JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இறுதி அத்தியாயங்கள்

saaral

Well-known member
அலர் நீ....அகிலமும் நீ ..... அத்தியாயம் 33,34 .....இறுதி அத்தியாயங்கள்
 

saaral

Well-known member
அத்தியாயம்-33

மதியின் மனம் ஆறவில்லை அவளின் ரணப்பட்ட மனதின் காயங்களை தனக்கு தெரிந்த வகையில் அனைவரிடமும் கொட்டிவிட்டாள் இன்னும் ஒரு வேலை அவளிற்கு பாக்கி இருக்கிறது . அதற்காக சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தாள் .

அந்த நேரமும் வந்தது . இரவு தங்களின் அறையில் மதி குழந்தைகளுக்கு பால் புகட்டிவிட்டு நீள்விரிக்கையில் அமர்ந்து கௌஷிகிற்காக காத்துக்கொண்டிருந்தாள் . கௌஷிக் ஒருவழியாக அறைக்கு வந்தான் .

மதி அமைதியாக தன்னை பார்த்துக்கொண்டே அமர்ந்து இருக்கும் விதம் அவள் அவனிடம் பேச எண்ணுகிறாள் என்பதை அவனுக்கு புரியவைத்தது . அவளை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு குளியல் அறைக்குள் சென்றான் .

உள்ளே நீரின் அடியில் நின்றிருந்தவன் மனம் ஒரு இடத்தில் நிலைகொள்ளாமல் தவித்தது . 'மதி , வான்மதி மேகக்கூடத்தின் நடுவில் சூரியனாய் பளிச்சிட்டாய் , உன்னை நான் ஏன் பார்த்தேன்,ஏன் காதலித்தேன் , என்னையும் அறியாமல் ஏன் தவறிழைத்தேன் ......நீ பேசா மடந்தையாக இருந்த சமயமும் உன் இருப்பே என்னை உயிர்ப்புடன் வைத்ததே .....நீ என்ன நினைக்கிறாய் , என்ன செய்யப்போகிறாய் என்று எதுவும் புரியாமல் தெரியாமல் தவிக்கிறேன் ......மன்னித்துவிடு கண்ணம்மா '

அவன் இலகு உடைக்கு மாரி வெளியே வந்தான் . குழந்தைகள் அங்கு தொட்டிலில் தூங்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு அவள் எதிரில் ஒரு இருக்கை போட்டு அமர்ந்தான் .

அவன் அமைதியாகவே இருந்தான் . மதி இதற்குமேலும் அமைதி வேண்டாம் என்று தனது வாயை திறந்து முத்துக்களை உதிர்த்தாள் "எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது லெட் இட் பி கிலீர் .....சர்கேஷ் அண்ணா , அம்மா சொன்னாங்க யூ வெர் ஓன் லவ் வித் மீ ......என்னை காதலித்ததால் தவறிழைத்து என்னை மணந்து அதை சரி கட்ட எண்ணி இருக்கிறீர்கள் ....ஆனால் ஸ்வேதா அவள் அவள் என்ன பாவம் செய்தாள் ....உங்களால் அநியாயமாக ஒரு உயிர் ......" அவளால் சொல்லமுடியவில்லை . அவனும் அதை எண்ணி நித்தமும் மனதளவில் மரித்துக்கொண்டிருக்கிறான் .

"ஒருவேளை என்னை காதலிக்கவில்லை என்றால் ....சரி அதை விடுங்கள் உங்கள் காதல் அதை காதல் என்று என்னால் ஒற்றுக்கொள்ள என்றுமே முடியாது " இலக்காரமான ஒரு புன்னகை .

"இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ஏன் திடீர் என்று என் வாழ்வில் மீண்டும் நுழைந்தீர்கள் .....உங்கள் காதல் இத்தனை காலம் விடுமுறைக்கு சென்றுவிட்டதோ "

"மதி " அவன் அளவில்லை ஆனால் அவன் மனம் ஊமையாக அழுதது .

"அன்று உங்களை அறைந்தேன் அத்தனை பேரின் முன்பும் அறைந்தேன் ......அதன் காரணமாக உங்களுக்கு உங்களின் ஈகோ ஆண் என்னும் கர்வமும் முன்வந்து நின்றது ....ஆம் ஐ ரைட் " கேள்வியாக அவனை பார்த்தாள் .

"......." மௌனமாக தலைகவிழ்ந்தான் .

"சரி இத்தனையும் தாண்டி என்னை மணம்முடிக்க எண்ணுனீர்கள் நான் என் அம்மாவிடம் என்ன சொன்னேன் என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் ....அப்போ நீங்க என்ன செஞ்சிருக்கணும் ?" என்று தண் புருவங்களை தூக்கி கேள்வி கேட்டாள் .

அவள் சொல்லவரும் விஷயம் அவனுக்கு புரிந்தது அவள் வார்த்தை என்னும் சாட்டையால் சுழட்டி அடித்தாள் .....அவனும் மௌனமாக வாங்கினான் .

"உங்கள் வீட்டில் நீங்கள் என்றுமே நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் ....வெளி உலகத்திற்கு நீங்கள் நல்லவராக தெரியவேண்டும் அதற்காக நீங்கள் செய்த தப்பை பகிரங்கமாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை அதானே "

"இல்லை மதி ...." அவன் தயங்கினான் ஒருவேளை அதன்பொருட்டே நாம் நமது தவறை வெளியே பெற்றோர்களிடமும் உற்றோர்களிடமும் கூறவில்லையோ .....அவன் மனம் அவனுடன் வாதம் செய்தது.

"என்ன இல்லை ....இப்பொழுது வெளியே எப்படி எண்ணிக்கொள்வார்கள் தெரியுமா ஏதோ என் மீது தவறு என்பதை போலும் நீங்கள் எனக்கு வாழ்கை பிச்சை போட்டதை போலும் பேசுவார்கள் ....நான் ஏன் அதை கேட்கவேண்டும் ...அந்த நிலைமைக்கு என்னை தள்ளியது யார் "

"......." அவள் சொல்லும் கூற்றின் உண்மை உணர்ந்து மௌனமாகினான் .

"பேசமுடிலைல ....உங்கள் கையில் தாலி வாங்கியது ஏதோ என் வாழ்க்கையை சூறையாடியவன் கையிலே வாழ்க்கையை கொடுத்ததை போல் இருக்கிறது .....எனக்கு என்ன தேவை இந்த வாழ்கை வாழ வேண்டும் என்று ...." மதியின் கண்கள் அவளையும் மீறி கலங்கியது .

"நான் என் அம்மாவிற்காக இங்கு இருந்தேன் , உங்கள் உடல் வலிமையின் முன் என்னை இழந்தேன் , அனைவரின் முன்னும் அசிங்கப்பட்டு இந்த வீட்டை விட்டு வெளியே சென்றேன் ....இருந்தும் திரும்ப நான் இங்கு வர ஒரே காரணம் நமது பிள்ளைகள் ஆம் நமது பிள்ளைகள் என்னுடைய வலிக்காக அவர்களுக்கான தாய் தந்தை பாசத்தை , குடும்ப சூழலை கொடுக்காமல் இருப்பது என்னையே சுயநலவாதி என்று கூறி என் மனம் சாடும் " நெஞ்சினில் கை வைத்து கண்களில் விழ காத்திருந்த நீர்மணிகளுடன் பேசினாள் .

அவளின் வலி அனைத்தையும் அவன் உணர்ந்தான் . தான் செய்த செயலின் வீரியம் , தனது சுயநலம் அதன் விளைவாக தான் நல்லவனாகி தன்னவளை அனைவரும் சாட வழி வகை செய்திருக்கிறது என்பதை எண்ணி மருகினான் .

"ஒரு பெண்ணை வளர்த்து , அவளை படிக்கவைத்து நல்ல இடத்தில் அவளின் வாழ்க்கையை சேர்த்து என்று பெற்றவர்களின் கடமை சொல்லிலடங்காதது . பெண்ணை பெற்றவர்கள் இந்த சமூகத்தில் அவளை விட்டு பாதுகாப்புடன் இருக்கிறாளா என்று எண்ணி தினமும் துடிக்கிறார்கள் . ஆண் என்ற ஒரே காரணத்தினால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று இருக்கும் இந்த சமூகம் எப்பொழுது மாறும் "

பெருமூச்சுடன் அவனை நேராக பார்த்த மதி "லுக் மிஸ்டர் கௌஷிக் பெண் பிள்ளையை வளர்ப்பதை விட ஆண் மகனை ஒழுக்கமாக வளர்த்தால் நிச்சயம் பெண்களின் பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் வராது . கடவுள் புனியத்தில் நமக்கு பெண் ஒன்றும் ஆண் ஒன்றும் என்று ஒரே நேரத்தில் கிடைத்திருக்கிறது ஒரு ஆண் மகனாக நீங்கள் செய்த செயலின் வீரியத்தை அவர்கள் வளர்ந்து வரும் சமயம் உணர்வீர்கள் . ஆண் பிள்ளையை ஒழுக்க நெறிகளோடும் , மகளை சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனோடும் வளர்க்க ஒரு தந்தையாக நீங்கள் இருந்தால் போதும் ...." திருமணமாகி ஒரு வருடம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்று தான் மதி கௌஷிக்கின் கண் பார்த்து பேசினாள் . இத்தனை நாட்களாக அவளிடம் பேச முயற்சித்த கௌஷிக் பேசாமடந்தையாகி போனான் .

**********************************************************************

அத்தியாயம்-34

சில வருடங்கள் கழித்து அந்த மகளிர் கல்லூரியில் ஒரு விழா நடந்துகொண்டிருந்தது . அணைத்து பெண்களும் அழகாக உடை அணிந்து தங்கள் தோழிகளுடன் பட்டாம்பூச்சிகளை போல் அந்த கல்லூரி வளாகத்தில் பறந்து சிரித்துக்கொண்டிருந்தனர் .

அந்த கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் சகுந்தலா அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார் . அவரை தொடர்ந்து ஒரு ஆசிரியர் மேடை ஏறி " மகளிர் நல அமைப்பின் உறுப்பினரும் ,நமது கல்லூரியில் நீண்டகாலமாக பேராசிரியராக பனி புரியும் வான்மதி கௌஷிக் இப்பொழுது உரையாற்றுவார் "

"ஹாய் எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ....உங்களுக்கு அட்வைஸ் பண்ணி நேரத்தை கடத்த விரும்பல எனது சில கருத்தை மட்டுமே சொல்ல விரும்புகிறேன் " என்று கூறி மாணவிகளை பார்த்தாள் அவள் .அனைவரும் முகத்தில் மலர்ச்சியுடன் மேடையை நோக்கி பார்த்திருந்தனர் . அவர்களின் மனதிற்கு நெருக்கமான பேராசிரியர் அவள் என்றுமே அவர்களின் மனதிற்கினியவள் .

"உங்கள் வாழ்வில் நீங்க கடக்கும் பாதை என்றுமே மென்மையாக இருக்காது நிச்சயம் கரமுரடான சில வளைவுகளை காண நேரிடும் , என்றும் அப்படி ஒரு தருணத்தில் நீங்கள் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் அதில் இருந்து மீண்டுவரப்பருங்கள் . உங்களை எந்த நபேரேனும் தவறான நோக்கத்துடன் அணுகினாலோ இல்லை மிரட்டினாலோ பயம்கொள்ளாமல் முன் வந்து எதிர்த்து நில்லுங்கள் , நீங்கள் பயந்து அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தால் அவன் உங்களோடு அதை நிறுத்திக்கொள்ளமாட்டான் நிச்சயம் உங்கள் பின் பல பெண்களை ஏமாற்றுவான் . தயிரியமாக முன் வாருங்கள் நிறைய பெண்களை நீங்கள் காப்பாற்றலாம் ......இதை நான் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் கூறுகிறேன் ...ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம் " என்று சற்று இடைவெளி விட்டாள் வான்மதி .

"உங்களின் தோழியாக , நலபிரும்பியாக என்றுமே நான் உங்களுக்காக துணை இருப்பேன் ....இந்த வயதில் எது சரி எது தவறு என்று புரியாமல் பயம் வரும் அதுவே பல விஷமிகளுக்கு விருந்தாக போகும் ....ஒரு நல்ல வழிகாட்டியாக வலியுறுத்தவே இதை கூறுகிறேன் . ஆண்டுதோறும் இதற்காகவே நமது கல்லூரியில் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது "

"இப்போ என்னோட லெக்ச்சரை முடிச்சுகிறேன் அடுத்து நீங்க ஆசையாக எதிர்பார்த்த கலை நிகழ்ச்சி தொடரும் " என்று கூறி புன்னகையுடன் வெளியிறினாள் மதி .

அவளின் மக்கட்ச்செல்வங்கள் இப்பொழுது ஆறாம் வகுப்பு படிக்கின்றனர் . கவின் இப்பொழுதே தன்னை சுற்றி உள்ள பெண்களை அழகாக பார்த்துக்கொள்வான் . கவிதாவை கண்மணிக்குள் வைத்து பாதுகாப்பான் அதே நேரம் அவளை தயிரியதுடன் இருக்கவைப்பதும் கவினே .சர்கேஷ் கௌசல்யாவின் மகள் அதிராவையும் கவின் தான் பார்த்துக்கொள்வான் . கவினின் அருகாமைக்காக அதிரா அநேக நாட்கள் பாட்டி தாத்தா வீட்டிலே இருந்துவிடுவாள் ஒற்றை பிள்ளையாக வளரும் அதிராவிற்கு கவின் , கவிதாவுடன் இருப்பது என்றால் ஏக குஷி .

கவின் , கவிதா பள்ளி செல்ல ஆரம்பித்த பின் ஒரு நாள் வீட்டிற்கு வந்த கௌஷிக் மதியிடம் பேசினான் ."மதி நீ திரும்பவும் வேலைக்கு செல்லலாமே " கௌஷிக்கின் கேள்விக்கு அவளின் பதில் மௌனம் மட்டுமே .

சிறந்த பெற்றோர்களாக காணப்படும் அவர்கள் சிறந்த கணவன் மனைவி அல்லவே என்பது அவர்கள் அறிந்த ரகசியம் . பிள்ளைகள் முன்பு கூட சகஜமான உரையாடல் இருக்கும் தனிமையில் சுத்தம் .


"மதி யோசி நீ சிறந்த ஆசிரியர் உனது சேவை தடைபடக்கூடாது சகுந்தலா ஆண்ட்டி எப்பயும் உன்னை பத்தி கேப்பாங்க நீ வேலைக்கு போகணும் சொல்லுவாங்க , நிர்மலா சிஸ்டர்க்கும் அதே எண்ணம் உன் திறமை இந்த நான்கு சுவற்றிற்குள் தடைபடக்கூடாது , நல்ல அன்னையாக நீ இருக்கவேண்டும் என்று நினைப்பது சரியே அதற்காக உன் தேவை உணர்ந்து இருக்கும் பல மாணவிகளுக்கு நீ வேண்டும் நம் கல்லூரி இல்லை என்றாலும் வேறு எங்கேனும் உன் வேலையை தொடரு .....நல்ல ஆசிரியராக , தோழியாக உனது தேவை பல மாணவிகளுக்கு தேவை படலாம் யோசித்து முடிவு செய் " கூறிவிட்டு அவன் சென்றான் . நின்றால் நிச்சயம் பதில் வராது என்பதை அவன் அறிவான் .

இதோ அவனின் பேச்சை தொடர்ந்து கவின் , கவிதாவின் விருப்பம் அறிந்து அவர்கள் கல்லூரியிலே மாத சமபலத்திற்கு மீண்டும் சேர்ந்தாள் . சேர்ந்த நாள் முதல் இன்று வரை மாணவிகளை அவள் அணுகும் முறை அவளிடம் படிப்பவர்களுக்கு அவளின் மேல் பிரியத்தை கொண்டுவரும் .

மாலை கௌஷிக் சென்று கவின் , கவிதா மற்றும் அதிராவை பள்ளியில் இருந்து அழைத்து வந்தான் . வரும் வழியில் கவின் தனது தந்தையிடம் பேச்சுக்கொடுத்தான் "அப்பா நாளைக்கு வுமென்ஸ் டே ....நம்மை சுற்றி எத்தனை பெண்கள் இல்லையா அப்பா ?"

"ஆமாம் கவின் "

"வுமன் ஆர் சூப்பர் ஹீரோஸ் அப்பா , அம்மாவா ,சகோதரியை தோழியா எவ்ளோ ஸ்ட்ரோங்கா இருக்காங்க "

"ஹே கவின் மென் தான் ஸ்ட்ரோங் வுமன் பிசிக்கலி வீக் " என்றாள் ஆதிரா .

"இல்லை ஆதிரா அக்கா மென் பிசிக்கலி ஸ்ட்ரோங் பட் தி பவர் ஒப் வுமன் ரன்ஸ் மென் ....நீங்கல்லாம் இல்லைனா நாங்க எவ்ளோ லோனிலியா இருப்போம் ... அம்மாவை ஒரு நாள் பார்கலைனாலும் நானும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப்படுவோம் தெரியும், எங்க தேவை எங்க அம்மாக்கு எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிரும் அதை செய்தும் வைப்பாங்க " பெரிய மனிதனை போல் பேசும் மகனை கௌஷிக் ஆச்சர்யத்துடன் பார்த்தான் .

'மதி இதற்கு தானே ஆசைப்பட்டாய் இதை தானே நீ எதிர்பார்த்தாய் ....ஒரு கணவனாக , சகோதரனாக , மகனாக தோத்த நான் உன் பிடிவாதத்தில் உன் மேல் உள்ள காதலால் ஒரு தந்தையாக ஜெய்த்துவிட்டேன் .....நிச்சயம் கவின் என்னைபோன்றல்லாமல் சிறந்த ஆண்மகனாக வருவான் ' மனதில் தோன்றிய நிம்மதியுடன் அவர்களின் வாழ்கை பயணத்தை தொடர்ந்தான் .

'என் வாழ்வின் முதல் காதல் நீயே என் உலகமும் நீயே ....மொட்டாக மலர்ந்த காதல் மொட்டாகவே கருகியது நான் செய்த பிழையே ..... என் அலராகவும் அகிலமாகவும் என்றும் நீயே என் கண்மணி .....' (கௌஷிக்)

மதி மற்றும் கௌஷிக்கின் வாழ்கை தம்பதியர்களாக வெற்றிபெறாமல் இருந்தாலும் , பெற்றோர்களாக நிச்சயம் வெற்றிபெறும் .


............
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top