JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 15

Subageetha

Well-known member
லீலாவுடன் பேசும்போது 'தன்னை ராம் தீவிரமாக காதலிப்பதாக கூறிய நந்தா மறந்தும் தான் அவனை விரும்புவதாக சொல்லவில்லை. அது பெரிய அளவில் லீலாவை யோசிக்க வைத்தது. ஒரு விதத்தில் இதுவும் நந்தாவின் வெற்றி தான். தாங்கள் இருவரும் பேசியது பற்றிய விஷயங்கள் நிச்சயம் ராமின் காதுக்கு போகாது. அந்த தைரியம் அவளுக்கு.
லீலாவிடம் ஒருவாறான எண்ணத்தை உருவக படுத்த ஏதுவாக!


இவை எதுவும் தெரியாமல் ராம் நந்தா பற்றிய சிந்தனைகளை ஓரமாக வைத்து விட்டு தீவிரமாக வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டான்.

நந்தா தினமும் வழமை போல் வேலைக்கு வருகிறாள். எப்போதும் அலுவலக தளத்தில் இருவரும் பேசிக்கொள்வது கிடையாதே!

ஆனாலும், லீலாவும் ராமின் சித்தப்பாவும் இருவரையும் கண்காணித்தார்கள். விஞ்சியது குழப்பம் மட்டும்!

இதைத்தான் நந்தா எதிர்பார்த்தாள். லீலாவின் இவள் மீதான பிடித்தம் எவ்வளவு தூரம் என்பதும் அன்றைய பேச்சின் முடிவில் தெரிந்துவிட்டது.
மீதம் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவ்வளவு தூரம் பச்சை கொடி காட்டுவார்கள் என்று நம்ப முடியாது. ராமையும் அவன் மீதான பிடியையும் விட... ம்ஹும் இப்போதைக்கு ஆகாத விஷயம். எனில் மீதம் இருப்பது ஒரே வழி அது?
********************
ஷ்யாம் தன்னுடைய உணர்வுகளை காட்டத் தெரியாமல் சியாவிடம் தவித்தான். அவளின் அருகில் செல்லவும் அவனுக்குள் தயக்கம். பகல் பொழுது முழுவதும் உறவுகள் புடை சூழ அவர்கள் பக்க சாம்பிரதாயங்களில் புது மனைவியுடன் திளைத்தவனுக்கு இரவில் அவளுடன் தனிமையில் என்பது புதுவிதமாக தாக்கியது. பெயரிடா உணர்வு. அவனுக்கு அது பிடித்தும் இருந்தது.

சியா மனதில் ஷ்யாம் மனது போல் இன்றி வேறு வகையான அலைக்கழிப்பு. மனதிற்கு பிடித்த காதலன்... அவனுடனான இந்த திருமண உறவு. அவளுக்கு சந்தோஷமா என்றால் நிச்சயம் அவளிடம் பதில் இல்லை. "காதல் இல்லை, ஆனால் திருமண உறவில் இணைவோம், நீ என்னிடம் கடன் வாங்கி இருக்கிறாய் பணத்தை திரும்ப தா... இல்லை என்றால் " அவன் வாக்யத்தை அன்று முடித்திருக்கவில்லை.. இன்று அவனுடைய மனைவியாய் மங்கள நாண் அணிந்து, அவன் உச்சியில் இட்ட குங்குமம் வைத்துக்கொண்டு. அவளுக்கு அவனுடனான இந்த உறவில் கிடைக்கும் பலன் என்ன?
'என்ன என்னிடம் எதிர்பார்க்கிறே ஷ்யாம்' என்கிட்ட கணவன் ங்கிற உரிமை எடுத்துப்பியா '.. மனதில் அவளிடம் ஆயிரம் கேள்விகள் உண்டு அவனிடம் கேட்க.

மனைவியா உன்கிட்ட நடந்து கொள்ள எதிர்பாக்கறியா ஷ்யாம்? அப்போ எனக்கு உண்டான மரியாதை அண்ட் உரிமை.. அதுவும் உன்கிட்ட..
அதையும் குடுப்பியா நீ ?
நடந்த கல்யாணம் உண்மை கல்யாணம் என்னை பொறுத்தவரை..நீ என்ன யோசிக்கிறே, இது பொம்மை கல்யாணம் இல்லையே?"

திருமணம் என்றதும் தோன்றாத பயம் இப்போது அவளை மறைந்து நின்று தாக்கும் எதிரியாய் கூறு போட, யாரிடமும் சொல்ல திராணி அற்று மவுனம் காத்தாள்.

அவள் திருமணம் முடிந்த பிறகும் வேலைக்கு போய் மாதா மாதம் சம்பளம் வரும் என்றதும் அவளது பெற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு இந்த திருமண நாளை எதிர்பார்த்ததும், ஆரவா ரித்ததும் நெஞ்சுக்குள் கசந்தது என்றால் அதை சரியாக புரிந்து வைத்திருக்கும், அதைக்கொண்டு காரியம் சாதிக்கும் கணவனின் சாதுர்யம் அடிவரை அவளை எரித்தது . சில சமயங்களில் அதீத புரிதல் சங்கடம் தான்.
"ஸோ, இங்க பணம் தான் எல்லாமே இல்லீயா... அது தானே இங்கே இவ்ளோ பிளே பண்ணுது. நா இங்கே உன் பக்கத்துல உன் வைப் னு நிக்க காரணம்?"

'ம்ஹுன்.. பட் ஐ ஹவ் அ டவுட் நீ உன்னோட வட்டத்துல தேடாம என்ன எதுக்கு சுஸ் பண்ணே.? எனிதிங் பிஹைன்ட் ' அவள் மனம் எல்லாவற்றையும் ஆராய்ச்சி பார்வையில் யோசித்தது. விடை சொல்ல வேண்டியவனுக்கு இவள் கேள்விகள் போய் சேரவே இல்லை. வெறும் கடனுக்காக தன்னை அவன் திருமண உறவுக்குள் இழுத்து வர வேண்டிய கட்டாயம் என்ன என்ற யோசனை அவன் திருமண உறவுக்கு கேட்ட அன்றில் இருந்து அவளை இம்சிக்கிறது.

இதோ இன்று இருவருக்குமான முதல் இரவு. தனது வீட்டில் தான் என்றுவிட்டான் ஷ்யாம். அவன் அலுவலகத்துடன் சேர்ந்த அவனது பங்களா விழாக்கோலம் பூண்டு புது மணப்பெண்ணாய் நாணி நிற்க, சியாவோ கலக்கம் சுமந்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மணப்பெண் அலங்காரத்துடன்.

வீட்டு வாசலில் படியில் வைக்கப் பட்டிருந்த அரிசியை காலால் உதைத்து உள்ளே வந்தவளுக்காக ஒரு தாம்பாலத்தில் சிவப்பு நீர் வைக்க பட்டிருக்க அதை கால்களால்
தோய்து வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் மணமகன்.
சாம்பிராதாயங்கள் முடிந்த பிறகு, ஒரு வழியாக இரவு உணவுக்கு இருவரையும் அருகருகே அமர்த்தி வைக்க ஷ்யாம் மற்றவர்கள் செய்யும் கேலிகளை ரசித்து கொண்டே சியாவை பார்வையால் கபாலளீ கரம் செய்தான். ஷ்யாமின் மாமன் மகன்ஷ்யாமை சியாவுக்கு ஊட்டி விட சொல்ல அதில் முழுவதும் சிவந்தாள் சியா.

ஷ்யாம் இனிப்பை மட்டும் இல்லாமல் தனது தங்கதட்டில்வைத்திருக்கும் எல்லா
பதார்த்தங்களையும் அவளுக்கு ஊட்டிவிட அங்கிருந்து ஓடி விடும் நிலையில் பெண். அவளது முகம் சொல்லும் சேதிகளை படித்தவனுக்கு மனதுள் உற்சாகம். சுற்றி இருப்போரின் ஆர்ப்பரிப்பும்,
ஆரவாரமும் அருகில் முழு ஒளியுடன் சியாவும் அவனுக்குள் தான் இவளது கணவன். எனக்கு திருமணம் ஆகி எனக்கே எனக்காய் ஒருத்தி என்ற எண்ணத்தை அவன் மனதில் ஆழ பதித்ததில் உடல் சிலிர்த்தது.

ஆனால், அவன் சியாவை காதலிக்கிறானா என்றால் அதற்கு அவனிடம் விடை இல்லை. இவனது உணர்வுகளை படிக்க முடிந்த வீட்டு பெரியவர்கள் உணர்ந்தது இவனுக்கு சியா மீதான பிடித்தம், காதல், விட்டு கொடுக்க முடியாத உரிமையு ணர்வு. சியாவை திருமணம் செய்தால் மகன் நிச்சயம் சந்தோஷமாக வாழ்வான் என்ற நம்பிக்கை, அதனால் தான் அந்தஸ்து பணம் என்று பார்க்க நிறைய இருந்தாலும் அவற்றை தூர நிறுத்தி இந்த திருமணத்தை நடத்தினார்கள். ஆனால், இவற்றை ஷ்யாம் புரிந்து கொள்ளாதது தான் அதிசயம்.

சிறுபெண்ணாய் முதல் வேலை என்று தயக்கமும், அதை மீறிய தனது தகுதிகள் மீது கொண்ட அபார நம்பிக்கையுமாய் இன்டெர்வியூ வந்த அந்த பெண்ணை அன்றே தன்னுடன் வைத்திருக்க ஆசை பட்டுத்தான் அவளுக்கு வேலை கொடுத்தான் ஷ்யாம்.

அவள் வீடு செல்லும் நேரம் தவிர தன்னுடனேயே கூட்டிக்கொண்டு வேலை தளங்களுக்கு செல்வான்.

அவள் கலங்கி நின்ற நேரங்களில் நல்ல தோழனாய் தாங்கியிருக்கிறான்.

இந்த நொடி வரை அவளை திருமணம் செய்துகொள்ள ஏன் முடிவு செய்தான்.. அவளைத்தான் தன் வாழ்க்கை துணையாக்க ஏன் பிடிவாதம் கொண்டான் என்பதெல்லாம் அவனுக்கே புரியாத புதிர்!

அவனை பொறுத்தவரை சியா அவனுடன் வேண்டும் பண தேவைக்காக அவள் போராடுவதும், அழுவதும் கூடாது! இன்னும் சொன்னால், அவள் அழவே கூடாது! அவனுடன் இருக்கும் பொழுது அவளுக்காக எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான். இவை மட்டுந்தான் அவன் மனதில்.

அவளை மிரட்டி சம்மதிக்க வைத்தது பற்றிய கவலைகளோ, சியா இந்த திருமண உறவை எப்படி கொண்டு செல்வாள் என்பது பற்றி எல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை.

இருவருக்குமான அந்த நாளின் இரவின் தனிமை கிடைத்தது. பெண்ணுக்குள் பதட்டம். சூழ்நிலை கையால்வதில் திணறல்.

அறைக்குள் உட்கார்ந்தி ருந்த ஷ்யாமுக்கு, உள்ளே அழைத்து விடப் பட்ட பெண்ணை புரிந்தது.
இப்போது இதற்கு எல்லாம் அவனை பொறுத்தவரை அவசரம் இல்லை. அவன் விரும்பியது இந்த சியா தன்னுடன் இருக்க வேண்டும் என்று மட்டும்!

" வா.. சியா. போய் ட்ரெஸ் சேங்ச் பண்ணிட்டு சீக்கிரம் தூங்கு. மார்னிங் சீக்கிரம் கிளம்பணும். நம்ம ***ப்ராஜெக்ட் பினிஷிங் ஸ்டேஜ் ல இருக்கு.. என்று சொன்னவன் ஏற்கனவே நைட் சூட்டில் தான் இருந்தான். விந்தையான பார்வையை அவன்மீது வீசிவிட்டு தனது நைட் பாண்ட் சகிதமாக குளியல் அறையில் நுழைந்தவளுக்கு என்ன எதிர்பாத்தேன் நான் என்று தோன்றியது.

வெளியே வந்தவள் கண்டது லேப்டாப் சகிதமான தனது கணவனை மட்டும். அவனிடம் ஆராய்ச்சி பார்வை பார்த்தவளின் காதல் மனம் வழக்கம் போல் அவனை ரசிக்க தொடங்கிவிட்டது. அவளது கள்ள பார்வைகளை ஏற்கனவே அறிந்தவனுக்கு மனதில் உல்லாசம் பொங்க, அவளிடம் ஒரு பார்வை வைத்துக்கொண்டே வேலையை தொடர்ந்தான்! அவளது ரசிக பார்வை அவன் உணர்வுகளை எழுப்ப, இவள் என் மனைவி. அடுத்த கட்டம் நோக்கி பிராயணம் செய்தால் தவறா? என்ற ஹோர்மோன் கேட்ட கேள்வியில் திட்டுக்கிட்டு போனவன், சட்டென சுதாரித்துக்கொண்டு, எழுந்துவிட்டான்.

நின்று கொண்டிருந்தவளின் அருகே சென்று, அவள் கைகளில் இருந்த துணிகளை வாங்கி அருகே இருந்த துணி துவைக்கும் கூடைக்குள் போட்டவன் "இதை இங்கே போடணும் "என்றுவிட்டு, அவள் கன்னத்தை தட்டிவிட்டு, ஒரு குட் நைட்டுடன் உறங்க சென்று விட்டான்.

அவள் அருகில் வந்து படுத்தவளுக்கு அருகாமை ஒருவித நிம்மதியை தர, வெகு காலத்திற்கு பிறகு ஆழ்ந்த தூக்கம்!

காலையில் சியா எழும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் தலையணை ஆகிப் போயிருந்தார்கள். கூச்சம் உந்தி தள்ள, ஷ்யாம் எழுவதற்குள் அவசரமாக எழுந்து அவள் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, ஷ்யாம் அவளை பார்த்துக்கொண்டு மௌன சிரிப்பில் குலுங்குவதை கவனிக்க மறந்து போனாள்.

விடிகாலையில் வழக்கம்போல் எழுந்தவனுக்கு மனைவியின் தூக்கம் அவள் மீது இரக்கம் கொள்ள வைத்தது. அவள் நிலை புரிந்தவனால், அவளை நகர்த்திவிட்டு தூக்கம் கலைக்க விருப்பம் இல்லை.

அவன் மீது ஒற்றை காலை போட்டுகொண்டு, அவன் கழுத்தின் அடியில் தனது வலது கையை வைத்து, இடது கரத்தால் அவனை இழுத்து அணைத்திருந்தாள் சியா. சுகமான தூக்கம் என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை அணைத்துக் கொண்டவன் எப்போதும் மீண்டும் தூங்கினான் என்றே தெரியாது.

சியாவின் அசைவில் எழுந்தவன் கண்டது அவளது பதட்டமும் அத்துடன் கூடிய வெட்கமும் தான்.

அவன் வாழ்வில் வசந்தம் வீசுவதை உணர்ந்தவனுக்கு, அவர்களது உறவை அடுத்த கட்டம் நோக்கி அழைத்து செல்ல உத்வேகம் வந்தது.
இப்படியே நாட்களை தள்ள முடியாது. அவள் வேண்டும், உரிமையாக அவளுடன் உறவு வேண்டும்!

அவள் வருவதற்காக காத்திருந்தவனுக்கு மீண்டும் தூக்கத்தில் கண்கள் மூடிகொண்டது.

திருமண நாளுக்காக அவனும் நிறைய இரவுகள் தூங்காமல் காத்திருந்தான். சியா திருமணத்தை இருக்க வேண்டுமே என்று பயந்தான். இதை எல்லாம் சியா சீக்கிரம் புரிந்துகொள்வாள்.

ஷ்யாமும் தனது சியாமீதான உடன்பாடு காதல் தான் என்று உணர்வான்.
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top