JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகை பூவே - அத்தியாயம் 7

revathyrey04

New member
புன்னகை 7:


நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு வாரத்தில் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் வை.வா என்ற நிலையில் அனைத்து மாணவர்களும் மிக பிசியாக தங்களின் ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தனர்.

“ஹே இன்னைக்காது நம்ம ரெகார்ட் சப்மிட் பண்ணனும் டி, இல்லனா அந்த சிடுமூஞ்சி வச்சு செய்யும். வேணும்னே எதாவது சொன்னாலும் கரெக்சன் பாக்க முடியாது, ஜஸ்ட் த்ரீ டேஸ் தான் இருக்கு, எப்டி முடிக்க முடியுமோ?? ” என்று யாழினி புலம்பிய புலம்பலில் கையில் வைத்திருந்த நோட்டில் நன்றாக மொத்தி எடுத்து விட்டாள் தீக்ஷா.

பின்னே ப்ராஜெக்ட் என்ற பேர் வழியில் நன்றாக ஊர் சுற்ற வைத்து விட்டு இப்போது புலம்பினால்.

“இப்ப என்ன சொன்னேனு அடிக்கிற” என்று சிறு குழந்தை போல் உதட்டை பிதுக்கி சினுங்கினாள்.

“உடனே சினுங்காத டி, டுடே முடிச்சிடலாம், அதான் நானும் கூட இருக்கேன்ல, விடு பார்த்துப்போம். இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் இவங்களை எல்லாம் பார்ப்போமானு கூட தெரியல” என்று மும்முரமாக முடித்தனர்.

காலேஜ் வை.வா முடிந்து கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வும் முடியும் தறுவாயில் உள்ளது. இதோ இதுவே இறுதி தேர்வு என்ற நிலையில் தேர்வு அறையை விட்டு வெளியேறினர் மாணவர்கள்.

சிலர் இத்துடன் கல்லூரி முடிந்தது என சந்தோஷ நிலையிலும், சிலர் இனி இதே போல் ஒரு சூழல் அமையுமோ என்ற கவலையிலும், சிலர் அடுத்தது என்ன என்ற விடை தெரியாத கேள்வியோடும் அந்த கல்லூரி மைதானம்,கேண்டீன், என நிரம்பி இருந்தனர்.

அனைவரும் என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் அந்த ஸ்லாம் புக்கை எழுதி முடிக்காதவர்கள் இருக்க இயலாது. இப்போதும் அப்படி தான் யாழினி மற்றும் சில நண்பிகளும் அலும்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.


“சரி டீ போதும், என்னமோ கண் காணாத தேசத்துக்கு போக போற மாதிரி, எப்படியும் நெக்ஸட் மந்த் சேர்ந்து தான வேலை பார்க்க போறோம்” என்றவாறு பேச்சை தொடர்ந்தாள் தீக்ஷா. அவளுக்குமே இனி இதே கல்லூரி வாழ்க்கை கிடைக்குமா என கவலை இருக்க தான் செய்கிறது.


ஆனால் இது தன் வாழ்வில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலடி எடுத்து வைக்க போகும் தருணம் என மனதை தேற்றிக் கொண்டு அடுத்து தாங்கள் செல்ல போகும் டூர் பற்றிய பேச்சினை ஆரம்பித்தாள். சரியாக அது தற்பொழுது நண்பர்களின் கவனத்தை திசை திருப்பியது.

“வர்ற புதன் கிழமை நைட் கிளம்பினா வியாழன் இயர்லி மார்னிங் நம்ம உடுமல பேட்டை ரீச் ஆகிடுவோம், அங்க இருந்து ரெஃப்ரஷ் ஆகிட்டு தென் நம்ம ஜர்னிய ஸ்டார்ட் பண்றோம், டாட் நமக்கு ஒரு கைட் அரென்ஜ் பண்ணிருக்காங்க, அகெய்ன் சண்டே நம்ம திருச்சி வந்துருவோம்” என கூறி முடித்தாள்.


“அடுத்து திருச்சிய நல்லா சுத்த போறோம் ஜாலியா” என்று மற்றொரு நண்பன் கேட்டான். “யூ ப்யூபிள் வில் என்ஜாய், எனக்கும், யாழி க்கும் அடுத்து ரொம்ப இம்பார்டண்ட் வொர்க் இருக்கு, அடுத்து ஜாப்ல ஜாய்ன் பண்ற வரைக்கும் ” என கண்களில் ஒருவித கனவுடன் கூறினாள். யாழினி அறிந்த விஷயம் ஆதலால் தோழியை பார்த்து சிமிட்டினாள்.

“சரி ஜஸ்ட் ஒன் டே தான் இருக்கு, எல்லாம் பேக் பண்ணிக்கோங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்ப த்ரீ டேஸ் நல்லா என்ஜாய் பண்ண முடியும்” என்று அனைவரும் கிளம்பினர்.

-----------------------------------------------------------

நல்ல தூக்கத்தில் உதட்டில் சிரிப்புமாக கனவில் தன் கனவு நாயகனுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தன் முகத்தில் விழுந்த வெயிலின் உபயத்தால் கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் ஷாலினி.

கண்ணை திறக்கவும் எதிரில் இருந்த பாட்டியை முறைத்தவாறு எழுந்து அமர்ந்தாள். “ஏய் கிழவி உனக்கு ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியோ, இங்க வந்ததுல இருந்து என்னோட கால தூக்கமே போச்சு” என்று சத்தமாக கத்தி விட்டு “நல்ல கனவு வந்துச்சு, என் மாமா கூட, எல்லாம் இந்த கிழவினால” என்று திரும்ப போர்வையை இழுத்து போர்த்தினாள்.

அதை பார்த்து இன்னும் கடுப்பான பாட்டி “அடியேய், பங்குனி வெயில் பல்ல காட்டுது, இதுல இழுத்து போத்திட்டு தூங்குற, இன்னைக்கு உங்க சித்து வீட்டு கோவிலுக்கு போகனும்னு சொன்னல்ல, கிளம்பு, இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த வாயாடியும் அவ தம்பி காரனும் வந்துருங்க” என்று அறையில் இருந்து வெளியேறினார்.

தனக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சியை அறியாது குளித்து முடித்து டார்க் பர்பிள் நிற காட்டன் சுடிதார் அணிந்து, கோயிலுக்கு செல்வதால் தலையை அழகாக பின்னி அதில் மல்லிகை பூச்சூடி, துப்பட்டாவை வலது புறம் மட்டுமே ஃப்ளோட்டின் விட்டு அழகாக மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தாள்.


“ஷாலு… “ என்று வந்து கட்டிக் கொண்டாள் வைஷூ.

“எங்கள எல்லாம் நியாபகம் இருக்கா அம்மு” என்று குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். “மாமா…”என்று சிணுங்கியபடி வந்து வைஷூவின் தந்தை அருகில் அமர்ந்தாள். “உங்க மருமகளுக்கு நம்மலாம் கண்ணுக்கு தெரிவோமா, அத்த மகள பாத்தோனே கட்டிப்ப பிடிச்சிப்பா, அத்தய நியாபகம் இருக்குமா” என்று வந்தார் கலையரசி வைஷூவின் தாயார்.

“அத்த நீங்களுமா” என்று அத்தையிடம் செல்லம் கொஞ்சனாள். “சரி சரி நேரமாகுது, வெயில் ஏறதுக்குள்ள மலைல அங்க போய் சேரனும்” என்று பாட்டி அனைவரையும் கிளப்பினார்.

“நீங்களும் வாங்கனா கேக்க மாட்டேங்கிறீங்க, இங்க தனியா தான இருக்கனும், அப்பாவும் எங்க கூட கிளம்பிட்டாறு” என்றவாறே பொருட்களை காரில் ஏற்ற உதவினார்.

“எனக்கு வயசு திரும்புதாமா, என்னால எல்லாம் மலை ஏற முடியுமா, நீங்க போய்ட்டு வாங்க” என்றார்.

யுனோவா காரின் பின்புறம் வைஷூ மற்றும் ஷாலுவும், அதன் பின்புறம் கலையரசி மற்றும் அவரின் கணவரும், முன் சீட்டில் விஷ்ணு என அமர்ந்திருந்தனர். ஓட்டுனர் சீட் மட்டும் காலியாக இருந்தது.

அனைவரும் காரில் ஏறியும் இன்னும் தன் மூத்த மகனை காணாது “விஷ்ணு அண்ணன எங்க, ஏற்கனவே நேரம் ஆச்சு, இவன் வேற எப்ப பாரு அந்த போனவே காதுல வச்சிக்கிட்டு” என்று மகனை நினைத்து சலித்துக் கொண்டே விஷ்ணுவிடம் கேட்டார்.

“தெரியலம்மா, நா காருல ஏறும் போது போன் கால் வந்துச்சு, பேசிட்டே நடந்து போனாறு” என்று சொல்லும் போதே காரில் ஏறி இருந்தான். கலையரசி விஷ்ணுவிடம் மூத்த மகனை பற்றி கேட்கும் போதே இன்ப அதிர்ச்சியில், இனம் புறியாத படபடப்புடன் அத்தை மற்றும் மாமா முன் எந்த விதமான முக மாறுதலையும் காட்ட இயலாது அமர்ந்திருந்தாள்.

“அத்தான் வந்துருக்காங்கனு இந்த வைஷூ கூட சொல்லவே இல்ல, இருக்கு அவளுக்கு” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆமா அவ கிட்ட நீ போய் சொன்னியா இதுக்கு முன்னாடி, நா உன் அண்ணன லவ் பண்றேனு, சொல்லிருந்தேனா அவ உன்கிட்ட சொல்லிருப்பா” என்றது அவளின் மனசாட்சி.

“இன்னைக்கு கண்டிப்பா வைஷூ கிட்ட நா லவ் பண்றத சொல்லனும் “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதை கண்டு மனசாட்சி தலையில் அடித்துக் கொண்டது “கர்மம் கர்மம், லவ் பண்றத மொத உன் அத்தான் கிட்ட சொல்லு, அத விட்டுட்டு அத்த மக கிட்ட சொல்லுதான்” என்று.

அதற்குள் காரில் ஏறிய கலையரசி “எங்கடா போன, எப்ப பாத்தாலும் போன் தானா, சீக்கிரம் கிளம்பு டா, அப்ப தான் ஒன்பது மணிக்குள்ள அங்க போய் சேர முடியும்” என்றார்.

தூரத்தில் இருந்தே ஷாலுவை பார்த்து விட்டு அவளின் முன் தான் இருக்கும் போது முக மாறுதலையும் காண வேண்டும், தன்னை அடையாளம் கண்டு கொள்வாளா, தன்னை அவளிற்கும் விருப்பம் உள்ளதா என்று பல விதமாக யோசித்து தள்ளி நின்று கொண்டிருந்தான். அனைவரும் காரில் ஏறியும் சிறிது தாமதமாகவே வந்தான்.

அவனின் எண்ணங்களை பொய்யாக்காமல் சிறு எதிர் பார்ப்பும், சிறு அதிர்வு சுமந்த முகமும், கண்ணில் ஒருவித நிம்மதியுடனும் தன்னை பார்த்த அந்த ஓரிரு நிமிடங்களில் அவளின் முக மாறுதலை கண்டான்.

கலையரசி பேசுவதை எல்லாம் காதில் வாங்காது ரிவர்வியூ கண்ணாடியை சரி செய்யும் சாக்கில் அதில் ஷாலுவின் முகம் விழ வைத்து, அவளை பார்த்து வசிகர புன்னகையுடன் கண்சிமிட்டி காரை கிளப்பி திருமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர தூரத்தில் மேலூரை தாண்டி உள்ள பிரான் மலையை நோக்கி காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் தர்ஷன்.


“மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு”


பூக்கும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top