JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

என் காவல்காரன் - 2

Akila Jayavel

New member
அத்தியாயம் - 2



கிஷோர் நேராக ஒரு அடுக்கு மாடி குடி இருப்பின் முன் வண்டியை நிறுத்தினான். அது பத்து அடுக்குமாடி குடி இருப்பு அங்கேதான் அவன் வாடகைக்கு தங்கி இருக்கிறான்.



" அர்ஜுன் நீ இங்க இங்கயே இரு நா போய் வண்டிய பார்கிங்கில விட்டுட்டு வரேன்" என்று கூறிவிட்டு பார்க்கிங் நோக்கி சென்றான்.



அர்ஜுனும் அங்கு நின்று சுற்றி வேடிக்கை பார்க்க தொடங்கினான். அந்த காலை வேலையில் அங்கு குடி இருக்கிறவர்கள் தங்கள் அன்றாடம் பணிக்கு அவசரமாய் சென்று கொண்டு இருந்தினர்.



" வாடா போலாம் " என்று கிஷோர் அவன் முன்னால் நடக்க அவனை அர்ஜுன் பின் தொடர்ந்தான். லிப்ட்டில் ஏறி மூன்றாம் தளத்திற்கு சென்று அங்கு 302 என்ற எண் உள்ள கதவின் அழைப்பு மணியை அழுத்தினான். அழைப்பு மணியின் ஓசை கேட்டு அந்த வீட்டின் உள் வேலைக்கு தயாராகி கொண்டு இருந்த இருவரில் ஒருவன் வந்து கதவை திறந்தான்.



திறந்ததும் கிஷோரின் பக்கத்தில் இருந்த அர்ஜுனை பார்த்து புன்னகையுடன் அவனை கட்டி கொண்டு " வா மச்சான் எப்டி இருக்க ??" என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.



அவனின் அணைப்பில் இருந்து வெளி வந்து " நல்லா இருக்கேன்டா... நீ எப்டி இருக்க ??" என்று பதில் கேள்வி கேட்டு புன்னகைத்தான்.



"சூப்பர் அஹ் இருக்கேன் " என்று கூற



கிஷோர் அவனை முறைத்துவிட்டு "வழிய விடு டா மனுஷன் நைட் ஷிபிட் முடிச்சிட்டு அவ்ளோதூரம் போய் இவன கூட்டிட்டு வந்தா நீ வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்க நகருடா " என்று சொல்லிவிட்டு அவனை தள்ளிவிட்டு உள்ளே சென்று விட்டான்.



தள்ளி விட்டதில் கடுப்பாகி " போடா லூசு " என்று அவனை திட்டிவிட்டு அர்ஜுனின் பேகை வாங்கிக்கொண்டு " நீ உள்ள வாடா " என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்றான் கார்த்திக்.



அந்த வீடு இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு. உள்ளே வந்த இருவரும் அங்கே ஹாலில் வேலைக்கு தயாராகி நின்று கொண்டு இருந்தவனின் முன் உள்ள சோபா வில் சென்று அமர்ந்தனர்.



கார்த்திக் நின்று கொண்டு இருந்தவனை பார்த்து " டேய் அசோக் இவன் தான் நாங்க சொன்ன பிரின்ட்..... நாங்க மூன்னு பேரும் ஒரே காலேஜ் ஒரே கிளாஸ் டா " என்று அவனிற்கு அர்ஜுனை அறிமுக படுத்தினான்.



அர்ஜுனின் புறம் திரும்பி " இவன் கிஷோர் கூட வேலை செய்றவன் எங்க கூடத்தான் தங்கி இருக்கான் " என்று அசோக்கை அர்ஜுனிற்கு அறிமுக படுத்தினான்.



இருவரும் ஸ்நேகமாய் ஒரு புன்னகையை பரிமாறி கொண்டனர்.



" சரிடா நா ஆபீஸ் கெளம்புறன் டைம் ஆயிடுச்சு " என்று கார்த்திகை பார்த்து கூறிவிட்டு அர்ஜுனை பார்த்து " ஈவினிங் வந்து பேசுறேன் " என்று சொல்லிவிட்டு அசோக் ஆபீஸ் கிளம்பிவிட்டான்.



" நீ என்ன சாப்பிடுற காபி அஹ் ??? இல்லை டிபன் அஹ் ??" என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைநோக்கி செல்ல எழுந்தான் கார்த்திக்



" காபி போதும் நா அப்பறம் சாப்பிடுகிறேன்... நீ ஆபீஸ் போகலையா ??" என்று கேட்க



" போகணும் டா இப்போதான் போன் வந்துச்சு இந்த ஏரியா counselor அஹ் வெட்டிட்டாங்களா ஜி.எச் ல அட்மிட் பண்ணி இருக்குறாங்களா " என்று கூறிவிட்டு சமையல் அறை நோக்கி சென்று அங்கு ஏற்கனவே காய்ச்சி இருந்த பாலை வடிகட்டி காபி தூள் மற்றும் சர்க்கரை இட்டு கலக்கி எடுத்துக்கிட்டு வந்து அர்ஜுன் இடம் தந்தான்.



காபி ஐ பெருகிக்கொண்டே " நா வரப்ப பார்த்தான் டா பஸ் ஸ்டாப் ல வச்சி அஞ்சு பெரு ஒருத்தன வெட்டுனாங்க " என்று அர்ஜுன் கூற



" ஹ்ம்ம்... இவனுங்களுக்கு இதே வேலைய போச்சு மாசத்துல ரெண்டு தடவை இப்படி எதாவது பண்ணி உயிரை எடுக்குறாங்க " என்று சலிப்பாய் கூறிவிட்டு " சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு டிபன் இருக்கு சாப்பிடு அந்த லூசு மதியம் தான் எழும்புவான் நீ அவன் எழுந்ததும் ரெண்டு பேரும் வெளிய போய் சாப்பிட்டுக்கோங்க நா ஒர்க் முடிஞ்சா வந்துடுவேன் இல்லைனா நைட் தான் வருவேன் " என்று கூற



" நா பாத்துக்குறேன் நீ கெளம்பு டா " என்று அர்ஜுன் சொல்ல கார்த்திக்கும் அவன் வேலைக்கு கெளம்பி விட்டான்.



அசோக்கும் கிஷோரும் ஒரு பிரபல கம்பனியில் மென்பொறியாரால பணிபுரிகின்றனர். கார்த்திக் சென்னை நார்த் ஜோன் ஏ.சி.பி ஆய் பணிபுரிகிறான். சென்ற வருடம் தான் சென்னைக்கு ட்ரான்ஸபெர் ஆகி வந்தான்.



காபி ஐ பருகிவிட்டு கிட்சேனுள் இருந்த சிங்கில் மக்யை கழுவிவிட்டு வெளிய வந்தவன் வெளி கதவை சாத்திவிட்டு சோபா அருகில் இருந்த தன் பையை எடுத்து கொண்டு ஒரு ரூமின் உள்ளே நுழைந்தான். அங்கு உள்ள ஸெல்ப் பக்கத்தில் தன்னுடைய பையை வைத்துவிட்டு அதனுள் இருந்த ஒரு டிரெஸ்சை எடுத்துக்கொண்டு குளியறை யின் உள்ளே சென்று குளித்து விட்டு வந்தான்.



ஹாலில் இருந்து சத்தம் வர இவன் ரூமை விட்டு வெளிய வந்தான் அங்கே கிஷோர் டிவியை பார்த்துக்கொண்டு சாப்டுகிட்டு இருந்தான். அர்ஜுனை பார்த்துவிட்டு " வாடா சாப்பிடலாம்" என்று அழைக்க இவனும் சென்று சாப்பிட அமர்ந்தான். இட்லியும் அதற்கு தொட்டுகை தேங்காய் சட்னியும் இருந்தது. இருவரும் சாப்பிட்டுக்கொண்டே டிவியை பார்க்க ஒரு பாட்டு சேனல்லில் புது பாடல்கள் ஓடி கொண்டு இருந்தது. அர்ஜுன் ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனல்யை மாற்றி வைத்தான் அதை பார்த்துவிட்டு கிஷோர் அவனை முறைக்க " சாப்பிட்டு போய் தூங்குற வேலைய பாரு சும்மா என்மூஞ்ச எதுக்கு பாக்குற " என்று நக்கல்லாய் சொன்னான் அர்ஜுன்.



" எல்லா என் நேரம் டா நீ இப்படித்தான் பேசுவ.... என்னை மதியம் எழுப்பு வெளிய போய் சாப்பிட்டு வரலாம் " என்று சொல்லிவிட்டு அவன் சென்று படுத்துகொண்டான்.



*****************



கார்த்திக் நேராக ஜி.எச் சென்று அங்கு அட்மிட் ஆகி இருந்த counselor அறைக்கு முன் இருந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் ரெண்டு கான்ஸ்டபில் முன் நிற்க அவர்கள் இவனை பார்த்ததும் அதிர்ச்சியாகி நின்று பின் சுதாரித்து சல்லுட் வைத்தனர். அவர்களை பார்த்து சிறு தலையசைப்பு மட்டும் குடுத்துவிட்டு அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை நோக்கி " டாக்டர் என சொன்னாங்க?? கண் முழிச்சிட்டான?? " என்று கேள்வி கேட்க



" டிரீட்மென்ட் போயிடு இருக்கு இன்னும் எதுவும் விசாரிக்கல சார் " என்று பதட்டத்துடன் கூறினான்.



அவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு " சரி இங்க நா பாத்துக்குறேன் ஒரு கான்ஸ்டபில் மட்டும் என்கூட இருக்கட்டும் நீங்க சம்பவம் நடந்த இடத்துக்கு போய் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க " என்று கூற



இன்ஸ்பெக்டர் உடனே " அங்க எல்லாம் விசாரிச்சாச்சு சார் இங்கதான் விசாரிக்கனும் நா வேணும்னா உங்க கூட இருக்கான் " என்று பதில் கூற



அவர்களை தொலைக்கும் பார்வை உடன் பார்த்துக்கொண்டே " எனக்கு எதுனாலும் ஒரு தடவ சொல்லித்தான் பழக்கம் திரும்பலாம் சொல்லமாட்டேன்" என்று சொல்லி விட்டு அங்கே இருந்த சேரில் அமர்ந்துகொண்டான். அவனின் பேச்சில் அவனிடம் எதுவும் பேச இயலாது என்று உணர்ந்து ஒரு கான்ஸ்டபில் மட்டும் அங்கு இருக்க சொல்லிட்டு மற்ற இருவர்கள் கிளம்பிவிட்டனர்.



அவர்கள் சென்று அரைமணி நேரம் கழித்து டாக்டர் ஐ.சி.யு வில் இருந்து வெளிய வர கார்த்திக் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம் " இப்போ எப்டி இருகாங்க ?? கான்செயஸ் வந்துடுச்சா " என்று counselor பற்றி கேட்க



" இப்போ நல்ல இருகாங்க மயக்கமா இருகாங்க எப்படியும் கான்செயஸ் வர ஒரு டூ ஹௌர்ஸ் ஆகும் " என்று பதில் கூற



" ஒகே.... மெடிக்கல் கண்டிஷன் எப்டி?? டூ ஹௌர்ஸ் கழிச்சு விசாரிக்கலாம்ல ??" என்று கேட்க



" அறிவாளால வெட்டி இருகாங்க கைல அப்பறம் கால்ல ஆனா வெட்டு ஆழமா இல்லை வெறும் சதையை மட்டும் கிழிச்சு இருக்கு பிளட் கொஞ்சம் லாஸ் ஆனதால் தான் மயக்க மருந்து குடுத்து கட்டு போட்டு இருக்கோம்... சோ, நீங்க தாராளமா விசாரிக்கலாம் ஒன்னும் ப்ரிச்சனை இல்ல " என்று கூறிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார்.



கார்த்திக் அவர் சொல்வதை கேட்டு யோசனையுடன் சேரில் அமர அங்கு இருந்த கான்ஸ்டபில்ஐ பார்த்து " நீங்க ஸ்டேஷன் போங்க " என்று கூறினான் அதற்கு அவர் தயங்க " உங்கள கிளம்ப சொன்னேன் " என்று கடுமையாய் கூற அவர் உடனே அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார். பின்னே அங்கே இருந்தால் அடுத்து இவர் அல்லவா ஐ.சி.யு வில் அட்மிட் ஆக வேண்டி வரும் என்று அறிந்தவர் அல்லவா.



கார்த்திக் எல்லாமே கரெக்ட் ஆஹ் செய்யணும் யாரிடமும் பணிந்து செல்லும் பழக்கம் கிடையாது. தான் வகிக்கும் பதவிக்கும் அதற்கு எந்த களங்கமும் வர மாதிரி நடக்க விடமாட்டன் நடக்க விட்டதும் இல்லை. இவன் உடைய நேர்மை மற்றும் துணிச்சலை பார்த்து அடிக்கடி ட்ரான்ஸபெர் கொடுத்து விடுவர். இவன் டூட்டி யில் சேர்ந்த மூன்று வருடத்தில் இது நான்காவது இடம். இங்கு வந்த ஒரு வருடத்தில் நிறைய கேஸ் பார்த்து இருக்கிறான் மற்றும் அதில் கூடவே பணி செய்வர்கள் பற்றி நன்கு அறிந்தவன். இங்கே எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களோ அதைவிட சுயநல வாதிகள் அதிகம்.



ஆம்.. சுயநல வாதிகள்தான்.... கெட்டவர்கள் என்று கூறிவிட முடியாது ஏன் என்றல் நம் சமூகம் அப்படி நாம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்ற எண்ணம் அதையெல்லாம் மாற்ற இயலாது. ஆனால் அவர்கள் வகிக்கும் பதவிக்காவது கொஞ்சம் உண்மையாய் இருக்கலாம் அதுவும் கிடையாது.



இவ்வாறு உள்ள சூழ்நிலையில் கார்த்திக் யாரையும் நம்புவதும் இல்லை மற்றும் எதிர்பார்ப்பதும் இல்லை முடிந்த வரையில் இவனே முடித்து விடுவான் இல்லாத பச்சத்தில் அதற்கு வேறு வழி வகுத்து விடுவான்.



இப்பொழுதும் சிறிது நேரம் யோசித்து விட்டு தன் மொபைல் ஐ எடுத்து யாருக்கோ அழைத்து ஐந்து நிமிடம் பேசிவிட்டு வைத்து விட்டான். பின் அந்த இருக்கையில் கொஞ்சம் சாய்ந்து தன் இரு கைகளை தலைக்கு பின் கட்டிக்கொண்டு கண்மூடி அமர்த்துவிட்டான்.









காவல்காப்பன்.....
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top