JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 24

Subageetha

Well-known member
நந்தா சுற்றி இருக்கும் எல்லோரையும் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள். "இன்னும் ஒரு வாரத்தில் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகிடுங்க நந்தா"என்று பெண் மருத்துவர் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இரண்டு நாட்கள் ஆன பிறகும் அவளுக்கு வலி வரவில்லை.

ராம்தான் மருத்துவரிடம் பேசி இந்த ஏற்பாடு செய்ய வைத்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பே அவளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு.

சரியான உணவு, வேளைக்கு மருந்து என்று இல்லாமல் தன் இஷ்டத்திற்கு இத்தனை நாட்கள் அவள் நடந்து கொண்ட முறைக்கு, ராம் மனதில் பயம்.

நந்தா யார் சொல்லியும் கேட்பவள் கிடையாது. வீட்டில் யாரையும் மதித்து அவள் நடக்கபோவதும் இல்லை.
இதனால் தான் ராம் நந்தாவுக்கு தெரியாமல் இந்த ஏற்பாடு செய்தான்.

மருத்துவமனையில் மூன்றாம் நாள் நந்தா தனது முகத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டாள்.

"நாட்சுரல் பெயின் வரல டாக்டர். ஸோ, சி கேஸ் போய்டலாம். எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்ல ".. இப்படி சொல்லும் நந்தா வை ஆச்சர்யம் கலந்து பார்த்தார் மருத்துவர்.

ராம் செய்த ஏற்பாடு எதற்கு என்று அவருக்கு புரிந்தது.

"இன்னும் நாள் இருக்கு நந்தா, சேபர் சைடுல அட்மிட் ஆகியிருக்கீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கணும். வயத்துல இருக்கும் ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு நல்லது. அமைதியா இருங்க.. நிறைய நல்ல மியூசிக் கேளுங்க. நல்லா சாப்பிடுங்க..தூங்கி எந்திரிங்க.. நர்சோட வாக்கிங் போங்க...
குழந்தை தானே சரியான நேரத்துல பிறக்கும் " சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அத்துடன் மறைமுகமாக நந்தாவை இவற்றை செய்யவும் நிர்பந்தித்தார்.

வயதில், அனுபவத்தில் மூத்தவரான அவரை யாராலும் கேள்வி கேட்க முடியாது. லீலாவதியுடன் பி யு சி வரை படித்த நெருங்கிய தோழியும் கூட.

லீலாவதி வழியாக நந்தா பற்றி அறிந்து கொண்டவர், நந்தாவின் அலட்சிய போக்கை பார்த்து அவருக்கு அதிர்ச்சி தான்!

ர"ாம், உன்னோட வைப் பிரக்நன்சிய சீரியஸ்ஸா எடுத்துக்க மாட்டேங்குறா"என்று சொன்னவரிடம் ஐந்தாம் மாதமே பேசி ராம் செய்த ஏற்பாடுத்தான் இது.
அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

மஹிமா, பிரணவ் இருவருக்கும் ஹாஸ்பிடல் செல்லும் வேலை இல்லை. ராம் தினமும் சென்று பார்த்து வருவதுதான்!

ராமிடம் ஆஸ்பத்திரியில் வைத்து வாக்குவாதத்தில் இறங்க தொடங்கினாள் நந்தா.

ஒருமுறை காலை நேரம் அவளது மருத்துவர் வரும் நேரம் ராமிடம் நந்தா கத்திக்கொண்டிருந்தாள்.

ராம் முன்னால் எதுவும் பேசாவிட்டாலும், அன்று மதியம் ஓபி பார்த்துவிட்டு, நந்தாவை கூட்டிக்கொண்டு வர பணித்தார் மருத்துவர்.

பாருங்க நந்தா, "சி கேஸ் போனா, உங்களுக்கு தான் கஷ்டம். அந்த ஸ்கார் வயத்துல லைப் லோங் இருக்கும்."

"முடிஞ்ச வரை வெயிட் பண்ணி நச்சுரல் டெலிவரி பாத்தா அப்போ பெயின் இருந்தாலும் உங்களுக்கு நல்லது. யோசிச்சு சொல்லுங்க... இன்னும் டென் டேஸ் இருக்கு ட்யு டேட் ஆக..."
என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

நாளைக்கு வந்த நந்தாவிற்கு மனதெல்லாம் ஒரே குழப்பம். இன்னும் பத்து நாளைக்கு இதை வயித்துல வெச்சிட்டு சுத்தணுமா... அவளுக்கு எரிச்சல் மண்டியது.

எந்த முடிவிற்கும் வர இயலாதவளாக, இரண்டு மூன்று நாட்கள் கழித்து யோசிக்கலாம் என்று விட்டுவிட்டாள்.

இதுபோல அமைதியாய் ஒரு இடத்தில் இருப்பது, அவளுக்கு வித்தியாசமாய் இருந்தது. ஒரு பக்கம் இந்த வாழ்க்கை பிடித்திருந்தாலும், எப்பொழுதும் பிஸியாகவே இருந்து பழக்கப்பட்டவளுக்கு ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டது போல் இருப்பது ஒரு வித ஒவ்வாமையை கொடுத்தது.

ஏற்கனவே, தேவையில்லாத பிடிவாத குணங்கள். அத்துடன் இப்போது ஹார்மோன் மாற்றங்கள். அவளை கையாள்வது,அவளது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல... அங்கே மருத்துவமனையில் அவளைப் பார்த்துக் கொள்ளும் எல்லோருக்குமே சவாலாகத்தான் இருந்தது. அது எவ்வளவு தூரம் என்றால், அங்கே இருக்கும் நர்சுகள், ராம் மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம் ஒருவித பரிதாப பார்வை பார்க்கும் அளவிற்கு.
அவ்வளவு தூரம் எல்லோரையும் ஆட்டி வைத்தாள் அவள்.
ராமிற்கு, மருத்துவர் தெரிந்தவர் என்பதாலும் அவனிடம் மருத்துவமனை வசூலிக்கும் தொகையாலும் இன்றுவரை எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் என்றோ நந்தாவின் நிலை மோசமாகி இருக்கக்கூடும்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவர் காலையில் அவளை பார்க்க வரும் பொழுது," சி 'கேஸ் வேண்டாம் டாக்டர். நாம வெயிட் பண்ணுவோம், என்ற தலையை குனிந்த வாறே சொல்லி முடித்தாள் நந்தா. அவளது குரலே பிடித்தமின்மையை வெகுவாக காண்பித்தது. ஆனால் இதற்கெல்லாம் அசர்பவராக இல்லை மருத்துவர்.

நந்தாவின் அதிர்ஷ்டம், அவள் சொல்லி இரண்டோரு நாட்களில், லேபர் பெய்னும் அவளுக்கு வந்துவிட்டது. ஒருவேளை அவளது உணர்வுகளும், தன்னை வயிற்றுக்குள் வைத்துக் கொள்ள அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த குழந்தைக்கு தெரிந்திருக்குமோ?

வலி எடுத்த எட்டு மணி நேரத்தில், ராமின் மகள் இந்த பூமிக்குள் தனது காலடி எடுத்து வைத்தாள். குழந்தை வழக்கத்திற்கு மாறாக, எடை குறைவாக பிறந்தது.

திரும்பவும் ஆரம்பித்தது பிரச்சனைகள்.குழந்தை ஒரு சில மணி நேரங்களிலேயே, நந்தா விற்கும் ஜுரம் வந்துவிட்டது.
ஒருபுறம் குழந்தை மருத்துவர்கள் கண்காணிப்பில், இன்னொரு புறம், நந்தா.

காய்ச்சல் குறைந்த பிறகு,மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்த 'முடியவே முடியாது 'என்று தீர்மானமாக மறுத்து விட்டாள் நந்தா.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடு என்று ராம் வந்து எவ்வளவோ கெஞ்சிய போதும் அது எதுவும் எடுபடவில்லை.

மருத்துவர், "நீ தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிரஸ்ட் கேன்சர் வரதுக்கு சான்ஸ் இருக்கு. நீ கொடுத்தாய் என்றால் குழந்தைக்கு நல்லது ஆச்சு, உனக்கும்தான் " என்ற நிதர்சனத்தை எடுத்துச் சொல்லிவிட்டு செல்ல, ஒருவராக குழந்தைக்கு பால் கொடுக்கவும் சம்மதித்தாள்.

மகிமா பிரணவ் இருவராலும், நந்தாவை சமாளிக்கவே முடியவில்லை. ராமின் வீட்டில் இருந்து குழந்தையை பார்க்க இதுவரை யாரும் வரவில்லை. ராம் தான் யாரும் இப்பொழுது வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான். குழந்தையை எப்பொழுது வீட்டுக்கு அழைத்து வருகிறோமோ அப்பொழுது பார்த்தால் போதும் என்று அவன் சொல்லி விடவே, குழந்தையின் உடல் நலம் கருதி யாரும் வரவில்லை. அத்துடன், நந்தாவை பார்க்க வேண்டும் என்று ஹாஸ்பிடல் சென்றால் கூட நந்தா எப்படி நடந்து கொள்வாள், ஏதேனும் ரசாபாசம் ஆகிவிட்டால்? எல்லோரும் ரொம்பவே பயந்தார்கள்.

எல்லோரும் இருந்தும் கூட, இந்த நிலையில் தனித்து விடப்பட்டான் ராம். ராமின் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பேத்தியை பார்க்கும் ஆவல் மனம் நிறைய உண்டு. இன்னும் சொல்லப்போனால் ராமின் பாட்டிக்கு தனது கொள்ளு பேத்தி மீது ஆசை அதிகம். ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலையில், குழந்தையின் நன்மைக்காக பிரார்த்தனை செய்வதை தவிர அந்த குடும்பத்திற்கு வேறு வழி இல்லை.

விஷயம் கேள்விப்பட்ட சியா ஷ்யாம் இருவரும், நந்தாவை பார்க்க செல்லவில்லை. ஆனால் மருத்துவமனை வளாகத்தில், ராமை சந்தித்தார்கள்.

ராமின் நிலை கண்டு ஷ்யாம் சியாவின் முகம் பார்த்து முடிஞ்ச நேரம் சியா வந்து உன்னை பார்ப்பா ராம். எது வேணும்னாலும் என்கிட்டயும் சியா கிட்டயும் கண்டிப்பா கேளு. நாங்க இருக்கோம் உன்கூட "என்றான்..
சியா ராமின் கைகளை பிடித்து கொண்டு,"ஆமா ராம்... எதுக்கும் யோசிச்சு கவலை படாதே!"என்று கணவன் சொன்னதை வழிமொழிந்து விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

காரில் வரும்போது ஷியாம் "சியாவிடம், முடிஞ்சா நந்தா ஹாஸ்பிடல்ல இருக்கிறவரைக்கும் டெய்லி ராம் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு சியா. நானும் வேலை குறைவா இருக்கும் பொழுது உன்கூட வரேன்."
"ஹான்.. வரும்போது ஏதாவது புட் எடுத்துட்டு வா அவனுக்கு... என்றான். "
அவன் குரலில் ராம் மீதான கரிசனம் தெரிந்தது.

சரி என்று தலையாட்டினாள் சியா. அவள் மனதில் ர'ாம் இவ்வளவு நல்லவன்.. அவனுக்கு மனைவி அவனை புரிந்து கொண்டு நடப்பவளாக வந்திருக்கக் கூடாதா... 'என்று தான் தோன்றியது.

ஷியாம் சொன்னபடிக்கு, அடுத்த பத்து நாட்களுக்கும் தினமும் ராமை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் சென்று வந்தாள். ஒரு சில சமயங்களில் ஷ்யாமும் அவளுடன் இணைந்து கொண்டான்.

மஹிமா பிரணவ் இருவரையும் கூட சில சமயங்களில், சியா சந்தித்தாள். மஹிமா மூலம் குழந்தையின் நிலை அறிந்த சியா அவளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுவரை குழந்தை பற்றி, சியா நேரடியாக ராமிடம் பேசியது இல்லை.

குழந்தைக்கு, நந்தா சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று, அறிந்து கொண்டவளுக்கு இயல்பாகவே இருக்கும் தாய்மை உணர்வு அந்த குழந்தையை தான் எடுத்து பால் புகட்டினால் என்ன என்று தோன்றச் செய்தது.
தான் நினைப்பது தெரிந்தால் கூட பிரச்சனையாகக் கூடும் என்று தன்னை கட்டுப்படுத்த முயற்சி செய்தாள்.

மகிமாவிடம், தன் உணர்வுகளை அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் இயற்கை? வீட்டில் சியாவின் பிள்ளை பசியில் அழுகிறானோ இல்லை இவளின் தாய்மை உணர்வு எதுவோ , இங்கு இவளுக்கு பால் சுரக்க ஆரம்பித்துவிட்டது.

மருத்துவமனையில் இருந்து ஷ்யாமின் வீடு பத்து நிமிடம்தான். சியா வீட்டுக்கு அவசரமாக கிளம்ப, அதற்குள் அவள் ஆடை நனைய ஆரம்பித்துவிட்டது.

இவள் நிலை கண்ட மகிமா அங்கு இருக்கும் நர்சிடம் சொல்ல, நர்ஸ் உடனே "இங்க 'தாய்பால் வங்கி ' இருக்கு. ட்ரை பண்றீங்களா "என்று கேட்டார்.
ஒரு நொடி யோசித்த சியா, மஹிமாவிடம் "உங்க பேத்திக்கு எடுத்து விடவா" என்று கேட்டுவிட்டாள்.

மஹிமாவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவர் தயங்க, நர்ஸ் உடனே சரி வெயிட் பண்ணுங்க என்று நந்தாவின் குழந்தையை அறையில் இருந்து கொண்டுவந்து கொடுத்தார். நந்தா நடக்கும் விஷயங்கள் தெரியாது ஆழ்ந்த உறக்கத்தில்.

நந்தா குழந்தையிடம் நடந்து கொள்ளும் முறை அவருக்கும் தெரியும்தானே...

மஹிமா ஒன்றும் சொல்லவில்லை. சியா அருகில் வந்ததும் பாலின் வாசம் குழந்தை அதனையும் ஈர்த்ததோ!
சியா குழந்தை அவளை அணைக்க, பாலுக்காக குழந்தை அவள் அமுத குடத்தை முட்டியது.

குழந்தை பசியாறும் அந்த நொடி மஹிமா, சியா இருவரின் கண்களிலும் கண்ணீர்.

சியா வீட்டில், ஷ்யாமின் பாட்டியிடம், சியா கொடுத்து சென்ற தாய்பால் போதலில் அவள் மகன் பசியாறிக் கொண்டிருக்கிறான்.

சில சமயங்களில் எது எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.
இவையெல்லாம் ராம் ஷ்யாம் நந்தா மூவருக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்...?
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top