Subageetha
Well-known member
காதலை சொல்லும் கணம் மிகவும் கனமானது. அந்த அனுபவம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமலே அவர்கள் இருவருக்குமான காதல் ஒப்புக்கொள்ளப் பட்டது.அதில் ஒரு ரோலர்க்கொஸ்டர் பயணம் செய்ய இருவரும் மனதளவில் தயாராகிவிட்டார்கள்.
சேர்ந்து சுற்றவும், ஒருவருக்கொருவர் தேவையானவற்றை பரிசளித்துக் கொள்வதிலுமே ஆரம்பகால நேரம் பறந்தது.
ராம் தனது வீட்டை பற்றியும், தனது உறவுகளை பற்றியும் தான் திருமணம் முடிக்க இருக்கும் நந்தனா விடம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாலும் அவள் கவனம் நிச்சயம் அவற்றில் இல்லை. ராம் அவனுக்கு அவனது சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் அவனவளிடம் பகர வேணும்.
நந்தனா ஒருமுறை கூட தனது வீட்டை பற்றி பேசியதில்லை. அவன் ஏதாவது கேட்டாலும் சரியான பதில் வராது. எப்படியாவது அவனை வேறு விஷயங்களுக்கு இழுத்து செல்லும் திறமை அவளுக்கு உண்டு!
அவன் தன் குடும்பம் பற்றி பேசும்போதெல்லாம் நந்தனாவுக்குள் ஒரு தீ எரிகிறது. பொறாமை எனும் அந்த நெருப்பை அவள் அணைக்கவில்லை. மாறாக இறுக அணைத்துக்கொண்டாள்.
அவனிடம் நேராகவே ஒருமுறை சொன்னாள்... பாரு ராம் காது தீஞ்சு போற அளவுக்கு உங்க குடும்பம் பத்தி சொல்லிட்டே.. நௌ லெட்ஸ் ஸ்பீக் அபௌட் அஸ். வி ஹவ் டு பிளான் அர் ப்யூட்சர் என்று பட்டு தெறித்தார் போன்ற அவளது வார்த்தைகைகள் முதன் முறையாக அவனுள் பயத்தை விதைத்தது... இந்த உறவு சரி படுமா என்று. பட் அம் கமிடெட் என்று மனதை தேற்றிக் கொண்டான்.
அவளுடன் இருக்கும் நேரம் அவனுள் போதை ஏற்றியதுவும் நிஜமே!
வயதிற்குண்டான ஹார்மோன் வேலை. ஒரு வகையில் அந்த மயக்கம் அவனுக்கு தேவை பட்டதுதான்.
டோன்ட் பி சில்லி நந்தா... நா நான்னு சொன்னா இட் இங்க்லுட்ஸ் மை பேமிலி----ராம்.
பட் நா ன்னு சொன்னா இட்ஸ் ஜஸ் மீ என்று முடித்துவிட்டாள் நந்தனா.
என்ன என்று எதையும் இதுவரை இந்த பெண் தன்னிடம் பகரவில்லை என்பது கால தாமதமாக அதாவது ஏறகுறைய ஓராண்டுக்காலம் முடியும் பொழுது தான் அவனுக்குள் உறைத்தது.
ஆனாலும் அவளிடம் எதையும் கேட்பதற்கு அவனால் இயலவில்லை. ஏதோ ஒன்று அவன் வாயை திறக்க விடாமல் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. அவள் நேரடியாகவே சொல்லி விட்டால் உன் குடும்பத்தின் மீது உன் குடும்பத்தை பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று. அவள் உலகத்தில் அவளும் அவனும் மட்டும்தான்! எக்காரணத்தைக் கொண்டும் வேறு யாருக்கும் அதில் இடம் இல்லை என்பதில் அவள் தெளிவாக இருந்தாள்.
முன்புபோல் விடுமுறை நாட்களில் அவன் தன் பெற்றோரை பார்ப்பதற்கு செல்ல முடிவதில்லை. அதிக நேரம் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு கூட அவள் அனுமதிக்கவில்லை. இருவரும் ஒன்றாக இருக்கக் கூடிய நேரங்கள் அதிகமான காரணத்தால் அவனும் அவள் உள்ளே மூழ்கத் தான் நினைத்தான். அவனுக்கு அவளது பொசசிவ்நெஸ் பிடித்திருக்கிறது. அவளுடனான நேரம் பிடித்திருக்கிறது.இந்த 'பிடித்திருக்கிறது 'என்ற ஒற்றை வார்த்தைக்காக அவன் கொடுக்கப்போகும் விலை? அவனது ஆசையும் காதலும் அவனுக்கே வியப்புதான்! தன் குடும்பம் தவிர வேறு எதையும் அவன் இவ்வளவு நேசிப்பான் என்று அவன் நினைத்ததில்லை. நாடியதும் கிடையாது. ஆனால் இன்று எல்லாமே தலைகீழ்.
காதல் ஒருவரை இவ்வளவு தூரம் மாற்றக்கூடுமா? ஆம், மாற்றியே விட்டது. ராம் தன்னிலை மறந்து நந்தனா மீதான காதலில் திளைத்தான்.
நந்தநாவுக்கும் ராம் போன்ற அழகன் தன்னுடனே இருப்பது சந்தோஷத்தையும் பெருமையாகவும் இருந்தது. வழக்கமாக தனது வீட்டிற்கு விடுமுறையில் செல்லும் ராம் இந்த முறை நந்தநாவுடன் கேரளத்தை சுற்றினான்.
பத்து நாட்கள் விடுமுறை. வீட்டுக்கு அவ்வப்போது பேசியவன் தான் அப்பாவிடம் 'நா கேரளாவை சுத்தி பாக்க வந்திருக்கேன் ப்பா 'என்றான்.மறந்தும் பெண்ணை பற்றி பேசவில்லை.
அவன் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தா. அவள் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.
ராம், நீ ஏன் என்னோட வந்திருக்கன்னு உங்க அப்பாகிட்ட சொல்லல...--நந்தா
கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணோட ஊர் சுத்தி பாக்க வந்திருக்கேன்னு சொல்ல சொல்றியா நந்தா?
அவனது கேள்விக்கு அவளது பதில் மௌனம் மட்டும். ம்ம்... சொல்ல முடியாத அளவுக்கு இதுல தப்பு இருக்கா ராம்?
அவளது கேள்வியை எப்படி புரிந்து கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை.
பின்ன இது தப்பில்லையா? எங்க வீட்டுல கொன்னுடுவாங்க. வீட்டு பெரிவங்க காதுக்கு போச்சு பெரிய பிரச்சனை ஆகிடும் என்றவனை வினோதமாக பார்த்தவள், "ஸோ, இப்படி வர்றது தப்பில்ல... பட் வீட்டுக்கு தெரியாம பாத்துக்கணும், ஆம் ஐ ரைட் ராம் என்றுவிட்டு சிரித்த நந்தானாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் ராம்.
அவன் பார்வையை தயங்காது எதிர்த்துகொண்டவள் மனதில் சஞ்சலம்.இந்த உறவு எதில் போய் முடியும்... இவன் என்னை திருமணம் செய்து கொள்வானா இல்லை ஜஸ்ட் டைம் பாஸ் என்றுவிடுவானோ என்னும் திடீர் சந்தேகம்!
அவனை இழக்க அவள் தயாராக இல்லை.
இன்னும் நாலு மாசம் தான் மிச்சமிருக்கு ராம்...
ம்ம்ம்... ஆமா அதுக்கு பிறகு பேமிலி பிசினஸ் ரெகுலரா பாக்கணும் என்றான் ராம் லேசாக தூறும் வானத்தை பார்த்தபடிக்கு.
நானும் வேலை தேடணும். கேம்பஸ் செலக்ட் ஆச்சுன்னா ஓகே... இல்லாட்டி திண்டாட்டம் தான் ---நந்தனா.
ஒய் பேபி, உங்க பேமிலியும் பிசினஸ் கிளாஸ் தானே? தென் அவங்க கூட ஒர்க் பண்ணு.யூ பீல் லிட்டில் பெட்டர் ---ராம்.
அது சரி வராது டியர். இன் பாக்ட் எனக்கு அவங்க கிட்ட போய் நிக்கவும் இஷ்டம் இல்ல. என்னோட சொந்த கால்ல நிக்கணும் வித் அவுட் மை பேமிலி 'ஸ் ஹெல்ப். அப்போ தான் நா ஜய்ச்சதா அர்த்தம். ஐ வான்ன ப்ரோவ் மைஸெல்ப்... என்றுவிட்டு அமைதியானாள் பெண்.
ராமுக்குதான் என்ன சொல்வதென்று புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டான். அவளாக சொல்லாத வரை கேட்கப்போவதில்லை என்று உறுதி செய்துகொண்டான். ' தான் அவனது காதலன், தெரிந்து கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்று மறந்துவிட்டான். ஒரு வேளை கேட்டிருந்தால் சரியான முறையில் பல விஷயங்களை அவனால் சரியாக கையாண்டிருக்க முடியும்.
இருவரும் தங்கி இருக்கும் தங்கள் அறைக்கு வந்தார்கள். தனி அறைகள் தான். அது அவசியம் இல்லை என்று பெண்ணுக்கு இப்போது தோன்றியது. எப்படியும் அவனை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் யோசித்தாள்.
அவனை கைக்குள் வைத்துக்கொள்ள அவளது அன்பு மட்டும் போதும் என்று அவள் உணரவில்லை. நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவனுக்கு இயல்பாகவே காதலி மீதும் நம்பிக்கையும் நேசமும் இருந்தது. பெண்ணவள் அதையும் உணரவில்லை என்பதும் துரத்ருஷ்டம் தான்.
இருவரும் குமரக்கம் போகலாம் என்றது பெண். இன்னமும் ஆறு நாட்கள் மீதம். இருவரும் குமரக்கம் சென்று படகு வீட்டில் இரண்டு நாட்கள் தாங்குவதற்காக பார்க்கையில் ஒற்றை படுக்கை அறையுடன் தான் கிடைத்தது.
இருவரும் முதலில் யோசித்தாலும், பிறகு சரி, பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அவனுடன் இருக்கும் நிமிஷங்கள் அவளுக்குள் தித்திப்பு என்றால் அவளுடன் அவன் நிலை சொர்கம் என்று என்னும் காதல்!
முதல் நாள் இருவரும் படகு வீட்டில் ரசித்தார்கள். அங்கே நிற்கும் இடங்களில் இறங்கி சுற்றிப் பார்த்தார்கள். மிதமான சாரல் அவர்களை அள்ளிக்கொண்டது. இரண்டாம் நாள் பத்திரமணல் தீவில் இருவரின் மனமும் நெகிழ்ந்த நிலை. இது நடக்கும் என்று அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் இரவில் ராம் படகில் உட்கார என்று இருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிவிட்டான். ஆனால் இன்று அது சாத்தியப்படும் என்று இருவருக்கும் தோன்றவில்லை.
சரி தவறு என்ற நிலையை தாண்டி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் ஈடுபாடு அவர்களை அடுத்த கட்டம் நோக்கி நகரச் சொன்னது.
சுதாரித்துக் கொள்ளும் எண்ணம் நிச்சயம் இருவருக்குள்ளும் இல்லை. ராம் அவனை பேராழி என்று சுருட்டிக்கொள்ளும் அவசரத்தில் இருந்தாள் நந்தா.
தன்னை கொடுத்தாவது அவனை தன்னில் கட்டிவைத்துக்கொள்ளும் அவசரம், அவசியம் அவளுக்குள்.
எங்கே அவன் தன்னை விட்டு போய்விடுவானோ என்னும் எண்ணம் காதலை தாண்டி சில விஷயங்களை செய்ய அவளை தூண்டியது. அவனுக்கோ அவளது சிவப்பு நிறம் கலந்த பால் சருமத்தில் மூழ்கி எழும் அவசரம். அவனது ஹார்மோன்கள் அவளது நெருக்கத்தில் வேகமாக வேலை செய்ய விளைவு?
இரண்டு நாட்களுக்கான படகுவீடு சவாரி இன்னும் ஒரு நாள் நீண்டது. இருவராலும் ஒருவரை விட்டு ஒருவரால் இருக்க முடியவில்லை. தவறு செய்கிறேன் என்ற எண்ணம் ஒரு புறம், இளமையின் வேகமும் தேடலும் ஒருபுறம் இருவரையும் அலை க்கழிக்க வென்றது என்னவோ இளமை உணர்வுகள் தான்.
கருத்தரிக்காமல் இருக்க அந்த இரண்டு நாட்களும் நந்தா மாத்திரைகள் எடுத்துக்கொண்டாள். அவள் மனதில் இருப்பதை அவனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவளே குழப்பத்தில் இருக்கிறாள். எவ்வாறு மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலும்?
விடுமுறை முடிய இன்னமும் ஒரே நாள் என்ற நிலையில் சிந்திக்கும் பக்குவம் வந்தது ராமுக்கு.
என்ன செய்துவிட்டேன் என்று பதறியவன் அவளை அழைத்துக்கொண்டு கொடுங்கலூர் பகவதி கோவிலுக்கு சென்றவன் தேவியை சாட்சியாக்கி நந்தநாவின் உச்சியில் குங்குமம் வைத்தான்.
அவனை பொறுத்தவரை மூன்று நாட்களாக தனது மனைவியாக வாழும் நந்தனாவை தனது மனைவி எனும் அங்கீகாரம் கொடுத்துவிட்டான். இப்படி திடீர் என்று ராம் தன்னை திருமணம் செய்து கொள்வான் என்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவளுக்குள் சந்தோஷம், பெருமிதம்.
ஒருவாறாக விடுமுறை முடிந்து கோழிகோடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
அவள் முகம் இன்னும் பொலிவாக இருக்க அவளது தோழிகள் அவளை துருவி எடுத்தார்கள்.ராம் நந்தா இருவரும் ஒன்றாக விடுமுறை கழித்தது யாருக்கும் தெரியாது. அதை இருவரும் விரும்பவும் இல்லை.
பரீட்சை முடிந்து தொழிலில் கவனம் செலுத்த ராமும் வேலை தேட நந்தாவும் தயார்.
நந்தா வீட்டில் எதையும் சொல்லவேண்டாம் என்று முடிவெடுக்க, ராமுக்கு வீட்டில் எப்படி சொல்வது என்றும் குழப்பம். எப்படியும் அவளுடன் நாட்களை கழித்ததை சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை.
மனதையும் உடலையும் வெற்றி கொள்பவன் வெல்கிறான். ராம்?