JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 9

Subageetha

Well-known member
கடந்த வாரம் கொஞ்சம் சொந்த வேலைகள். மன்னிக்கவும்.


அன்றில் 9



டாக்டர். விக்டர், ஆனந்திற்கு வருவதற்கு சிறிது நேரம் ஆகும் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கி விட்டார். கிளம்பும் சமயம் வந்த ஒரு நோயாளி. சற்றே அவசரம்... அவசியம். மருத்துவ பணிக்கு வந்து விட்ட பிறகு, அவர்களுக்கென கிடைக்கும் நேரம் அவர்களுடையது இல்லை.

ஏறத்தாழ ஓரு மணி நேரம், நீண்ட காத்திருப்பு ஆனந்த் தனது மருத்துவ நூல் ஒன்றில் தன்னை புதைத்து கொண்டான். கேன்டீன் உள்ளே ஜன்னல் ஓரம் இருந்த இருவர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட கடைசி இருக்கையை தெரிவு செய்திருந்தான் அவன். பேசுவதற்கு ஏதுவாய் இருக்குமென. அதனால், அவனை தொந்தரவு செய்ய யாருமில்லை.

டாக்டர் விக்டரும், ஆனந்தும் லண்டனில் மருத்துவ மனையில் ஒன்றாய் ஒரு வருஷம் வேலை செய்தவர்கள். ஏறத்தாழ ஆறு வருஷங்கள் அங்கே பணி செய்த அனுபவம் விக்டருக்கு உண்டு. தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் விக்டர் இந்தியா திரும்பி விட மேலும் சில வருஷங்கள் அங்கே இருந்தான் ஆனந். இங்கு வந்து விக்டரை மீண்டும் சந்தித்தது ஆனந்துக்கு பெரிய ஆச்சர்யமே.

லண்டனில் இருக்கும் பொழுது இருவருக்கும் அவ்வளவு பழக்கம் இல்லை. இங்கு வந்த பிறகு தான் நல்ல பழக்கம். Ll

மதிய உணவு அருந்த அங்கு வந்த டாக்டர். விக்டர் ஆனந்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. விக்டர் வந்ததைகூட உணராமல் தனது புத்தக வாசிப்பில் ஆழ்ந்திருந்த இளைஞனை சற்றே பெருமை மிக பார்த்துக்கொண்டே எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டவரின் புருவமத்தி லேசாக சுருங்கியது.

இது போல் மருத்துவ துறை சார்ந்தோரின் ஓயாத உழைப்பு, தேடி படிக்கும் மனோபாவம் இவை தானே மனித குலத்தை பெரிய பெரிய நோய்களில் இருந்து மீட்டு மீண்டும் மலர செய்கிறது? மருத்துவ பணி செய்வோர் என்றுமே பெருமை கொள்ள காரணங்கள் ஆயிரம் உண்டு. விக்டர் எண்ணப் போக்கு ஒரு பக்கம் இவ்வாறு யோசிக்க மறுபக்கமோ,

இவ்வளவு நேரம் ஒருவரை சந்திக்க காத்திருப்பதெனில் விஷயம் என்னவாக இருக்க முடியும்? என்றும் யோசிக்கவாரம்பித்தது.

எதிரில் அசைவு தெரியவும் நிமிர்ந்து பார்த்தவனது முகம் நட்பு புன்னகை கொண்டு மலர,

ஹலோ டாக்டர், அம் ரியலி ஸோரி, படிச்சுட்டு இருந்ததுல நீங்கள் வந்ததை கவனிக்கல என மன்னிப்பு கோரினான் ஆனந்த்.

இட்ஸ் ஓகேய் ஆனந்த், என புன்னகை முகமாக பதிலிறுத்தவரின் பார்வை ஏதோ ஆராய்ச்சி முகம் காட்டியது. அனந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவான சிற்சில பொது தனமான உரையாடல்கள், அத்துடன் மதிய உணவு. 'ஆனந்த், ஏதாவது முக்கியமா என்கிட்ட பேச வேணுமா?

நாற்பதுகளின் இறுதியில் இருப்பவரால் எதிரில் அமர்ந்து பேசி கொண்டிருப்பவனின் மனம் முழுவதும் ஏதோ கேட்கவென இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு, தயக்கம் கொள்வது வெகுவாக புரிந்து கொள்ள முடிந்தது.

இருந்தாலும் கூடைக்குள் இருக்கும் பூனை வெளியே வந்துதானே ஆகணும்?

தயக்கம் வெகுவாக இருக்கிறது தான்? ஆனால் கேக்காமல் புரியாது?

டாக்டர், உங்களுக்கு ரம்யா ஞாபகம் இருக்கா?

மெதுவாக கேட்பவனின் உள் எண்ணம் புரியாதவராக, எஸ், மை பாய். பட், நீங்க எதை பத்தி கேக்க விரும்புறீங்கன்னு சொன்ன பரவாயில்லை. அவர் குரலில் ஒரு ஒட்டா தன்மை வந்து ஒட்டிக்கொண்டதோ...

அவங்க இப்போ எனக்கு ரிப்போர்ட் பண்றாங்க...

விக்டர், இவனை வினோதமாக பார்த்தார். உண்மையில், அவருக்கு அதை பற்றிய கவலை இல்லை. ரம்யா அவரிடம் ரிப்போர்ட் செய்தது போல் இப்பொழுது அவ்விடத்தில் பலராமன், விஷாலா. இவை நிர்வாகம் செய்யும் மாறுதல்கள்.

அவன் என்ன சொல்ல வருகிறான் , இல்லை எதை பற்றி கேட்க விழைகிறான்?

அவர் கண்கள் குழப்பம் மற்றும் தேவை இல்லாத ஏதோ விஷயம் கேட்கும் பாவனை இவனில் இது தேவையா எனும் எண்ணத்தை விதைத்தது.



இவ்வளவு தூரம் வந்தாயிற்று. இனி,பின் வாங்க முடியாது.என புரிந்தவனாக ...சிறிது தன்னை மௌனத்தால் சரி செய்துகொண்டான். அவன் கேட்க விரும்புவது, இல்லை இல்லை ... தெரிந்து கொள்ள விரும்புவது என்ன என்பதில் அவனுக்கே தெளிவில்லை.

டக்டொர், ரம்யா அவங்கள இன்னிக்கி மோர்னிங் சின்ன குழந்தையோட கேம்பஸ் ல பாத்தேன். அவங்க லீவுல இருக்காங்க ன்னு எச்‌ஆர் லேந்து மெயில் வந்த பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும்.

அவன் மீண்டும் மௌனத்தில் ஆழ, அதற்கு இப்போ என்ன என்பதாய் இருந்தது விக்டரின் பார்வை.

அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னு இப்போதான் தெரியும்.

அதற்கும் விக்டரிடம் மௌனமே பதிலாய்... மேற்கொண்டு பேச தயங்கினாலும், உங்களுக்கு அவங்கள பத்தி எதுவும் தெரியுமா டாக்டோர்.?

தான் கேட்டது ஆனந்தனுக்கே அபத்தமாய் தெரிய மேற்கொண்டு என்ன பேச என புரியாமல் தயங்கினான்.

தொண்டையை செறுமியவராக, பாருங்க ஆனந்த்… ரம்யாவை பொருத்தவரைக்கும் அவங்க என்கிட்ட ரிபோர்ட் செஞ்சாங்க. இங்க அவங்க முதன்முதல் காலேஜ் முடிச்சு வந்த பொழுது ட்ரைனிங் என் டிபார்ட்மெண்ட் தான். பிறகு, வேற டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங்.

அவங்க கல்யாண பத்திரிக்கை கொடுத்தாங்க... அதுக்கெல்லாம் நா போகல. வேலைய விட்டுட்டு போயி திரும்ப ரீஜோய்ன் பண்ணாங்க. என்கிட்டயும் ஆறுமாசம் ரிபோர்ட் பண்ணாங்க. இப்போ உங்களுக்கு. இதுக்கு மேல அவங்கள பத்தி விவரம் எனக்கு எதுக்கு?

அவரது நெற்றியில் அடித்தாற்போன்ற பதில், உனக்கு அவளை பற்றிய விவரங்கள் எதற்கு என கேட்டதில்,உண்மை புரிய ,

பேச்சை மாற்றினார் விக்டர். சரி,இந்த வாரம் கரையாஞ்சாவடி காம்புக்கு வரீங்களா ஆனந்த்? ஆம் என அவன் தலை அசைக்க அதைப்பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.

விக்டரின் மனத்திலோ, ஆனந்த் நிகிலாவுடன் மருத்துவ மனையில் சுற்றியது நிழலாட தன்னுள் புன்னகைத்துக் கொண்டார்.

ஒரு ஆண்,தேவையின்றி வேறொரு பெண்ணின் விபரங்கள் கேட்பது நிச்சயம் சரி அல்ல. அதுவும் அந்த ரம்யாவின் நிலை...அவள் மண வாழ்வு முடிந்தது என செவி வழி செய்தி. இவற்றை பற்றி யோசிக்க விக்டருக்கு அவசியமில்லை. ஆனந்துக்கும்தான் என முடிவெடுத்தவராக தனது மகிழுந்து நோக்கி விரைந்தார்.

ஆனந்த், தான் கேட்டது தவறு என புரிந்தவனாக வீடு நோக்கி விரைந்தான்.

வீட்டில் கூடத்தின் சோஃபாவில் பாலா அமர்ந்திருக்க ,தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தவன் பாலா மடியில் தலை சாய்த்துக்கொண்டான். ராமனுக்கு இன்று மதியம் ஷிப்ட். அவர் சென்றுவிட்டார். பாலா தலைவலி என மதியமே வீடு வந்துவிட்டாள்.

தலை கோதும் அம்மாவின் விரல்கள் அவனுக்கு உறக்கத்தை பரிசளிக்க முழு அமைதியுடன் வெகு காலம் கழித்து எந்த குழப்பமும் இல்லாமல் உறங்கினான் ஆனந்த். உறங்கும் மகனின் பதினைந்து வயது தோற்றம் நினைவு வர புன்னகை முகமாகவே,அமர்ந்தவாறே சோஃபாவின் தலையை சாய்த்து அமர்ந்துகொண்டே உறங்கிப் போனாள் பாலா.

வாணிக்காக பார்த்திருக்கும் வரனின் புகைப்படத்தை அனு வாணியின் வாட்ஸாப் பக்கத்திர்க்கும் சிவாவிர்க்கும் அனுப்பி வைக்க, வாணியின் முகம் அவளது பிடித்தத்தை காமித்தது, கூடவே குழப்பத்தையும்.

என்னடி,ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற...அவளை சீண்டி விடையை அறிய முற்பட்டான் சிவா.

‘இல்லடா அண்ணா, என்னோட பாக்ரௌண்ட் அவங்களுக்கு தெரியுமா? ரொம்ப குழப்பமா இருக்குடா. என் கல்யாணத்துனால அம்மாவும் அப்பாவும் நாம செஞ்சது தப்புன்னு யோசிக்க கூடாது. எனக்கு கல்யாணம் அவசியமானு யோசிக்கிறேன், என்றவளை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்டான் அவள் அண்ணன்.

சீ...லூசு, பொண்ணுங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்குறது தப்புன்னு யோசிக்கும் காலமில்ல இது. நீ ரொம்ப குழப்பிக்காத. என தேறுதல் சொன்னவன்,இரவே இது பற்றி சித்தி-சித்தப்பவுடன் பேசினான் தன் அறையிலிருந்து. வாணியின் வார்த்தைகளை கேட்ட இருவருக்கும் கண்கள் தாமாகவே கண்ணீரை பொழிய, ரொம்ப தெரிஞ்ச இடம்தான் சிவா. என்னோட நிலையும், கல்யாணமும் கூட அவங்களுக்கு தெரியும். பிடிச்சு தான் வராங்க. அவள தயாராக சொல்லு. பையன் இப்போ துபாய் போய்ருக்கான் வேலை விஷயமா.. ஒரு மாசத்துல திரும்ப வந்திருவான். அப்புறமாதான் மத்த விஷயங்களை யோசிக்கணும்.

ம்‌ம்..இன்னொரு விஷயம் பையனுடைய வேலை பங்களூருதான். சொந்தமா ஒயிட் பீல்டுல வீடு வாங்கிட்டானாம்..என கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு ,வேறு சில விஷயங்களையும் பேசிவிட்டு வைத்தனர்.

சிவா மனதுக்குள் கூட ஒரு ஆறுதல்.அவன் வெகுவாக கவலை படும் விஷயங்களில் ஒன்று வாணியின் கல்யாணம்.

பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அதிலும் பெண்குழந்தைகளை பெற்ற பெண் இளமை மிச்சமை இருந்தாலும், சமூக பார்வைக்காக தனியாக இருக்கத்தான் வேணுமா எனும் எண்ணம் அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது.

சிவாவின் மனதில்,தன்னை தொலைத்த ஆனந்தனின் நினைவுகள். அவனை எப்படி மீட்பது? பழைய அண்ணன் திரும்ப கிடைப்பானா?

கலவையான நினைவுகளுடன் இரவு உறக்கத்தை நாடி சிவா, மன சஞ்சலங்களுடன் வாணி, தோற்ற திருமண உறவு, இரண்டாம் திருமண பந்தத்தில் கிடைத்த பொக்கிஷமான கணவன் பல்வேறு சிந்தைகளுடன் அனு,மகளின் திருமணம் பற்றிய எண்ணங்களுடன் பிரசாத்,அம்மா மடியில் அமைதியாய் உறங்கும் சிவா,அவனின் அருகாமையை அனுபவிக்கும் அவன் அம்மா...

விடியலை நோக்கி இன்று....அன்றி(ல்)லை.



உங்கள் தோழி

சுகீ.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top