• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

என் பெயர் எழிலரசி - அத்தியாயம் 2

JB

Administrator
Staff member
என் பெயர் எழிலரசி

அத்தியாயம் 2

மல்லிகா ஏதோ வாய் வார்த்தையாகத் தான் சொன்னாள். அவன் வருவான் என்று.. ஆனால் அந்த இளைஞன் நிஜமாகவே ஹாய் என்று அவர்கள் எதிரில் வந்து அமர.. மல்லிகா விதிர் விதிர்த்துப் போனாள்.
பதட்டத்துடன் மல்லிகா எழிலின் முகத்தைப் பார்க்க.. அவள் மிகவும் சாதாரணமாக காபியை சுவைத்துக் கொண்டிருந்தாள். மல்லிகாவுக்கு தோழியின் செயலில் இருந்த அலட்சியத்தைப் பார்த்து கோபம் தலைக்கேறியது.
அவன் அறியாமல் அவள் எழிலின் தொடையில் கிள்ள.. “ஆ” என்றவள் காபியை கீழே வைத்து தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். எழில் அவனைப் பார்த்ததும் அதையே அழைப்பாக ஏற்று அவன் அவர்கள் எதிரில் அமர்ந்து பேசத் தொடங்கினான். சாரி.. முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்க கிட்ட நான் இந்த மாதிரி எல்லாம் பேசினது இல்ல..பட்.. உங்களைப் பார்த்தவுடன் என்ன சொல்றதுனே தெரியல.. ஏதோ ஜென்மம் ஜென்மமா பழகின மாதிரி ஒரு ஃபீல்.. எனக்கு இந்த மாதிரி எல்லாம் யாரைப் பார்த்த போதும் தோனுனதே இல்லை என்று அவன் கூற..
எக்ஸ்க்யூஸ் மீ.. வேற எதாவது வேண்டுமா மேடம் என்று சர்வர் அவர்களிடம் வந்து அவனுக்கு இடையூறாக கேட்க..இல்லை பில் கொண்டு வந்திடுங்க என்றனர் பெண்கள்.. உங்களுக்கு சார் என்று அவனிடமும் திரும்பி கேட்க..
“நோ தேங்க்ஸ்” என்று அவன் பதில் கூற அவர்களிடமிருந்து தலை திருப்பிய அந்த நொடியில் மல்லிகா எழிலின் காதில் மெல்ல கூறினாள். எழில்.. குஷி டயலாக்டி. அடுத்ததாக உன் போன் நம்பர் இல்லை உன் பெயர் என்னன்னு கேட்பான் பாரேன் என்று மல்லிகா சொல்லி முடிக்க..அந்த புதியவன் மறுபடியும் தொடங்கினான்.
“நீங்க என் மேல மோதுன உடனே எனக்குள்ள ஏதோ கரன்ட் ஷாக் அடிச்சது மாதிரி ஆகிடுச்சு”..அதே நேரம் அவன் போன் சினுங்க.. பரவால்ல பேசிமுடிங்க என்று மல்லிகா அவனுக்கு அனுமதி கொடுக்க.. ஒன் மினிட்...என்றவன் சற்றுத் தள்ளிச் சென்று போன் பேசத் தொடங்கினான்.
எழில்.. கேட்டியா கடைசி வசனம் ராம்சரண் மாவீரன்ல வருவது மாதிரி இருக்கு..பார்க்க அதர்வா மாதிரி இருக்கானே நல்ல பையனா இருப்பான்னு பார்த்தா.. சரியான ஜொள்ளு மாதிரி தெரியுது..ஏ எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. பேசாம எழுந்து போயிடலாமா என்று மல்லிகா இப்போது கலக்கத்துடன் கேட்டாள்.
ஒன்னும் வேண்டாம் இப்ப பாரு நான் யாருன்னு சொன்ன உடனே பெட்டிப் பாம்பாக அடங்கி ஓடிடுவான் என்று சொல்லி முடிக்க.. அந்த இளைஞனும் போனைத் துண்டித்து அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான்.
அவன் ஆவலுடன் எழிலின் முகத்தைப் பார்த்தான். சரி உங்களுக்கு இப்ப என்ன தெரியனும் என்று அந்த புதியவனிடம் எழில் தானாகக் கேட்க..ம்ம்.. முதல்ல உங்க பேருல இருந்தே ஆரம்பிக்கலாம்.. உங்க பேர் என்ன சொல்லுங்களேன் என்று அவள் பெயரைக் கேட்க அவன் ஆசையுடன் காத்திருந்தான்.
“என் பெயர் எழிலரசி... எழிலரசி சக்திவேல்.. பூஞ்சோலை கிராமத்து எழிலரசி.. என்று சொல்லி அவன் முகமாற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தாள். எழில் கூறியது போலவே அதுவரை காதல் ரசம் வடிந்து கொண்டிருந்த அவன் முகம் அவள் பெயரைக் கேட்ட நொடியில் பாறை போல் இறுகி காட்சியளித்தது.
ஓ.. நீயா.. என்றான் அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல். அவனின் முக மாற்றம் திருப்தி தர எழில் இதழ்களில் லேசான புன்னகை மலர்ந்தது.
அவளின் முகமலர்ச்சி அவனை காயப்படுத்த அதற்கு மேல் நொடிப் பொழுதும் அவர்கள் முன் நில்லாமல் சென்று விட்டான்.. அந்த புதியவன்.

மல்லிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடி இவ்வளவு நேரம் உன்னைப் பார்த்து கிறங்கிப் போயிருந்தவன்.. உன் பெயரைச் சொன்னதும் இப்படி மாறிட்டான். போயிட்டு வரேன்னு கூட சொல்லாமல் போய்ட்டானே. கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனா இருக்கான் என்று மல்லிகா குத்தலாகச் சொல்ல.. எழிலுக்கு சிரிப்பு வந்தது.
ஏய்.. எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு. அவன் ஏன் முதல்ல உன்னைப் பார்த்து ஆசையா பேசிட்டு.. உன்பேரைக் கேட்டு ஓடிப்போனான். உனக்கு அவனை எற்கனவே தெரியுமா? உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை என்று மல்லிகா கேள்விகளை அடுக்க...
வா முதல்ல வீட்டுக்குப் போய் பேசுவோம் என்று எழில் சொல்ல.. ஸ்கூட்டியில் ஏறி இருவரும் வீட்டை அடைந்து.. நைட்டிக்கு மாறிய பின் சோபாவில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்.
இனிமேலும் சஸ்பென்ஸ் தாங்காது..என்று மல்லிகா சொல்ல- சரிசரி சொல்றேன். அந்த பையன் வேற யாரும் இல்ல.. என்னோட சொந்த அத்தை பையன் தான். அத்தை பையனா..என்று நம்ப முடியாமல் வாய் பிளந்தாள் மல்லிகா.
ஆமா என்னோட அப்பாவோட ஒரே தங்கச்சி பையன். பேரு விஷ்ணு. அவனை நான் கடைசியா பார்த்தது என்னோட 12 வயசுல. அதாவது கிட்டத்தட்ட பத்து வருஷம் இருக்கும். இந்த பத்து வருஷ காலத்துல நான் வளர்ந்ததுல அவனால என்ன அடையாளம் கண்டுபிடிக்க முடியல.
ஆனா அவனுடைய கண்ணு.. சிரிப்பு.. நெத்தியில் உள்ள தழும்பு.. இதெல்லாம் பார்த்த உடனே அது விஷ்ணு தான்னு எனக்கு தெரிஞ்சிருச்சு.
சூப்பர் டீ.. நாங்கல்லாம் வீட்ல ஹீரோ மாதிரி மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லிட்டு இருக்கோம். நீ கொடுத்து வச்சவடி உன் சொந்த அத்தை பையனே இவ்வளவு அழகா வாட்ட சாட்டமா இருக்கான். பேசாம அவனையே கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடு என்றாள் மல்லிகா.
ம்ஹ்ம்ம்.. இந்த உலகத்துல ஆண் பிள்ளைகளே இல்லாமல் இவன் தான் கடைசி ஆண் பிள்ளை என்றால் கூட..நான் அவனை கட்டிக்க மாட்டேன் என்றாள் எழில் தீர்க்கமாக.
என்ன டீ. சொல்ற உனக்கு ஏன் அவன் மேல அவ்ளோ ஒரு வெறுப்பு. அவனுக்கு உன்னை ரொம்ப புடிச்சி இருக்குன்னு தான் நினைக்கிறேன். அவன் கண்ணுல நிச்சயம் காதல் இருந்தது. பார்க்குறதுக்கும் நல்லா இருக்கான். இதுக்கு மேல வேற என்ன வேணும் என்று மல்லிகா சொல்ல. எழில் பதிலுரைத்தாள்.
அதான் இல்ல. அழகு ஆபத்தானது.. என்பதற்கு எடுத்துக்காட்டே அவன் தான். வெளித்தோற்றத்தில் உள்ள மென்மை அவன் மனசுக்குள்ள இருக்காது. மத்தவங்க கிட்ட எப்படி நடந்துக்குவானோ தெரியாது?
ஆனா அவனுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. அதே மாதிரி எனக்கும் அவனைச் சுத்தமா பிடிக்காது. பின் எழில் தன் ஊரையும் தன் மக்களைப் பற்றியும் சொல்லத் தொடங்கினாள்.
பாபநாசத்தில் இருந்து பத்து மைல் தூரத்தில் உள்ளது பூஞ்சோலை கிராமம். இயற்கை எழில் ததும்பத் ததும்ப அனைத்து வளங்களையும் கொண்டது. எப்போதும் பச்சைப் பசேலென்ற வயல் வெளியும் தென்னை மரங்களும் நீரோடைகள் என பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டது பூஞ்சோலை கிராமம்.
அந்த அழகான கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் தான் நமது நாயகி எழிலரசி. சக்திவேல் முத்துப்பேச்சியின் ஒரே தவப் புதல்வி. சக்திவேலுக்கும் முத்துப்பேச்சிக்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாக குழந்தை இல்லை. முத்துப்பேச்சி வேண்டாத தெய்வமில்லை. செய்யாத பரிகாரம் இல்லை. முத்துப்பேச்சியின் வேண்டுதலாலும் நம்பிக்கையின் பலனாகவும் ஐந்து வருடங்களுக்கு பிறகு முத்துப்பேச்சி கருவுற்றாள்.
கணவன் மனைவி இருவரும் உலகையே வென்ற ஆனந்தத்தில் இருந்தனர். இவர்கள் இருவரைவிட உண்மையில் அதிக ஆனந்தம் அடைந்தது சக்திவேலின் தாயார் பேச்சியம்மாள்.
பேச்சியம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் சக்திவேலும் மீனாட்சியும். பேச்சியம்மாளின் கணவர் தங்கப்பாண்டியன். தங்கப்பாண்டியனுக்கு அந்த கிராமத்தில் நிறைய செல்வாக்கு உண்டு. ஊர்த்தலைவர் பஞ்சாயத்து தலைவர் என பல பதவிகளை அவர் ஏற்று இருந்ததால்..அவர் மீதும். அந்த குடும்பத்தின் மீதும் அனைவரும் நன்மதிப்பு வைத்திருந்தனர்.
விவசாயம் மட்டுமில்லாமல் ரைஸ்மில்.. டிராக்டர் வாடகைக்கு விடுவது.. பூச்சி மருந்துக் கடை.. தென்னந்தோப்பை குத்தகைக்கு விடுவது என நிறைய தொழில்கள் அவர்கள் வசம் இருந்தன. அதனால் செல்வாக்கு மட்டுமல்லாமல் செல்வச் செழிப்பும் ஓங்கியிருந்தது.
ஆனால் தங்கப்பாண்டியன் சக்திவேலுக்கு பத்து வயது இருந்த போதே நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதன்பின் அனைத்து பொறுப்பையும் பேச்சியம்மாவே ஏற்று.. அதோடு குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
சக்திவேல் வளர்ந்ததும் தாயின் பொறுப்பை பெற்றுக் கொண்டான். சக்திவேலும் திருமண வயதை அடைய...பெண்ணை உள்ளூரில் எடுத்தார்கள். முத்துப்பேச்சியின் குடும்பம் இவர்களைவிட வசதியில் கம்மிதான். இருந்தாலும் முத்துப்பேச்சியின் குணத்திற்காகவே பேச்சியம்மாள் அவளைத் தன் மகனுக்கு மணம்முடிக்க முடிவு செய்தார்.
முத்துப்பேச்சியின் குடும்பமும் விவசாயத்தை தொழிலாகக் கொண்டது. முத்துப்பேச்சியுடன் பிறந்தவன் சுந்தரபாண்டியன். முத்துப்பேச்சியை விட ஐந்து வயது மூத்தவன்.
சுந்தரபாண்டியன் வித்தியாசமான கொள்கைகளை உடையவன். அங்குள்ள அனைவருக்கும் அந்த கிராமமே உயிராக இருக்க.. சுந்தரபாண்டியனுக்கு பட்டணம் சென்று தொழில் தொடங்கி செல்வச் செழிப்புடன் வாழவேண்டும் என்பதை அவன் லட்சியமாக எண்ணினான்.
சுந்தரபாண்டியன் அவர்கள் குலத் தொழிலான விவசாயத்தைத் தொடரப் பிடிக்காமல்.. கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்காக சென்னைக்குச் சென்றான். படிப்பதற்காகச் சென்றவன்.. பின் அங்கேயே கோயம்பேட்டில் உள்ள காய்கறி கமிஷன் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.
விவசாயிகளிடம் இருந்து இரவில் லாரியில் வரும் காய்கறிகளை நல்ல கமிஷனுக்கு எப்படி விற்க வேண்டும் என்ற நுனுக்கத்தை குறைந்த காலத்தில் நன்றாக கற்றுக் கொண்டான். அவன் முதலாளி திடீரென்று நோய் வாய்ப்பட்டு.. கடையை மூடப்போவதாகச் சொல்ல..
சுந்தரபாண்டியன் அவன் கையில் உள்ள காசைக் கொண்டும் கடன் வாங்கியும்.. அவனே அந்த கடையை வாங்கி நடத்தத் தொடங்கினான். அவனது அயராத உழைப்பும்.. தொழில் மீது அவன் கொண்ட ஆர்வமும்.. அவனை வெற்றிப் படிகளை வேகமாக எட்டச் செய்தது.
அதன் பிறகு அவன் பூஞ்சோலை கிராமத்திற்குச் செல்லவே இல்லை. முத்துப்பேச்சியின் திருமனத்தின் போது..அவன் தந்தை கட்டாயப்படுத்தி வரச் சொன்னதால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு.. இரண்டு நாள் மட்டும் தான் வருவேன் என்று உறுதியும் பெற்றுக் கொண்டு தான் வந்தான்.
சுந்தரபாண்டியன் கிராமத்திலே பிறந்து வளர்ந்து இருந்தாலும்..சென்னை வாழ்க்கை அவனை இந்த ஆறு வருடத்தில் மொத்தமாக மாற்றியிருந்தது. பணம் ஆடம்பரம் சொத்து சுகம் என்று இது மட்டுமே வாழ்க்கையில் முக்கியமாகத் தோன்ற... அதற்கான வேட்டையில் இரவு பகலாக உழைக்கத் தொடங்கி இருந்தான்.
அவனுக்கு இரண்டு நாள் அந்த கிராமத்திற்கு செல்வது கூட தண்டனையாகத் தோன்றியது. முத்துப்பேச்சி திருமணத்தை முடித்த பின்பு.. அந்த ஊருக்குப் போகவே கூடாது என்று எண்ணிக் கொண்டான் சுந்தரபாண்டியன்.
ஆனால் கிராமத்தை வெறுத்த அவனால் அந்த கிராமத்து தேவதையாக மின்னிய பெண்ணை மறக்க முடியவில்லை. சுந்தரபாண்டியன் சக்திவேலின் தங்கையைத் திருமணத்தில் பார்த்த நொடியில் காதல் வயப்பட்டான்.
அவளிடமிருந்து பார்வையை மீட்கப் போராடியும்... மீனாட்சியிடம் இருந்து மீண்டு வர அவன் கண்கள் மறுத்தன. பின் தாமதிக்காமல் அவன் ஆசையை அவன் தந்தையிடம் சொல்ல..அவரும் பேச்சியம்மாளிடம் சென்று மீனாட்சியை பெண் கேட்டார்.
பார்ப்பதற்கு களையான முகம்.. துடிதுடிப்பான இளைஞன். கடின உழைப்பு என நிறைய நல்ல பண்புகள் இருந்தாலும் மீனாட்சி, சுந்தர பாண்டியனை மணமுடித்தால்...அவர்களை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டுமே என்ற கவலை மட்டும் அவர்களை யோசிக்கச் செய்திருந்தது.
அதனால் நாகரீகமான முறையில் மீனாட்சிக்கு இப்போது தான் பதினெட்டு வயது நடக்கிறது. இன்னும் இரண்டு வருடம் செல்லட்டும் என்று மறுத்து விட்டனர்.
சுந்தரபாண்டியனுக்கு அது ஏமாற்றமாகப் போய் விட்டது.. தான் கேட்டு அவர்கள் மறுப்பதா என்று..ஒரு கோபம் சக்திவேல் மீதும் பேச்சியம்மாள் மீதும் ஆழமாக பதிந்து விட்டது. அப்படியே ஆறுமாத காலம் சென்றது.
ஒரு நாள் மீனாட்சி சக்திவேலிடமும் பேச்சியம்ம்மாளிடமும் தான் சுந்தரபாண்டியனைக் காதலிப்பதாகக் கூறினாள். இருவருக்கும் அதிர்ச்சி.. மீனாட்சி இதுவரை எந்த ஆணையும் தலை நிமிர்ந்து கூடப் பாராதவள். இன்று திடீரென்று அவள் சொன்னது இருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
பெரியவர்கள் நிராகரித்த பிறகும் சாமர்த்தியமாக மீனாட்சியைத் தனியாக சந்தித்து அவள் மனதை கலைத்து இருக்கிறானே என்று சுந்தர பாண்டியன் மீது கோபம் பொங்கியது. தனது மச்சினன் என்பதை எல்லாம் மறந்து.. அவனை தாக்கத் தொடங்கி இருந்தான் சக்திவேல்.
பின் மீனாட்சியும் முத்துப்ப்பேச்சியும் தடுக்க..அவர்களுக்காக தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். பின் பேச்சியம்மாள் சமாதனம் செய்ய வேறு வழியில்லாமல் தன் தங்கையை சுந்தரபாண்டியனுக்கு கொடுக்க சக்திவேலும் ஒத்துக் கொண்டான்.

தொடரும்
 
asasa11
asasa11

Members online

No members online now.

Latest Updates

Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}