JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 6

Subageetha

Well-known member
View attachment 352

அன்றில் அத்யாயம் 6.

“சில சமயங்களில்,தனிமையைவிட சரியான துணை அமைவது எவ்வளவு எளிதல்லவோ,அதேபோல,சுமையானதும் எதுவும் இல்லை. சுற்றியுள்ள குடும்ப நபர்கள் அன்னியமாய் நம் கண்ணுக்குத் தெரிவதுபோல, குடும்ப நபர்களால் நாம் தனிமைப் படுத்தப்படுவதை நிச்சயம் வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது.

முதல் வகையில்,நின்றிருக்கும் ஆனந்த்,காதல் எனும் மாயவலையில் சிக்குண்டு, கானல் நீரை நிஜமென நினைத்து,கைகளால் அள்ளிப்பருகி , குடித்த நீரால் தாகம் தணியாமல், குற்ற உணர்வில்,தன்னை தானே ஒதுக்கிக் கொள்கிறான். அந்நிய மண்ணில் சரியாகத் தெரிந்தது, குடும்பத்துடன் இருக்கும்பொழுது வேறுமாதிரி தெரிகிறது. அவள் தன்னை விட்டுப் போனதற்கான காரணமும்கூட இன்னும் சரியாக விளங்கவில்லை.

மலரினும் மெல்லியது காமம்.அதன் வழி போனதற்க்கு,காதல் என்று பெயர்வைத்தோமோ?இல்லை,எனது காதல் அவளது காமமாயிற்றோ? இரண்டும் புரியாத நிலை. இந்திய மண்ணில் இந்த உணர்வுகளின் வழி அறிந்துதான் திருமணம் இல்லாத உறவு வயதில் பெரியவர்களால் கூடாது என மறுக்கப் படுகிறதோ?

ஆனந்த், அவனது மன உணர்வுகள் இங்கு வந்து மூன்று மாதங்களில் குறைவதாக இல்லை., அவளது பிரிவு அவனின் இரவு நேரங்களை சூறையாடியது. படித்து முடித்தவுடன்,இருவருக்கும்,முதலில்,ஒரே மருத்துவமனையில் பணி என்றாகியதும், அவள்,ஆவலுடன் இவனைக் கட்டியணைத்தாள். அவளது, சூடான முத்தங்கள்,பனி நேரத்திலும்,பணி நேரத்திலும் அவனுக்கு உற்சாகத்தை அளித்தது...

அவள் போன பிறகு, ஒருவருஷம், அதே மருத்துவமனையில்தான் வேலையில் இருந்தான். அவ்வளவுநாட்கள்,அவள் பாரிஸ் போய் வேறுவேலை சேர்ந்தாலும்,இங்கு இவனிடம் தொடர்பில்தான் இருந்தாள். பல பகல் இரவுகளை இருவரும் ஒன்றாகவே அனுபவித்தார்கள். அவள் ஏன் இங்குள்ள வேலையை மாற்றிக்கொண்டு சென்றாள்? முதல் ஆறு மாதங்கள்,ஒருவாறு கழிய, அடுத்து வந்த மாதங்களில்,தன்னிடமிருந்து அவள் விலகியது பெரிய அதிர்ச்சியே.

வேலை அதிகமாகிவிட்டது ஆனந்த், நிறைய அறுவை சிகிச்சை வேலைகள் ,பெரிய டாக்டோர் செய்யும் பொழுது அவருடனும் நிறைய நேரம் செலவழிக்கிறேன்,என ,மருத்துவராய் சொல்பவளை மறுத்து அழைக்க திராணி இல்லாமல்,கடைசியில்,தன்னிலை இழந்து இங்கு,பெற்றோரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டான்.,

அவள் திருமணம் செய்துகொண்டு இங்கு வருவாளா என்பதைப்பற்றி இருவரும் கடைசிவரை பேசவே இல்லை.அதற்குள் பிரிவு?

இவனுக்குத் தெரிந்தவரை,பெற்றோர் கண்டிப்பும், அவர்கள் பிள்ளைகளை நிர்பந்திப்பதும் அங்கு ஓரளவிற்குமேல் செல்லாது. பெற்றோர் ஆசைக்காக,என்பது....நிகிலாவின் எண்ண அலைகளுடன் நிச்சயம் ஒத்துக்கொள்ளும்படிக்கு இல்லை.

தன்னை அவளது நினைவுகளில் இருந்து பெயர்த்து எடுத்தவனாக,மருத்துவமனைக்கு கிளம்பினான் ஆனந்த்.இப்பொழுதெல்லாம், அவனால்,பாலாவை நிமிர்ந்துகூட பார்க்க முடியவில்லை.ஒருவேளை எல்லாவற்றையும் சொன்னால் நடப்பது நடக்கட்டும்,குற்ற குறுகுறுப்பு அடங்குமெனில்,அதற்கும் தைரியம் வேண்டுமே?ராமன்,வெளியுர்களுக்கு வேலை எனக்கிளம்பும் சமயங்களில்,பாலாதான் அம்மா அப்பா இரண்டுமாக இருந்திருக்கிறாள். அதனாலேயே, அம்மா வளர்ப்பு சரி இல்லை என்றாகிவிடுமோ என பயந்ததுவும் நிஜம்தான்!

"இங்கு
எனக்குமொரு சந்தேகம்., லிவ் இன் கலாசாரம்,நம் நாட்டில் சரியாக வருமோ? உணர்வுகளால் பின்னி பிணைக்கப் பட்ட
இந்திய சமூகம், இந்த கலாசாரத்தில், உணர்வுகளை எதிர் பாலரிடம் இழக்காமல்., பிடிக்கவில்லை என்றால் வேண்டாமென வருவது எவ்வளவுத்தூரம் சாத்தியப்படும்? இல்லை,என்னுடைய புரிதலில்தான் தவறா
? "

இரண்டாவது வகையில் ரம்யா.
சூழ இருக்கும் சொந்தங்களால் அன்னியப் படுத்தப் படுவதுடன்,அவர்களின் முள்ளாய் தைக்கும் சொல்லம்புகள்,உணர்வுகளை கிழிக்கும் நடத்தை. தன்னை உதாசீனப் படுத்துவத்தையும் அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.சொந்தங்களுடன் ஆனந்தமாய் வளரவேண்டிய ராகவியை நினைத்தால்தான் துக்கம் அழுத்துகிறது. வேலை செல்லும் சமயங்களில், வீட்டில் பாட்டி ,மாமா மாமி என மனிதர்கள் இருந்தும், காப்பகத்தில் விட வேண்டிய அவலம். ஒருவேளை,கணவனிடம் இருந்து சொத்துக்களை பெற்றிருந்தால் நிறம் வேறாக இருந்திருக்கும். பெற்றவர்களும் இப்படியா? அப்பா இருக்கும்பொழுது,அவரது வார்த்தைகளில் ஆண் எனும் கர்வத்துடன் சேர்ந்த விஷ வார்த்த்கைகள் வந்து விழும். கடந்த வருஷம் அவர் பூலோக சேவை ஆற்றியது போதுமென நினைத்து ,மேலோகம் கிளம்பிவிட,மனதினுள் அவள் மகிழ்ந்தாள்.

சரியோ,தவறோ...அவரவர் படும் பாடுகளின் அடிப்படையில்தானே,மன எண்ணங்கள் உருவாகும்?

காலை வழக்கம் போல பாலா மூவருக்குமாக,சிற்றுண்டியும்,மதிய உணவும் தயாரிக்க, அம்மாவின் கைமணத்தை இழக்க விரும்பாமல்,சிறுவனாய் அம்மாவின் மீது உரசிக்கொண்டே,காலை உணவை முடித்தான் ஆனந்த். முன்பளவு அவன் பேசுவதில்லைதான்., ஆனால்,நான் இன்னும் உன் மகன்தான் ,நீயின்றி நான் முழுமை அல்ல,என்பதுபோல்,வீட்டில் இருக்கும் நேரங்களில் பாலவிடமோ ராமனிடமோ,கன்றுக்குட்டி உரசுவதைபோல உரசிச்செல்வான். நான்கு வருஷ பிரிவில் தத்தளித்த பெற்றோர்களுக்குண்டான அதே உணர்வுகளின் பிடியில் பாலா-ராமன்.

ஒரு வழியாக.தான் வீரத்தமிழச்சிதான் என்பதை இரண்டு மாதங்களுக்கு பிறகு சொல்லிவிட்ட பால சரஸ்வதி மீது கொலைவெறியானான் சிவா. வீட்டிற்கு,அழைத்து செல்லும் சமயம்,வாணி எளிதாகக் கண்டுபிடித்துவிட்டாள் பால தமிழ் நாட்டை சேர்ந்தவள் என்று., இரண்டு பெண்களுமாய் , அவனை ஒரு வழியாக்கி விட்டார்கள். சிங்கம் சிங்கிலாய் சிக்கிட்டுதே என அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது. பெண்கள் இருவரும் வயதில் வெறும் மாதக்கணக்கு வித்யாசமே. சொல்லவும் வேண்டுமோ?

ஏ,வாண்டு, அண்ணன., போட்டுத் தாக்குறியா...என வாணியிடம் எகிறியவன், பாலாவிடம், பேசுவதை குறைத்துக்கொண்டான். இரண்டு மாதங்களாய் அருகருகே அமர்ந்திருந்தாலும் பாலாவிடம் தேவைக்குமேல் பேசாதது அவளின் ஆழ்மனதை தாக்கியது.

அவன் இவளிடம்,சண்டை போடுவான் என்று மட்டும் நினைத்திருந்தவளுக்கு,அவன் மௌனம் உயிர் வரை கிழித்தது. நல்ல நண்பனை, சீண்டி விட்டுட்டோமோ என குழம்பியவள்,எஸ்‌எம்‌எஸ் ,வாட்ஸாப் எல்லாவற்றையும் முயன்றுவிட்டு,சமாதான புறா சரியாக பறக்காமல் சொதப்ப,இறுதியாக, அவனிடம் நேரேயே பேச முயன்றால், பயபுள்ள சிக்குவேனா., நாங்க சிங்கம்ல...என்று கெத்து லுக்கோடு அவளைக் கடந்து சென்றான். அவன் எண்ண அலைகள் முழுதும் பாலாவின் ஆக்ராமிப்புதான்.

அடுத்து வந்த நாட்கள் நான்கு நாட்களுக்கு பண்டிகை விடுமுறை என்பதால், வாணியும், சிவாவும் சென்னை வர ,பாலா திருச்சி வண்டியில் ஏறினாள்.

ரொம்ப சுத்த விடுறான்...போடா...என மூளை அவனை திட்டினாலும்,மனமோ,நானும் செஞ்சது தப்புதானே...இப்போ அவனோட முறை என வக்காலத்து வாங்கியது.

ஆனத்திடம்,இன்று ரம்யா முதல்முறையாக ரிப்போர்ட் செய்தாக வேண்டும். நோயாளிகளுக்கு அவனுடனான சந்திப்பை உறுதி செய்வதும் அவளது பணிகளில் ஒன்றாக உள்ளதே...மிகவும் திறமையான மருத்துவன் என பேசப்பட்டிருந்த அந்த மருத்துவனை காண அவளுக்குள் உள்ளூர ஒரு பயம்...ஏன் .,எதற்க்கு என்றெல்லாம் அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் ,பணியின் முதல் நாள் என்றால் வருமே., ஒரு உணர்வு....அந்த உணர்வை மீண்டும் அனுபவித்தாள் ரம்யா!

அவளால் தன்னை நிதானித்துக்கொள்ள,ஏனோ முடியவில்லை.முயற்சிகள் தோற்றவளாக, காத்திருக்க, டாக்டர் ஆனந்த் அவளைக் கடந்து தன்னறைக்குள் நுழைந்தான்.

அவன் பார்வைக்காக, அவனது மெயில் ஐ டிக்கு,அவளைப் பற்றிய விபரங்கள் அனுப்பிவைக்கப் பட்டிருந்தது. அவனுக்குகாரிய தரிசியாகவும்,அவனிடம் சத்ர சிகிச்சை பெற வருபவர்களுக்கு கவுன்சிலராகவும் அந்தப் பெண் நியமிக்கப் பட்டிருந்தாள்.அவளைப் பற்றிய விபரங்களை படித்தவன்,அவள் வேலைத் திறம் குறித்து குறிக்கப் பட்டிருந்தவற்றில் வெகுவாக ஈர்க்கப் பட்டான். இருபத்தெட்டு வயதில் மிக நிதானமும்,பொறுமையும் கொண்டவளாக குறிக்கப் பட்டிருந்ததை மனதில் குறிப்பெடுத்துக்கொண்டான்.

வெளியில், காத்திருந்தவளை உள்ளே வரச் சொன்னான். அவளுடனான சிறு உரையாடல் அவளை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கவே,ஒப்புதலாக பதில் மெயில் அனுப்பியவன்,அவனிடமிருந்த அவன் நோயாளிகள் பற்றிய கோப்பை அவளிடம் படிக்கவென கொடுக்க,அவர்களது வேலை ஆரம்பமாகியது.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

உங்கள் தோழி

சுகீ.
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top