JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 2

Subageetha

Well-known member
விடிகாலை பொழுது, ரன்னிங் செல்ல வேண்டும் என்று அவசரமாய் தன்னை தயார் படுத்திக்கொண்டு, தனது ஹாஸ்டல் அறையில் இருந்து ராம் வருவதற்கும் நந்தனா அவன் அறை வாயிலை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

கோழிக்கோடில் இருக்கும் அந்த பிரபல மேனேஜ்மென்ட் கல்லூரியில் இருவரும் ஒரே வகுப்பு.

நந்தனாவிற்கு ராமை பார்த்தவுடனேயே பிடித்து விட்டது. மற்ற எல்லோரையும் விட அவன் நிதானமாய் இருப்பது போல் பெண்ணுக்கு தோன்ற, அவனை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவளுக்கு அவனுடன் நட்பில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக, விடிகாலை ஓட்ட பயிற்சி இருவருக்கும் பொதுவாக இருந்தது.இதோ இருவரும் தங்களது பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள்.

ராம் பெண்ணுடன் அதிகம் பேச்சு வைத்து கொள்ள தயக்கம் காட்ட, பெண்ணோ, இத்தனை வருஷ அமைதிக்கு வடிகாலாய் ராமை நினைத்துவிட்டாள்.
ராம் பேச வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. அவள் பேசுவதை காது கொடுத்து கேட்க ஒரு ஜீவன் கிடைத்த மகிழ்ச்சி அவளுக்குள்.
ஒரு விதத்தில் பாதுகாப்பாய் உணர்ந்தாள் என்றும் கூட சொல்லலாம்.

முன்பெல்லாம் ராமுக்கு இவள் என்ன இப்படி பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று சலிப்பாக இருக்கும்.

ஆனால், அவள் வேறு யாருடனும் இப்படி பேசியோ பழகியோ அவன் பார்க்கவில்லை. அதில் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
இருந்தாலும் மனதிற்குள் ஏதோ நெருடல்.அது என்ன என்றுதான் புரியவில்லை. இயல்பாக இல்லாமல் ஏதோ ஒன்று அவனை தடுக்க என்ன என்று புரியாது அதன் போக்கில் விட்டுவிட்டு அமைதியாக இருந்தான். அவள் அளவிற்கு அவனால் நட்பு பாராட்ட முடியவில்லை.

இந்த எட்டு மாதங்களில் அவனையும் அறியாமல் அவன் மனதின் நந்தநாவை நெருக்கமானவளாக ஏற்றுகொண்டுவிட்டது.ஆனாலும் ஏதோ ஒன்று!அவனை தடுக்கிறது.

இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது, மதியம் சாப்பிடுவது என்று எல்லாம் அவளாகவே அவனை தன் போக்குக்கு அழைத்து சென்றாள்.
தெரிந்தும் தெரியாமலுமாக இருவரின் பெயர் சேர்ந்து பேசபடும் அளவுக்கு விஷயம் நீண்டது என்றுதான் சொல்ல வேணும்.

நடுவில் பண்டிகை நாட்களில் ராம் தனது வீட்டுக்கு சென்றுவிட, தன் வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லாமல், தனியே அந்த நாட்களை கழித்தவளுக்கு மனதுள் என்றுமில்லா வெறுமை.
அவளது வகுப்பில் அநேகர் விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள் தாம்.

இவளுக்கு வீட்டுக்கு செல்ல வேண்டும் போல் தான் இருக்கிறது.

அங்கு முகம் கொடுத்து இவளிடம் யார் பேசபோகிறார்கள்...?

எல்லோரும் மகிழ்ச்சியாய் ஒருவருடன் ஒருவர் விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும்... இனிப்பை பகிர்ந்தும் விழாவை கொண்டாடிகொண்டிருந்தாலும் இவள் மட்டும் தனி என்று உணரச் செய்து விடுவார்கள்.

நந்தனாவின் மனது இறுகிக்கொண்டு வருகிறது. அவள் வீட்டில் அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அப்படி ஒரு ஜீவன் இருப்பதை பற்றிய எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை.

ஏனோ அவளை தனது குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்வதற்கு அந்த குடும்பத்தில் எவருக்கும் பிடித்தம் இல்லை. இதற்கான காரணங்கள் என்று வரை அறுக்கப்பட்டவை எதுவும் யாராலுமே ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று.
வீட்டிலிருக்கும் அத்தைமார்கள், சித்தப்பா,பெரியப்பா அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் மரியாதையும், அவர்கள் வீட்டின் பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் பாசமும் இன்றுவரை இவளுக்கு பெற்ற தாயிடம் இருந்து கூட கிடைத்ததில்லை.

பணக்காரர்கள் வீட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காக, பணத்தால் கிடைக்கக்கூடிய எல்லா சொகுசுகளும் அவளுக்கு கிடைத்திருக்கிறது.
தன்னைச் சுற்றி நடப்பவற்றை வெளியில் தெரியாமல் காப்பாற்றுவதற்காகவேஎப்போதும் கர்வத்துடன் முகத்தை வைத்துக்கொண்டும் அதிகம் யாருடனும் பேசி பழகாமல் தன்னை காப்பதற்கு யாரும் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தன்னைத்தானே காத்துக் கொள்கிறாள் போலி முகமூடியுடன்.

இதோ இந்த பண்டிகை தினத்திலும், ஹிமாச்சல் பிரதேஷ்ஷுக்கு சுற்றுலா கிளம்பிவிட்டாள். கையில் பணத்திற்கு பஞ்சம் இல்லை. அதில் எல்லாம் வீட்டினர் தாராளம் தான்.
யாரிடமும் மனம் திறந்து பேசி ஆறுதல் தேடும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இல்லை. உள்ளுக்குள் அவள் கோழை. எதையாவது சாதித்து காண்பிக்க வேண்டும். நான் பிறப்பால் அவர்கள் குடும்பத்தில் பிறந்து,வளர்ந்து, அவர்கள் தொலைத்த சந்தோஷம் அதன் வருத்தத்திற்கு பதிலாக அதனால் அவர்களுக்கு ஏதாவது சந்தோஷத்தை வழங்கும் முடிந்தால்?

சில கேள்விகள் கேள்வி வியாக மட்டுமே தொக்கி நிற்கும் . அவைகளுக்கு என்றுமே விடைகள் கிடைப்பதில்லை. பெண்ணுக்கு
இப்பொழுது தெரிந்திருக்கவில்லை நினைப்பதும் நடக்க இருப்பதும் இதுபோலத்தான் என்று.


ராம் தனது குடும்பத்தினருடன் பண்டிகை நாட்களில் சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்க, இவளோ ஷிம்லாவில்.

பனி மூடிய பள்ளத்தாக்குகள், சிகரங்கள் இவள் மனதில் ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. மிருதுவான மலைக்காற்று இவள் வெந்து போன மனதிற்கு ஆறுதல் அளிப்பதாய்.

ஆனாலும் மனதிற்குள் இருக்கும் உணர்வுகளும், தனிமையும் துக்கமும் அவளை சுழற்றி அடிக்க, அவள் மனம் தேடியது என்னவோ ராம்.. ஆம் அவனை மட்டுமே அவள் தேடுகிறாள். சமீப காலமாக அவனுடன் இருக்க அவள் மனம் வெகுவாக விரும்புகிறது.
அவனுக்கு இவளை புரிகிறதா, இல்லையா புரிந்தும் எதுவுமே தெரியாதது போல் இருக்கிறானா போன்ற எண்ணில் அடங்கா வினாக்கள் அவள் மனதில் கூடாரம் இட்டு கிடக்க தேடி வந்த அமைதி தூரத்தில் கானல் நீராய்.

தனிமை அவள் மனதில். சலிப்பை தரும் இந்த நேரத்தில் மனதில் எழுந்துள்ள இந்த புதிய உணர்வு... காதல்! அதன் விளைவுகளை அனுபவிக்க போவது என்னவோ ராம் மட்டும் தான். இன்று அவனை தேடும் மனது நாளை வேறு எதிலாவது படருமாயின்? மாற்றம் மட்டுமே மாறாதது எனில், உறவுகளும் அதன் உணர்வுகளும் கூட நிறம் மாறும்.
இன்று நந்தனா சிம்லாவிலிருந்து டார்ஜிலிங் செல்கிறாள். கையில் பணத்திற்கு கணக்கு பார்க்க அவசியம் இல்லை, இன்னும் கேட்டால் ஒன்றும் குறைவில்லை. அங்கே. மூன்று நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் கோழிக்கோடு.

ராம் வந்திருப்பானா என்னும் எண்ணம் அவளைக் குடைந்தது. பொதுவாக அவன் தன் பெற்றோரைக் காண சென்று விட்டால் மறந்தும் யாருக்கும் அழைக்கவும் மாட்டான், அழைப்பு விடுத்தால் எடுக்கவும் மாட்டான். வீடு, அலுவலகம் என்று அவன் பாதையே மாறிவிடும். என்னை பற்றி யோசிக்கவும் கூட அவனுக்கு நேரம் இருக்கப் போவதில்லை என்ற நிதர்சனம் அவளுக்குள் கசந்து வழிந்தது.

எப்படியும் அவனை தன்பால் ஈர்த்து விடுவது என்று உள்ளுக்குள் சிறு சபதம். ஹான்.. ஒரு முக்கிய விஷயம் சொல்ல மறந்து விட்டேனே... இது காதல் தான் என்று அவள் நம்புகிறாள்.. அதனால் நானும் அவள் மனதை நம்புகிறேன்.

ராம் வழக்கம் போல் சென்னை அலுவலகம் சென்று இரண்டு நாட்கள் அத்தை வீட்டில் தங்கி சீராடிவிட்டு அவர்களுடனேயே மதுரை சென்று மீனாக்ஷி அம்மனை வணங்கி விட்டு மும்பை கிளம்பி விட்டான். இன்னும் இரண்டு நாட்கள்.. பிறகு கோழிக்கோடு சென்றாக வேண்டும். இந்த படிப்பை வைத்து அவன் செய்வதைவிட அப்பா, தாதா பெரியப்பா என்று அவர்களிடம் பயிற்சி எடுத்தாலே இன்னும் பல படிகளில் வேகமாக ஏறலாம் என்று அவனும் யோசிக்கிறான்.

ஆனால், வெளிநாடு போய் படிக்காமல் இங்கே படிப்பதே குடும்பத்தின் ஒரு சாரருக்கு பிரஸ்டீஜ் பிரச்சனை எனும் பொழுது எதை சொல்வது!

சிறு விஷயங்கள் கூட அவர்கள் குடும்பத்தில் பிரஸ்டீஜ்"சம்மந்த படுத்தி , முன்னிறுத்தி தாம் யோசிக்கப்படும். அவனும் அப்படியே பழகிவிட்டான்.

வீட்டில் நேரம் கழித்த சந்தோஷத்தில் அவனும் கோழிக்கோடு வந்துவிட்டான். அவனுக்கு நந்தனா பற்றிய யோசனைகள் எல்லாம் சுத்தமாக இல்லை. தனது நண்பர் குழாமுடன் ஐக்கியம் ஆகியும் விட்டான்.

ஆனால், திரும்பி வந்தவளுக்குள் இவனது இந்த அணுகுமுறை எதிலோ தோற்ற உணர்வை கொடுத்தது.

காதலை தான் இன்னும் வாய்விட்டு அவனிடம் சொல்லவில்லை என்பதோ, அவன் ஒப்புக்கொள்ள சாத்தியம் உண்டா என்பது பற்றிய சிந்தனைகள் அவளிடம் இல்லை.

அவளை பொறுத்தவரை அவள் அவனை காதலிக்கிறாள். மறுப்பதற்கு காரணமும் இல்லை.

அவளுக்குள் இருப்பது காதல் என்று சொல்வதை விட அவனை பற்றுக்கோ ளாக பற்றிக்கொள்ள நினைக்கிறாள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமோ?

அவள் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அவளுக்கு வீட்டினரிடம் கிடைக்காத கவனிப்பு, பிரியம் இவற்றை ராமிடம் மட்டும் எதிர்பார்க்கிறாள். அவனிடம் மட்டும் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வினை காதல் என்று புரிந்து கொண்டாள்.

நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டு சிரித்து பேசி கொண்டிருந்தவனை மைதானத்தின் வெளியில் இருந்து பார்த்து ரசித்து க்கொண்டிருந்தாள் பெண்.

அவளின் பார்வையை கண்டுகொண்ட அவனது நண்பர்கள் ராமை கிண்டல் செய்து தீர்த்து விட்டார்கள்.

அதற்கு பின்னர் தாம் பெண்ணவளின் தோற்றத்தில் இருக்கும் மாற்றங்களையும் அவள் தன்னை நோக்கி பார்க்கும் பார்வையின் வித்தியாசத்தையும் உணரத்தொடங்கினான் ராம்.

இதில் அவனுக்கு கிடைத்தது வெறும் குழப்பம். எதற்காக நந்தனா தன்னிடம் இன்னும் நெருங்கவும் உறவை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லவும் ஆசை படுகிறாள்? எனில் அவள் என்னை விரும்புகிறாள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாமா... அவள் என்னிடம் இது வரை எதுவும் பகரவில்லை.. நாமாக எதுவும் யோசிக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தவன் அவளை நோக்கி நட்பு புன்னகை வீச அது போறாது என்று காண்பித்தது பாவையின் முகம்.

ராமின் நண்பர்கள் இதை பார்த்துவிட்டு ஓஹ்' என்று கூச்சல் இட்டார்கள். அந்தக் கூச்சலில் ராமின் முகம் வெட்கச் சிவப்பை காட்டியது.

வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நந்தனாவிற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பி தனது அறைக்குள் வந்தவளின் கண்கள் இராமின் முக பாவனையை மீண்டும் தன் கண் முன் கொணர்ந்து இவளும் நாணத்தை பூசிக்கொண்டாள்.

வெளியே வந்த ராமின் கண்கள் பாவையை பாரக்க ஏங்கி தவிக்க உடன் வந்த நண்பர் குழாம் அவனை கேலி பேச என்று பேசி, புரிந்து கொண்டு, இருமனம் இணைந்து நிதானமாய் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய காதல் எனும் உணர்வு அவசர கோலத்தில்,நண்பர்களின் ஆரவாரத்தின் சாயலில், பெண்ணின் பார்வை மாற்றத்தை மட்டும் காரணமாக வைத்து உறுதி செய்ய பட்டது. அந்த நிமிடம் வரை ஆணின் மனதில் பெண் அவளை பற்றிய காதல் எண்ணங்கள் இல்லை.

படிக்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது... இந்த காதல் எனும் மாய வலை அவர்கள் இருவரையும் என்ன செய்ய காத்திருக்கிறது?
 

Members online

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top