JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 5

Subageetha

Well-known member
சியா அன்று காலையில் இருந்தே சற்று பரபரப்பை ஏற்றிருந்தாள். இன்று ஷ்யாமின் நிறுவனம் ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்து பெரிய ப்ராஜெக்ட்டின் ஒன்றின் பகுதியை எடுத்து செய்ய கையெழுதாகிறது. ஏறத்தாழ ஆயிரத்து ஐனூறு குடியிருப்புகள் கொண்ட கேட்டட் கம்யூனிட்டி, அதில் சுமார் ஐனூறு குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. சியாவால் நிச்சயம் இந்த சந்தோஷத்தை தாங்க முடியவில்லை.

இந்தக் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடங்கள் முதல் இவள் பார்த்திருக்கிறாள். பார்த்ததும் அசந்தும் இருக்கிறாள். இது போல கட்டடங்கள் கட்டுவதில் தானும் பங்குகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் சிவில் எடுத்து இவள் படித்ததே!

ஒருவேளை படிப்பையும் ஒழுங்காக முடிக்க முடிந்திருந்தால் இவள் கூட, சைட் என்ஜினீயர்ராக எங்காவது வேலை பார்த்திருக்கக்கூடும். இவ்வளவு பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு இவளது தொடர்பு கட்டிடங்களுடன் என்ற அளவில் இருந்திருக்கும். ஆனால் இவளது தலையெழுத்து இவளை, கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் பி ஏ வாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும் கட்டிடங்கள் மீதான இவளது காதல் குறைந்தபடாக இல்லை.

இவளை புரிந்து தான் ஷ்யாம் இவளை தன்னுடன் கூட்டிக்கொண்டு செல்கிறான். அவன் கண்களும் கட்டிடங்கள் மீதான காதலை வெளிப்படுத்தி இவள் பார்த்திருக்கிறாள்தான்!
இருவரின் ஈடுபாடும் ஒரே விஷயத்தில்.

சியாவின் யோசனைகள் அவள் முகத்தில் தெரிந்ததோ? அவள் அம்மா அவளை குறுகுறுவேன பார்த்து வைத்தாள். அதையும் கவனிக்கும் நிலையில் சியா இல்லை.

அவள் அப்பா ராஜரிஷி,"என்னடா சியா, முகம் முழுசும் யோசனை காமிக்குது... ஏதாச்சும் பிரச்சனையா "என்று கேட்ட பிறகுதான், தன் நிலை அடைந்தாள் சியா.

"இல்லப்பா.. இன்னிக்கு ஆபீஸ் சீக்கிரம் போகணும். முக்கியமான டீல் கையெழுத்து ஆகுது. போய் பேப்பர்ஸ் சரியா இருக்கானு பாக்கணும். அதாம், என்றுவிட்டு துரித கதியில் தயாரானாள்.

அவளது ஆசை புரிந்தும் கையாலாகாத் தனத்தில் ராஜாரிஷி தன் முகத்தை தினத்தந்தி பேப்பருக்குள் மறைத்துக்கொண்டார்.

எதையும் கவனிக்கும் நிலையில் சியா இல்லை. ஒன்று விட்டால் இன்னொன்னு... எப்பாடு பட்டாவது முன்னுக்கு வந்தே தீருவேன் என்று அவள் மனது சபதம் எடுத்துள்ளது.

நிறைய பெண்கள் தங்களின் வாழ்க்கை குடும்பத்தை நிலை நிறுத்த என்று அர்ப்பணிக்கும் குழுவில் சியாவும் ஒருத்தி.

என்றுமே பட்டாம்பூச்சி வாழ்க்கை அவளுக்கு இல்லை. படிப்பை முடிக்க முடியுமா என்ற கேள்வி முன் நின்ற பொழுது, 'முடியாது' என்ற பதிலில் அவள் துவண்டு நின்றது சில நாட்கள் தாம். பிறகு தன்னை நிலை செய்துகொண்டவள், குடும்ப பாரம் சுமக்க தயாராகிவிட்டாள்.

எட்டு மணிக்கு அவள் தயார். ஆட்டோவில் சென்று வவுச்சரில் கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ளலாம் தான். ஆனால், வீட்டிலிருந்து அலுவலகம் வர வவுச்சர் சரி இல்லை. இன்று இருக்கும்
நிர்பந்தத்திற்கு இவள் பஸ்ஸில் சென்றால் நிச்சயம் ஷ்யாம் திட்டுவான் என்று மனதில் நினைத்தவாறே, பஸ்சில் ஏறினாள் சியா.

ஒன்பது மணி அலுவலகத்திற்கு எட்டு நாற்பது மணிக்கு உள்ளே நுழைந்தவள் தன் காபினுக்குள் நுழைந்தால், அவளுக்கும் முன்னர் ஷ்யாம் அலுவலகத்தில் அவன் அறையில் அமர்ந்துகொண்டு தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் முகம் தீவிர யோசனையில் இருந்தாலும், சற்றே கனிந்து இருந்தது. போர்மல்ஸில் அவனை பார்க்க பார்க்க சியாவால் கண்களை இமைக்க முடியவில்லை. தினமும் போர்மல்ஸ்ஸில் அவனை பார்ப்பதற்கும் இன்றைக்குமான வித்யாசங்கள் நிறைய இருந்தது. அவனிடம் எப்போதும் இருக்கும் இலகு தன்மை குறைந்து, இத்தனை மாதங்களாய் இவனிடம் வேலை பார்க்கும் சியாவுக்கே இவனது இந்த பரிமாணம் முற்றிலும் புதியது. பக்கா தொழிலாதிபனாய் தன் முன் அமந்திருக்கும் ஷ்யாம் முன் போவதற்கு அவளுக்குள் முதன் முதலாக பயம் கவ்விக்கொண்டது. தயங்கியபடிக்கு மென்னடை போட்டு வந்தவளின் பர்ஃபியும் வாசனை அவளை நோக்கி அவனை நிமிர்ந்து பார்க்க செய்ய ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் இருவரது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க அதன் வீரியம் தாளாமல் பாவை தலை குனிந்தாள்.

அவளது படபடப்பு கலந்த இந்த புதிய பரிமாணம் ஷ்யாமுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இத்தனை நாட்களில் அவளிடம் பெண்களுக்கு என்று கூறப்பட்டுள்ள எந்த வித்யாசமும் அவனுக்கு உறைத்தது இல்லை.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை இவள் தான் சியா. இன்று அவள் நடத்தையில் சற்றே கோவம் கொண்டவன் "என்னை நிமிர்ந்து பாரு சியா, வாட் ஹப்பேன் டு யூ 'என்று கடிந்து கொண்டான்.

நோ ஷ்யாம் சார், உங்களை இன்னிக்கு பாக்க கொஞ்சம் பயமா இருக்கு... லிட்டில் நெர்வேஸ்நெஸ். தட்ஸ் ஆல் என்றவிட்டு வழக்கம் போல் தனது வேலைகளை தொடங்கினாள். சிறு தோல் குலுக்களுடன் ஷ்யாமும் தனது தன் வேலையில் முழு வீச்சுடன் இறங்கிவிட்டான்.

காலை பத்தரை மணிக்கு விட்டல் மாலியா ரோட்டில் இருக்கும் அந் நிறுவனத்தில், ஷ்யாம், அவனுடன் அவன் அலுவலகத்தில் பணி புரியும் மூன்று இன்ஜினிர்கள் மற்றும் சியா... அவர்கள் பேசும் விஷயங்களை குறிப்பிடுக்க அவள் சென்றாலும் பேச்சின் சாராம்சாமும் கட்டிடத்தின் ப்ரம்மா ண்டமும் அவளுக்கு சொல்லோணா உணர்வை கொடுத்தது.


இதோ அதோ என்று நிறுவனம் ஆரம்பித்து நான்கு வருஷங்கள் ஓடிவிட்டது. ஷ்யாமுடன் நிறுவனம் ஆரம்பிக்கும் சமயம் வேலையில் சேர்ந்தவர்களில் சியாவும் ஒருத்தி. இத்தனை வருஷங்களில் அவளிடம் நிறைய மாற்றங்கள். இருபத்து நான்கு வயதிற்கு உண்டான தோற்றப்பொலிவுடன், பேரழகு. எப்பொழுதும் ஷ்யாமுடன் இருப்பதால் அவனின் தாக்கமும் இவளிடம். பிரெஞ்சு கற்பதில் நான்கு லெவல் முடித்து விட்டாள். ஞாயிற்று கிழமைகளில் வகுப்புகள் எடுக்கிறாள்.
அவளது தங்கையும் அவள் இஷ்டப்படி இன்ஜினியரிங் படிக்கிறாள். இது கடைசி வருஷம்.

நிறுவனம் முன்னேற, அவளது பொறுப்புகளும் அதிகரித்து விட்டது. வராத்தின் ஆறு நாட்களும் அவள் இறக்கை கட்டி பறக்கும் நிலையில், ஷ்யாம் அவளுக்கு நிறுவனத்தின் தேவை அடிப்படையில் கார் வாங்கி கொடுத்தான்.
சியா அக்கௌன்ட்ஸ் பற்றிய புரிதலுக்காக பி காம் படித்தாள் தொலைதூர கல்வியில்.

அடிக்கடி அவளுக்கு தோன்றும், தான் என்னவாக நினைத்தோம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று.
வாழ்க்கை சக்கரம் சுழலும் வழியில் செல்ல முடிவெடுத்தாயிற்று. கலங்கி நிற்க அவசியம் இல்லை.

ஒருநாள் சியாவின் தங்கை ஊர்மிளா சியாவிடம், "அக்கா நா ஒருத்தர விரும்புறேன். அவங்க எங்க காலேஜ் ல கெஸ்ட் லெக்ட்சரரா வந்தாங்க. இப்போ, கவெர்மென்ட் காலேஜ் ல வேலை கிடைச்சு போய்ட்டாங்க "

சற்று ஊர்மிளாவை ஊன்றி பார்த்தவள், "இதெல்லாம் நமக்கு சரி வராது ஊர்மி. விட்ரு" என்றாள்.

தமக்கையின் வார்த்தைகள் ஊர்மிக்கு கோவத்தை கொடுத்தது. " ட்ரை பண்ணலாம் க்கா... அவரில்லாம என்னால வாழ முடியாது."


'இப்போ தான் உனக்கு கேம்பஸ் செலக்ட் ஆகி இருக்கு ஊர்மி. புரிஞ்சுக்கோ... மூணு வருஷமாவது வேலைக்கு போனாதான் உனக்கு உலகம் புரியும். கைலயும் காசு சேர்ந்தா இன்னும் கொஞ்சம் நல்லபடிக்கு கல்யாணம் செய்யலாம். மரியாதையா இருக்கும்'.

அக்காவின் பேச்சு வேப்பங்காயாய் கசந்தது ஊர்மிளாவுக்கு.
"முடியாதுக்கா, என்கிட்ட டைம் இல்ல,

அக்கா தங்கை இருவரும் பேசிக்கொள் வதை அடுக்களையில் வேலை செய்துகொண்டே சியாவின் அம்மா கேட்டுக்கொண்டிருக்க அவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

அந்த ஏதோ ஒன்று, அவரை புரட்டிப் போட்டது. திருமணம் ஆகாத, அந்தரங்க உணர்வுகள் பற்றி சற்றும் இந்த நொடிவரை சிந்தித்திராத சியாவுக்கு ஊர்மிளை சொல்வது புரியவும் இல்லை. ஆனால், பெரியமகளை பற்றிய பெருமையும்,இந்த பெண்ணை இன்னும் எவ்வளவு உறிஞ்சுவது யோசனையும் ஒருசேர ஏற்கனவே மனதளவில் துவண்டு கொண்டிருந்த சியாவின் அம்மாவுக்கோ ஊர்மிளா சொன்ன வார்த்தைகள் சுட்டது. எப்படிப்பட்ட சுயநலம்!

நேராக படுக்கை அறைக்குள் வந்தவர் ஊர்மிளாவை பார்த்து " என்ன ஊர்மி... எதுக்காக காலையிலேயே வாக்குவாதம் செய்யுற? என்ன விஷயம்... என்று நேரடியாக கேள்விகளை தொடுக்க, இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவளாக, "இல்லம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க... அதுவும் நான் காதலிக்கிறவரையே... என்று சட்டென்று சொல்லிவிட்டாள் ஊர்மி.

" ஓ அதுக்குதான் நேரம் இல்லைன்னு சொன்னியா... "அம்மாவின் நேரடி தாக்குதல். இந்த தாக்குதலை சத்தியமாக ஊர்மி எதிர்பார்த்திருக்கவில்லை, என்பதை அவள் பார்வையே சொல்லிவிட்டது.
ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவதற்கு தயாராக இல்லை.
' அவங்களுக்கு வேற இடத்துல பொண்ணு பாக்குறாங்கம்மா... அவரில்லாமல் சத்தியமா நான் இல்ல. இதுக்கு மேலயும் நான் வெயிட் பண்ண அவர தார வாத்துட்டு தான் உக்காரணும். அதுக்கு நான் தயாரா இல்ல.

தன்னை சுதாரித்துக் கொண்ட சியா ' சரி ஊர்மி,அவங்க பேர் என்ன? என்றாள்.

அவங்க பேரு இளங்கோ. தமிழ் ஆளுதான். அவங்க தாத்தா காலத்துல இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க.

இப்போ P.hd பண்ண போறாங்க... என்றும் முணுமுணுத்துக் கொண்டாள். தங்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் நல்ல இடம்தான். அதில் சந்தேகமில்லை. பேசிப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் என்னவென்று புரியும்.

அவர்கள் வீட்டில் இந்த காதலுக்கு ஒப்புக் கொள்வார்களா என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இந்தப் பெண் பிடிவாதமாய் நிற்கிறது.

சரிடா அட்ரஸ் மத்த டீடைல்ஸ் குடு.ட்ரை பண்ணலாம்... என்ற முடித்துவிட்டு சியா தனது அலுவலகத்திற்கு வந்து விட்டாள்.

வீட்டில் ராஜரிஷி வழக்கம்போல் எதுவும் தெரியாதது போன்ற பாவனையில் அமைதியாக இருந்துவிட்டார். எப்படியும் இந்த திருமணத்தை செய்து வைப்பதற்கு அவரிடம் சல்லி காசு கிடையாது. மூத்த மகளின் முகத்தை பார்க்க வேண்டிய நிலையில் அவளது சம்மதமும் அவளுக்கு வரும் வருமானமும் முக்கியமாகிறது. தனது கையாலாகாத்தனத்தை வாய் திறந்து சொல்லாவிட்டாலும் கூட எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு வகையில் ராஜரிஷி அவர் விலகி இருந்தார். இரண்டு பெண்களின் தகப்பன் இப்படி இருக்கலாமா என்ற ஆதங்கம் அடிக்கடி எனக்கு வருகிறது. என்னதான் மூத்தமகள் சம்பாதிக்கிறாள்,குடும்பத்தை ஏற்று நடத்தும் தைரியம் அவளுக்கு இருக்கிறது என்றாலும் கூட அவளிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்புவித்து விட்டு ஒதுங்கி நிற்பது எந்த வகையில் நியாயம்?
குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற நிலையில் சியா. அவள் மாதா சீதா போல் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம்?

ஆனாலும் அவள் பொறுமையாகத்தான் இருக்கிறாள்.
எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் பார்க்கிறாள்.

தங்கையின் இந்த புதிய முகம் அவளுக்கு புதியதாக இருக்கிறது. தன்னைப் போலவே தனது தங்கையும் குடும்பத்தைப் பற்றி யோசிப்பாள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

சியாவுக்கு பெருமூச்சுதான் வந்தது. ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது என்பது சும்மாவா? இப்பொழுது வரை தங்கை படிப்பதற்காக ஆன செலவுகளை முற்றும் முழுவதுமாக சியா மட்டுமே ஏற்று இருக்கிறாள். அலுவலகத்தில் இதற்காக கடன் வேறு இருக்கிறது. அவற்றை அடைப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியவில்லை. ஊர்மி வேலைக்கு சென்றால் ஓரளவு நிம்மதியாக மூச்சு விடலாம் என்ற நினைத்திருந்தவளுக்கு காலையில் நடந்த உரையாடல்கள் அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. இன்னும் என்ன என்ற விரக்தியை தான் கொடுத்தது.


சியா வருவாள்.
 
Last edited:

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top