JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 12

Subageetha

Well-known member
கொடிமலர் 12

வரும் வழி எங்கும் நந்தனாவுக்கு யோசனை தான்! அவளால் என்ன செய்ய முடியும் என்பது அவள் அளவில் புதியது. இததனை வருஷங்களில் பாடமாக படிப்பது வேறு, அதை செயல்படுத்தும் பொழுது முற்றிலும் வேறாக இருக்கும் சூழ்நிலை அவளை காயப்படுத்தியது. தோல்வி என்றதும் அத்தனை பேரும் கழன்றுகொண்டது வேறு அவளை கலவரப்படுத்தியது. தன்னால் முடியாதா என்று சுய அலசலில் ஈடுபட்டவளுக்கு தொழிலில் துரோகம் என்று ஒன்று உண்டு என்பது புரியாமல் போய்விட்டது. அவள் தயார் செய்த மார்க்கெட் மாடலை அவள் டீம்மில் உள்ள தருண் இவர்களது போட்டியாளர்களுக்கு விற்று காசாக்கிவிட்டான்.

டீம் மீட்டிங் நடக்கும் பொழுது, நல்ல பிள்ளையாய்," நாங்க ஏற்கனவே சொன்னோம் சார்,இதெல்லாம் சரி வராதுன்னு.நந்தனா தான் கேட்டுக்கல "என்று பந்தை அவள் புறமாய் தள்ளிவிட்டு தருண்தப்பித்துவிட்டான்.இதெல்லாம் அறியாத பெண்ணுக்கோ, தான் செய்தது முற்றும் தவறு என்ற எண்ணம். ஏற்கனவே,தனது வீட்டினரால் காயப்பட்டவள் மனதில் தோன்றியது இதுதான்!"எனக்கென்று ஒரு அடையாளம் என்றுமே கிடையாதா...தோல்விகள் என்னை மீண்டும் மீண்டும் கீழே தள்ளுவது ஏன்?"

ஒருவாறாக வீட்டுக்கு வர முயற்சி செய்த பெண்ணின் கண்ணில் பட்டது அந்த பார். இதற்கு முன்பே ஹைதராபாத் வந்த புதிதிலேயே அவள் பழகி விட்டாள் .முழு போதையில் தள்ளாடியவளை,அவளுடன் வேலை பார்க்கும் ஒருவன் கொணர்ந்து அவள் அடுக்கக கார்பார்க்கிங் வரை விட்டு சென்றான். அவளது நிலையை அவன் பயன்படுத்த்திக்கொள்ளாமல் இல்லை. அவனுக்கு தேவையானவை *** போதையில் தள்ளாடும் நந்தனாவிடம் தாராளமாகவே கிடைத்தது.


துக்கம் என்னவென்றால் இவை எதையும் உணரும் நிலையில் பெண் இல்லை. பெண்கள் குடிப்பது தவறா என்று வாதத்தை முன் வைப்போமாயின், நிச்சயம் தவறில்லை., சில விஷயங்கள் நடந்தால் தாங்கிக்கொள்ளும் எண்ணம் இருப்பின். இவை போன்ற பல விஷயங்கள் நிகழலாம். எந்த நொடியிலும் தன்னைக் காத்துக்கொள்ள பெண்கள் சுய நினைவுடன் இருப்பது அவசியம். எல்லாம் முடிந்தபின் மன்றத்தில் வந்து போராடி என்ன பயன்?


நம் கை மீறி நடக்கும் சம்பவங்களுக்கு நாம் பொறுப்பல்ல....அதில் பெண்ணின் தவறும் இல்லை. நாகரீகம் என்னும் போர்வையில் பெண்கள் டிஸ்கோதே செல்வதும் ,சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் ,அவர்களை தவறான பாதையில் கொண்டு நிறுத்திவிடும்.

அவள் காரை பார்க்கிங் ஏரியாவில் பார்த்த ராமின் மனதில் சொல்லொணா க்லேசம் . நந்தாவிடம் அவன் இதுபோன்ற ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவளது ஆடையின் நிலையே சொன்னது,அவளுக்கு நடந்தது என்னவென்று. நெற்றிப்பொட்டை வேகமாக தேய்த்துவிட்டுக் கொண்டவனுக்கு,மனது ஆட்டம் காண ஆரம்பித்தது. இவளை என்ன வார்த்தை சொல்லி புரிய வைப்பது என்று தவித்தான்.

அவளை காரிலிருந்து இறக்கி, லிப்ட்டில் ஏற்றி அவள் பிளாட்டில் கொண்டு சென்று விடுவதற்குள் அவனுக்கு வியர்த்துப் போயிற்று. லிப்ட்டில் அவனுடன் பயணித்த அபார்ட்மெண்ட் செக்ரெட்டரி இவர்களை பார்த்த பார்வையில் அவ்வளவு ஏளனம்!

"போடா ,உங்களுக்கு வேற வேலை இல்ல .".என்று கத்தவேண்டும் போல ஒரு ரௌத்திரம்.ராமிடம்.ஆனால்,வாளா இருந்துவிட்டான் . அவன் சூழலில் இது அவனுக்கு புதியது. ஒரு அறையின் நடக்கும் விஷயங்கள் அடுத்த அறையில் .தெரியக்கூடாது என்பாள் ராமின் பாட்டி . இன்றோ..அவனுக்கு தலை குனிவாகத் தோன்ற, லிப்ட் எப்போது தளத்திற்கு அவரும் என்றாகிவிட்டது.


அடுத்தநாள் காலை....


நிதானமாக பத்து மணிக்குமேல் எழுந்த நந்தாவுக்கு தலைவலி மண்டையை பிளக்க, அப்படியே படுக்கையில் உட்கார்ந்துவிட்டாள் . அவள் அருகில் இருக்கும் மேசையில்,எலும்மிச்சை சாறு வைக்கப் பட்டிருக்க, அப்போதுதான் ராம் அங்கு இருப்பதே அவளுக்கு உறைத்தது . அவளிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ராமை வெகு சாதாரணமாக எதிர்கொள்ளும் துணிவு அவளுக்கு உண்டு.

அவள் எழுந்த சப்தம் கேட்டு பத்து நிமிஷங்கள் கழித்து வந்த ராமை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டாள் பெண். இந்த புன்னகைக்காகவே அவளை என்றும் விடமுடியாது என்று நினைத்த்துக்கொண்டவன்,இன்று எல்லாவற்றையும் பேசிவிட எண்ணம் கொண்டான்.

ஜூஸை குடித்தவளுக்குள் லேசான பதட்டம். ராம் என்ன கேட்பதற்காக இவ்வளவு மெனக்கட்டு இங்கே வந்திருக்கிறான் என்பது தெரியும்.இப்போதோ வேலையும் போய் விட்டது. இனி,ஏதாவது செய்தாக வேண்டிய நிலை. ம்ம்ம்.,ஒரு வேளை அவன் தன்னுடன் என்னை அழைத்து செல்ல தயார் என்றால்.... வேறு வழி இல்லை.கிளம்ப வேண்டியதுதான் என்று முடிவு செய்துக்க கொண்டாள் .

அவள் கண் முன்னே,அவளது செலவுகள் வரிசையாக நின்றது. வேலை கிடைத்த வேகத்தில் "வீட்டில் இனி என் செலவுகளை நானே பார்த்துக் கொள்வேன்" என்று சொல்லி ஆயிற்று. அவர்களும் இவளையும்,இவள் நிலையையும் பெரியதாக கண்டுகொள்ளவே இல்லை. கையில் இருக்கும் பணம் கொண்டு ஒரு மாதம் சமாளிக்கலாம்.அதற்குள் வேலை கிடைக்காவிட்டால்,என்ற கேள்வியே அவளை மிரட்டியது.

இத்தனை குழப்பத்திலும்,அவளை முழுதாக விரும்பும் அவள் கணவன் ராம் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. அவனிடம் கேக்கலாம் என்றோ,அவன் தனக்காக எதுவும் செய்வான் என்றோ அவளுக்குத் தோன்றவே இல்லை.அதாவது ,அவள் வட்டத்தில் ராம் இல்லை. இது போன்ற நிலையில் ராம் மட்டும் அவளை இவ்வளவு சீரியஸாக காதலித்து என்ன பிரயோஜனம்?

பத்து நிமிஷங்கள் கழித்து,அவள் சுதாரித்துக்கொள்ள நேரம் கொடுத்து உள்ளே வந்தவனுக்கு அவள் இன்னும் பல் கூட துலக்காமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த நிலை ஆச்சர்யமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அவன் மனம் தடுக்க முடியாமல் தன அம்மா பாட்டி இருவரையும் நோக்கி பிரயாணப்பட்டது. நினைவு தெரிந்த நாள் முதல் அவன் வீட்டுப் பெண்கள் விடிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை கவனித்துவிட்டு சாமியறையில் விளக்கேற்றி பூசைகள் செய்துவிட்டு வீட்டு ஆண்களுடன் அலுவலகம் சென்று மதியம் வரை நிர்வாக விஷயங்களை கவனிப்பார்கள். கடந்த பத்து வருஷங்களாகத்தான் தாத்தாவும் பாட்டியும் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்டார்கள் . ஏன் , அவன் அத்தை,சித்தி எல்லோருக்கும் நிறுவனத்தில் பங்கும் உண்டு, நிறுவன அலுவல்களை கவனிக்கவும் செய்வார்கள்.


வீட்டு நிர்வாகம் மட்டும் தெரிந்தால் போறாது என்பாள் பாட்டி .

ஆனால்,இங்கோ நந்தனா நடந்துகொள்ளும் விதமே வேறாக. ராமுக்குத்தான் எப்படி தன்னை சமாளித்துக்கொள்வது என்று புரியவே இல்லை. வீட்டு நினைப்பில்தான் நந்தனாவை தன அலுவலகத்தில் சேரச் சொல்லி அவன் கேட்டதே!


இவனின் யோசனை படிந்த முகத்தை பார்த்த நந்தாவுக்குள் விவரிக்க முடியாத எண்ணங்கள். வெளியே காண்பித்துக்கொள்ளாமல் "சொல்லு ராம்,ஏதோ கேக்கணும்னு ஹைட்ரபாத் வரைக்கும் வந்துட்டே,இன்னும் எதுவும் சொல்லலைன்னா நா என்னனு நினைக்க" என்று மெதுவே பேச்சை ஆரம்பித்தாள்.

"நீ,...சாரி... உனக்கு ஹாங்கோவெர் பரவாயில்லன்னா சீக்கிரம் ரெடி ஆகி வா, சாப்பிட்டு பேசலாம்" என்று முடித்துக்கொண்டவன் மேலே அங்கே நிற்கவில்லை .அவனுக்குள் அசூசையாக உணர்ந்தான். இந்த மனோ நிலையில் வார்த்தைகளை கொட்டினால் அள்ள முடியாது என்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் பேசுவதற்கு தன்னை தயார் செய்துக்கொண்டான்.


தன்னிடம் குழைந்து பேசும் ராம் இல்லை இங்கு நிற்பவன் என்று புரிந்தவளாக தன்னை வெகுவாக சீர்படுத்திக்கொண்டு வேகமாக தயாராகி வந்தாள் . சாப்பிடும் பொழுது பேச முயன்று தோற்றவள் பொறுமை பறந்து செல்ல ஆரம்பித்தது.எப்போதுமே நந்தாவுக்கு பொறுமை குறைவுதான். அவள் குணத்திற்கு நேர் எதிர்குணம் கொண்டவன் ராம். முடிந்தவரை பொறுமையாய் இருப்பவனுக்கு கோவம் எப்போதாவது வரும்.அனால்,அதை தாங்கும் சக்தி நிச்சயமாய் எதிரில் இருப்பவருக்கு இருக்காது.


மீண்டும்,நந்தா பேச்சை ஆரம்பித்தாள்.,"எஸ் ராம்,இதுக்கு மேல நீ என்ன சொல்ல போறே,உன் வாயிலேந்து முத்து எப்போ உதிரும்னு வெயிட் பண்ண என்னால முடியாது. சோ ,ப்ளீஸ்...என்றவளை உணர்ச்சியற்று பார்த்தவன் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் எப்போலேந்து ?"

பதில் சொல்ல அவளும் தயங்கவில்லை. இங்க வந்த பிறகு முதல்லே பார்ட்டி ல ட்ரின்க் பண்ண ஆரம்பிச்சேன். அண்ட் இப்போவெல்லாம் மனசு சரியில்லைன்னா....பட் அம் நாட் எ ரெகுலர் ட்ரிங்கர்,பிலீவ் மீ"என்று முடித்துக்கொண்டாள்.


"ஸோ ,உனக்கு நேத்து மனசு சரி இல்ல ரைட் ? அப்போ நா இங்க இருக்கேனே,என்கிட்ட வந்து சொல்லணும்,நா உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னும் தோணல..அப்படித்தானே..."


"நோ ராம், ஆபீஸ்ல வேல போய் ஒரு டோவ்ன் ஸ்டேட் ல இருந்தேன். வர வழியில பார்குள்ள போய்ட்டேன்...சாரி,நீ வந்திருக்கனே எனக்கு ஞாபகம் இல்ல..." அவள் கண்கள் சொன்ன நிஜத்தில் அவன் மனது காய பட்டது.

"ஓகே,தென் இப்போ என்ன செய்யுறதா இருக்கே நந்தா...""

"தெர்ல ராம்...இன்னொரு வேலை தேடணும் ஐ கேன் மேனேஜ் "என்றவள் முகம் இப்போது சோகத்தை காண்பிக்க , இப்போதும் அடிபட்டவன் ராம்தான்!

"என் கூட பெங்களூரு வரியா ...அங்கே என்னோட ஆபீஸ் ல ஜோஇன் பண்ண இஷ்டம் இருக்கா?----ராம் ."

நந்தா எதிர்பார்த்தது அவன் திருமணம் பற்றி கேட்பான் என்று. ஆனால் இப்போது அவனுக்கு இருக்கும் அதிர்ச்சியில் திருமணம் பற்றிய யோசனை அவனுக்கு வரவில்லை.ஆனால், பெண்ணை இப்படியே விடவும் முடியாது, அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.

சிறிது யோசித்தவள்,"ம்ஹும்...ஓகே.வரேன்.பட் எனக்கு இடம் தேடணும்.என்னால ஹாஸ்டல் ரூம்னுலாம் இஷ்டம் இல்ல. சோ ஏதாவது அபார்ட்மெண்ட் பாக்கலாம் என்று முடித்தவளை கோபத்துடன் பார்த்தவன்,வேறு ஒன்றும் சொல்லாமல்,தான் தங்கி இருக்கும் அடுக்ககத்தில் இன்னொரு பிளாட் எடுத்துக்கொண்டான்.

இருவருக்கும் அதற்குப்பின் நேரமே இல்லை.வீட்டை மாற்றவேண்டும் என்று எல்லாவற்றையும் பார்த்து பேக் செய்துகொண்டாள் நந்தா. காரில் ஏற்றி எடுத்து செல்லவேண்டியவை தவிர்த்து மற்றவற்றை பேக் செய்ய ஆட்கள் வந்தார்கள். துரித கதியில் வேலை முடிய,அன்று மாலையே அவளது பொருட்களை சுமந்த வாகனம் பெங்களூரு நோக்கி பிரயாணம் செய்ய,அடுத்த நாள் வரை ஒரு ஹோட்டல் ரூமில் தாங்கிக்கொண்டு மேற்கொண்டு செய்யவேண்டிய சில வேலைகளை ராமின் துணையுடன் நந்தா செய்து முடித்தாள் .


இருவரும் டிரைவர் போட்டுக்கொண்டு காரில் பெங்களூரு செல்ல, ஹைதராபாத் வாழ்க்கையை வெறுத்தவளாக நந்தா காரில் கண்மூடி சாய்ந்து இருந்தாள் . அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அவளைத்தவிர வேறு யார் அறிவார்?


அவள் மனதை படிக்க முயன்று தோற்றுப்போன ராம்,தானும் கண்மூடி அமர்ந்துக் கொண்டான். இந்தப் பெண்ணை எப்படி தேற்றுவது என அவன் மனம் யோசித்துக்கொண்டிருந்தது. வழியில் நிறுத்தி உணவு வாங்கி சாப்பிட்டு ,ஹைவே யில் கார் பறந்தது. அவன் மனமும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியை உணர்ந்தது. அவன் கைப்பொருள் கிடைத்த அமைதி அவனுக்குள்..
 
Last edited:

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top