JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கயல் விழியால் சிறை பிடித்தாள் 2

பகுதி 2
“ஜனனி நீ நிஜமாகத்தான் சொல்றியா? இப்படி ஒரு பையனை கட்டிக்க உனக்கு சம்மதமா?” என்று விஜி அப்போதும் நம்பாமல் திரும்பக் கேட்க..

“விஜி.. கடவுள் என்னை ஏதாவது ஒரு வழியில் வந்து காப்பாத்த மாட்டாறான்னு நான் தவிச்சிட்டு இருக்கேன். இது கடவுள் தந்த வாய்ப்பாகத்தான் எனக்கு தோணுது. அது சரி விஜி. ஆனா இந்த விளம்பரம் கொடுத்தவங்களைப் பார்த்தா.. நம்மை மாதிரி மிடில் கிளாஸ் மாதிரி தெரியுது.!! இவங்க கிட்ட நாம எப்படி இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்க முடியும்.”

“ம்.. அது தான் இல்ல ஜனனி. உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா!!.. இந்த விளம்பரம் யார் கொடுத்தது தெரியுமா??.. எங்க ஹாஸ்பிடல் மேனேஜர். எங்க எம். டீக்காக யாருக்கும் தெரியாம ரகசியமா கொடுத்து இருக்கார். நான் வேலை பார்க்கிற ஜானகி மருத்துவமனையின் எம்டி மிஸ்டர் வாசுதேவன், கேள்விப்பட்டு இருக்கியா??

“ஆமா!! ஹாஸ்பிடல் விளம்பரங்களில் அவர் பெயர் பார்த்திருக்கேன். அவங்களுக்கு சென்னையில் மட்டும் இல்லாமல் மதுரை கோவைனு நிறைய ஊர்ல ஹாஸ்பிடல் கிளைகள் இருக்குன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.”

“ஆமா ஜனனி, அது மட்டும் இல்ல.. அந்த பையன் பேர்ல மட்டுமே பல கோடிகளுக்கு சொத்து இருக்கும்.”

“ஓ.. அப்ப தைரியமா இறங்கலாம்னு சொல்ற”

“ஆமா ஜனனி, அந்த பையனை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனா நிச்சயம் இந்த வாசுதேவன் வீட்டு பையன் தான். அவங்க வீட்ல எதோ ஒரு ரகசியத்தை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்காங்க. இந்த பையனைப் பற்றி எந்த தகவலுமே இது வரை வெளி வந்தது இல்லை.

இவ்வளவு நாளாக அந்த பையன் ஏதோ வெளிநாட்டுல இருந்து இருப்பான் போல. இப்ப அவனுக்கு கல்யாணம் பன்றதுக்காக இந்தியா கூட்டிட்டு வந்திருப்பாங்க போல..

அந்த பையனைப் பத்தின அத்தனை விஷயமும் அவ்வளவு மர்மமாக மறைச்சி வச்சிருக்காங்க.

“ம்!!.. அந்த பையன் ஒரு பெரிய குபேரன். அதாவது தங்க முட்டை இடும் வாத்து!!. அதுல எந்த சந்தேகமும் இல்லை. நீ மட்டும் இந்த விஷயத்தை சரியா டீல் செய்தால் நாம நினைச்சது நடந்திடும்!!. நீ என்ன சொல்ற”

“ம்.. நல்ல ஐடியா தான்!!.. ஆனா எனக்கு சில சந்தேகங்கள் உறுத்துதே!! அவ்வளவு பெரிய கோடீஸ்வரங்க அப்படின்னா அதைச் சொல்லியே அவங்க விளம்பரம் பண்ணி இருந்தா, பொண்ணுங்க நீ நான்னு போட்டி போட்டு வந்திருப்பாங்களே”!!..

“ஆமாண்டி நீ சொல்றது சரி தான்.. இவ்வளவு பெரிய கோடீஸ்வர பையன்னு தெரிஞ்சா.. நிச்சயம் நம்மள மாதிரி தேவை மற்றும் பெரிய வாழ்வு மேல ஆசை உள்ள நிறைய பெண்கள் சட்டுன்னு முன் வர தான் செய்வாங்க!!..

ஆனா அவங்க நோக்கம் அது இல்ல!!.. அந்த பையன் குறையைப் பெருசா
எடுத்துக்காம.. அவன் மேல களங்கம் இல்லாத அன்பைக் காட்டுற.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத பெண்ணை மட்டும் தான் எதிர்பார்க்கிறாங்க..

அதுக்காகவே இந்த விஷயத்தை முழுக்க முழுக்க ரகசியமா வச்சிருக்காங்க.

நம்ம மனசுல இருக்க திட்டம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா.. உடனே நீ ரிஜெக்ட் ஆகிடுவ! அவங்க கோபத்துல உன்னைய தாக்கக் கூட செய்யலாம். ஞாபகம் வச்சுக்கோ!!

“அப்ப அது ரொம்ப தப்புல விஜி!!. எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத் தானே செய்யுது.”

“ஏய் லூசு. இது அப்படி இல்லை. வெறும் காசுக்காக வர்ற பொண்ணா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.. அவ்வளவு தான். ஆக்சுவலா உன் தேவை காசு இல்லையே. நீ அந்த வீட்டுக்கு மருமகளாகி விட்டா உன்னோட இந்த அவசர தேவையை பூர்த்தி செய்வது அவங்க கடமை ஆகிடும்.

“ விஜி.. எத்தைத் தின்னா பித்தம் தெளியும்னு நான் அப்படி ஒரு நெருக்கடியில் இருக்கேன் தான்.. ஆனாலும் ஒரு நல்ல நிலையில் இருக்கிற பையனை ஏமாத்தி கல்யாணம் பண்ணினா கூட பரவாயில்லை.. ஆனா ஒரு குறையுள்ள பையனை ஏமாற்றுவது பாவம் இல்லையா??”

“இல்லவே இல்ல ஜனனி !!.. அவங்களோட ஒரே எதிர்பார்ப்பு என்ன தெரியுமா.. நீ அவனோட குறையை பெருசா எடுத்துக்காம அவனை முழு மனதோடு நேசிக்கணும். நீ அவனோடு கடைசி வரை கூடவே இருந்து.. உன் அளவற்ற அன்பை கொட்டி அவனை மகிழ்ச்சியா பார்த்துக்கணும்!!.. உன்னால அது பண்ண முடியும் தான???.. இல்ல உன் மனசுல அவன் குறை பெரிதாக உறுத்துதுன்னு நினைச்சின்னா.. இந்த ஐடியா வேண்டாம்!!.. நாம வேற எதாவது பிளான் பண்ணலாம்.”

“இல்ல விஜி!!… நான் அப்படிப்பட்டவள் இல்ல! நான் அந்த பையனோட குறைக்காக யோசிக்கலை!.. அந்த அப்பாவிப் பையனை ஏமாத்துறது தப்போன்னு என் மனசாட்சி குத்துச்சு!.. அவ்வளவுதான். நீ சொல்ற மாதிரி எல்லாம் சுமூகமா நடந்து.. அந்த பையன் என்னை ஒரு வேளை மனைவியா ஏத்துக்கிட்டா.. நான் நிச்சயம் அவனுக்கு ஒரு நல்ல துணைவியாக இருப்பேன்”

“ம்.. எனக்குத் தெரியும் ஜனனி !!.. உன் அளவில்லா அன்பு கிடைக்க அந்த பையன் தான் நிச்சயம் கொடுத்து வச்சு இருக்கணும்.”

“சரி விஜி!!.. நாம எப்படி இப்ப அவங்களை அப்ரோச் பண்றது.?”

“ம்.. நீ சம்மதம் சொல்லிட்டீல இனி வேலையில் தைரியமா இறங்கிடலாம். வர்ற வெள்ளிக்கிழமை வாக் இன் இன்டர்வியூ இருக்கு”

“அதெல்லாம் சரிதான் விஜி!!.. ஆனா என் தேவையோ ரெண்டு கோடி!!.. அவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிற அதிகாரம் அந்த பையனுக்கு இருக்குமா??”

“நிச்சயம் இருக்கு!!.. அவன் வெளிநாட்டுல என்ன வேலை பார்க்கிறான்னு தெரியல!. ஆனா அவன் கையில் கோடி ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாக புழக்கம். நல்ல திறமைசாலி!!. அந்த பையன் உன் கழுத்துல தாலி கட்டுனதும் உன் அன்பைக் கொட்டி அவனை லவ் பண்ணு.. உன் மேல அவன் பைத்தியமா இருக்குற மாதிரி மாத்து”

“எப்படிடீ.. தாலி கட்டுனதும் லவ்வு வந்திடுமா??.. என்று ஜனனி புரியாமல் விழிக்க..

“அதெல்லாம் வரும்!!.. நீ ஒன்னும் பொய் சொல்லி அவனை ஏமாத்தப் போறதில்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு ஜனனி !!.. உன் வசீகரமான முகச் சிரிப்பு எந்த கொம்பன் மனதையும் கரைய வச்சிடும். நீ அவன் கிட்ட கணிவா பேசி அன்பா நடந்துக்கிட்டா போதும். அவன் ஈசியா ஃபிளாட் ஆகிடுவான். அவ்னுக்கு உன் மேல முழு நம்பிக்கை வந்ததும்.. ஒரு நாள் திடீர்னு உட்கார்ந்து அழத் தொடங்கி விடு.. அவன் பதறிப் போய் எதுக்கு அழுகிறாய்னு கேட்டதும் உன் கதையைச் சொல்லு.. அவன் யோசிக்காம அடுத்த நிமிஷமே உன் கஷ்டத்தை தீர்த்து வச்சிடுவான்”.

“ம்.. கேட்கிறதுக்கு நல்லா தான் இருக்கு விஜி. ஆனா நான் அழுததும் ரெண்டு கோடியை ஜஸ்ட் லைக் தட் அவன் கொடுத்திடுவான்னு நீ சொல்றது தான் கொஞ்சம் நம்ப முடியாத மாதிரி இருக்கு”.

“நிச்சயம் உதவுவான் ஜனனி !! அவங்க அப்பா அதான் எங்க எம்.டியும் அவரு மனைவியும் தங்கமான குணம் கொண்டவங்க. அவங்க கூட இத்தனை பழகியதில் அவங்க குணம் நல்லா தெரிஞ்சு தான் நான் உன்னை இதில் தைரியமா இறக்குறேன்.”
“எனக்கு ஒரு சந்தேகம் விஜி.. இவ்வளவு பெரிய மருத்துவமனை உரிமையாளர் மகன் என்று தெரிஞ்சா போட்டி அதிகமா இருக்குமே.”
“இல்லை ஜனனி !!.. அங்க தான் உனக்கு யோகம் அடிச்சு இருக்கு. நீ அந்த மேட்ரிமோனியல் விளம்பரம் பார்த்தீல.. அதுல அவங்க பேரோ, மருத்துவமனை பேரோ.. எதையுமே குறிப்பிடலை!!.. அதனால் ஒரு வசதியான வாழ்க்கை எதிர்பார்க்கிற எந்த பெண்ணும் அந்த இன்டர்வியூ க்கு போக மாட்டா!!..
உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு, இந்த மாதிரி குறையுள்ள பையனை கையைப் பிடிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஒரு சில பெண்கள் தான் அந்த இன்டர்வியூக்கு போவாங்க. சோ உனக்கு காம்பெட்டிஷன் கம்மி.”
“ம்.. அது சரி விஜி!!.. இந்த விஷயம் உனக்கு மட்டும் எப்படி டீ தெரிஞ்சது??”
“சொல்றேன் விஜி!.. அது மட்டும் இல்ல.. அவங்க ஏன் அவங்க முகவரியை மறைக்கிறாங்க என்ற ரகசியத்தையும் உனக்கு சொல்றேன்”..
“ரகசியமா??.. என்னடீ புதிர் போடுற”.. என்று ஜனனி குழப்பத்துடன் கேட்க..
“ஆமா ஜனனி, அவங்க பின்னாடி பெரிய மர்மம் இருக்கு, என்ற விஜி முழு கதையையும் சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்டு முடித்த ஜனனியின் முகம் அப்போது தான் தெளிவானது.
அதன் பின் இரு பெண்களும் தயாராகத் தொடங்கினார்கள். ஜனனி என்ன உடை அணிய வேண்டும். என்ன பேச வேண்டும் என்று பெரிய பாடமே விஜி எடுத்து முடித்து இருந்தாள்.
அப்போது அந்த நட்சத்திர ஹோட்டலின் லிஃப்ட் மூன்றாவது தளத்தை எட்டி இருக்க..
ஜனனியின் இதயம் தாறு மாறாக துடிக்க ஆரம்பித்தது. அந்த அறையின் வாயிலை எட்டி இருந்தவள் மனம் ஒரு நிமிடம் பயத்தில் உதறியது. பேசாமல் திரும்பிச் சென்று விடுவோமா என்று மனம் தடுமாற.. அடுத்த நிமிடமே அவள் குடும்ப சூழ்நிலை நினைவு வர.. அவள் இதயம் மறத்துப் போனது .

இல்லை, இதில் எந்த தவறும் இல்லை என்று மனதுக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டவள், இப்போது எனது ஒரே குறிக்கோள் அந்த கவின் என்ற இளைஞன் என்னைப் பார்த்த உடன் மயங்கச் செய்ய வேண்டும். அவன் என்னைப் பார்த்த நொடியில் காதல் வயப்பட வைக்க வேண்டும். தோற்றத்தால் மட்டும் அல்லாது அவளின் கனிவான பேச்சில்.. இந்த ஒரே வாய்ப்பில் அவனை வீழ்த்தி விட வேண்டும், என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் தன் வறண்டு போன உதடுகளை தன் கைப்பையில் வைத்து இருந்த லிப் பாம் கொண்டு குளுமையாக்கியவள்.. தன் புடவையை சரி செய்து கொண்டு அந்த அறை கதவை மென்மையாக தட்டினாள்.

அந்த அறை கதவும் திறக்கப்பட்டது. கீழே ரிசப்சனில் அவளுக்கு பதில் சொன்ன அதே பெண்மணி தான் அந்த கதவைத் திறந்தாள். வாங்க மேம் சார் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன். ஆல் தி பெஸ்ட் மேம் என்று கிளம்பி விட்டாள்.

தேங்க்ஸ் என்று உள்ளே நுழைந்த ஜனனி அந்த அறையை பார்வை இட.. அந்த அறையில் டேபிள் சேர் இருக்க ஓர் ஆண் மகன் மட்டும் அந்த அறையில் இருந்தான்.

அவனைப் பார்த்த ஜனனி சற்று அதிர்ந்து தான் போனாள். விஜி அந்த கவினைப் பற்றி சொன்ன போது.. வாய் பேச முடியாத இளைஞன். அவனுக்கு ஆதரவாக வாழ வேண்டும் என்று சொன்னதால் ஜனனியின் கற்பனையில் ஒரு சாதுவாக அவள் உருவகப்படுத்தி இருக்க.. அங்கு நின்றதோ ஆறு அடிக்கு உயர்ந்து, பரந்து விரிந்திருந்த தோள்களைக் கொண்டு, ஊளைச் சதையே சற்றும் இல்லாத ஒரு கம்பீரமான ஆடவன்.

ஜனனிக்கோ அவனைப் பார்த்த நொடியில் உள்ளுக்குள் லேசாக உதறத் தான் தொடங்கி இருந்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், தன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு “குட் மார்னிங் சார்!!.. இன்டர்வியூக்கு வந்து இருக்கேன்” என்றாள்.

அப்போது ஜனனிக்கு விஜி சொன்ன வார்த்தைகள் நினைவு வர.. தன் முகத்தில் மென் புன்னகையை படற விட்டுக் கொண்டாள். அந்த மலர்ச்சி அவள் முகத்தில் வசீகரத்தை கூட்டத்தான் செய்து இருந்தது.

அந்த கவின் அவளையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்ன பார்வைடா சாமி இது..” என்று அவன் காந்தப் பார்வையைப் பொறுக்க முடியாமல் அவள் மனம் புலம்ப.. சும்மாவே இப்படி பார்க்கிறான்.. இதுல விஜி சொன்ன மாதிரி ஒரு ரொமாண்டிக் லூக் எல்லாம் வுட்டா என்ன ஆகிறது.. என்று எண்ணியவள் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“வாயில என்ன கொழுக்கட்டையா வச்சு இருக்கான்!!.. உட்காருன்னு சொல்லலாம்ல”.. என்று அவள் மைண்ட் வாய்ஸ் புலம்ப..

“அட ஆமால்ல.. அவரால தான் வாய் பேச முடியாதே” என்பது சட்டென நினைவு வர

அவள் எண்ணம் புரிந்தவனாய்.. அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன் அவளையும் உட்காறும்படி கை அசைத்தான்.

ஜனனியும் அமர்ந்து கொள்ள.. அவளுக்கு நினைவு வந்ததோ வாலி பட அஜித் தான். அந்த படத்தில் எப்படி அஜித் சூயிங் கம்மை மென்று கொண்டே தனக்கு வாய் பேச வராது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பாரோ.. அப்படித் தான் அந்த கவினும் தன் சைகையாலே அவளை பேச வைத்து இருந்தான்.

சார் நான் சென்னை கல்லூரியில் நர்சிங் முடிச்சிருக்கேன். சைன் லாங்வேஜ் கோர்ஸ் கூட முடிச்சிருக்கேன். ஐ கேன் ஈசிலி கம்யூனிகேட் வித் யூ. நான் உங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாகவும் லைஃப் பார்ட்னராகவும் இருப்பேன். உங்க முகத்துல இருக்க இறுக்கம் தளர்ந்து, புன்னகை பூக்க வைக்கிறது என் பொறுப்பு என்று மெல்லிய புன்னகை பூக்க தொடங்கினாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையையும், அவளது ஒவ்வொரு அசைவையும் அவன் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க..

ஜனனிக்குத் தான் மூச்சு முட்டியது. அவன் குறுகுறுக்கும் பார்வையை இன்னும் எவ்வளவு நேரம் சகிக்க வேண்டுமோ.. எப்போதுடா வெளியே போவோம் என்று இருந்தது.

“ ஏ லூசு.. இதுக்கே இப்படி சொல்றியே.. இவ்னோட இந்த பார்வையை கொஞ்ச நேரம் கூட பொறுக்க முடியவில்லைன்னா இவனை எப்படி வாழ்க்கை முழுக்க சகிச்சிக்க முடியும்” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்க..

கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனா கோடீஸ்வரன் ஆச்சே!!.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். என்று எண்ண..
அப்போது

“ஹவ்??” என்று ஒரு வார்த்தை மட்டும் அவள் காதில் விழ-. யாரும் புதிதாக அந்த அறைக்குள் வந்து விட்டார்களா என்று அவள் தலை நிமிர்த்தி சுற்றி பார்க்க, அங்கு யாரும் இல்லை..

“ம்.. சொல்லு எப்படி என் முகத்துல சிரிப்பை வர வைப்ப??என்று அவள் எதிரில் அமர்ந்து இருந்தவன் அதட்டிக் கேட்க..

ஜனனியின் கண்கள் விரிந்து கொள்ள.. “சார் உங்களால பேச முடியுமா??..என்று அவள் ஆச்சரியமாக கேட்க..

“ம்” என்று மட்டும் அவன் தலை அசைத்தான்.

“அப்ப நீங்க கவின் இல்லையா??”.. என்று ஜனனி அதிர்ச்சியுடன் கேட்க..

“நான் கவின் இல்ல!!.. பட் ஐ ஆம் செலக்டிங் ஃபார் ஹிம்!!.. இப்ப சொல்லு நீ என்ன பண்ணி கவின் முகத்துல ஸ்மைல் வர வைப்ப என்று அவன் கண்கள் இப்போதும் அவள் உதடுகளையும் அவள் கண்களையும் மட்டுமே குறுகுறுவென பார்த்து இருக்க..

ஜனனிக்கோ கோபம் தலைக்கு ஏறியது. இவன் தான் கவின் என்று அவன் பார்வையைப் பொருத்துக் கொண்டவளுக்கு அதற்கு மேல் சகிக்க முடியாமல் போனது.

“மிஸ்டர் நான் அதை உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் கவின் சாரை நேரடியாக சந்திக்கும் போது சொல்லிக்கிறேன். திஸ் இஸ் நாட் எ ஜாப் இன்டர்வியூ. இது ரொம்ப பெர்சனல் கொஸ்டின்”.. என்று அவள் முடிக்க..

“மிஸ் ஜனனி.. எனக்கு எல்லா உரிமையும் கொடுக்கப்பட்டு தான்.. நான் இந்த சீட்ல உட்கார்ந்து இருக்கேன். இங்க என் முடிவு தான் ஃபைனல் டெசிஷன். சொல்லு.. எப்படி என்னை ஸ்மைல் பண்ண வைப்ப ஐ மீன் கவினை!!” என்று அவன் அதிகாரமாக கேட்க..

ஜனனிக்கோ அத்தனை பொறுமையும் போய் இருந்தது. “ம்.. உன்னை மாதிரி கொடூரமாக முகத்தை வச்சிருந்தா.. கட்டிப் பிடிச்சு ஒரு லிப் லாக் கிஸ் கொடுத்து அவரு மூடை மாற்றுவேன் போதுமா!!”.. என்று ஜனனி பொறுக்க முடியாமல் பதில் கொடுக்க..

அந்த இளைஞன் முகமே அவள் பதிலில் சற்று அதிர்ந்து தான் போனது.

“திஸ் இஸ் டூ மச்!!..”

“எது சார் டூ மச்!!.. ஒரு மேரேஜ் டிஸ்கஷனுக்கு மாப்பிள்ளை வராம.. வெறும் மேனேஜரை விட்டிருக்காங்களே.. இது எப்படிப்பட்ட ஃபேமிலியாக இருக்கும்.?”

“ஹேய் லிசன்!!..

கவினுக்கு பேச முடியாததால் தான் நான் இன்டர்வியூ நடத்துறேன். இப்போ உன்னால நான் கேட்கிற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல முடியும்னா உட்கார்!!. அதர்வைஸ் யூ கேன் கோ!”.. என்று அவன் கறாராக முடிக்க..

ஜனனி தன்னைக் கட்டுப்படுத்தி அமர்ந்து கொண்டாள். அடுத்த இருபது நிமிடம் அந்த இளைஞன் அவள் நிதி நிலைமை, எதற்காக இந்த திருமணம் என்று பல கேள்விகளைக் கேட்டு அவள் பதிலையும் பெற்று இருந்தான்.

அவன் கேள்விகள் பொதுப்படையாக இருக்க.. ஜனனியும் இந்த தடவை பொறுமையாகவே பதில் சொல்லி முடித்தாள்.

அவள் ஃபைலைத் திருப்பிக் கொடுத்தவன் “உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஜனனி.. பட் ஐ ஆம் சாரி நீங்க எங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லை.” என்று அவன் முடிக்க..

“வாட்!!.. என்ன சார் சொல்றீங்க!!..என் கிட்ட என்ன குறை!!.. அதுவும் இல்லாம நீங்க வெறும் ஒரு மீடியேட்டர் தானே. கவின் சார் என்னைப் பார்த்து பிடிக்கலைனு சொல்லட்டும்.. அப்ப நான் போறேன்.” என்று அவள் அதிகாரமாய் அமர்ந்து கொள்ள..

சட்டென சிரித்தவன்.. “ஏய் உன்னை வெளியே தூக்கி எறிய எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது. பட். இருந்தாலும் நான் ஏன் உன்னை ரிஜெக்ட் பண்ணேன்னு சொல்றேன் கேளு..

ஃபர்ஸ்ட் பாய்ண்ட் நீ வெளியில் இருந்து உள்ளே வர்றப்ப ஒரு கிளாமர் லூக் வேணும்ன்னு லிப் பாம் போட்ட..

அப்பறம் நான் தான் கவின்னு நினைச்சு.. உன்னோட கண் அசைவுளையும் உதட்டு அசைவுகளையும் நீ என்ன செட்யூஸ் பண்ண பார்த்த.. ஐ மீன் மயக்கப் பார்த்த..

அப்புறம் நான் கொஞ்சம் அசந்து இருந்தா.. எனக்கே லிப் லாக் கொடுத்து இருப்ப..

“ஸோ, உனக்கு கேரக்டர் சரியில்ல போதுமா!!”..

ஜனனிக்கு அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவளை எரிமலையாக மாற்றி இருந்தது.

“ஹேய் மிஸ்டர் என் கேரக்டர் பத்தி நீ பேசுறியா??.. ஒரு பொண்ணோட கண்ணை மட்டும் பார்த்து பேசாம உன் கண்ணு எங்க எல்லாம் என் மேல போச்சுன்னு எனக்கு தெரியாதா??.. என்று அவள் மனதை மறையாமல் கேட்டு விட..

அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் “ம் அப்புறம் ஏன் அமைதியா ரசிச்சிகிட்டு இருந்த அப்பவே சொல்லுறதுக்கு என்ன..” என்று அவன் சிறு நக்கலுடன் கேட்க..

“ம்.. ரசிச்சிகிட்டு இருந்தேனா!!.. கொதிச்சிட்டு இருந்தேன்.”.. என்று அவள் பதிலடி கொடுத்தாள்.

“அப்படி தெரியலையே.. பொறிக்குள்ள எலி சரியா மாட்டிகிச்சுன்னு சந்தோசப் பட்ட மாதிரியில தெரிஞ்சது.”

“புல் ஷிட்!!.. இங்க பாரு நான் ஒன்னும் அவரை மயக்கி கல்யாணம் பண்ண நினைக்கலை. அவர் எதிர்பார்க்கிற தகுதி என்கிட்ட கண்டிப்பா இருக்கு. நடுவுல நீ யாரு நந்தி மாதிரி நடந்துகிற..” என்று ஜனனி வாதிட

“திஸ் இஸ் ரிடிக்குலஸ்!! லூக்.. உனக்கு யாராவது ஆள் வேணும்னா.. இன்னும் கொஞ்சம் லிப் ஸ்டிக்கை திக்கா போட்டு வெளிய நில்லு.. நிச்சயம் ஏதாவது கஸ்டமர் கிடைப்பாங்க!! பட் டோன்ட் ட்ரீம் அபோட் கவின்!!.. நீ அவன் நிழலைக் கூட நெருங்க முடியாது.”.. என்று அவன் ஏளனத்துடன் ஆரம்பித்து எச்சரிக்கையுடன் முடித்தான்.

அவன் சொன்ன சொற்களில் ஜனனியின் கண்கள் கோபத்தில் சிவந்து போனது. அவளை கால் கேர்ள் ரேஞசுக்கு கீழ் இறக்கி பேசி விட்டானே என்ற அவமானம் அவளைச் சுட்டு எரித்தது.

ஜனனிக்கு வந்த கோபத்திற்கு அவன் கன்னத்தில் ரெண்டு அறை கொடுத்து விட்டு.. அங்கிருந்து சென்று விடத்தான் அவள் உள்ளம் துடித்தது. ஆனால் அடுத்த நிமிடமே.. அதைத் தானே அவன் எதிர்பார்க்கிறான். அவனுக்கு வெற்றியைக் கொடுப்பதா என்று நினைத்தவள்..

“மிஸ்டர் மைண்ட் யுவர் டங்!!.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல!.. கவின் பத்தி வந்த விளம்பரம் என்ன இம்ப்ரஸ் பண்ணிடுச்சு!!.. அவரை நல்லா வச்சு பார்த்துக்கணும்னு என் மைன்ட்ல நான் பிக்ஸ் ஆகிட்டேன். நீ யாரு எங்களை பிரிச்சு வைக்க.. இன்னும் சரியா ஒரு மாசத்துல அவரு மனசுல இடம் பிடிச்சி.. அவரு கையால நான் தாலி வாங்கலை என் பேரு ஜனனி இல்ல!!” என்று அவளும் பதிலுக்கு சவால் விட்டாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் திரும்பி வெளியேறினாள்.

முதுகைக் காட்டி வெளியே சென்றவளையே பார்த்தவனுக்கோ.. இப்படியும் ஒரு பொண்ணா என்று தலையில் அடித்துக் கொள்ளத் தான் தோன்றியது.

தொடரும்.

உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.. நன்றி.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top