JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகைப் பூவே - அத்தியாயம் 4.

revathyrey04

New member
புன்னகை 4 :

தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து இருந்த பேத்தியை பார்த்து விட்டு,தான் சொன்னதால் தான் அமைதியாகி விட்டாள் என்று மிக சரியாக, தவறாக எண்ணி விட்டார் வைதேகி பாட்டி. பாவம் அவருக்கு எங்கு தெரியும், தன் பேத்தி அவளின் காதல் மன்னனுடன் கனவுலகிற்கு சென்று விட்டாள் என்று.

மற்ற பாட்டிகளிடம், “என் பேத்தி உங்க கூட கத்தி கத்தி தான் சோந்துருச்சு, எல்லாரும் போயி மத்த வேலை இருந்தா பாருங்க” என்று விரட்டி விட்டபடி பேத்தியின் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் முதிய கரங்களிற்குள் வைத்துக் கொண்டு,


“சாலுக்கண்ணு, அப்பத்தா ஏதூம் உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேனாத்தா, முகம் சோந்துருச்சு” என்று குரலில் வருத்தம் பொங்க கேட்டார்.

கனவில் இருப்பவளை தொந்தரவு செய்த பாட்டியை கோபமாக பார்க்க முயன்று நிமிர்ந்து பார்த்து, பாட்டியின் முகத்தில் உள்ள கலக்கத்தை பார்த்து விட்டு, தற்காலிகமாக தனது கனவிற்கு தொடரும் போட்டவள், இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“அய்யயோ பாட்டி, அப்பிடி எல்லாம் இல்ல, இங்க வர்ரதுக்கு உன் மகன் கிட்ட படாத பாடு பட வேண்டியதா போய்ருச்சு, அத தான் நெனச்சிட்டு இருந்தேன்” என்றாள்.


ஷாலினி நல்ல சிவந்த நிறம், பார்க்கும் யாவரும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம். இடை வரை வளர்ந்திருந்த அடர்ந்த கூந்தலை தளர பின்னி, பாட்டியின் கைங்கரியத்தால் நெருக்கி தொடுத்த தோட்டத்தில் உள்ள மல்லிகையை வலப்புற தோலில் தொங்க விட்டிருந்த விதம், அடர் நீல நிற சிறிய கோல்டன் நிற தங்க நிற ஜரிகை உள்ள பாவாடையில் மயில் கழுத்து நிற சிறு பூக்கள் டிசைன், மற்றும் அதே நிற ரவிக்கை, அதற்கு மேட்சிங்காக மயில் கழுத்து நிற தாவணி, கிராமத்து தேவதை என இருந்தாள்.


“ஏன்டி இப்ப என் மகன இழுக்குற, இங்க வாரதுக்கா உன்ன விட மாட்டேனு சொன்னான், நீ ஏதாது வம்பளந்துருப்ப, அதான் சொல்லிருப்பான்” என மகனுக்கு வக்காலத்து வாங்க வந்தார் பாட்டி. பின் தன் ஒரே மகனை சொன்னால் பொருத்துக் கொள்வாரா?

வடிவேல் - வைதேகி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், மூத்த மகன் தான் ஷாலினியின் தந்தை விஸ்வநாதன், இரண்டாவது மகள் பிரபாவதி, மூன்றாவது மகள் கலையரசி. பிரபாவதியை சென்னையில் பெண் கொடுத்து தனது மகனிற்கு பெண் எடுத்தார். பிரபாவதியின் கணவர் ஊர் மெச்சும் மருமகன் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர். வடிவேல் தாத்தாவும் ஏக போக சொத்துக்களின் சொந்தக்காரர். ஆனால் அந்த பந்தா இன்றி வாழ்பவர்.


பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷாலினியன் எண்ணங்கள் எட்டு வருடத்திற்கு முன்னால் சென்றது, இதேபோல் பாட்டி வீட்டிற்கு வந்த பொழுது தன்னிடம் வம்பளந்த தன் அத்தை மகனை நினைத்து.

மதுரையில் திருமங்கலத்திற்கு செல்லும் வழியில் உள்ள நகரமும் அல்லாத, சத்த கிராமமும் அல்லாத கொளமங்களம் ஊரில் தான் வைதேகி பாட்டியின் வீடு உள்ளது. இப்போது போல் உயர்ந்த அதிக அளவில் கட்டிடங்கள் இல்லாது இருந்தாலும், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டது.

திருவிழாவின் முதல் நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இன்று தான் கொடி ஏற்றி பக்கர்கள் தங்களது விரதங்களை தொடங்குவர். அழகான சீரியல் பல்புகளினாலும், கிட்டத் தட்ட ஐந்நூறு பேருக்கும் மேல் நிற்க கூடிய மைதானத்தின் நடுவில் அமைந்திருந்தது பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில். மைதானத்தின் கடைசியில் வரும் கோயில், இடப்புறம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு என மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் வாசலில் அம்மனின் இடது புறம் சரஸ்வதி லட்சுமி என படங்கள் உள்ள சீரியல் லைட்டுகள் மாறி மாறியும், வலது புறம் தன் வாகனம் குதிரையில், கையில் சாட்டையுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் ஐய்யனாரும், தனது ஆயுதமான அரிவாளை கையில் ஏந்தியவாறு கருப்பனசாமியின் படங்களும் மாறி மாறி மின்னிக் கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த கோயில்.

கோயிலில் இளைஞர்கள் அனைவரும் சைடு அடிப்பதற்காகவே வந்திருப்பவர்கள் ஒரு புறபமும், சிலர் பயபக்தியாக சாமி கும்பிடுவதற்காகவும், மற்றும் சிறுவ சிறுமியர்கள் பட்டாம் பூச்சிகளாய் சுற்றிக் கொண்டிருந்தனர். மாலையில் கோயிலின் கொடி மரத்தில் ஐய்யரின் மந்திரங்களுடன், மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றி பக்கர்கள் காப்பு கட்டி தங்களின் விரதங்களை தொடங்கி வைத்தனர்.

ஷாலினி மற்றும் வைஷ்ணவி(வைதேகி பாட்டியின் இரண்டாவது மகள் கலையரசியின் மகள்), வைஷ்ணவியின் தம்பி அஷ்வின் மூவரும் சேர்ந்து கோயிலை சுற்றிக் கொண்டிருந்தனர். ஷாலினி வைஷ்ணவி ஒரே வயது தற்போதே எட்டாம் வகுப்பை முடிக்க இருக்கும் இளம் பெண் குழந்தைகள். அஷ்வின் அவர்களை விட இரண்டு வயது சிறியவன். இரு பெண்களும் ஒரே நிற பட்டு பாவாடை சட்டையில் அனைவரும் வியக்கும் வண்ணம் அழகாக தேவதையாக வலம் வந்தார்கள்.

இப்பொழுது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் ஷாலினியின் அத்தை மகன் ராசு வந்திருந்தான். பார்ப்பபதற்கு மாநிறம் தான் ஆனால் தற்போது புதியதாக முளைத்திருக்க துவங்கும் மீசை, தாடியுமாக ஊரில் உள்ள இளம் பெண்களை வம்பிழுத்து கொண்டிருந்தான் கூடவே அவனைப் போல இருவர் வேறு. இவர்கள் தாத்தா வடிவேல் தான் ஊர் தலைவர் என்பதால் சிறு கெத்து காட்டி நின்றிருந்தான்.

கோயிலில் முன், இடது, வலது புறம் என மூன்று வாசல் உள்ளது. சற்றே பெரிய கோயில் என்பதால் ஒரு புறம் மட்டுமே சென்று வந்தால் சிரமம் ஏற்படும் என இந்த ஏற்பாடு. இதில் வலது புறம் வாசலில் தான் நம்ம சின்ன ஹீரோ நின்றிருந்தான். அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற ஒரு இளம் பெண் திருவிழா என்பதால் கூடுதல் சிரத்தையுடன் மேக்கப் செய்து தன் தோழிகளுடன் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தாள். அப்பெண்ணை ராசு வச்ச கண் எடுக்காமல் வயது கோளாரினால் பார்த்து கொண்டு எவ்வாறு நெருங்கி பேசிவது இவ்வளவு கூட்டத்தின் நடுவே என்று யோசித்து பலன் பூஜ்யம் தான். அப்பெண் அவ்வீட்டாருடன் சேர்ந்து சென்று விட்டாள்.

இன்று தான் முதல் நாள் என்பதால் இன்னும் பெரிய திருவிழா அடுத்த சனிக்கிழமை தான் என்று ராசுவும் கிளம்ப விட்டான்.

அப்படியே மற்ற நாட்களும் செல்ல அனைவரும் மறுபடியும் திருவிழாவிற்கு கூடினர். ஞாயிறு அன்று தான் பூக்குழி உச்சவம் என்பதால் பக்தர்கள் தீ மிதித்தல் போன்ற வேண்டுதலை செய்வர். ராசுவும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக தேடி கண்டுபிடித்தான் அந்த பெண்ணை. கையில் சாக்லெட்டுடன் நின்றிருந்தான் ஹீரோயிசம் வேறு. ஆனால் எவ்வாறு நெருங்குவது என்று யோசித்து கடைசியில் தன் தங்கை வைஷூ மற்றும் அத்தை மகள் ஷாலினியை நாடினான்.

“வைஷூ, அதோ நிக்கிது பாரு அந்த கோல்டன் கலர் ஹாஃப் சாரி போட்ருக்க பொண்ணு, அவட்ட நான் குடுத்தேனு யாருக்கும் தெரியாம குடுத்துட்டு வர்றியா நீயும் ஷாலுவும், நான் போய் குடுத்தேனா தொலஞ்சேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். பாவம் அவளிற்கு தான் தன் அண்ணன் என்றால் உயிர் ஆயிற்றே.

ஆனால் ஷாலு தான் “அத்தான், யாரவது பார்த்துட்டா எங்கள தொலச்சுருவாங்க, நீங்க வேணா போய் குடுங்க, நம்ம வீட்ல யாரவது பார்த்துட்டா நீங்க அடி வாஙகுங்க” என ஓடுவதற்க்கு தயாரானால். ராசு ஒரு வழியாக கெஞ்சிக் கொஞ்சி கேட்பரி சாக்லெட்டுடன் அனுப்பி வைத்தான். ஷாலு மட்டும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள். ஏதோ தன் அத்தை மகனை அந்த வயதிலும் யாருக்கும் விட்டு குடுக்க முடியவில்லை.

அந்த பெண்ணை இருவரும் நெருங்கி ராசுவை நோக்கி கை நீட்டியபடி ஏதோ சிறியவர்கள் பேச, அப்பெண் இவர்களையும் ராசுவையும் நன்றாக முறைத்தவாறு அகன்றாள். இதை எல்லாம் ராசுவும் பார்த்து கொண்டு தான் இருந்தான். அவள் சென்றவுடன் ஷாலு மற்றும் வைஷூவை நெருங்கி அவர்கள் கையில் உள்ள சாக்லெட்டை சாப்பிடுமாறு சொல்லிவிட்டு “அவளுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான், அவர் இல்லனா என்ன, எனக்கு தான் என் அத்த மக ஷாலுக்குட்டி இருக்கால, என்ன அம்மு அத்தான கல்யாணம் பண்ணிப்ப தான? “ என்று சீண்டினான். ஆனால் அது தான் அவள் மனதில் வேரூன்றிது. ஏனெனில் வீட்டிலும் அடிக்கடி பேச கேட்டிருக்கிறாளே. “அம்முவ நம்ம ராசுவிற்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னா அவள நம்ம பிரிஞ்சு இருக்க வேணாம், அவளும் அவர் அத்த கூட கடைசி வர இருப்பா, சொந்தமும் விட்டு போகாதுல” என பெரியவர்கள் அடிக்கடி பேசும் பேச்சு, அந்த சிறு வயதிலும் அத்தான் என்றால் உயிர். கல்யாணம் என்றால் அர்த்தம் தெரியாத வயதிலும் அத்தான் கேட்டதற்காக “சரி” என்று மகிழ்வோடு தலை ஆட்டினால்.


வருடங்கள் ஏற ஏறவே தன் அத்தானின் வார்த்தைகள் பசுமரத்தானியாய் நெஞ்சில் பதிவாகியது. இதோ இந்த நிமிடம் வரை. ஆனால் அவன் யாருட்ட
ப்ளாட் ஆகிருக்கானோ????

--------------------------------------------------------


“குட் மார்னிங் டாட்”, என்று ஹாலின் சோஃபாவில் தினசரி நாளிதழை படித்து கொண்டிருந்த தந்தையின் பதிலுக்கு கூட காத்திராது “மாம், லன்ச் வேண்டாம் டுடே, கேன்டீன்ல சாப்டபோறோம்” என்று சமையல் அறை நோக்கி குரல் குடுத்தாள் தீக்ஷா. மகளின் குரலில் கையில் ஒரு டம்ளர் பாலினை கொண்டு வந்தவர் “இந்தா டா, இது மட்டும் குடிச்சிட்டு கிளம்பி, All the best “ என்று வாழ்த்து கூறினார். இன்று தான் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியு. அதற்கு தகுந்தாற் போல் மெல்லிய நீல நிற டாப் மற்றும் வெள்ளை நிற லெகின்ஸ், துப்பட்டா என அணிந்து, முன் உச்சி சில முடியை சிறிதாக பஃப் வைத்து, விருத்து விடப்படாமல் ஹார் பேண்ட் கொண்டு போனி டெய்ல் போட்டிருந்தாள் அவ்வளவே.

“ஆல் த பெஸ்ட் டா குட்டிமா” என்று கூறிய தந்தையின் வாழ்த்தை பெற்றக் கொண்டு தன் பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

--------------------------------------------------------

Mount college of engineering and technology:

மிக மிக பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது அந்த ஒரு ப்ளாக் மட்டும். சிலர் மிகுந்த சிரத்தையுடனும், சிலர் சிறிது பயத்துடனும், சிலர் வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலையுடனும், மற்றும் சிலர் யாருக்கு வந்த விருந்தோ எனும் விதமாக இவ்வாறு தங்களை தயார் செய்து கொண்டிருந்தனர்.

தனது வழக்கமான புயல் வேகத்திலேயே ஜாகுவாரினை மிக அசட்டையாக கல்லூரியின் வாயில் முன் நிறுத்தி, சில மணி துளிகள் கழித்தே காரை விட்டு இறங்கினான் “ஆதி மேனேஜிங் டிரெக்ட்டர் அஃப் ADS Group of companies”. வெள்ளை முழு கை சட்டை, அடர் கருமை நிற பேன்ட்டும், அடர் சந்தன நிற கோர்ட்டும், கண்ணில் எப்பொழுதும் அணியும் போர்ஸ்சே (Porsche) சன் க்ளாஸும் அணிந்திருந்தான். இறங்கி சில நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் தன் பார்வையை சுழற்றியவன் என்ன நினைத்தானோ, சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு, தன்னை அழைக்க வந்த கல்லுாரி முதல்வரின் கையை குலுக்கினான். “வெள்கம் மிஸ்டர் ஆதி” என்றவரிற்கு மிக சிறு புன்னகையுடன் தலை அசைப்பை பதிலாக்கினான்.


கல்லூரி மாணவர்கள் மொத்தமும் வைத்த கண் பார்த்தவாறு அவனை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.ஏனெனில் நேற்று தான் ஆதியே இன்று நேர்க்காணலிற்கு வருவதாக கல்லூரியில் கூறியிருந்தாள் ஷர்மிளா ஆதியின் பி.ஏ.

“ஆதி ஹியர், கம் டூ மை கேபின்” என்று கூறி அலைபேசியை வைத்த அடுத்த இரண்டு நிமிடத்தில் ஷர்மிளா அவனின் கேபினில் இருந்தாள். சிறு மெச்சுதலாக பார்த்தவன் மிக மெல்லிய நகையை உதட்டில் எட்டாதவாறு பேச தொடங்கினான். “மிஸ் ஷர்மிளா, டுமாரோ தான கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு இருக்கோம், ஒன் சேன்ஜஸ் ஆன் தட் ப்ளான். நானும் போக போறேனு காலேஜ்ல இன்பார்ம் பண்ணிடுங்க, ஏன்னா இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்னு அல்ரெடி சொல்லிருக்கேன்ல. சோ ஐ நீட் டு மானிட்டர் தி ஸ்டூடண்ட்ஸ பெரமார்மன்ஸ்” என்றால். ஷர்மிளாவிற்கு மயக்கம் வராத குறை தான், ஏனெனில் ஆதி தன்னிலை விளக்கம் சொல்வது இதுவே முதல் முறை. எந்த பதிலும் இல்லாது போகவே “என்ன” என்பது போல் தனது மேனரிஸமான வலது புற ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கினான். சடுதியில் தன்னை மீட்டு கொண்டவள் “காட் இட் சர், வில் இன்பார்ம் டு தி காலேஜ்” என்று வெளியேறியவள் உடனே தகவலும் குடுத்தாள் சிறு குழப்பத்தினூடே.


“ஹேய் தீக்ஷாஷாஷா” என்றாவாறே பிரசங்கமாள் யாழினி மூச்சு வாங்க..

“ஏன்டி இப்டி கத்துற,இந்தா தான இருக்கேன் நானு” என்றாள் கடுப்புடன். பின்னே எல்லோரும் இன்னும் சில மணி துளிகளில் நடக்கவிருக்கும் இன்டர்வியுவிற்கு படித்து கொண்டிருக்க இவள் மட்டும் சுத்தினால். “ஏன்டி, படிக்காம சுத்திட்டு வந்து என்னையும் உயிர வாங்குற, கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா, ஆனா வேலை மட்டும் வேணும்னு கதறு, சொல்லி தொல எதுக்கு கூப்டனு” என ஏகத்துக்கும் பொரிந்தாள்.

“இல்ல டி, இன்னைக்கு இன்டர்வியூக்கு அந்த எம்.டி ஆதியே வந்துருக்காரு. என்ன ஹான்ட்சம் தெரியுமா, சும்மா ஹீரோ மாதிரி இருக்காரு,ஆனா ஆளுதான் சிடுமூஞ்சி போல, மருந்துக்கும் சிரிப்பு இல்ல, அங்க வேலை மட்டும் கிடச்சா போதும், லைஃப் செட்டில் ஆகிடும்” என்றாள்.

“அந்த மகராசன் ஆளு எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை கிடைச்சிடனும்” என பெரு மூச்சு விட்டாள் தீக்ஷா. “ஏன்டி நாங்க தான் கவலைப்படனும், வேலை கிடைக்கனும்னு, நீ ஒரு வார்த்தை சொன்னா உங்க அப்பா உனக்குனு சொந்தமா கம்பெணி வச்சு குடுத்துருவாறு. நீயே நூறு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம், நீ என்னனா எங்கள மாதிரி முட்டிட்டு படிச்சுட்டு இருக்க” என்று யாழினி கேட்டாள்.

ஆம், தீக்ஷாவின் தந்தை பெயர் சொல்லும் பெரிய பணக்காரர். பல கோடிகளுக்கு சொந்தக்காரர். மகளிடமும் பல முறை சொல்லி விட்டார் தன்னுடன் தொழிலை படிப்பு முடிந்தவுடன் பார்க்கும் படி. அவள் தான் படிப்பு முடிந்து இரண்டு வருடம் வேறு கம்பெணியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும் என்று. ஏனெனில் அவளின் எண்ணப்படி தந்தையின் தொழிலில் இருந்தால் கண்டிப்பாக கற்றுக் கொள்ள முடியும் தான், ஆனால் அதை விட கடமை தான் இருக்கும். இதேது வேறு கம்பெணி என்றால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் அந்த சூழ்நிலையில் என்பதே அவளின் எண்ணம்.


“சரி டி, இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லாரையும் வி-1 லேப்(lab) அங்க வர சொல்லிருக்காங்க. போகலாம்” என்றவாறு ஐ.டி கார்டை மாட்டிக் கொண்டு நகர்ந்தனர்.


எல்லோரும் முதல் சுற்று திறனாய்விற்கு அம்ர்ந்திருந்தனர். மொத்தம் முந்நூறு மாணவர்களில் இருந்து இறுதி சுற்றில் நூறு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று ஆதி முடிவு செய்திருந்தான். எனவே முதல் சுற்றில் 200 மாணவர்களும், இறுதி சுற்றில் நூறு மாணவர்களும் என பிரித்திருந்தான்.


கல்லூரியில் ஒரு ஹாலில் தேர்வும், மற்றொரு ஹாலில் ஆதி,கல்லூரி முதல்வர், மற்றும் சிலரும் இன்டர்வியுவை மானிட்டர் பன்னுவதற்கென்று ஏற்பாடு செய்திருந்தனர். ஏனெனில் ஆதி தான் அனைவரையும் நேரிடையாக மானிட்டர் பண்ண வேண்டும் என கூறியிருந்தான்.


முதல் சுற்றும் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்று முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதில் தீக்ஷா,யாழினி,ரோஹித் உட்பட தேர்வாகினர். அடுத்த சுற்று ஜி.டி-யில் இருபது மாணவர்கள் ஒரு குழு என பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் ஐந்து தலைப்பு மாணவர்களிடமே குடுக்கப்பட்டு முடிவு செய்து பேச சொன்னனர். முதல் குழு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி
பேசினார்கள். அடுத்து குழுவில் தான் தீக்ஷா வந்தாள். முதலிலே அவளை ஆதி ஓரிரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு பின்பு என்ன நினைத்தானோ சிறு உதட்டு சுழிப்புடன் பார்த்தவன். அவர்கள் குழு EQ or IQ என்ற தலைப்பை தேர்வு செய்து பேச தொடங்கினர். அடுத்ததாக தீக்ஷா பேச ஆரம்பித்தாள். முதலில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் தெளிவான ஆங்கில உச்சரிப்பு, சிறிதும் பயம் இன்றி, ஒரு வித நிமிர்வோடு அழகாக பேச பேச அவளின் பேச்சில் மூழ்க ஆரம்பித்து விட்டான் மற்றவர்கள் முன்பு எதையும் காட்டிக் கொல்லாதவாரு. அவள் பேசி முடித்ததும் ஏதோ நினைத்தவனாக உதட்டோரம் மிக சிறு மந்தகாச புன்னகை தோன்றியது. அழகாக அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்தவன் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
------------------------------------------------------------

“ஹாய் அண்ணா,எப்டி இருக்கீங்க, என்னைய சுத்தமா மறந்துட்டீங்கல்ல, நா உங்க மேல செம்ம போவத்துல இருக்கேன். ஆனா உங்களுக்கு தேவையான விஷயத்த மட்டும் கேட்டோனே டீல்ல விட்டுடீங்க” என்று விட்டார் அழுது விடுபவள் போல் அண்ணனிடம் பேசினாள் வைஷ்ணவி.

அவளிற்கு அவள் அண்ணன் ராசு என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அவன் எப்ப பாரு வேலை வேலை என்று மட்டும் ஓடுபவன். ஆனாலும் வாரம் ஒரு முறையாவது தன் செல்ல தங்கையிடம் பேசி விடுவான். அடிக்கடி நேரில் பார்த்து விட்டும் வருபவன் சில காலமே நேரமின்றி ஓடுகிறான்.

“இல்ல வைஷூ குட்டி, உன்ன எப்டி டா மறப்பேன். லைட்டா பிஸிடா அதான்” என்றான். “சரி ண்ணா.. ஐஞ்சு வருஷம் மேல ஆச்சு நீங்க திருவிழாக்கு வந்து, இந்த தடவ கண்டிப்பா வரனும். ஊர்ல இருந்து நாங்க எல்லாரும் வெள்ளிக் கிழமை காலைல எல்லாம் வந்துருவோம். சோ நீங்களும் கண்டிப்பா வந்து எங்க கூட பத்து நாள் தங்கனும், எல்லாரும் வெளிய போய் ஜாலியா சுத்தலாம் ண்ணா” என்று கெஞ்சிக் மிரட்டினாள். “அவ்வளவு டேஸ் கஷ்டம் டா, பட் உனக்காக முயற்சி பண்றேன்” என்று கூறினான். “அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.

இங்கு ராசுவோ அவளின் அத்தை மகளினை பற்றிய கனவிற்கு சென்று விட்டான்.


“உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்”


பூக்கும்.
AIbEiAIAAABECIyVtLzZ5KGzswEiC3ZjYXJkX3Bob3RvKig1MmYxZDcxYmYzZmJhZWU3ZjI4NjRlYTBlNzFjYWMxZWU0ZjlmNGJkMAFqao23Bn5uJg6CXbVimfBqw4ENwA
ReplyForward
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top