JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகை பூவே - அத்தியாயம் 8

revathyrey04

New member
புன்னகை 8:


திகைத்த நிலையில் அமர்ந்திருந்த ஷாலினியை ரிவர்வியூ கண்ணாடியில் கண்டவன் கண்சிமிட்டி விட்டு காரை கிளப்பியவன் கைகளில் சீறிப் பாய்ந்தது. தர்ஷன் தன்னுடைய சந்தோஷம், கோபம், அனைத்தையும் தன் காரின் வேகத்தில் தான் காண்பிப்பான்.

வைஷூவின் பேச்சில் தற்காலிகமாக தன் கவனத்தை செலுத்தினாள். ஆனால் ஓர விழிகளில் தர்ஷனை பார்த்து கொண்டிருந்தாள். இதை வைஷுவும்,தர்ஷனும் கண்டும் காணாமல் கவனித்து கொண்டு தான் இருந்தனர். ஓரளவிற்கு மேல் சோதிக்காமல் வைஷூ தான் அமைதியாக வேண்டியதாகியது.

ஒரு மணி நேர பயணம் முடிந்திருந்த நிலையில் கலையரசி “ராசு கொஞ்சம் கடை பக்கம் காரை நிறுத்து பா, நம்ம அங்க போக இன்னும் ஒரு மணி நேரம் மேல ஆகும், அப்பறம் கோயிலுக்கு மலைல ஏற ஆரம்பிச்சுட்டா சாப்ட இன்னும் நேரம் ஆகிடும்” என்று சொன்னதும் சிறு நிமிடத்தில் காரை நிறத்தினான்.

“அம்மா, இறங்கிக்கோங்க, இத விட்டு அடுத்து கடை கஷ்டம் தான், சரியான காடு” என்று தன் சித்தப்பாவை பார்த்து சொல்லிக் கொண்டே இறங்கினான்.

காரில் இருந்து இறங்கிய கலையரசி,வைஷூ,ஷாலு ஒரு புறமும் மற்றொரு புறம் கலையரசியின் கணவர்,விஷ்னு,தர்ஷன் அமர்ந்திருந்தனர்.

“உங்க தம்பி குடும்பம் கிளம்பிட்டாங்களானு கேட்டீங்களா, எங்க வராங்கனு கேளுங்க” என்றார். “பக்கத்து வந்துட்டாங்களாம், நம்ம அங்க போறதுக்குள்ள வந்துடுவாங்க” என்று கலையரசிக்கு பதில் அளித்து விட்டு அனைவருக்கும் சாப்பிட ஆர்டர் செய்தார்.

வைஷூவிடம் ஓரிரு வார்த்தை பேசியபடி காபியை அருந்திக் கொண்டிருந்த ஷாலுவை கண்டவன் விட்டால் தன் அத்தை மகள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்து “அம்மு, எப்டி இருக்க,காலேஜ் முடிய போகுதுல, அடுத்ததா என்ன பண்றதா ப்ளான் பண்ணிருக்க” என்றவாறு பேச்சை தொடர்ந்தான்.

“ஹான், நல்லா இருக்கேன் அத்தான், ஆமா, நெக்ஸ்ட் ஜாப் தான் போகனும், இல்லனா மாஸ்டர் டிகிரி போடனும்” என பதில் அளித்து விட்டு பேச்சை தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி எப்பொழுதும் போல் பேச ஆரம்பித்தாள். அவளின் நேர் எதிரில் அமர்ந்திருந்த தர்ஷன் அவள் பேசும் போது காதணி அசைவும், இடையில் முன் நெற்றியில் விழும் முடியை காதோதரம் ஒதுக்கிய பாங்கும், எதார்த்தமாக தன்னை பார்ப்பதும், தான் பார்ப்பது தெரிந்தவுடன் சட்டென தன் நுனி நாக்கை கடிப்பதும் என அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தும் பார்க்காத படியும் ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் காரை கிளப்பியவன் அடுத்த ஒரு மணி நேர பயணத்ததை குறைத்து விரைவில் பிரான் மலையை அடைந்தனர்.

“அப்பாடா எவ்வளவு பெருசுசு… .இதுல தான் நம்ம ஏறனுமா” என்று தன் விழிகளை அகல விரித்தாள் ஷாலினி. விவரம் தெரிந்து அவள் வரும் முதல் தடவை இது தான்.

“ஹையோ கொல்றாலே, உன்னய யாருடி இவ்வளவு அழகா இருக்க சொன்னது??” என்று இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டாயிரம் தடவை கேட்டிருப்பான்.

“ஆமா டா, பார்க்க தான் பெரிசா இருக்கும் ஆனா ஏறும் போது ஒன்னும் தெரியாது,நீ இப்ப தான முதல் தடவை வர. இந்த கோயில்ல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா, நம்ம கோயிலயும் தாண்டி மேல தர்கா இருக்கு, இங்க ஹிந்து வரத விட முஸ்லிம்ஸ் தான் நிறைய வருவாங்க, வந்து நைட் தங்கிட்டு மறு நாள் தான் கிளம்புவாங்க, அப்படி அவங்க தங்குறப்போ என்ன நினைச்சு அவங்க வேண்டிக்கிறாங்களோ அது கண்டிப்பா நடந்துருக்குனு சொல்வாங்க” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் கலையரசியின் கணவர்.


தன் மாமா சொல்வதை கேட்டுக்கொண்டே சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். பச்சை பசேல் என்று வளர்ந்து இருந்த மரங்களும், பத்து அடி தூரம் மட்டுமே சிமெண்ட் போடப்பட்ட படிகளும், அதனை அடுத்து மலை ஏறுவதற்கான பாதை தொடங்கியது. பின்புறம் திரும்பியவள் சிறு பிள்ளை போல் குதூகலித்தாள். “ஹை யா, எவ்வளவு மாங்காய் மரம், தென்னை மரம், செம்மையா இருக்குல” என்று பேசியவாறே திரும்பினாள்.


காரில் இருந்து இறங்கியவன் வலது காலை கீழே ஊன்றி இடது காலை சாய்வாக வலது காலின் புறம் ஊன்றி, கைகளை மார்பின் புறம் குறுக்காக கட்டிக் கொண்டு பார்த்து கொண்டிருந்தான் தரஷன்.

ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவள் மறுநிமிடமே சகஜ நிலைக்கு திரும்பி, “அங்க போகலாமா, அதான் இன்னும் மாமா எல்லாரும் வரலைல அத்தை” என்று கலையரசியிடம் கேட்டாள்.

“இல்லடா அவங்க பக்கத்துல வந்துட்டாங்க, நம்ம மூணு மணிக்கு எல்லாம் கீழே இறங்கிடுவோம், அதுக்கு அப்பறம் போகலாம்” என்று சொல்லும் போதே வைஷூ தர்ஷனை நோக்கி கண் காட்டினாள். முதலில் புறியாமல் இருந்தாள் புறிந்தவுடன் தர்ஷனிடம் சென்று நின்றாள்.

“அத்தான் அங்க போகலாமா ப்ளீஸ், நீங்க சொன்னா மாமா கண்டிப்பா நோ சொல்ல மாட்டாங்க” என்று கண்ணை சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்கும் போது மாட்டேன் என்றா சொல்வான். அவள் அழகில் மயங்கி இருந்தவன், காரில் ஏறியதில் இருந்து யாரோ ஒருவரை போல் தயக்கத்துடன் இருந்த பொழுது மனம் சிறிது இருந்த சுனக்கம் இப்பொழுது மறைந்தது.


“மேடத்துக்கு இப்ப தான் இந்த அத்தான் கண்ணுக்கு தெரிரேனா” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறங்கினான். அதற்கு பதில் சொல்லாமல் தலை குனிய போனவளை “அம்மு என் கிட்ட பேசுறதுக்கு என்ன தயக்கம்” என்று கேட்ட நொடி சடாரென நிமிர்ந்தாள்.

“சரி சரி முழிக்காத,எப்பயும் போல இரு அம்மு, எவ்வளவு வயசு வந்துட்டாளும் நா உன்னோட அத்தான் தான், நீ என்னோட அத்தை மகள் தான்” என்று சொன்னான். ஏதோ அவள் தன்னிடம் காட்டும் தயக்கம் பிடிக்கவில்லை.

“கீழ இயங்கும் போது கண்டிப்பா போகலாம், அதுக்கு நான் கேரண்டி” என்றான்.

இங்கு இவர்கள் இருவரையும் கவனித்து கொண்டு இருந்த கலையரசியின் கணவர் “என்னவாம் நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், உன்னோட பெரிய மகன் பார்வையே சரி இல்லையே, அம்முவ பார்வைலையே முழுங்கிடுவான் போல, இந்த வாலஉ வாலு என்னனா இவன பார்க்குறதுக்கு முன்ன நல்லா இருந்துச்சு, இப்ப பேய் அடுச்ச மாதிரி ஒரு தினுசா இருக்கு” என்று கலையரசியிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார்.

“நீங்க வேற சும்மா இருங்க அவனுக்கு பாம்பு காது, அப்பறம் உங்கள விட மாட்டான்” என்று சொல்லும் போதே
ஷாலுவிடம் பேசியபடி சித்தப்பாவின் அருகில் வந்தவன் “என்ன ம்மா உங்க லவ்ஸ் இங்கயுமா, கோவில்ல வச்சு ரொமான்ஸ் அதும் பக்கத்துல பிள்ளைங்க இருக்கும் போதே” என்று வம்பை தொடங்கினான்.

“நான் சொன்னேன்ல இவன் கிட்ட மாட்டுனா ஏடா கூடாமா பேசுவானு, அனுபவிங்க” என்பது போல் பார்வையை செலுத்தியவர் காரில் இருந்து பொருட்களை எடுக்கும் சாக்கில் அகன்றார்.

“ஏண்டி இந்த அத்தான் இப்டி மாமாவ பேசுறாரு, அதும் எல்லாரையும் வச்சிக்கிட்டு” என்று வைஷூவின் காதை கடித்தாள் ஷாலு.

“விடுடி சும்மா ஜாலிக்கு தான, அப்பா இதெல்லாம் கண்டுக்க மாட்டாரு” என்று பேசும் பொழுதே சர்ரென ஒரு கார் இவர்களின் அருகில் நின்றது.


காரில் இருந்து இறங்கிய ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆணும், அவரை விட சில வயது குறைவுள்ள ஒரு பெண்மணியும் இறங்கினர்.


“என்ன அண்ணா ரொம்ப நேரம் ஆகிடுச்சா” என்றபடி இறங்கியவர் கலையரசியின் கணவர் ராஜசேகரின் தம்பி . அவரை தொடர்ந்து வந்த அவரின் மனைவியும் “நல்லா இருக்கீங்களா மாமா, அக்கா” என்று வந்தவரின் கண்கள் ஷாலினியை அளந்தது.

அவரின் பார்வையை புரிந்து கொண்டவர் “இது என்னோட அண்ணா மக, லீவுக்காக வந்துருக்கா, நீங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது பார்த்துருப்பீங்க” என்று பதில் அளித்தார் கலையரசி.

இறுதியில் காரில் இருந்து இறங்கினான் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க அழகான இளைஞன். “என்னடா அங்கயே நின்னுட்டு இருக்க, வா” என்று தன் மகனை அழைத்தார். இறங்கி வந்தவனின் பார்வை ஷாலு மேலே படிவதை உணர்ந்த தர்ஷன் எழுந்த கோபத்தை கட்டுப் படுத்த இயலாது, “வைஷூ, அம்மு வாங்க, நாங்க முன்னாடி நடந்துட்டு இருக்கோம் வாங்க ம்மா நீங்க” என்று நடந்தான்.

“இவன் வருவாங்கனு எனக்கு தெரியாதுடி, ஒரு அண்ணன் மாதிரியா இருக்கான்” என்று வைஷூவும் முன்னால் நடக்க தொடங்கினாள்.

இன்னும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளை “அம்மு உனக்கு தனியா வேற சொல்லனுமா வா போகலாம்” என்று கையை பிடித்தான்.

முதல் ஸ்பரிசம் பெண்ணவளை என்னவோ செய்ய மந்திரத்திற்கு கட்டு பட்டவள் போல் அவனுடன் நடக்க தொடங்கினாள்.

“ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்து விட்டாள் என்றாள் அந்த ஆணை விட அதிர்ஷ்டசாலி எவரும் இல்லை”


பூக்கும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top