Rudhivenkat
Well-known member
அத்தியாயம்-2:
கல்லூரி காலங்கள்... அதை யாரால் அவ்வளவு எளிதில் மறக்க முடியும்?? சிறகடிக்கும் வண்ணதுப்பூச்சிகளாய் உலாவரும் சகதோழிகளும், மனதில் எவ்வித பேதமில்லாமல் பழகும் ஆண் நட்புக்களும், கூட்டமாக அமர்ந்து கொட்டமடிக்கும் அடர்ந்த மரக்கிளைகளும், அமர்ந்து உண்ட சிலமணி நேரங்களில் போர்க்களம் போல் காட்சியளிக்கும் காண்டீன் மேஜைகளும், எவ்வளவு கலாய்த்தாலும் நல்லவர்களாகவே பாடம் நடத்தும் பேராசிரியர்களும், அப்பப்பா... எண்ணிலடங்க கூடியவையா கல்லூரி தரும் நினைவுகள்?? அதிலும் இவளுக்கு அவை கல்வெட்டாக மனதில் பதிந்த பொற்காலங்கள். சூறாவளியாய் தன்னுள் சுழற்றிக்கொண்ட காதல் மன்னவன் உள்ளம் கொள்ளை கொண்ட இடமல்லவா அது. இத்தனைக்கும் அவன் உடன்படித்தவன் அல்ல.
ஒரே கல்லூரி வளாகத்தில் இருவருக்குமான துறைகள் அமைந்திருக்க, அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது. அதிலும் முதல் சந்திப்பு... மறக்க கூடிய தருணமா அது??
நிக்... சுருக்கமாக நீரநிகேதன். மருத்துவமேலாண்மையில் முதுகலை படிக்கும் மாணவன். தந்தை ராஜ்மோகன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்ற உயர் அதிகாரி. நிக்கின் உயிர்தோழன் என்றால் சரியாக இருக்கும். மனைவி மிதிலா சற்று பூஞ்சையான உடல்வாகு உடையவள், நோய்களுக்கும், அவருக்கும் தோழமை அதிகம் என்பதால், நாட்டுக்கு முடிந்த அளவு தன்னால் சேவை செய்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று இதோ கடந்த ஐந்து ஆண்டுகளாக கொடைக்கானலில் தான் மனைவியுடன் வாசம். மகிழும் விதமாக கணவனின் அருகாமையில் நன்றாக உடல்நலன் தேறியிருந்தார் மிதிலா. தகப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பிரமணியனென்று , மகனின் சிறு பிராயத்திலேயே கண்டுகொண்டவர் ராஜ்மோகன். தாயை கவனிக்கும் பொறுப்பை அந்த சிறுவயதிலேயே அவன் ஏற்றுக் கொண்டதை நினைத்து அவர் வியக்காத நாளில்லை . அதில் சற்று பெருமையும் கூட அவருக்கு. வரமாக மகன் கிடைத்ததை விட, உற்றதோழனாக கிடைத்ததற்கு கடவுளுக்கு அவர் நன்றி செலுத்தாத நாளில்லை. ஆம், மூன்று வருடங்கள் பிள்ளைவரம் இல்லாது, வேண்டுதலுடன் பிறந்த ஆசைமகன். மகனென்றால் பெற்றவர்களிருக்கும் உயிர். அளவான நடுத்தர வர்க்க குடும்பம். குடும்பத்து பெரியவர்கள் கடமைகள் முடிந்த திருப்தியோடு இறைவனடி சேர்ந்திருந்தனர். ராஜ்மோகனின் தலையெடுப்பிற்கு பிறகு, சற்று மேல்வர்க்கத்தை எட்டுமளவிற்கு, நிலபுலன்களுடனும், கணிசமான சொத்துக்களுடன் அப்பர் மிடில்கிளாஸ் குடும்பமாக உருமாறியிருந்தது. மற்றபடி எந்த மாற்றமும் அவர்கள் விரும்பவுமில்லை, தங்களது இயல்பான வாழ்க்கையின் சந்தோஷத்தை தொலைக்கவுமில்லை.
ராஜ்மோகனின் ஒரே உறவினன் என்றால், அவரது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகன் சிவநேசன். காவல்துறையில் உயர்அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அண்ணன் குடும்பமென்றால் கொள்ளை பிரியம். அண்ணன் மகனை தன் மகனாகவே வளர்த்து வருபவர். நேர்மையான காவல்துறை அதிகாரி. அவரது நேர்மைக்கு பரிசாக, தனது ஆசைமனைவியையும், மகளையும் குற்றவாளியின் குரூரத்திற்கு விலையாக கொடுத்தவர். ஆம், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, அவர் தண்டனை வாங்கிகொடுத்த ஒரு குற்றவாளி அவரது குடும்பத்தையே வேரோடு அழித்திருந்தான்.
இழப்பிலும் சிங்கமாக மீண்டெழுந்தவர், தன் பணியை விடவுமில்லை, அவனை உருத்தெரியாமல் முடிக்கவும் தவறவில்லை. இன்றளவும் குற்றவாளிகளுக்கு அவர் சிம்மசொப்பனமே.
இரு தகப்பன்மார்களின் பேரன்போடு வளர்ந்தவன் நீரநிகேதன். ராஜ்மோகனால் கூட அவனை சரியாக கணிக்க முடியாது, ஆனால் சிவநேசன் அவனின் நிழலைக்கூட சரியாக கணித்துவிடுவார். புத்திசாலியான சித்துவுடன் செல்ல சண்டையில்லாத நாட்களே கிடையாது. எங்கே வாய்த்தகராறு முற்றி கொழுந்தனுக்கு கோபம் வந்து விடுமோவென்று மிதிலா கூட பயந்து விடுவார். அவரது முகமாற்றத்தை கண்டதும் இருவரும் சிரித்துவிடுவர். மகனது தலையை பிடித்து தனது தோள்வளைவில் ஒரு அழுத்திக்கொண்டே,
"இன்னுமா அண்ணி இப்படி பயப்படறத நீங்க விடலை? இவன் என்னையவே ஒருவழி ஆக்கிடற எமகாதகன் அண்ணி. என்னடா படவா?" சமாதானம் சொன்னாலும் மிதிலாவின் பார்வையோ மகனைப்பிடித்திருக்கும் கைவளைவில் தான் இருக்கும்.
"ப்ச்.. விடுங்க சித்து" அவரது இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டி நொடியில் வெளியே வந்தவன், அன்னையின் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொண்டு,
"மித்து பேபி... சித்து ஒரு டம்மிபீசு டார்லிங். இந்த என்கவுன்டர் ஏகாம்பரத்துக்கும், நம்ம வடிவேலுக்கும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. இவர பார்த்து இப்படி ரியாக்ஷன் குடுத்திங்கன்னா அப்பறம் இவர பிடிக்க முடியாது மித்துமா" மகன் கொஞ்சியதும் பொங்கி சிரிக்கும் அன்னையின் சிரிப்பொலியில், அந்த வீட்டின் உயிர் நாடி அதிக லயத்துடன் துடிப்பதை போலிருக்கும் ராஜ்மோகனுக்கு.
"போடா உனக்கு எப்பவும் விளையாட்டுதான். நீங்க வாங்க தம்பி சாப்பிடலாம்" நிம்மதியுடன் அழைத்துச்செல்லும் அன்னையை திருப்தியுடன் பார்த்துவிட்டு விளையாடச்சென்று விடுவான்.
மருத்துவத்துறையில் நிகேதனுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் மருத்துவம் என்றாலே, மருத்துவர் ஆவதுதான் என்ற மனநிலையில் அவனுக்கு உடன்பாடில்லை. அதனால் இளங்கலையில் மருத்துவ நிர்வாகம் பற்றிய படிப்பை தேர்வு செய்தவன், கூடவே மெடிக்கல் கோடிங் எனப்படும், நோய்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும், மற்றும் அவற்றுக்கான மருத்துவகூறுகளை உருவகப்படுத்தும் , அமெரிக்கன் அசோஷியன் ஆஃப் ப்ரொபஷனல் கோடர்ஸ் நடத்தும் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து முடித்திருந்தான். லட்சங்களை கொட்டிக்கொடுக்கும் வெளிநாட்டு கம்பெனிகள் அவனை வளாகத்தில் தேர்வு செய்தாலும், மருத்துவமேலாண்மையை சொந்த தொழிலாக உருவாக்கி, அதில் ராஜ்ஜியம் செலுத்த வேண்டுமென்பது அவனது லட்சியமாக இருந்தது.
அதன் அடுத்த முயற்சியாக அதன் தேர்வு செய்ததுதான் சென்னையின் பிரபல மருத்துவகல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முதுகலை மேலாண்மை படிப்பு. பெற்றோரின் உதவியுடன் தனது சுயதொழிலுக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டுதான் அவனது முதுகலை படிப்பையே ஆரம்பித்தான்.
இத்தைகைய சூழலில் தான், நிற்சலனமின்றி சென்று கொண்டிருந்த நீரோடையை தனது விழிவீச்சில் சலனடைமயச்செய்தாள் அதுல்யா, அதுவும் பார்த்த முதற்கணமே, ஆளை கொள்ளும் வசீகரத்தோடு.
தன்னைத்தூக்கியவனை கண்டு கத்தி, அவனது கைகளில் இருந்து திமிறி விலக முற்பட்டவளை, மெதுவாக அடக்கியது நிகேதனின் குரல்.
"ஷ்...பேபி... சாரியா.. ஒரு பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கிறது தப்புதான். ஆனால் இன்னைக்கு வேற வழி இல்லை. ப்ளீஸ் நான் பேசறத கொஞ்சம் கேளு" இறைஞ்சும் மென்குரலில் அவன் பேச, அதுவரை அவனது முகத்தை பாராதவள், அப்பொழுதுதான் அவனது முகத்தை பார்த்தாள்.
அவளது விழிவீச்சில் கட்டுண்டவனாக அவனால் ஒரு நொடி எதுவும் பேசவில்லை. பின்பு மெல்லியதாக அவர்களை தீண்டி சென்ற காற்றில் அவளது கூந்தல் பறந்து அவனது கைகளில் குறுகுறுப்பூட்ட அவனது கவனம் கலைந்தது.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தது அவனது நண்பர் குழாம்.
"டேய் என்னடா இவன், அந்த பால்கோவாவை அப்படியே தூக்கிட்டு ஓடப்போறானா? ரொம்ப கெத்தா பேசிட்டு போனாடேனா?" முதலாமவன் கிண்டலடிக்க,
"ஷ்... சும்மா இருடா.அவன்மட்டும் சொன்னதை செஞ்சுட்டான் இன்னைக்கு நம்ம செத்தோம். நிக் பனிஷ்மெண்ட்ஸ் தெரியுல்ல, வச்சு செஞ்சுடுவான். தேவையில்லாத வம்பதான் இழுத்து வச்சுருக்க?" இரண்டாவது நண்பனின் எச்சரிக்கையில் மற்ற அனைவரின் முகத்திலும் கிலி பரவியது.
"சோதனைக்குன்னே பாருடா அந்த பொண்ணும் இவன் கைல ஜம்முன்னு உட்கார்ந்துருக்கா? இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குடா?" முதலாமவன் மீண்டும் ஆரம்பிக்க, மற்றவர்கள் அவனை சேர்ந்து மொத்த ஆரம்பித்தனர்.
இங்கு மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தான் நிக்.
"இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் என்னை ரொம்ப கலாய்ச்சுட்டாங்க பேபி. எத்தனை ஃபிகர் என்னை சுத்தி வந்தாலும் நான்தான் கண்டுக்காம போயிடறேனாம். திமிருல இப்படிலாம் செய்யறேனாம். அதனால நானா ஒரு பொண்ண தேடிப்போனாலும், எந்தப்பொண்ணும் என்னை கண்டுக்கமாட்டாளாம்" என்றவனின் பேச்சில் சிரிப்பு வர, மெலிதாக சிரித்தவள், சிரிப்பில் கீழே விழுந்துவிடுவோமென்று பயந்து அவனது கழுத்தை இன்னும் இறுக பற்றிக் கொண்டாள்.
"ம்ம்... நீ ஏன் சிரிக்க மாட்ட?? எப்பவும் இவனுங்ககிட்ட சுதாரிப்பா இருக்கற நான், இன்னைக்குன்னு பார்த்து, ரொம்ப பேசாதிங்கடா, நான் நினைச்சா இப்பவே ஒரு பொண்ணை தூக்கிக்காட்டறேன்னு சவால் விட, அப்பதான் டாக்ஸில இருந்த உன்னை காண்பிச்சு, அவனுங்க இருக்கற இடம் வரைக்கும் தூக்கிட்டு வர சொல்லிட்டானுங்க, படுபாவி பசங்க. எங்க நான் உன்கிட்ட நெருங்கி நிதானமா உன்னை தூக்கறதுக்குள்ள நீ பயந்துடுவியோன்னு தான் உன்னை சட்டுன்னு தூக்கிட்டேன் பப்ளி. திட்டறதா இருந்தா ஓரமா கூட்டிட்டுப் போய் எவ்வளவு வேணுனாலும் திட்டு, அடிக்கறதனாலும் ஓகே. ஆனா இப்போ அவனுங்க கிட்ட போறவரைக்கும் சமத்தா வா பேபி. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்" என்றவனின் பேசும் கண்களும் குரலும், மனதை ஊடுருவ பேதையின் தலை தானாக ஆடியது. அவன் பிடித்திருந்த விதத்திலேயே அவனது கண்ணியமும் வெளிப்படையாக தெரிய, சுவாரசியமாக அவனை இரசிக்க ஆரம்பித்தாள் அவள்.
"ச்சோ... சுவீட் பப்ளி" என்றவன் வேகமாக அவர்களை நோக்கி நடந்தான். அவர்களருகே சென்றவன், அவளை பூப்போல இறக்கி விட்டு,
"நீ போ பேபி" என்றவன், மிருதுவான குரலில் " தாங்க்யூ பப்ளி" என்று புன்னகைக்க, முகத்தில் மென்முறுவலுடன், தலையாட்டி விட்டு அவள் நடக்க ஆரம்பிக்க, நண்பர்கள் கூட்டம் நிக்கை தூக்கி ஆர்ப்பரித்து கொண்டிருந்தது. அதை கண்களில் நிரப்பிக்கொண்டு இருந்தவளின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது.
அவளது கண்களில் சோப்பு இறங்கி அவளது நனவை நினைவுப்படுத்தி விட,
"பாடாபடுத்துற நிக்கி" அதற்கும் அவனையே குறைப்பட்டுக்கொண்டு, குளித்து முடித்து மணியைப்பார்க்க இன்னும் நேரம் இருந்தது.
செய்த பதார்த்தங்களை தேவையான கிண்ணங்களில் எடுத்து வைத்துவிட்டு, தயாராகி வர அவளது செல்லக்கண்ணன் விழித்திருந்தான்.
"அடடே.. என் பட்டுக்குட்டி கண் முழிச்சாச்சா??" என்றவள் கைகளில் அள்ளிக்கொள்ள, தாயின் குரல் கேட்ட மழலை முதலில் சிரித்தாலும் பசிக்காக சிணுங்க ஆரம்பித்துவிட்டான். அவனது தேவையை கவனித்தவள், குடித்த பால் செரிமானமாக தோள்களில் போட்டுக்கொண்டு மெதுவாக நடக்க, வயிறு நிரம்பியவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டது அவளது செல்லச்சிட்டு.
பின்பு நேரமாவதை கவனித்தவள், பேக் செய்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கதவை திறந்து கொண்டு பக்கத்திலிருக்கும் அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு செல்ல, பாட்டி எழுந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
"குட்மார்னிங் பாட்டிம்மா. வெரிகுட் இப்படியே மெதுவா முயற்சி பண்ணுங்க" என்றவள் தன் கையிலிருந்த உணவை மேஜை மீது எடுத்து வைத்தாள்.
"இத்தனை வேலையும் நீ ஒரு ஆளே பார்க்கனுமாடா?? நான்தான் வேலைக்கே ஆள் வச்சுருக்கேன். பச்சை உடம்பை இப்படி அலட்டிக்ககூடாதுமா" அக்கறையுடன் வேதனைப்பட்டார் அந்த பாட்டி.
கற்பகம், பெற்ற பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளில் செட்டிலாகி விட, இந்திய மண்ணைப்பிரிந்திருக்க விரும்பாத அந்தத்தாயோ அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். அவர்களும் பெரிதாக அக்கறை காட்டிக்கொள்ளவில்லை. கணவன் இல்லாவிட்டாலும் தனியாக அந்த அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தார் அவர்.
நிக்கும் லயாவும் அவரது அப்பார்ட்மெண்டில் தான் முதலில் பேயிங்கெஸ்ட்டாக தங்கினார்கள். பாட்டியின் வீட்டுச்சாவி இன்றும் நிக்கிடம் உண்டு. இந்தக் காலத்து கலாச்சார வழக்கங்கள் முதலில் புரியாமல் போனாலும் பின்பு ஒருவாறாக அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டார் பாட்டி.
வந்த இருமாதங்களிலேயே பக்கத்து ஃப்ளாட்டையே அதுல்யாவிற்கு அவரது தந்தை வாங்கிக்கொடுத்துவிட, இருவரின் ஜாகையும் அங்கு மாறிவிட்டது. இடம் மாறினாலும் பாட்டியின் வீட்டில்தான் இருவரின் பொழுதும் பெரும்பாலும் கழியும்.
நிக்கின் எண்ணங்களை நன்றாகவே அனுமானித்திருந்தார் பாட்டி. அவன் அதுல்யாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவோடு இருப்பது அவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால் இடையில் இந்த பிரிவும், குழந்தை பிறந்த பிறகு கூட பார்க்க வராத நிக்கின் கோபத்திற்கான காரணம் என்னவென்று அறியாமல் வேதனைப்பட்டு கொண்டிருந்தார் அவர். அதுல்யாவிடம் கேட்டாலும் அவளும் ஒன்றும் சொல்லவில்லை.
"ம்ம்.. காஃபி ரெடி... " அவருக்கு தயாரித்து கொடுத்துவிட்டு , தானும் உடனமர்ந்து அருந்தினாள் அவள்.
"என்னடி அப்படி உங்களுக்குள்ள சண்டை? நீயும் வாயை திறக்க மாட்டேங்கற? பிள்ளையும் பிறந்தாச்சு.அந்த நிக் கடன்காரன் என்கைல சிக்கட்டும், நல்லா நாலு அடி வாங்க போ மாட்டான்" பாட்டி பொரிந்து தள்ள,
"ப்ச்... பாட்டி டென்ஷனாக கூடாதுன்னா இப்படி பட படன்னு பொறியறிங்களே" சலுகையாக அவரது தோளில் சாய்ந்து கொண்டவளின் தலையை தாங்கிக்கொண்டாலும்,
"வாழ்க்கைன்னா உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு விளையாட்டா இருக்குல்ல? என் கொள்ளுப்பேரன நினைச்சுப்பார்த்திங்களா ரெண்டு பேரும்?? என்ன பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது, என் பேரன் தலைகுப்பற விழும்போது தூக்கறதுக்கு அவன் அப்பன் வந்தாகனும். இப்பவே அஞ்சுமாசம் ஓடிடுச்சு. இனியும் தாமதிச்சா நான் சுதர்சனத்துக்கும், மோகன்ராஜ்கும் தகவல் சொல்லிடுவேன். இப்பவே ரொம்ப தாமதம் ஆகிடுச்சு" என்றவரின் பேச்சில் குடித்துக்கொண்டிருந்த காஃபி புரையேறியது அவளுக்கு.
அவளது தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தியவர்,
"உண்மையாதான் சொல்றேன். அவனுக்கு என்ன இத்தனை வீம்பு? வரட்டும் பார்த்துடறேன் நானா அவனான்னு?"
"பாட்டி.. அவன்மேல எந்த தப்பும் இல்லை. என்மேல தான் எல்லா தப்பும்" குற்றவுணர்வுடன் பேசினாள் லயா.
"நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னாலும், அவன் பிள்ளையை பார்க்க அவன் வரனுமா இல்லையா?"
"சரி பாட்டி. இதை நான் மதியம் வர்றப்போ பேசிக்கலாம். கண்ணாக்கு காலைல பால் குடுத்துட்டேன். அடுத்து குடுக்க கலந்து வச்சுருக்கேன். தேவகி வந்ததும் மதிய சமையலுக்கு மசாலா சேர்க்காம சமைக்க சொல்லுங்க. பால் குடிச்சதும் கண்ணாவை படுக்க வச்சுட வேண்டாம். நீங்க கால்ல பிளாஸ்டிக் கவர் கட்டிகிட்டு குளிங்க. இன்றைக்கு இராத்திரி உங்களுக்கு கட்டு மாத்தி விடறேன்" என்றுவிட்டு எழுந்தவள், அடிப்டடிருந்த அவளது காலை ஒருமுறை பரிசோதித்து விட்டு, அவளது செல்ல மகனை ஒருமுறை மார்போடு அழுத்தி கொஞ்சியவள், பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்.
ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தவளுக்கு," டீ பப்ளி, என்னக்கட்டிக்கோடி, அப்பதான் சீக்கிரமே உன்னை மாதிரியே குட்டி பப்ளி பெத்துக்க முடியும். இப்படியே அமைதியா இருந்து என்னை கொல்லாதே..." அவளது ஒற்றை வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த தன்னவனின் முகம் நினைவில் வர, தன்னையுமறியாது ஏக்கப்பெருமூச்சு வெளியேறியது.
இங்கு அவளவனின் நினைவிலும், அவளின் நினைவே. பிரசவத்தின்போது கையில் ஏந்திய மகனின் முகமும் வந்து வந்து போக,அன்றைய காலை லயாவின் லயம் பாடிக்கொண்டிருந்தது நிகேதனுக்கு.
"இராட்சசி... முழுசா என்கிட்ட உன்னை ஒப்படைச்ச பின்பும் கூட, இப்படி என்னை தவிக்க விடறயேடி பப்ளி" தன் எதிரே முழு புகைப்படத்தில் மகனை கையில் ஏந்திக்கொண்டு நின்றிருந்தவளை பார்த்து கத்திக்கொண்டிருந்தான் அவளது நீரா.
சுவையாகும் ? ? ? .....