JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

இலுமினி 4

அத்தியாயம் 4


மிஷன் ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து Mamma Earth கைங்கர்யத்தால் ஏவிவிடப்பட்ட கிருமி சாதி, இனம், விலங்கு என எதயும் பார்க்காது வேகமாக ஒட்டிக்கொண்டது தொடர் சங்கிலியாய்...ஓடிக்கொண்டிருந்த உலகமே ஸ்தம்பித்து நின்றது....ஆங்காங்கே முதியோர் இழப்பு அதிகளவில் மூச்சிரைப்பால் நேர்ந்தது...வரலாறு காணாத அளவில் வளர்ந்த வல்லரசு நாடுகளும் தத்தளிக்க இது என்ன என்பதை ஆராய மறுபக்கம் இன்டர்நெட், சோசியல் மீடியா, டிவி சேனல்கள் எல்லாம் ஆதாரமில்லாத செய்திகளை அனர்த்தமாக உலாவ விட தத்தளித்து போனது அப்பாவி மக்களே...


நாளுக்கு நாள் பாதித்தவர்களின் பட்டியல் கணிசமாக உயர மக்களை வீட்டுக்குள் இருக்க செய்வதே முதல் கடமை என பல நாடுகள் தங்கள் எல்லைகளுக்கு தடை விதித்து முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க...மறுபுறம் வைத்தியர்கள், செவிலியர்கள் மனித நேயத்துடன் பல வித தடைகளை கடந்து சிறப்பாக பணியாற்றினர்...

இவையெல்லாம் கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான் அகி...வேத் தன் வேலையை முடித்தவன் டைனிங் ஹாலை நோக்கி நடக்க அங்கே இருந்த இனியா...

" நாயகன் படத்தை திரும்ப பார்க்கிற பீல்...மக்கள பார்த்தா பாவமா இருக்கு...சாரி உங்க ஜாப் ல குறுக்கிடல...பட் தோணிச்சு...

இன்னும் ஒரு மாசத்தில நம்ம பூமியில நிகழப்போற அதிசயத்தை பார்க்கும் போது இப்படி பேச மாட்டீங்க...அகியோட நோக்கம் அழிக்கிறது னு இப்ப தெரிஞ்சாலும் இதுக்கு ஒரு முடிவு இல்லாம களத்தில இறங்கல, இந்த காலக்கெடு சொச்ச மக்கள் கிட்டயாவது விழிப்புணர்வு கொண்டு வராதா னு தான் நினைச்சான்..இவனை தூக்கி சாப்பிடற அளவுக்கு ஒரு ஆள உசுப்பேத்திட்டு தான் வந்துருக்கான்...சோ டோன்ட் வர்ரி இனியா....

ஓகே..எப்படியோ எல்லாரும் நலமா இருந்தா நல்லது...அவர் ஒய்ப் இல்லை னு சொன்னாரே, என்ன ஆச்சு அவங்களுக்கு" என தன்னையறியாமல் கேள்வி கேட்டவளை வாஞ்சையாய் பார்த்த வேத்...

"இன்னொரு நாள் சொல்றேன்...ஹேவ் டு கோ நவ்" என தன் கேபினை நோக்கி நடந்தான் வேத்...

உலகம் செயலிழந்து தற்காலிகமாய் தன் இயக்கத்தை நிறுத்தியிருந்த வேளை வாகனங்கள் பெருமளவு செலுத்தபடாமல் இருந்ததில் காற்றின் மாசு கணிசமாக குறைந்தது...கட்டாய ஊரடங்கு, கடின விதிகளுக்கு பழக்கப்பட்ட மக்கள் முடிந்த வரை நடந்து அல்லது மிதிவண்டி பயன்படுத்தினர்...ஜங்க் உணவை மட்டுமே சாப்பிடும் இளம் வயதினர் நிலைமையறிந்து இயற்கை உணவு அதுவும் வீட்டின் உணவு பழக்கங்களுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்...போன், டிவி, ஷாப்பிங், பார்ட்டி என வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் நெருங்கி பழகினர்...இயற்கையை மதித்தால் நம்மை உயரத்தில் வைக்கும், மீறி மிதித்தால் திருப்பி நம்மினத்தை தாக்கும் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து வைத்திருந்தனர்...இங்கு அரசாங்கம், நாடு என எதிர்பாராமல் தனிமனித பழக்கம், அனைத்தையும் அரவணைத்து பாதுகாப்பதும் தம் கடமை என எண்ணி வாழ தயாரானால் இந்த பூமி சொர்க்கமே...

தன் கேபினில் க்ரீன் டி பிஸ்கட்ஸ் சகிதம் அகி வேந்தனை நோக்கி
"வாட் எ சேஞ்ச் இல்ல வேத்? நம்ம நாட்டுல குறிப்பா மலை பிரதேசங்கள் அதன் முகடுகள் எல்லாம் பக்கத்து மாநிலத்துக்கு கூட தெரியுதாம்...எவ்வளவு கெட வச்சிருக்கோம் இல்ல பூமிய?

எக்ஸாட்லி, அருமையான மாற்றம் டா" என தன் கப்பை சியர்ஸ் செய்தவன்...

"ஏதாவது தகவல் இது ஏன் எப்படி தடுக்கிறது கட்டுபடுத்திறது னு? அங்க இருந்து...

ம்ம்ம்...இப்ப வரை இல்ல, பட் கண்டிப்பா கண்டுபிடிப்பான், எமகாதகன் அவன்...என்னை வரை கிளியரா டிரேஸ் பண்ணுவான் பாரு....

வெயிட்டிங் டு சீ ஹிஸ் மூவ்" என முடித்தான் வேத்...

அதே நேரம் அந்த எமகாதகனோ தன் கணிணியை புரட்டிக்கொண்டிருந்தான்...இந்தியாவின் ஐடி ஹப் எனப்படும் பெங்களூவில் காக்கி ஷார்ட்ஸ், இளநீல நிற கட் பனியன், முறுக்கேறிய தசைகளுடன், மாநிற தேகம், பிரவுன் விழிகளால் இக்கிருமியின் மூலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்...

தன் கையில் உள்ள வெள்ளி காப்பை மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக நகர்த்திக்கொண்டே இருந்தவனின் கண்கள் பளிச்சிட்டன...

"யாஹூ I caught u finally "என எழுந்தவன் தன் மொபைலில் சில தகவல்களை கணக்கிட்டவன்...தனக்கு தெரியும் என்பதாய் தலையசைத்து கைகளை உயரத்தூக்கியவனின் முகத்தில் இரகசிய புன்னகை மலர அந்த கன்ன டொக்குக்குள் விழ காத்திருக்கும் கொக்கு யாரென்று யாரறிவாரோ?

அவன் தாணுமாலயன் பெயரிலயே முப்பெருங்கடவுள்களை உடையவன் அகஸ்தியா பணிபுரியும் நிறுவனத்தில் அவனுக்கு நிகரான திறன் இருந்தும் வயதில் சிறியவன் என்றதால் அவனுக்கு கீழ் பணி புரியும் நிலை, எனினும் அவன் அறிவாற்றலால் அகஸ்தியா வையும் கவர்ந்தவன்...இத்தனைக்கும் அலுவலக பணிகள் வேறு தன் கொள்கை வேறு என உறுதியாய் செயல்படுபவன் அகி..தன்னை இனம் கண்டு சாதுர்யமாய் முன்னேறும் திறமை அயனுக்கு தான் உண்டு என தீர்க்கமாய் நம்பினான் அகி...


இவர்களிடையே நிலவும் போட்டி பொறாமை, வஞ்சம் என ஒருவருக்கொருவரை வீழ்த்தாமல் ஆரோகாகியமானதாய் இருக்கும்...தம் நலம் யோசிக்காமல் மற்றவர்களையும் மதிக்கும் துடிப்பான இளைஞர்கள்..பாதைகள் வேறானாலும் குறிக்கோள் ஒன்றே...திட்டம், மிஷன்,செயலாக்கம் என எதையும் பரிமாறி கொள்ளாவிடினும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருப்பவர்கள்...இனி அயனா அகஸ்தியா வா? என காலம் விடை சொல்லுமோ???

தன் அறையிலிருந்து இறங்கி வந்த அயன் தன் அன்னை சிவகாமி தன் அண்ணன் மகனிடம் விளையாடுவதை பார்த்தவன் ...

"சிமி எனக்கு இப்ப பால் கொழுக்கட்டை வேணும்..

சார் அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க? கொண்டாடறதக்கு...

நிஜமா வெட்டி முறிக்க தான் போறேன்...பார்க்க தானே போறே நீ...

போடா போடா கொரோனா டைம் ல சாப்பாட்டுக்கு கஷ்டபடுறாங்க ஜனங்க இவருக்கு பால் கொழுக்கட்டை வேணுமாம்...

என் வேல்யூ தெரியல உனக்கு, விடு ஸ்விக்கி ல ஆர்டர் பண்ணிக்கிறேன்....

ஏன் வான்டட்டா கொரோனா வ வீட்டுக்குள்ளேயே வரவைக்கிற? நானே செஞ்சி தர்றேன்" என எழுந்தார் சிமி....


சிரித்த வண்ணம் தன் அண்ணன் மகனிடம் பால் விளையாட தொடங்கினான் இந்த மாடர்ன் வைத்தியன்....
 
Last edited:

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top