JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒருபக்க (சிறுகதை) - அபிஷேக நாள்

Nuha

Member
images (66).jpg
முன்னுரை:

நான் கேட்டு ரசித்த கதையை எழுத்து வடிவத்துல கொண்டு வந்துருக்கேன்.(just like translator) சின்ன பிள்ளைல பாட்டி தூங்க வைக்க சொன்ன கதைகள் பல... கிட்டதட்ட ஆயிரம் கதையாது கேட்டுருப்பேன் அவங்க சொல்லி. அதில் சில கதைகள் மனசுல பதிந்துவிட்டது. ஆசையா இருந்துச்சி எழுதிட்டு வந்துட்டேன். ஆனா நிறைய பேர்க்கு தெரிஞ்சதாகூட இருக்கலாம். பிடிக்கலனா just skip :)


பி.கு : இது நந்தவனத்தில் ஏற்கனவே நான் பதிவிட்ட போஸ்ட் மக்களே! "கனவுகளின் ராட்சத இராச்சியம்" திரி இன்னும் சில நாள்ல எடுத்துவேனே! அப்போ என் பெயரில் இருக்கும் இந்த திரி ஒன்னுமில்லாம இருப்பதை நான் விரும்பவில்லை :) something is better than nothing right! அதான் என் வாசக நண்பர்களான உங்களுக்குனு இந்த கதை பரிசா தூக்கிட்டு வந்துட்டேன் :)

கதைக்கேக்க தாயரா... வாங்க இப்ப நாம கதைக்குள்ள போவோம். :)

கதை தலைப்பு :: அபிஷேக நாள்

ஒரு ஊருல ஒரு கோவில் இருந்துச்சாம். அந்த கோவில் பழமையான கோவில். அதனால் கொஞ்சம் கொஞ்சமா சிதிலமடைய ஆரம்பிச்சி இருந்திருக்கு. ஊருல இருக்கும் பெரிவாக்குலாம் ரொம்ப கவலையா போயிருச்சி.

"இத்தனை பெருமைக்குரிய பழமை சிறப்புடைய கோவில நாம காப்பாத்தியாகனும்னு"

ஊர் பெரியவா சேர்ந்து ஒன்னா ஒரே முடிவு எடுத்தாங்க. அதன் பலனா ஊர் மக்கள் கிட்ட இருந்து,
"உங்களால் முடிந்தத குடுக்கலாம்"னு பணம் வசூல் செய்தாங்க.

ஊர் மக்களும் பயபக்தியா பங்கெடுத்து உதவுனாங்க. அமோகமா வேலை நடந்து முடிய, இதோ அதோனு இப்ப கும்பா அபிஷேக நாளும் வந்துடுச்சி. அப்ப தான் மறுபடி கூடுன ஊர் தலைவர்களான பெரியவாக்கள் இன்னொரு முடிவு செய்தாங்க.

மரியாதைக்கு உரிய ஒரு பெரியவா எழுந்து நின்னு இப்படி சொன்னார்..

"இந்த கோவில்'ஐ சீர் அமைக்கும் பணில... நம்ம ஊர் மக்கள் பங்கும் அதிகம்! அதனால நான் என்ன சொல்ல வரேன்னா? அடுத்த வாரம் நடக்கப்போர "அபிஷேக விழா"வில் கோவிலிக்கு செய்ய வேண்டிய நம்ம 'தலை மரியாதைல' மக்களுக்கும் பங்கு தருவோம்"

கூட்டதுல ராமசாமினு ஒருத்தரு எழுந்தாரு...
"நீங்க சொல்றதும் சரி தான் ஐயா.. எந்த மரியாதைய? நாம ஊர்ல எல்லாருமா பகிர்ந்துக்கலாம்னு சொல்லிடுங்க... சிறப்பிச்சிடுவோம்" னு முன்ன வந்து சொல்ல,

ஊர் தலைவருக்கு மிக்க மகிழ்ச்சியா போயிடுச்சி.

அவரும், "நாம எல்லாரும் பால் அபிஷேகத்த பகிர்ந்துப்போம். விழா நாள் அன்று... அவங்க அவங்க வீட்டில் இருந்து ஊர் மக்கள் எல்லாரும் ஒரு கலசம் தழும்ப பால் கொண்டு வந்து இந்த அபிஷேக பாலுகான பெரிய செம்பு அண்டா பாத்திரத்தில் ஊத்திடுங்க. நம்ம மக்கள் தொகைக்கு ஒரு கலசமே போதும் ... இந்த அண்டா பாத்திரமே நிரஞ்சிடும். எல்லாரும் இந்த தெய்வீக பணில கலந்து மரியாதைய பகிர்ந்துகலாம்"னு சொனனார்.

அந்தி சாய்ந்து மினுக்கு மினுக்குனு நட்சத்திர கூட்டம் எட்டி பார்க்க ஆரம்பித்த மாலை நேரம். கடிகாரமும் தன் சிரிய முள்ளை துறத்தி பின்னால் ஓடிய பெரிய முள்... சின்னதை நெருங்க துடித்து ஆறறை மணியை காண்பித்தது. ஏக மனதாய் அனைவரும் முடிவு எடுத்த திருப்தியுடன் எல்லாரும் அவங்க அவங்க வீட்டல போய் முடங்கிட்டாங்க.

ராமசாமி வீட்டில்::

"கமலம் கமலம்" அவர் மனைவியை அழைத்தார்.

"மாமா வந்துடீக்களா... ஹோய் ரோசா அப்பா வந்துட்டா பாரு!" என்று அவரும் உள்ளிருந்து தலை நீீட்டி பார்த்து, மகளுக்கு குரல் கொடுத்தவாரே வாசல் வரை வந்து கணவரை வரவேற்றவர், பையையும் வாங்கி கொள்ள,

மகள் கொண்டு வந்து தந்த நீரை பருகிய ராமசாமி...

"வரக்காப்பி கொண்டுவாமா. தலைய வலி லேசா அழுத்துது" என்றார்.

காப்பி வந்ததும். குடித்துக்கொண்டே மனைவி மகளுடன் சற்று நேரம் அனுசரனையுடன் குடும்பம் சகிதம் பேசி இருந்திவிட்டு இரவு பசியாறி தூங்க சென்றனர்.

மகள் தூங்கியதும், வெளியே வந்த கமலம் கண்டது வரவு செலவு புத்தகத்தை வைத்துக்கொண்டு யோசனையோடு அமர்திருந்த ராமனைத்தான்.

"என்னுங்க மாமா யோசன?" என்க, இன்று பெரியவா சேர்ந்து எடுத்த முடிவை கூரியவர்.

"இதுல மகிழ்ச்சி தான் புள்ள எனக்கும்! ஆனா நமக்கு கஞ்சி ஊத்துன பசுவ வித்துட்டு தான் நம் குலசாமி கோயிலுக்கு பணம் செஞ்சோம். இப்ப வீட்டுல பாலுக்கு வழியில்லனு வெளிய வாங்க போனா நம்ப கை செலவுள சின்னதா துண்டு உழுவுது புள்ள அதான் யோசிக்கிறேன். சரி பாத்துகலாம் காலைல வெள்ளனே எழனும் நிறைய வேலை கிடக்கு படு" என்றார் தன் துண்டை உதறியபடி.

"அட இம்புட்டு தான் செய்தியா? நீங்க கவலைய விடுங்க மாமா என்கிட்ட ஒரு யோசனை இருக்கு" என்று தன் யோனையை கூற அவரின் கண்களும் மின்னல் கீற்றாய் பழிச்சிட்டது உடனே களையிழந்து,

"யாருக்கும் சந்தேகம் வந்துட்டா!"

"அதெல்லா வராது மாமா. ஊரே கலசம்
நிறைஞ்ச பால கொண்டு போய் நிரப்பி இருப்பாங்க, நாம மட்டும் தண்ணீரை கொண்டு போய் ஊத்தினா! எப்டி சந்தேகம் வரும் அதெல்லாம் வராது படுங்க" என நம்பிக்கை ஊட்டி தூங்கிவிட, இவரும் நிம்மதியாக கண்ணயர்தார்.

இப்படியே நாட்கள் நகர, அபிஷேக நாளும் விஷேச கலையுடன் விடிந்தது.

ஆயினும் ராமசாமிக்கு தான் அத்தணை பதட்டம் மனதினுள்.

"ச்ச நாமலே முன்ன நின்னு சரினு வாக்கு சொல்லிட்டு, இப்ப வெறும் தண்ணீர் கலசத்தோட கோவிலுக்கு போரோமே!" என்று கற்கல் நேரத்திலேயே தன் தெரு மக்கள் சகிதம், பின் ஊர் மக்கள் சகிதம் என்று மஞ்சள் பூசப்பட்ட கலசத்தை தலையில் தூக்கிச்செல்ல,

கோவிலுக்கும் வந்து சேர்ந்தனர். ராமசாமி குடும்பத்தில் மகள் அவள் சிநேகித பிள்ளைகளோடு விளையாடியவாரு மகிழ்சியாகவே துரு துருவென்று சுற்றி கொண்டிருக்க, மீதம் இருவரான கணவன் மனைவிக்கு தான் நெஞ்சில் "டமாரம்" கொட்டி கலவர படுத்தியது.

இதோ பால் கலசத்தை கொண்டு சென்று ஊற்ற வேண்டிய தன் முறையும் ராமிற்கு வர, தயங்கி தயங்கி லேசாக மறைத்தபடியே தன் தண்ணீர் நிரப்பிய கலசத்தோடு அபிஷேக பாத்திரம் அருகே சென்றவர், தன் உயரத்தை காட்டிலும் ஒரு அடி உயரமாக இருந்த அப்பெரும் பாத்திரத்தில்,

நுனி கால்களை ஊன்றி சற்றே எக்கியவர், தன் மூச்சையும் ஆழ இழுத்துவிட்டு தன் குலசாமியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டவர் படபடபுடன் கைகள் நடுங்க தண்ணீரை ஊற்றிவிட்டு, யாரும் கண்டுபிடிக்காததால் சற்றே மனம் லேசாகி இறங்கினார்.

இளம்நகையோடு மற்றவர்களைக் கடந்து கமலத்திடம் வந்தவர், தனக்கு பின் பிறர் செய்யும் கடமையை மேம்போக்காக பார்தபடி மனையாளிடம்,

"நல்ல வேலை நாம் தப்பித்தோம். சேமிப்பிலும் கை வைக்க வேண்டாம். குலசாமிக்கு நம்மாலான மரியாதை செய்து குளிர்வித்தாச்சி நமக்கு இரட்டை லாபம்" என்றார்.

அவளும் ஆமோதிப்பாக மெச்சும் தலையசைப்புடன் நடப்பதில் கவனம் செலுத்தினாள்.

அனைவர் முறைக்களும் இனிதே நிறைவேரிட, எல்லோர் முகமும் நிம்மதியுடன் பளபளத்ததது.

ஊர் தலைவரும் தலைமை பூசாரியும் சேர்ந்து மேல் தாள்வாரம் வழியாக வந்தவர்கள் எல்லோரிடமும் மனம் குளிர உரையாடிவிட்டு, அபிஷேகப்பாத்திரத்திடம் சென்றனர்.

உள்ளே முகம்கொள்ளா புன்னகையுடன் எட்டி பார்த்தவர்கள், இருப்புக்கொள்ளா அதிர்ச்சியில் ஸ்தம்பித்து மக்களையும் பாத்திரத்தையும்... ஏன்? பார்க்கும்... தங்கள் இருவரும் கூட ஒருவர் முகம் ஒருவர் பேயரைந்தார் போன்று திகைப்பாக பார்வைகளை பரிமாறிக்கொண்டனர்.

இவர்களை பார்திருந்த ராமசாமி மற்றும் கமலம் கூட பேயரைத்தார் போல் தங்களை ஒருவர் முகம் ஒருவர் பார்க்க,

கமலமோ, "ஏனுங்க மாமா... நம்மால ஏதும் தெய்வகுத்தம் ஆயிருக்குமோ" என்று தலைவரையும் பூசாரியையும் கலவரமாக பார்த்தனர்.

அவர்கள் இருவருமோ மீண்டும் அபிஷேக பாத்திரத்தை பார்தனர். ஏன் இந்த திகைப்பு என்று பார்கிறீர்களா?? அப்பாத்திரம் முழுக்கவும் இருந்தது வெறும் தண்ணீர்! மாத்திரம் அல்லவா?? அதுதான்.

இதில் ஊர் தலைவர் முதற்கொண்டு மற்றவர் முன்பு முகஸ்துதிக்காக பேசுவது போல் கோவில் பணிக்கு பணத்தை இரைத்தவர்கள்... இன்று மொத்தமாக தண்ணீரை மட்டுமே நிரப்பி இருக்க! தாங்கள் சிக்கிக்கொண்ட திருவிளையாடலில் திகைத்து தெளிந்து மக்களிடமும் பகிர. அதே அதிர்ச்சியில் வாய் பிளந்து 'ஞ' என்று விழித்துக்கொண்டு நின்றனர்.

பின் என்ன குலசாமிக்கு நீர் அபிஷேகம் இனிதே நடந்தது 😁


கதை பின்கருந்து :: யாவரும் சரியா செய்வாங்க, நாம மட்டும் செய்யும் தப்புல பெரிதா எதுவும் மாறிடாதுனு நினைக்காமல் மத்தவங்க தவறு விட்டாலும் பரவாயில்லை நாம தவறு செய்ய கூடாதுனு தனியொருத்தரா கடைப்பிடித்து வாழனும்.. (இதுவும் என் 'அத்தம்மா' (பாட்டி) சொன்னது தாம் :) )

பிரியமுடன் நுஹா :)
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top