JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

நான் கண்ட கனவு டீஸர்

❤️❤️ நான் கண்ட கனவு டீசர்❤️❤️
ஜான்சியின் மனதில் அச்சம் இல்லாவிட்டாலும்... அவனை தனியாக சந்திக்க போகிறோமே என்று சிறு படப்படப்பு இருக்கத்தான் செய்தது. அந்த கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்கு ஏறினாள். கங்கா கூறியது போல் அந்த அறை சற்று ஒதுக்கமாகத்தான் தெரிந்தது. லேபும் அந்த பெரிய அறை மட்டும் தான் அந்த தளத்தில் இருந்தது. அந்த அறை திறந்தே இருக்க.. ஜான்சி உள்ளே நுழைந்தாள். பழைய பொருட்கள் ஒரு புறமாக குமிக்கப்பட்டிருக்க... புழக்கத்தில் இல்லாத அறை என்பது அப்பட்டமாக தெரிந்தது. மருத்துவ கல்லூரிக்குள் இப்படி ஒரு அறையா.. என்று அவள் யோசிக்க.. அப்போது கண்ணன் என அழைக்கப்படும் அந்த இளைஞன் அந்த அறைக்குள் நுழைந்தான். கதவின் நிலை வரை வளர்ந்து.. மின்னல் என உள்ளே வந்தவனை பார்த்த நொடியில்.. ஜான்சிக்கு அவனிடம் பேச எண்ணி இருந்தது எல்லாம் மறந்தே போய் இருந்தது. தோழிகள் பயந்தது நியாயம் தானோ என்று மனம் தடுமாற..“நோ ஜான்சி எதுக்கு பயப்படனும்.. கராத்தேயில ரெண்டு குத்து கொடுத்தா ஃப்ளாட் ஆகிடுவான்” என்று மனம் தெம்பு ஊட்ட... அவன் வந்த வேகத்தில் கதவை தாளிட்டு விட்டு சாவியை அவன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். ஜான்சி அவன் செயலில் அதிர்ந்து நின்றாள். பின் தன் மனதில் தோன்றிய அச்சத்தை அவனிடம் காட்ட மனம் இல்லாமல் மறைத்துக் கொண்டவள். “சார் கதவைத் திறங்க” என்று ஜான்சி அதட்ட..“ஏன்..என்னைப் பார்த்தா பயமா இருக்கா ..” என்று அவன் கண்களில் குறும்புடன் கேட்க... ஜான்சிக்கு இப்போது பயத்தை விட சினமே அதிகரித்து இருந்தது. இவன் முன் கோழையாக நிற்கக் கூடாது என்று முடிவு எடுத்தவள்.. நிமிர்வுடன் அவனை எதிர் கொண்டாள். அவன் நெருங்கி வர. அவன் உதட்டோரம் இருந்த ஏளனப் புன்னகை.. அவளின் நிமிர்வை கேலி செய்வது போல் தோன்ற... அவனுக்கு பதிலடி கொடுக்க நினைத்த ஜான்சி “பயமா.. பயமாக இருந்தா.. நான் இப்படி தனியா வந்து இருப்பேனா” என்று அலட்சியமாக சொல்லி முடித்தாள்...அவளின் சொற்கள் அவன் முகத்தில் ஏமாற்றத்தை பரப்பி இருந்தது.“மம்.. ஜான்சி.. எதுக்காக என்னைப் பார்க்க வந்திருக்க” என்று அவன் நிதானமாகக் கேட்க. ஜான்சியும் சற்று பணிந்து.."சார் நீங்க நேத்து என்ன கேலி செஞ்சத என்னால பொறுக்க முடியல.. அதான் என் கட்டுப்பாட்டை மீறி அப்படி நடந்துகிட்டேன்” என்று மன்னிப்பு என்ற வார்த்தையை தவிர்த்து சொல்லி முடித்தாள். கண்ணன் அவள் மீது வைத்திருந்த பார்வையை எடுக்காமல்.. “அப்போ உன் மேல தப்பு இல்லைன்னு சொல்ல வர்றியா..”என்றான் சற்று குரலை உயர்த்தி.”இல்ல..என்னை அந்த நிலைமைக்குத் தள்ளுனது நீங்கன்னு சொல்ல வரேன். நாம ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு.. அதனால இந்த விஷயத்தை அப்படியே மறந்துருவோம்.. எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்புறேன்” என்று அவள் நடக்கப் போக..அவன் கட்டி வைத்திருந்த பொறுமை எல்லாம் இழந்திருந்தான். அவன் கைகள் அவளை மறைத்து நிற்க.. “நில்லு.. சாவி என்கிட்ட இருக்கு..நீ அவ்ளோ ஈஸியா இந்த அறையை விட்டு போய்விட முடியாது”..என்று சொல்லி தன் எதிரில் நின்றவளை கலவரப்படுத்த எண்ண..ஆனால் அவள் அப்போதும் மிடுக்காகவே நிற்க..ஜான்சி தன்னையும் அறியாமல் தன் எதிரில் இருப்பவனை எரிமலையாக மாற்றிக் கொண்டிருந்தாள்.“அப்ப நீ மன்னிப்பு கேட்க வரல”என்றான் கேலியாக. “ஹம்ம்..நான் எதுக்கு சாரி சொல்லனும்..நாம ரெண்டு பேருமே தப்பு பண்ணி இருக்கோம். நீங்க முதல்ல சாரி சொல்லுங்க.. அப்புறம் நான் சாரி சொல்றேன்” என்றாள் சற்றும் அசராமல்.“ஏய் நான் ஒரு ஆம்பிளைப் பையன். என்னை அத்தனை பேர் முன்னாடி நீ கை நீட்டி அடிச்சி இருக்க.. அது எனக்கு எவ்வளவு அவமானத்தை கொடுக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சியா” என்று அவன் பற்களைக் கடித்து.. கோபத்தின் எல்லைக்கே சென்று வார்த்தைகளை கொட்டிக் கொண்டு இருந்தான். அவன் உக்கிர அவதாரத்தை எல்லாம் அலட்சியம் செய்த ஜான்சி.. “அதேபோல ஒரு பெண் பிள்ளை நான். என் உயிருக்கு உயிரானவன் கிட்ட சொல்ல வேண்டிய உன்னதமான வார்த்தைகளை உங்களைப் பார்த்து சொல்ல வச்சிட்டீங்களே.. அது உங்களுக்கு தப்பா தெரியலையா” என்று பதிலடி கொடுத்தாள். “என்னைக் கைநீட்டி அடிச்சுட்டு இந்த பூட்டின ரூம்ல என்கிட்டே வந்து மல்லுக்கட்டுற..செம தில்லு தான்டீ உனக்கு..” என்று அவன் அவளை டீ போட்டு அழைக்க..ஜான்சியும் உஷ்ணமாக “நீ என்ன சிங்கமா..புலியா..நான் உன்னைப் பார்த்து பயப்பட..” என்று ஜான்சியும் இப்போது அவனிடம் ஒருமையில் பேசினாள்.அவள் பேசப் பேச கண்ணனின் முகம் அனலாய் மாறி இருந்தது.“சிங்கம் புலி செய்யாததை.. ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு செய்ய முடியும். அது என்னன்னு உனக்கு தெரியுமா..” என்றவன் குறுகுறு பார்வையுடன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க.. அவன் பார்வை சென்ற இடமெல்லாம் நெருப்பாய் எரிவது போல் ஜான்சிக்கு தோன்ற.. கண்ணன் எந்த வரை முறையும் இன்றி அவன் பார்வையை அத்து மீறி அவள் மீது பயணிக்க விட.. அவன் பார்வையில் துடித்துப் போனாள்.



டீசர் 2

கண்ணனின் ஒதுக்கம் ஜான்சியைக் கொன்று கொண்டு இருந்தது. இந்த கண்ணனை எப்படித் தான் சமாதானம் செய்வதோ.. என்று பதினோரு மணிக்கு படுக்கையில் படுத்தவள் அவனுக்கு குட் நைட் என்று செய்தி அனுப்பலாமா என்று யோசித்து.. ஒன்றும் வேண்டாம் என்று தூங்கப் போனாள்.
அப்போது கண்ணனிடம் இருந்து செய்தி வந்தது. “நான் ஹாஸ்டல் வெளியில் தான் இருக்கேன் வா”.. என்று அழைத்து இருந்தான். ஜான்சிக்கு கண்ணனிடம் இருந்து வந்த செய்தி.. என்று மனம் துள்ளினாலும்.. எத்தனை மணிக்கு அழைக்கிறான்.. என்று கோபமே மனதுக்குள் மேலோங்கியது.
“நாளைக்கு சந்திப்போம்.. இன்று தாமதமாகி விட்டது” என்று அவனுக்கு செய்தி அனுப்பினாள். “நீ வெளியில வரியா.. இல்ல நான் உள்ள வர வா” என்று அவன் பதிலுக்கு அனுப்ப..
அதைப் பார்த்து அதிர்ந்த ஜான்சி.. இவன் பண்ணாலும் பண்ணுவான்.. என்று பயந்தவள்.. மெல்ல ஹாஸ்டலை விட்டு வெளியில் வர முயற்சிக்க.. வார்டன் அறை மூடி இருந்ததைப் பார்த்து நிம்மதி பிறந்தது. செக்யூரிட்டியும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க.. பூனை நடை நடந்து.. மெல்ல வெளியில் வர.
அப்போது இரு கைகள் அவளை வலுவாகப் பற்றி இழுக்க.. ஜான்சி யார் என்று பார்க்க.. கண்ணன் தான் அவளைப் பற்றி இருந்தான். அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு எங்கோ செல்ல.. ஜான்சி வாய் திறவாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவர்களின் வகுப்பறையின் மொட்டை மாடிக்கு தான் அழைத்துச் சென்றிருந்தான். அன்று பவுர்ணமி என்பதால்.. நிலவு அதன் முழு வெளிச்சத்தையும் பரப்பிக் கொண்டிருக்க.. கண்ணன் ஜான்சியை பார்த்துக் கொண்டு நின்றான்.
ஆனால் ஜான்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஜான்சியை கண்ணனின் கரங்கள் பின்னிருந்து அணைத்துக் கொண்டன..
“விடுடா.. என்ன.. அப்படி என்னடா கோபம் உனக்கு.. எனக்கு எவ்வளவு அழுகையா வந்துச்சு தெரியுமா..” என்று ஜான்சி முடிப்பதற்குள்.. ஜான்சியின் இதழ்களில் தன் உரிமையை முதல் முறையாக காட்டிக் கொண்டிருந்தான் கண்ணன்.
ஜான்சி சில நொடிகள் தன்னை மறந்து நிற்க.. பின் தன்னுணர்வு பெற்றவள்.. “பொறுக்கி”..என்னடா பண்ற.. என்று அவனை திட்டிய போதும்.. அவன் செயலில் அவள் முகம் குங்குமமாய் சிவந்து போனது. “இதுக்குத் தான் என்னை அர்த்த ராத்திரியில் வரச் சொன்னாயா”.. என்று அதட்ட..
“இல்லை” என்று மறுத்து தலை அசைத்தவன்.. அவளைத் தன்னோடு இழுத்துக்கொண்டு “நூறாவது நாள் கொண்டாடத் தான்..” என்று கூற.. ஜான்சிக்கு ஆச்சரியம்.. “நீயும் அந்த கணக்கை வச்சு இருக்கியா” என்று கேட்க..
“மெடிக்கல் காலேஜ் சேர்ந்ததற்க்கே நூறாவது நாள் கொண்டாடுறோம்.. உன்னைக். காதலிக்க வச்சு.. எவ்வளவு பெரிய சாதனை பண்ணியிருக்கேன்.. இதைக் கொண்டாட வேண்டாமா..” என்று கண்ணன் கூற.. அவன் காதலில் உருகிய ஜான்சி.. “ஐ லவ் யூ டா” என்று அவன் தோளில் லாவகமாக அவள் சாய்ந்துகொள்ள..
“மம்.. கிஃப்ட் எங்க..” என்று அவள் கேட்க.. “என் கிஃப்ட் எல்லாம் பார்க்க முடியாது.. உணர மட்டும்தான் முடியும்.” என்று கண்ணன் சொல்ல..
“எது.. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என் உதட்டைக் கடிச்சு வச்சியே.. அதுவா..” என்று அவனைப் பார்த்து குறும்புடன் கேட்க..
“மம்.. அது சும்மா சாம்பிள்.. இப்ப ஸ்டிராங்கா ஒன்னு கொடுக்கட்டுமா”.. என்று ஆசையுடன் அவள் இதழ்களை நாடி.. குனிய..” வேண்டாம்.. வேண்டாம்.. என்று அவள் விலகி ஓட.. “ஜான்சி நில்லு.. நானே வந்து விடுகிறேன்” என்று அவன் அவளைப் பிரிய மனமில்லாமல் ஹாஸ்டல் அருகில் விட்டுச் சென்றான்.

*******டீஸர் 2****

நமது நாயகி ஜான்சி.. ஜான்சி என்கிற ஜான்சி ராணி.. ஜான்சி வளர்ந்தது சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில். அந்த ஆசிரமத்தின் நிர்வாகி உமையாள். தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய புதிதில் இந்த ஆசிரமம் நிறுவப் பட்டதால்.. பெண் குழந்தைகளை மட்டுமே ஏற்று அந்த குழந்தைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து இருந்தார் உமையாள்.
உமையாள் எப்போதும் நேர்கொண்ட பார்வை.. கம்பீரம்.. எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மை.. என்று இருப்பார். அவர் வளர்ப்பில் ஜான்சிக்கும் அதே குணங்கள் உண்டு. ஜான்சி படிப்பில் சிறந்தவள் ஜான்சி ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் கண்களில் நீரோடு வந்தாள்.
உமையாள் அவளின் அழுகைக்கு காரணம் கேட்க.. அம்மா எனக்கு நிஜ அம்மா அப்பா இல்லைன்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேள்வி பேசுறாங்க.. நீ அனாதைன்னு சொல்றாங்க.. அனாதைன்னா என்ன அம்மா.. என்று அந்த சின்ன குழந்தை கேட்கவும் உமையாள் நெஞ்சுருகி போனார். ஆனால் தன் மன வேதனையை காட்டாமல்.. “குட்டிமா உன் பேர் என்ன” என்றார் அந்த இளம் கன்றிடம்.. அவள் ஜான்சி என்று சொல்லவும்.. அதை மறுத்து..
“ம்ம்.. ஹ்ம்ம்.. ஜான்சி.. ராணி..” என்று வீரமாக எடுத்துச்சொல்ல குழந்தை ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். “நீ சாதாரண பெண் கிடையாது.. சாதிக்கப் பிறந்தவள். உன் கூட படிக்கிற குழந்தைகளுக்கு உன் வளர்ச்சி பிடிக்கல.. உன்னை எப்படி வீழ்த்துவது என்று யோசிக்கிறாங்க. உன்னை எப்படி அழுக வைக்கலாம்ன்னு பார்க்கிறாங்க.. நீ அதுக்கு இடம் கொடுக்கலாமா??..” அவள் மறுத்து தலையை அசைக்கவும்..
“கூடாது.. யாராவது உன்கிட்ட.. உனக்கு யாரும் இல்லன்னு சொன்னா.. எனக்கு எங்க உமையாள் அம்மா இருக்காங்க.. இருபது அக்கா ஒன்பது தங்கச்சி இருக்காங்கன்னு பெருமையா சொல்லு.. உன் உடையை பத்தி குறை சொன்னா.. என்கிட்ட சுத்தமான ஆடையும்.. பரிசுத்தமான மனசும் இருக்கு.. அது போதும்.. என்று சொல்லு” என்பார்.
ஜான்சி அன்று தான் கடைசியாக அழுதது உமையாளின் சொற்கள் அவள் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட.. பின் ஜான்சியின் வளர்ச்சியையும் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியவில்லை. எல்லா துன்பங்களையும் வலியையும் வென்ற ஜான்சியால் கண்ணன் தந்த வலியை மட்டும் ஒருநாளும் வெல்ல முடியவில்லை. கண்ணன்.. பெயருக்கு பொருத்தமானவன்.
அவள் வாழ்வில் அளவில்லா சந்தோஷத்தை அள்ளி கொடுத்துவனும் அவனே...

பின் அழுவதையே மறந்து போனவளுக்கு அதை கற்று கொடுத்தவனும் அவனே.. கண்ணன் தந்த வலியை ஜான்சி வென்றாளா?.. தெரிந்து கொள்ள முழுக் கதையையும் படித்து பாருங்கள்.
நன்றி.
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top