JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகை பூவே - அத்தியாயம் 3

revathyrey04

New member
புன்னகை 3 :

“சொல்லுங்க மச்சான், எப்படி இருக்கீங்க…?” என்று தன் செல்ல தங்கையின் கணவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் தீக்ஷாவின் தந்தை மூர்த்தி.

“..............”,

“அப்படியா, இல்லையே”,

“...............”,

“சரி சரி பாப்போம் மச்சான் சீக்கீரம்”

“...............”,

“ஆமா கண்டிப்பா”,

“................”,

“உங்க தங்கச்சி வேலையா இருக்கா, நீங்க பேசுனதா சொல்லிடுறேன், சரி மச்சான் அப்ப வச்சிடுறேன்”,

என்று அணைக்கப்படும் சமயம் மாடியில் இருந்து துள்ளலுடன், கருப்பு நிற லாங் ஸ்கர்ட்டும், பேபி நிற சிறிய அளவில் கை வைத்த டீசர்ட்டும், கருப்பு மற்றும் அதே பிங்க் நிற டிசைனால் ஆன ஸ்கார்பை கழுத்தைச் சுற்றி அணிந்து இறங்கி வந்தாள் தீக்ஷா.

பால் நிறத்தில், நீள் வடிவ முகமும், தலை குளித்திருந்ததால் விருத்து விடப்பட்ட முடியும், சிறிதும் ஒப்பனை இல்லாத முகத்தில், ஐலைனரால் வைக்கப் பட்ட சிறு பொட்டும், பிறை நெற்றியில் சிறு கீற்றென அடர் சிவப்பு நிற குங்குமம், கழுத்தில் சிறிய தங்க சங்கிலி அதில் இதய வடிவ டாலர் அணிந்து, வலது கையில் ப்ரேஸ்லட் என தன் அருகில் அமர்ந்த மகளை பார்த்தவரின் முகத்தில், இவள் என் மகள் என்கிற கர்வமும், பெருமையும் ஒருசேர எழுந்தது.


“குட் மார்னிங் டாட், என்ன இங்க இருந்து லவ்ஸ் போல, அம்மாவை லுக் விட்டுட்டு இருக்கீங்க” என்றவாறு நான்கு பேர் அமரும் ஷோபாவின் இடதுபுற ஓரத்தில், கையில் தொலைபேசியுடன் அமர்ந்திருந்த தந்தையின் வலது புறம் உட்கார்ந்தவள் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள்.

“என்னடா குட்டிமா, சீக்கிரம் எழுந்துட்ட எங்கையும் வெளில போறியாடா” என்று சிறு நக்கல் சிரிப்புடன் கேட்ட தந்தையை கொலைவெறியுடன் பார்த்தாள். பின்ன நடு பகல் பன்னிரென்டை தாண்டி எழுந்து கீழே வந்த மகளிடம் கேட்டால்??

“உங்கட்ட என்ன டாட் சொன்னேன் நேத்து நைட், நாளைக்கு நான் யாழி கூட வெளிய போகனும், சீக்கிரம் எழுப்பி விடுங்கன்னு. ஆனா நீங்க என்னன்னா ஹாயா இங்க உட்கார்ந்துட்டு உங்க வொய்ஃப சைட்டு அடிச்சுட்டு இருக்கீங்க” என்றவாறு கோபத்தில் சிலிர்த்தெழுந்தாள்.

கையில் உள்ள தொலைபேசியை அருகில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மகளின் புறம் திரும்பினார். “குட்டிமா, நீ சொல்லி அதை நான் செய்யாம இருப்பேனா, இரண்டு தடவை வந்து எழுப்புனேன், நீ எழுந்துக்கல. அதான் சரி சண்டே தான, ரெஸ்ட் எடுக்கட்டும்னு வந்துட்டேன்” என்று சமாதானப் படுத்தினார்.

மீண்டும் தன் மடியில் படுத்த மகளை செல்லம் கொஞ்சியவாறே “என்னடா குட்டிமா,பைனல் இயர் வந்துட்ட, நெக்ஸ்ட் என்ன பன்னலாம்னு ஐடியால இருக்க, டாட் கூட பிஸ்னஸ் பாக்க வர்றியா, இல்ல பி.ஜி அப்லை பண்றியாடா” என்று கேட்டார்.

“டாட் சொல்ல மறந்துட்டேன், அடுத்த சேடெர்டே ADS groups ல்ல இருந்து தான் கேம்ப்பஸ் இன்டர்வியு வராங்க. அதுல செலக்ட் ஆகிட்டா எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்,அப்டியை கரஸ்ல மேனேஜ்மென்ட் படிக்கலாம்னு இருக்கேன், ஒரு டூ இயர்ஸ் வொர்க் பார்த்து நானும் கொஞ்சம் கத்துப்பேன்ல டேட்” என்று முடித்தாள். ஏதோ யோசித்தவராக “சரிடா, நீ டிசைட் பன்னிட்டா சரி” என்றார்.

சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யா கணவரை முறைத்தவாரு “ரொம்ப நல்லா இருக்கு, இருபத்தியொரு வயசாகிருச்சு, இன்னும் சின்ன குழந்தை மாதிரி கொஞ்சிட்டு இருக்கீங்க, அவளும் இப்ப தான் விடிஞ்ச மாதிரி எழுந்திருச்சு வரா”, என மகளை பார்த்து கூறினார் பாரதி தீக்ஷாவின் அன்னை.

தன் மகளின் அழகு முழுவதும் தன் தாயிடம் இருந்து வந்தது தான் என்பது போல், முகத்தில் மஞ்சள் பூசி,வீட்டில் வேலை பார்ப்பதற்கு ஏற்ப பருத்தி சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகி, இந்த வயதிலும் தெய்வீக அழகும்,சாந்தமான முகமுமாக இருந்த மனைவியை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணவரின் பார்வையை கண்டு லஜ்ஜையுற்றவராக, மனதிற்குள் நொடித்துப்போய் பாரதி பார்வையை திருப்பிக் கொண்டார்.


“சரி பாரு, சாப்பாடு எடுத்து வை,சாப்டுட்டு குட்டிமா கிளம்பட்டும்” என்று சொல்லி் கொண்டே எழுந்தார்.

ஞாயிறு மட்டும் காலை,இரவு உணவு சேர்ந்து உண்பது வழக்கம். பேசிக் கொண்டே உண்டு முடித்து எழுந்தாள் தீக்ஷா. “பை டேட், பை மாம்” என்றபடி கீ, மொபைல், மற்றும் சைடு பேக்கை அணிந்து,தன் ஸ்கூட்டி பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

தீக்ஷா, யாழினி, ரேஷ்மா, வினய், தருண் எல்லோரும் பள்ளியில் இருந்து நெருங்கிய நண்பர்கள். இதில் ரேஷ்மா தருண் மருத்துவ படிப்பையும், வினய் திருச்சியில் வேறு கல்லூரியில் கணினிப் பொறியியல் படிப்பையும் தேர்வு செய்தனர். தீக்ஷா,யாழினி மட்டும் கட்டிடப் பொறியியல் துறையை தேர்வு செய்தனர்.

ஏற்கெனவே சினிமா சென்று அடுத்து ஹோட்டல் போகலாம் என்று முடிவு செய்திருந்தனர். இன்று தீக்ஷாவினால் மூவி செல்லாமல் ஹோட்டல் மட்டும் சென்றனர். நண்பர்களுடன் இருக்கும் பொழுது அரட்டைக்கு பஞ்சம் ஏது?
“என்ன தருண், உன் ஆள் எப்படி இருக்கா?? “ என்று வம்பை ஆரம்பித்தால் ரேஷ்மா என்று கண் சிமிட்டி விஷம புன்னகையுடன் வினவ, “பேச்சு, நாமலே சொல்லலாம்னு நினைச்சோம், அதுக்குள்ள ஆரம்பிச்சு விட்டுட்டாலே இந்த பக்கி”என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். ஏனெனில் இது வரை எதையும் நண்பர்களிடம் மறைத்ததில்லை. தனது காதலை பற்றி நேரில் சொல்லலாம் என்று ஏற்படுத்தப்பட்டதே இந்த கெட் டு கெதர்.


தருண் நினைப்பை பொய்யாக்காமல் தீக்ஷா தருணை ரொம்ப பாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள். “அது வந்து தீக்ஷா, இது நேர்ல சொல்லி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கனும்னு தான்” என்று பாவம் போல் சொன்னான். கொஞ்சம் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தான். அப்புறம் பேச்சு வெவ்வேறு திசைகளில் திரும்பியது.

ஒரு வழியாக அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேறி ஷாப்பிங் முடித்து வீடு திரும்பினர்.


--------------------------------------------------------------


“DR industries”

என்று மிகப் பெரிய நுழைவாயிலை தாண்டி சுமார் இரண்டிற்கும் மேற்பட்ட ஏக்கர்களை கொண்ட தன் சொந்த சாம்ராஜ்யத்தில் ராஜ தோரணையுடன் தனது பென்ஸ் காரில் இருந்து இறங்கினான் தர்ஷன்.

சென்னை சிட்டியில் இருந்து பல மயில் கடந்து, அரசாங்க ஒப்புதலில், மிகத் தகுந்த பாதுகாப்பும் தனது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு, ஒரு வருட காலமாக உணவு,தூக்கம் என்பதை சரி நேரத்தில் எடுக்காமல், கர்ம சிரத்தையுடன் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சிமெண்ட் தயாரிக்கும் ஆலை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் மேற் பார்வைக்கு என அந்த துறையை சார்ந்த சிறந்த பொறியாளர்கள் என நியமிக்கப்பட்டு நடத்தி வருகிறான்.


தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் பாங்கு, அவனின் ஆளுமை, சிறு வயதிலேயே இமாலய வளர்ச்சி என அனைவரையும் பிரமிக்க வைக்கும் அவனின் தொழில் வளர்ச்சி. மார்க்கெட்டில் DR சிமெண்ட்டிற்கு எப்பொழுதும் டிமான்ட் தான். தரத்தில்,விலையில் என அனைத்திற்கும் பேர் போனது.

தர்ஷன் - எப்பொழுதும் ஃபார்மல்ஸ் அணிவது என்றால் வேப்பங்காய் தான். தவிர்க்க முடியாத தொழில் ஒப்பந்தத்திற்கு மட்டுமே நேர்த்தியான உடை. மற்ற நேரங்களில் ஜீன், கேஷூவல் சர்ட்டும் தான். இப்போதும் அதே போல் அடர் சிவப்பு நிற சர்ட்டும் அதில் மேல் சட்டை பட்டன் போடாமல் அதில் தன்னுடைய ரேஃபான் சன் க்ளாஸும், லைட் ப்ளூ நிற ஜீன், எப்பொழுதும் இருக்கும் அதே வசிகர புன்னகையுடன் தனது அலுவல் அறையை அடைந்தான்.



-------------------------------------------------------------
“சரி கம பத நி சொல்லித்தாரேன் ஒரு வாட்டி

சரியா கேட்டுட்டு பாடுவியா ஏ பாட்டி

கொடுக்கா புளிய பறிச்சு நா தொவையல் அரச்சு தாரேன்”

என தன் பாட்டி மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள பாட்டிகளை வீட்டு முற்றத்தில் உட்கார வைத்து அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் வைதேகி பாட்டியின் மகன்வழிப் பேத்தி ஷாலினி, பாட்டிக்கு ஷா வராதனால சாலுக்கண்ணு, இந்த வீட்டின் முதல் பெண் வாரிசு. விஸ்வநாதன் மற்றும் சசி அவர்களின் சீமந்தபுத்திரி.


“ஏன்டி எங்கள இந்த பாடு படுத்துற, உன்ன ஒரு மகராசன் கைல பிடுச்சு குடுத்தா தான் உன்ன அடக்க முடியும்,அந்த மகராசந்தேன் எங்க இருக்கானோ”என வைதேகி பாட்டி நொடித்துக் கொண்டார்.

“இந்தா கெழவி, இனிமேட்டா பிறக்க போறான், எங்க இருக்கானோ, என் கண்ணுல சிக்குறவர அந்த மகராசன்,பாவம்,சந்தோசமா இருந்துட்டு போவட்டும்” என கனவு உலகிற்கு சென்று விட்டாள். “எத்தனை வருடம் அவனை பார்த்து. இந்த தடவையாவது ஊருக்கு வருவானா?? அப்டியே வந்தாலும் நம்மல தெரியுமா?? நம்மட்ட பேசுவானா???” என தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து விட்டாள்.



“நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?”


பூக்கும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top