாதித்த பணம் படிப்பு ,அவன் தங்கும் செலவுகளுக்கு போதும்...ராமன் பெருமைப்பட ,தாய் மனமோ தன் சம்பளமே இவர்கள் படிக்க தானே? என்று விம்மியது.

அவள் சம்பாத்தியத்திர்க்கு செலவு வைக்க யாராவது வருவார்கள்.நிச்சயமாய்.

இரண்டு பிள்ளைகளும் அருகில் இல்லை...இருவருக்குமான தனிமை..வார நாட்களில் அலுவலகம்...விடுமுறை தினங்களில் சிலசமயம் சிவாவை பார்க்க இவர்களோ,இல்லை அவன் இங்கோ வருவான்...

நான்கு வருட உழைப்பில் கடன்களை அடைத்துவிட்டு கொஞ்சம் பணமும் சம்பாதித்து ,ஆனந்த் இந்தியா வந்துவிட்டான்...



அவன் .நடத்தைதான் முன்பு போல் இல்லை..என்னோட படிப்பு நம்ம நாட்டுக்கு உதவனும் என்பதில் தீர்மானமாக இருக்க...சென்னையின் பிரபல மருத்துவமனையில் வேலையில் சேர்ந்துவிட்டான்...இலவச மருத்துவ முகாம்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான் .அவன் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணன்.

எனக்கு நல்ல சம்பளம் அவசியம்பா...பட் மனசாட்சியை விட முடியாது..அதுக்காகத்தான் இப்படி போறேன் என்றுவிட்டு சிரித்தவனின் கண்களில் தெரிந்த உணர்வுகள் அவனது எண்ணங்களை பறைசாற்றின.

சிறுவயது அனுபவங்களை போல நல்ல ஆசான் உலகில் இல்லை....



திருச்சிக்கு மாற்றல் வாங்கி சென்ற ரகு ஒரு சில வருஷங்களிலேயே தனது அத்தை மகளை குடும்பத்தினரின் நிர்பந்தத்தில் மணந்தார்....அவர்கள் வாழ்க்கை நன்றாக சென்றாலும் ,பாலாவை மறக்க ரகு முயற்சிக்கவில்லை....அதே சமயம் அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை...அவள் நல்லபடியாக வாழவேண்டும் என்றுமட்டும் கடவுளை வேண்டுவார்...அவர் மனைவிக்கும் இவை தெரியும்..இது என்ன உணர்வு என்றுதான் இருவருக்குமே புரியவில்லை....மனைவிக்கான உணர்வுகள் அவரிடம் நிச்சயம் உண்டு..அதை வேறு யாருக்கும் ரகு அளிக்கமாட்டார். அதனால் ,ரகுவின் மனைவி ஜானகிக்கு எந்த நெருடலும் இல்லை!

மகளுக்கு பாலா சரஸ்வதி என பெயர் வைக்கும் பொழுதும்கூட ஜானகி மறுக்கவில்லை.



இப்பொழுது, உறையூரில்,ஜானகிக்கு குடும்ப சொத்தாக வந்த வீட்டில் ரகு குடும்பம் ஜாகை. வீட்டு வாசலில் ரேழி, அதில் ஊஞ்சல்,நான்கு தூண்கள்,உள்ளே ,தாழ்வாரம்,பெரிய சமையல் அறை, கீழே இரண்டும்,மேலே இரண்டுமாக படுக்கை அறைகள்., வீட்டை சுற்றி,மா,பலா,வாழை ,தென்னை மரங்கள்,எண்ணெரமும் பறவைகள் ஓசை.. ரகுவின் அலுவலகம் திருச்சியில்., தினமும்,தனது இரு சக்கர வாகனத்தில் போய் வருவார். பாலா,திருச்சியில், பி.கொம், முடித்துவிட்டு,இப்பொழுது,அவளும் பெங்களூரு செல்கிறாள்., அதே கல்லூரியில் சேர.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

தாமதம் ஆகிவிட்டது.மன்னியுங்கள்.,

உங்கள் தோழி

சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top