• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

கண்ணன் என் மைந்தன் 4

கண்ணன் என் மைந்தன்

பகுதி 4

மதிய உணவுநேரம் முடிந்த பின் யாமினியும் வாணியும் அவர்கள் வேலையைj; தொடர்ந்தார்கள். யாமினியின் கண்கள் தான் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் இருந்தது.
ஆனால் நினைவு முழுதும் அர்ஜுன் மீது இருந்தது. பழைய கசப்பான வாழ்க்கை. அந்த வார்த்தைகளை அவனால் எப்படி சொல்ல முடிந்தது..
நான்கு வருடங்களுக்கு முன், அவர்களைக் கணவன் மனைவி உறவுக்கே எடுத்துக்காட்டு என்று எத்தனை பேர் வியந்து பார்த்திருப்பார்கள். அவ்வளவு ஏன் அவள் வீட்டில் உள்ள ஒவ்வொரு செங்கலுக்கு கூட இவர்கள் காதல் கதை தெரியுமே..
நினைவுகள் ஓடின.. தன் கணவன் அர்ஜுன் தோளில் சாய்ந்திருந்த யாமினியின் விரல்கள் அவன் நெஞ்சில் கோலமிட்டுக் கொண்டிருக்க.. அர்ஜுனும் அவளை இடையோடு அணைத்தவாறே..“சரி நாலு நாள் தான.. சமாளிச்சிடலாம்” என்றான்.
“என்ன.. நாலு நாள் தானவா.. நாலு.. நாள்..எப்படிடா உன்னைப் பார்க்காம இருப்பேன்”... என்று தன் கணவனிடம் கொஞ்சலாகக் கேட்க..
ஏன், ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க அம்மா வீட்டுல இருக்கல.. என்று அவன் கண்களில் குறும்புடன் கேட்க... ம்.. அது அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி. அப்ப உன்ன பார்க்கல..
ம்.. சரி அப்ப ஒன்னு பண்ணு..பேசாம கோவா டூர் கேன்சல் பண்ணி விடு.. நாம அப்புறமா போகலாம்.. இப்ப வேலையைப் பாக்கலாமா.. என்று தன் அணைப்பை இறுக்கினான்.
முடியாதே.. என்னை நம்பி அனிதா, ராகினி, ராஜி..எல்லாரும் பிளைட் டிக்கெட் போட்டாச்சே.. என்றாள் சோகமாக.

ம்.. தெரியுதுல.. அப்பறம் ஏன் புலம்புற என்றான் அர்ஜுன். ம்..போடா.பொண்டாட்டி ஊருக்கு போறாளே.. கொஞ்சமாவது கவலை இருக்காடா உனக்கு..என்றாள் செல்லக் கோபத்துடன்.
ஆமா. இப்ப நல்லாதான் பேசுவ.. அப்புறமா நான் எங்காவது என் ஃப்ரன்ட்ஸ் கூட ட்ரிப் போயிட்டா.. நீ மட்டும் உன் ஃப்ரன்ட்ஸ் கூட போயிட்டு.. என்னை மட்டும் போக விடலைன்னு வருஷம் முழுக்க புலம்புவ, எனக்குத் தேவையா..
ஐயையோ..காலைல 7 மணிக்கு ஃப்ளைட். இப்பவே லேட் ஆகிடுச்சு.. நாலு நாள் உன்னைப் பிரிஞ்சி இருக்கப் போற. கணக்க வேற சரி செய்ய வேண்டியிருக்கு.. என்று அவளைப் பேச விடாமல் போர்வைக்குள் இழுத்து.. அவன் வேலையை தொடங்கினான்.
ம்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று அவள் புலம்பல் அவனுக்கு கேட்டதாகவே தெரியவில்லை.
மறுநாள் காலை. அவளை ஏர்போட்டில் அவள் தோழிகளுடன் கோவாவிற்கு வழியனுப்பி வைத்தான். ஒரு பெரிய ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்ததால் ஒரு பிரேக் வேண்டும் என்று அவர்கள் டீமில் உள்ள பத்து பெண்களுமாக போட்ட ட்ரிப் தான் இந்த கோவா பயணம்.
அனைவரும் கோவா வந்து இறங்க.. பச்சைப் பசேலென்ற மரங்களும்.. செடிகளும் தெளிவான கடற்கரையும்.. மாசு மருவற்ற சுத்தமான காற்று.. என கோவா என்றால் அனைவரும் மயங்குவதற்கான காரணம் புரிந்தது.
இரண்டு டாக்ஸியில் யாமினி தன் தோழிகளுடன் அந்த அழகான ரிசார்ட்டை வந்தடைந்தாள். அங்கு பத்து பேர் தங்குவதற்காக ஐந்து டீலக்ஸ் அறைகளை எற்கனவே பதிந்து வைத்திருந்தார்கள்.
அந்த ரிசார்ட்டை ஒட்டியே கடற்கரையும் இருந்தது.. அங்கு தங்கி இருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவராக இருந்தனர். ஜோடி ஜோடியாக அவர்கள் உடையைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வெறும் பிக்கினியில் சுத்த.. யாமினிக்கும் அவள் சகாக்களுக்கும்.. அது கண் கொள்ளா காட்சியாகிப் போனது.

கூலிங் கிளாஸ்.. குட்டை பாவாடை.. ஜீன்ஸ்.. டாப்ஸ்..ஸ்லீவ் லெஸ்.. முக்கா பேன்ட்.. லெக்கிங்ஸ்.. என்று கோவாவிற்கு ஏற்ப உடை அணிந்து கொண்டார்கள். கேலி பேசியும்.. அரட்டை அடித்தும்.. சந்தோஷமாக ஊரைச் சுற்றத் தொடங்கினர்.
முதல் நாள் கடற்கரைகளுக்குச் செல்ல.. தண்ணீரில் நீந்தி விளையாடினார்கள். கரையோரத்தில் பரப்பி இருந்த அந்த கடல் மண்ணில் எந்த குப்பையும் இல்லாமல் சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது. அங்கு போடப்பட்டிருந்த நிழற்குடை... சாய்வு நாற்காலி.. மணலில்.. பெருவாரியான வெள்ளையர்கள் படுத்து சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஏய் ராஜி.. அனிதா.. வாங்க எல்லாரும் எதாவது கேம் விளையாடலாம் என்று யாமினி அழைக்க..
ஓகே கேள்ஸ் லெட்ஸ் ப்ளே வாளிபால்... என்று இரு குழுக்களாக பிரிந்து விளையாடத் தொடங்கினார்கள்.
உற்சாகமாக அனைவரும் விளையாட.. யாமினி புறமாக வந்த பந்து.. அவளைக் கடந்து ஓட.. யாமினி பந்தை எடுப்பதற்க்காக சிறிது தூரம் ஓட வேண்டியதாயிற்று.
ஆனால் பந்து ஓடிச் சென்று நின்ற இடம் தான் வம்பான இடம் ஆகிப்போனது. அங்கு ஒரு காதல் ஜோடி ஒன்றோடு ஒன்று இணைந்து பினைந்து இருந்தார்கள். அவள் இதழ்களை அவன் இதழ்களால் பூட்டி காதல் பாடம் நடத்திக் கொண்டிருந்தான்.
யாமினிக்கு கூச்சம் தின்றாலும் அவர்கள் அறியாமல் பந்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஹேய்.. யாமினி.. ஒடி வா என்று தோழிகள் அழைக்க.. யாமினிக்கு அந்த முத்தக் காட்சி தன் கணவனை தவறாமல் நினைவு படுத்தியது.
ஏய் என்னடீ.. அங்க நின்னு வேடிக்க பார்த்துட்டு இருந்த.. என்று அனிதா சீண்ட..ஏய் அது வேற ஒன்னும் இல்ல.. அந்த வெள்ளக்காரன் எப்படி முத்தம் கொடுக்குறான்.. அர்ஜூன இன்னும் பெட்டரா எப்படி ட்ரெயின் பண்ணலாம்னு பார்த்திருப்பா.. என்று ராஜி வார..

ஏய் போங்கடீ.. என் அர்ஜுன் இதவிட சூப்பரா கொடுப்பான்.. இது எல்லாம் என்ன பிரமாதம்..என்று யாமினி பதிலடி கொடுக்க..
ஓ...ஹோ.. என்று அனைவரும் ஒரே குரலாக ராகம் பாட.. அங்கு கேலிக்கும் அரட்டைக்கும் பஞ்சம் இல்லாமல் பொழுது சென்றது.
யாமினிக்கு தான் அவ்வப்போது அர்ஜூனின் நினைவு வந்து கொல்லும். ஆனால் மறுநாள் ஸ்கூபா டைவிங்..ஸ்னார்க்லிங்.. என்று தண்ணீர் விளையாட்டுகளில் தோழிகளுடன் முழு மனதாக மூழ்கிப் போனாள். மூன்றாவது நாளும் கேளிக்கை.. கொண்டாட்டம் என்று கிடு கிடு வென்று ஓடியது.
அன்று இரவு ரிசார்ட்டில் தங்கி இருப்பவர்களுக்கு என்று ஒரு பார்ட்டிக்கு அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். அனைவரும் அதற்கு ஏற்ற உடையணிந்து ஜொலித்துக் கொண்டு வந்தார்கள்.
வண்ண வண்ண விளக்குகளும் பாட்டும்..அறுசுவை உணவும்.. டிஸ்க்கோ.. என்று பார்ட்டி களைகட்டியது.
தோழிகள் மும்முரமாக ஆடிக்கொண்டிருக்க..யாமினிக்கு தன் கணவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அந்த இரைச்சலில் இருந்து விலகி கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினாள். ஏனோ அர்ஜுன் நம்பர் கிடைக்கவே இல்லை.
காலையிலிருந்து போன்ல ஒரு மிஸ்டு கால் கூட இல்லை.. என்ன புருஷன் இவன் என்று மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தாள்.
ஏதோ நினைப்பில் சூப்பர் டீலக்ஸ் ரூம் பக்கம் சென்று விட்டாள். ரிசார்ட் என்பதால் ஒவ்வோரு காட்டேஜும் தள்ளித் தள்ளி இருக்க.. ஆள் இல்லாத பகுதிக்கு வந்து விட்டோமே.. என்று பயத்தில் அவள் நெஞ்சுக்குள் சில்லிட்டது.
இங்கிருந்து உடனே சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து வேக நடையிடப் போக, அப்போது இரு கைகள் அவளை அந்த இருட்டு அறைக்குள் இழுக்க கதவும் பூட்டப்பட்டது.

அந்த வலிய கரங்கள் அவளைப் பின்னிருந்து அணைக்க.. அந்தக் கைகளின் ஸ்பரிசம் யாமினிக்கு புரிய.. “அர்ஜுன்” என்றாள் மெல்லிய குரலில்..
அவள் அர்ஜுன் என்றதும் அந்த இருட்டு அறைக்குள் வெளிச்சம் பரவ.. அர்ஜுன் அவள் எதிரில் சிரித்துக் கொண்டிருந்தான். அவளும் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருக்க..கணவனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
ஏய் எப்படிடீ.. நான் தான்னு கரெக்டா கண்டுபிடிச்ச.. என்று தன்னவளின் இடுப்பில் தன் கரம் பதித்து கேட்க.. என் புருஷன் பிடி எனக்குத் தெரியாதா..
ம்.. அது சரி.. என்று அவனைச் சீண்ட எண்ணியவள் அவனிடமிருந்து விலகி நின்று.. ம்ம.. நாலு நாள் இருக்க முடியலையா.. எதுக்கு இங்க வந்த.. என்று யாமினி இந்த முறை அதட்ட..
ம். நாலு நாள் இல்ல, ரெண்டு நாள் கூட நீ இல்லாம என்னால அங்க இருக்க முடியல.. என்று அவன் ஏக்கமாய் கூற.. யாமினிக்கு அவன் காதலில் உள்ளம் துள்ளிக் குதித்தது.
இருந்தும் அதை வெளிக் காட்டாமல்.. ஆறுமாசத்துக்கு முன்னாடி இருந்தீல என்று அவள் திருப்பிக் கொடுக்க.. ம்.. அது அப்ப.. இப்ப இந்த ராட்சசி என்ன அப்படி மயக்கி வச்சிருக்கா என்று அவள் கன்னங்களை தாபத்துடன் வருடினான்.
பின் தன் தோழிகள் இருப்பது நினைவு வர..அவனிடமிருந்து விலகி.. சரி சரி நான் போறேன்..என் ஃப்ரன்ட்ஸ் தேடுவாங்க.. பை என்று யாமினி கிளம்பப் போக..அவள் பாதையை மறைத்து.. அடிப்பாவி.. கஷ்டப்பட்டு பிளைட் பிடிச்சு.. உனக்காக சூப்பர் டீலக்ஸ் ரூம் போட்டு இருக்கேன்.. நீ ஃப்ரெண்ட்ஸோட போறியா..என்று அவளை பூப்போல தன் கைகளில் தூக்கிக் கொண்டான்.
அர்ஜுன்.. விடு என்ன.. ஐயோ ப்ளீஸ் அர்ஜூன் என் தோழிகள்லாம் என்ன ஓட்டியே கொல்லுவாங்க என்று யாமினி சினுங்க..

வாங்கிக்கோ..அதோட பெருமையா சொல்லிக்கோ..இந்த ஆறடி ஆம்பளைய.. என் பின்னாடியே வர வைக்கிற மாதிரி அப்படி மயக்கி வைச்சிருக்கேன்னு என்று எடுத்துக் கொடுத்தான் அவள் காதல் கணவன்.
ஒவ்வொரு நிமிடமும் அவளுக்காக ஏங்கியவன்.. இன்று அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையே கசப்பான வாழ்க்கை என்கிறான். அதைவிட அன்று இரண்டு நாள் கூட அவளை விட்டு இருக்க முடியவில்லை என்று தவித்தவன்.. இன்று ஒன்றரை வருடம் கழித்து..அவளை சந்தித்ததும்.. அவளிடம் பாராமுகம் காட்டுகிறான். காலம் ஒரு நாள் நிச்சயம் மாறும். அர்ஜுன் அவள் மனதை விரைவில் புரிந்து கொள்வான் என்று மனதுக்குள் பலமுறை சொல்லிக் கொண்டாள்.

தொடரும்.
 
asasa11
asasa11

Members online

No members online now.
Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}