JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 4

Subageetha

Well-known member
திருமணம் நடந்து விட்டது என்ற எண்ணமே பெண் அவளுக்குள் பரவசத்தை ஏற்படுத்தி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் பாடங் களில் அவளது கவனச்சிதறல். அவளது எண்ணங்கள் அந்த மூன்று நாட்கள் படகு வீட்டில் கழித்த நிமிடங்களில் உறைந்து நின்று விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த நாட்கள் என்பதிலேயே உழன்றது.

ராமுக்கும் அவனது மனம் அவளுடன் இறுக்கி அணைத்துக்கொண்டு ஒரே போர்வையில் சுருண்டு முத்தெடுத்த கணங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி ரசித்தது. அதில் அவன் ஹார்மோன்கள் மீண்டும் மீண்டும் அவள் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கலானான். இன்னும் நான்கு மரங்கள் மீதம் என்பது அவனைப் பொறுத்தவரையில் பெரிய பாரம். இருவரும் ஒரே கேம்பஸ் ஸில் தான் இருக்கிறார்கள். ஆனால் வெவ்வேறு அறைகள். காலை நேரத்தில் ஒன்றாகத்தான் ஓட்ட பயிற்சியும் உடற்பயிற்சியும். இருவருக்குமான தனி உலகத்தை படைத்து கொண்டார்கள். சொல்லப்போனால், நந்thaanவிட ராமின் மனதில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அவளை விட்டு பிரிந்து ஒரு கணநேரம் கூட இருக்க முடியாது என்கிற அளவிற்கு அவனது உடலும் மனமும் நந்தாவை தேடியது. நந்தாவுக்கு ராம் அளவிற்கு தாக்கம் இல்லை. இன்னும் சொல்ல போனால் ராமின் இந்த நிலையை அவள் எதிர்பார்த்தாள், ரசித்தாள். அவனிடம் பேசும்போது இன்னும் கொஞ்சம் மாதங்கள் தான். பிறகு, இருவரும் ஒன்றாக வசித்து அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.

அவளது வார்த்தைகளில் இருந்த மயக்கம், ராமை எல்லாவற்றிற்கும் தலையாட்ட வைத்தது.

"ராம் இந்த முறை வச்ச டெஸ்ட் எல்லாத்துலயும் மினிமம் மாக்ஸ் எடுத்து பாஸ் பண்ணி இருக்கியாமே... ராகவ் சொன்னான் " என்று ராமின் அப்பா கூப்பிட்டு பேசிய பிறகுதான் 'தான் தன்னிலை கெட்டு இருக்கிறோம்'என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.
ராகவ், ராமின் அப்பாவுடன் பால்ய காலத்து நண்பர். ராம் படிக்கும் கல்லூரியின் கணக்கியல் பேராசிரியர். இவனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பொதுவாக அவர் தலையிட்டதில்லை. இந்த முறை மதிப்பெண்கள் குறையவும் வேறு வழி இல்லாமல் தன் நண்பனுக்கு அழைத்து சொல்லிவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு ராம் நந்தாவை பார்க்கவும் பேசவும் முற்படவில்லை. அவனுக்குள் குற்ற உணர்ச்சி.

நந்தா தனிமையை மீண்டும் உணரலானாள். அவளுக்கு நிலைமையை எப்படி கையாள்வது என்று தெளிவில்லை.

"ராம், உன்னோட பிரச்சனை என்ன.. நானும் கவனிக்கிறேன்... யூ ஆர் அவொய்டிங் மீ... ஐ கான்' ட்... "என்று தேம்பியவளிடம் உருகிப் போனான் ராம்.
அவளை இறுகி அணைத்துகொண்டவன், "வி ஆர் லோசிங் அர் கரெயர் பேப். யூ மஸ்ட் அண்டஸ்டாண்ட். ப்ளீஸ் கான்சென்டிரேட் இன் யுவர் ஸ்டடிஸ், ஆல்சோ அலோ மீ டு ஸ்டடி " என்று இறைஞ்சுபவனை வினோதமாக பார்த்தாள் நந்தனா.
இப்போது திடீரென இவனுக்கு என்னவாகி போனது?

ஆனால், அவன் சொல்வது நிஜம் தான். இந்த முறை அவளது மதிப்பெண்களுமே சொல்லி பெருமை படும் அளவிற்கு இல்லை. வேலை கிடைக்க மதிப்பெண்களின் அவசியம் அவளுக்கு தெரியும்.

இட்ஸ் ஓகே ராம்... காலம் நமக்காக வெயிட் பண்ணுது.. கொஞ்ச நாள் நாம தள்ளி இருக்கலாம் என்றுவிட்டு அவள் தனது அறைக்கு சென்றுவிட்டாள். அவள் சென்ற பிறகும் வெகு நேரம் அங்கேயே அமந்திருந்தான் ராம். அவளை பார்ப்பதை கூட கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேணும்... இந்த சஞ்சலம் நல்லது இல்லை என்று முடிவு செய்தவன் அவளுக்கு குறுஞ்சேதி அனுப்பிவிட்டு தனது அறைக்கு சென்றான். ஒரு வாரம் முழுவதும் அவளை பார்க்காமல், பேசாமல் பித்து பிடித்தவன் போல் தனது அறைக்குள் முடங்கினான். அவனுக்கு இந்த உணர்வு புதியதாய் படுத்தியது.

அவன் வருவான் என்று பார்த்திருந்த நந்தாவுக்கு ஏமாற்றம் தான். ஆரம்பம் முதலே மனதளவில் தனிமையை அனுபவித்தவளுக்கு இது ஒன்றும் பெரியாதாக தோன்றவில்லை. ஆனால், அவன் இவ்வளவு உருகுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இது அவள் மனதில் கர்வத்தை விதைத்தது அவனது காதல்.

இதுவரை நந்தா இவ்வளவு அன்பை அனுபவித்தது இல்லை. சிறு வயதிலிருந்தே வீட்டினரின் பாராமுகம், அலட்சியம் இவற்றை அனுபவித்து வந்தவளுக்கு இறக்கை இல்லாமல் பறக்கும் உணர்வு.

காதலா, கேம்பஸ் செலஷனா என்றால் அவளை பொறுத்தவரை வேலை என்பாள். வேலை கிடைத்த பிறகு ராமுடன் வாழ்க்கையை தொடங்கலாம் என்ற முடிவில் அவள்.

அலை பேசியில் அழைத்து ராமிடம் அவள் இதையே சொல்லவும், ராம் மனதில் ஒரு தெளிவு. ராமின் நண்பன் கௌரவ் தினமும் நடத்தியவற்றை குறிப்பிடுத்து ராமின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் ராமின் மற்ற நண்பர்களுக்கும் நந்தனா அவன் வாழ்க்கையில் வந்து விட்டாள் என்பது வரை தெரியும். இவன் இங்கு இப்படி இருக்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை என்பது அவர்களுக்கு ஆச்சர்யம்!

நண்பன் அனுப்பி வைத்திருக்கும் குறிப்புகளை தொகுத்து படிக்க ஆரம்பித்து விட்டான் ராம். அவன் மனதில் நாட்கள் குறைவதின் கணக்கீடுகள்.

****************************************

மஹாதேவபுராவில் புதியதாக இவர்களது நிறுவனம் கட்ட ஆரம்பித்துள்ள கட்டடத்தை மேற்பார்வை செய்துவிட்டு, ஷ்யாம் அவனது அலுவலகம் திரும்பி கொண்டிருந்தான். அவன் அருகில் சியா. அவன் அலுவலகத்தில் சியா சேர்ந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. அவளது கட்டடங்கள் குறித்த ஆர்வத்தை அவதானித்தவன் தான் கட்டடங்களின் கட்டுமானத்தை பார்வையிட செல்லும் நேரங்களில் தன்னுடன் அவளை அழைத்து செல்வதை பழக்கமாக்கி கொண்டான். அந்த சிறு பெண்ணின் சுறுசுறுப்பும் வேலை செய்யும் பாங்கும் அவனை ஈர்த்தது. அவளால் இவ்வளவு பெரிய பொறுப்பை நிர்வகிக்க முடியுமா என்று முதலில் தயங்கியவன்தான். பின்னர் என்ன யோசித்தானோ அவளை தனது பி. ஏ வாக சேர்த்துக் கொண்டான். அவள் கற்றுக்கொள்ள திணறியது எல்லாம் ஒரு வாரம் தான். சுருக்கெழுத்து பயிற்சியும் கணினிப் பயிற்சியும் பெற்றிருந்த
வளுக்கு, நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

கட்டிட வரைபடங்களை அவள் பார்க்கும் பார்வையில் ஏக்கம் தெரியும். பாதியில் படிப்பை விடுத்து வேலைக்கு வந்ததற்கு அவள் குடும்ப சூழ்நிலை காரணம் என்று புரிந்து கொண்ட ஷ்யாமுக்கு பாவமாக இருந்தது. ஆனால் இந்த விஷயங்களில் அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனாலும், என்றாவது ஒரு நாள் அவள் மீண்டும் படிப்பதற்கு வாய்ப்பு கிட்டினால்? அதனால் தான் அவன் தன்னுடன் அவளை அழைத்துச் செல்வது. அங்கு பேசப்படும் ஒவ்வொரு விஷயங்களையும் மனதில் குறிப்பெடுத்துக் கொள்வாள் சியா.

சியா அலுவலகத்தில் ஷ்யாமுடன் பேசுவது சரளமான ஹிந்தியில் தான். கேட்டதற்க்கு "நா படிச்சது ஜெயின் ஸ்கூல். ஸோ, ஹிந்தி படிக்கும் போதே பேச வந்தாச்சு பாஸ்" என்று சிரித்தாள்.

அவளது சிரிப்பு அவனையும் தொற்றிகொண்டது.கொஞ்சம் அவளுடன் பேசுவதும் அவனுக்கு இலகுவாக உணர்ந்தான். கட்டிடக்கலை தொடர்பான புத்தகங்கள் வாங்கினால் அவளிடம் படிக்க கொடுத்து "புரியுதா படிச்சு பாரு "என்பான்.

சைட் என்ஜினீயர் வராத சமயங்களில் அவளை 'அரை நாள் சைட் போய் பாத்துட்டு வா'என்று அனுப்பி வைப்பதை பழக்கம் ஆக்கிக் கொண்டான்.

ஷ்யாம் அலுவலகம் நுழைந்தவுடன் சூடாக காபி வேண்டும். பெங்களூரு வாசிகள் கொஞ்சம் நன்றாகவே காபீ போடுவார்கள். சியாவின் வேலை அவனது காபீயில் ஆரம்பமாகும். அநேகமாக அவன் மதியம் சாப்பிட செல்லும் வரை இவளாலும் போக முடியாது.

அவனும் தொழிலில் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறான். கரணம் தப்பினால் மரணம் நிலை. அவனால் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. வீட்டினர் முன் விஸ்வரூப வெற்றியை காட்டியாகவேண்டும். தானும் இதே குடும்பத்தில் பிறந்தவன் தான். தொழில் செய்யவும் தெரியும் வாகை சூடவும் தெரியும் என்று நிரூபிக்க இத்தனை போராட்டங்கள்.

கடந்து போன நாட்களில் அவன் அம்மா, பாபி இருவரும் பேசினார்கள். அவனது பாபி(அண்ணி )சொந்த மாமன் மகள் தான். சிறு வயதிலிருந்தே இங்கே இவர்கள் வீட்டிலேயே வளர்ந்தவள் என்பதால் இவன் மீது உரிமையுடன் பேசுவாள்."நீ என்ன நினைச்சிருக்கே ஷ்யாம், இங்க உஜ்ஜயின் ல தான் உன்னோட பேமிலி இருக்கு. பெங்களூரு போனவன் இங்க வந்து வருஷம் ஆச்சு... திவாளி சமயம் நீ கண்டிப்பா வரணும், புரியுதா "என்று சத்தம் போட்டாள். அண்ணா, அப்பா சித்தப்பா என்று தொழில் சண்டை போட்டாலும், அவன் பிரியம் அங்குதான்.

ஷ்யாமின் அப்பாவும் சித்தப்பாவும் இவனது அலுவலகம் பார்க்க நடுவில் வந்து போனார்கள். தன்னை முற்றும் முழுவதுமாய் விலக்கி விடவில்லை என்று அவனுக்கும் ஒரு தைரியம்.

ஆனால், தொழில் என்று வரும் பொழுது யாரையும் தலையிட அவன் அனுமதிக்கப் போவதில்லை. மீண்டும் அவனது யோசனைகள் சியாவிடம் திரும்பியது. மாலை ஐந்து மணிக்கு கிளம்பும் பெண் பிரெஞ்சு வகுப்பு செல்கிறாள். அவளது போராட்ட குணம் அவனுக்கு பிடித்திருக்கிறது. அவள் முகம் காண்பிக்கும் நேர்மை, கண்ணியமாய் உடை அணியும் பாங்கு, எப்போதும் அளவாய் மேக்கப். நிரந்தரமாய் அவளை அடையாளப் படுத்தும் புன்னகை...

இத்தனை மாதங்களில் சியா யாருடனும் நின்று அரட்டை அடித்து ஷ்யாம் பார்த்ததில்லை. எல்லோருடனும் நட்பு புன்னகை மட்டும்!
'நா வந்திருக்கறது வேலை செய்ய 'என்ற உடல் மொழி எப்போதும்...

இப்போதெல்லாம் ஷ்யாம் சியா பற்றி அதிகமாக யோசிக்கிறான். ஆனால், சியாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறான். அவனுக்கு ஏதோ ஒரு வகையில் சியா தன் அருகில் இருந்தால்... என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

சியா...:)

 

Members online

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top