JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 6

Subageetha

Well-known member
என்னாச்சு மக்களே! மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா.. கதைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த கதைக்கு நா எதிர் பார்த்த அளவுக்கு இல்ல. நீங்க என்ன நினைக்குறீங்க ன்னு சொல்லுங்க. கதை பிடிக்கலையா சொல்லுங்க. சொன்னாதான் ஏதாவது மிஸ்டேக் இருந்தா சரி பண்ணிப்பேன். ரெஸ்பான்ஸ் இல்ல.. ஏன் இந்த ஸ்டோரி எழுதணும்னு தோணுது. பட் படிச்சிட்டு வர வாசகர்களை யோசிக்கிறேன்.
அப்டேட் கீழே!

சுபகீதா


கொடி 6


தலைவலி மண்டையைப் பிளந்தது சியாவிற்கு. காலையில் நடந்த விவாதத்திற்குப் பிறகு நேரே அலுவலகம் வந்தவள்தான்! அதற்குப் பிறகு அவள் அம்மா இரண்டு மூன்று முறை அவளிடம் பேசுவதற்கு அலைபேசியில் அழைத்தும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டாள் சியா. அவளுக்கு தெரியும் இது போன்ற விஷயங்களில் தான் எடுக்கும் முடிவுகள் சில சமயம் தனது வாழ்க்கை பாதையை கூட மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது என்று. ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. உடன் பிறந்தவளை தான் தாங்காமல் வேறு யார் பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவளை மாற்றி யோசிக்க வைத்தது.

தனக்கு முன்னதாகவே தங்கைக்கு திருமணம் செய்து அனுப்புவதை பற்றி எல்லாம் அவளுக்கு பெரிதாக எண்ணமும் சங்கடமும் நிச்சயம் கிடையாது.

ஆனால், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்றால் தான் தங்கை அவளுக்கு உலகம் புரியும் என்ற எண்ணம் கண்டிப்பாக உண்டு. தனது எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் அவள் மீது தனக்கு ஏதோ பொறாமையில் பேசுவது போல், ஊர்மி தர்க்கம் செய்ததோ அவளுக்குள் வேதனை உண்டு பண்ணி விட்டது. காதலை விட, கல்வியும் வேலையும் இந்த கால பெண்களுக்கு அவசியம் எண்டு அந்த சிறு பெண்ணுக்கு எப்படி புரிய வைப்பது?

அடுத்தது என்ன, ஊர்மி காதலிக்கும் அந்த பையனின் வீட்டில் போய் பேச வேண்டும். என்னவென்று பேச?

ஊர்மி 'தான்' அவரை காதலிப்பதாக சொன்னாளே தவிர பதிலுக்கு அவரும் தன்னை காதலிப்பதாக சொல்லவில்லை. தன் தங்கைக்காக போய் நிற்பது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

போதாகுறைக்கு கல்யாணம் செய்து வைப்பது என்றால் அதற்குத் தேவையான நகைகளும், கல்யாண செலவுக்கான பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?

இவளுக்காக, இவள் படிப்புக்காக வாங்கிய கடனை வேண்டுமானால் ஒரு சில வருஷங்களில் அடைத்து விடலாம். ஊர்மிளாவின் திருமணத்திற்கும் சேர்த்து கடன் வாங்கினால், நான் திருமணம் செய்து கொள்கிறேனோ...இல்லையோ... வாழ்நாள் முழுவதும் என்னால் கடனாளியாக கழிக்க முடியுமா?

எனக்கும்கூட வயதாகும். அதற்குள் வீடு வாசல் என்று வாங்கி வைத்தாக வேண்டும். பெற்றோர்கள் வயதாகும் போது அவர்களுக்கு தேவையானதை செய்வதற்கும் கையில் பணம் இருக்க வேண்டும். ஒருவரைப் பற்றி மட்டுமே யோசித்து விட்டு, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து விட்டால் மட்டும் போதுமா?

ஊர்மி ஏன் என்னைப் பற்றி ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க வில்லை? இவர்கள் அனைவருக்காகவும் என்று பார்த்து பார்த்து எனது வாழ்க்கையில் ஆசைகளையும்,கனவுகளையும்,தொலைத்து
விட்டு இன்று கிடைத்ததை வைத்துக் கொண்டு முன்னேறி வருவதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். கூட நின்று தோள் கொடுப்பாள் என்று நினைத்தேன்... ஆனால் அவளது வார்த்தைகளோ என்னை தேளாய் கொட்டுகிறது. அவரை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது என்கிறாளே... அப்படி என்றால் இவ்வளவு காதல் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது?
இத்தனை பிரச்சனைகளை என்னால் சமாளிக்க முடியுமா... என்றெல்லாம் சியாவின் மனது வெவ்வேறு கோணங்களில் சுய அலசலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

எப்பொழுதும் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நூறு சதவிகிதம் அதில் லயித்து போகும் சியா இன்று அவள் செய்யும் வேலைகள் எல்லாமே ஒரு முறைக்கு மூன்று முறை செய்வது என்று சொதப்பி கொண்டிருந்தாள். அவளது கவனம் இங்கு இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டான் ஷ்யாம் .

சியா ஷ்யாம் இருவருக்குள்ளும் பாஸ் - அவளிடம் வேலை செய்பவள் என்பதையும் மீறி புரிந்துணர்வு உண்டு. அவளுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்பது வரை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு மேல் அவள் தான் வாய்விட்டு சொல்ல வேண்டும். சொல்லப்படாத விசயங்கள் என்றுமே வெற்றியை நோக்கி விரைவில் பயணம் செய்வதில்லை. சியா நிலையும் இப்போது அப்படித்தான்! ஆனால் அதை ஷ்யாமிடம் சொல்லும் அளவிற்கு அவளுக்கு அவனிடம் உரிமை இருப்பதாக அவள் நினைக்கவில்லை. எப்பொழுதுமே, முதலாளி நட்புடன் பழகுகிறார் என்பதற்காக அவரிடம் உரிமை எடுத்து பழகுவது தனக்கு தானே குழி பறிப்பது போல் என்பது அவளது எண்ணம்.

மாலை வரை பொறுத்து பார்த்த ஷ்யாம் அவளிடம் "என்ன பிரச்சனை சியா... என்கிட்ட சொல்லலாம் "என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவளுக்கு சொல்வதில் இருக்கும் தயக்கம் அவனுக்கு புரிந்தது.

"எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பாக்குறாங்க சியா என்றான் சட்டென்று. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஷாம் எப்பொழுதுமே அவன் உஜ்ஜயின் பிராயாணம், அங்கு நடப்பவை, தனக்கு தோன்றும் பொழுதெல்லாம் சியா விடம் பகிர்ந்து கொள்வான்.

பதிலுக்கு புன்னகை முகமாக கேட்டுக் கொள்வது தவிர, இந்த நொடி வரை அதற்காக எந்த பிரதிபலிப்பும் அவளிடம் இருந்ததில்லை. ஆனால் தனது விஷயம் என்று வரும்போது யாரிடமும் மனதை திறந்து அவள் பேசியது இல்லை.

சரியோ தவறோ தனக்கான முடிவுகளை அவளே எடுக்க பழகி விட்டாள். இதற்கு அவளது பெற்றோரும் ஏதோ ஒரு வகையில் காரணம் தான். இத்தனை விஷயங்கள் நடந்த பிறகும் அவளது அம்மா மனதிற்குள்
மருகுகிறார்களே தவிர வாய் திறந்து தனது இரண்டாவது மகளை கண்டிக்க காணோம்... அதைப்போல் சியா வின் அப்பா ராஜரிஷி மூத்த மகள் தான் குடும்பத்தை நடத்துபவள். அதனால் அவளே எல்லாவற்றையும் சமாளிக்கட்டும் என்பது போல் அமைதி புறாவாக ஒதுங்கி தானுண்டு தன் நாட்கள் உண்டு என்று இருப்பதும் கூட சியாவின் செய்கைகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம்.

எது எப்படியோ இந்த பிரச்சினையை சமாளிக்கும் அளவிற்கு அவளுக்கு வயது போதாது என்பது உண்மை. அவளுக்கு இந்த சமயத்தில் கைகொடுக்க நிச்சயம் ஆள் தேவை. ஆனால் அந்த விஷயத்தை யார் செய்வார்? வீட்டில் உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் சுயநலமிகளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. சியா விற்கு இதெல்லாம் புரியாமல் இல்லை.
ஆனாலும் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. இதுதான் சியா.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஊர்மி காதலிப்பதாக சொன்ன, அந்த லெக்சரர் வீட்டிற்கு ராஜரிஷி அவர் மனைவி சியா மூவரும் சென்று பார்த்தார்கள்.
அவர்கள் வீட்டு வாயிலிலேயே அவர்களது செல்வ நிலை புரிந்தது. இதற்கு தகுந்தார்போல் திருமணம் செய்வது என்றால்... சியாவின் மனதிற்குள் நடுக்கம்.

ஆனால்,இந்த மாதிரி ஒரு இடத்தில் திருமணம் செய்து கொண்டு வந்தால் தனது மகள் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று கணக்குப் போட்டார்கள் ராஜரிஷியும் அவரது மனைவியும்.
இவர்கள் மூவரையும் பார்த்த பையனின் பெற்றோர் உள்ளே அழைத்து விஷயத்தை கேட்க, ஒருவழியாக தாங்கள் வந்த விஷயத்தை சொல்லி முடித்தாள் சியா.

மாடியில் தனது அறையில் இருந்த இளங்கோ, கீழே பேச்சு சத்தம் கேட்க தனது அறையிலிருந்து கீழே வந்தான். அவன் பார்வையில் பட்டது
சியாதான். ஏனோ பார்த்த முதல் பார்வையிலேயே அவளை பிடித்து விட்டது.

இளங்கோவின் பெற்றோர்கள்,இவர்கள் மூவரும் வந்து இருப்பதற்கான விஷயத்தை சொல்ல, தனது புருவத்தை சுருக்கி நிதானமாய் யோசித்தவன் ஒருவழியாக ஊர்மியின் முகத்தை கண்டுகொண்டான். 'பட் அவளை நான் காதலிக்கலேயே... அவளை நா பார்த்தது வெறும் ஸ்டுடென்ட்டா தான். அதுக்கும் மேலே யோசிக்கல ' என்றவனை மெச்சுத லாக பார்த்தாள் சியா.

ஒருவேளை இவனும் அவளை... என்று சியாவின் மனதில் ஆயிரம் எண்ண அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் இருந்தது. அப்படி இல்லை என்றதும் நிம்மதி உணர்வு.

அவளை பொறுத்தவரை கல்வி கற்று கொடுக்கும் ஆசான் அவரது மரியாதை தனி.

ஊர்மி விஷயம் சொன்னதும் இளங்கோ எப்படிபட்டவனாக இருக்கக்கூடும் என்று சியா யோசித்தாள்தான்.

தன்னையும் அறியாமல் அன்று ஷ்யாமுடன் பேசியது அவளுக்கு ஞாபகம் வந்தது. கூடவே அவனது குறும்பு முகமும்.

"வீட்ல எனக்கு பொண்ணு பாக்குறாங்க சியா... என்றவனை அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து வைத்தாள் சியா.
ஒண்ணுமில்ல.. இப்போ எனக்கு கல்யாணம் செஞ்சுக்க இஷ்டம் இல்லை. ஸோ.. உன்ன லவ் பண்றதா வீட்டில சொல்லிட போறேன் "என்றவன் உனக்கு ஓகே தானே...என்று வேறு கேட்டுத் தொலைத்தான்.

அவன் விளையாட்டுத் தனமாய் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தை அவன் உணர்ந்தானா, இல்லை வேறு எதுவும் அவன் மனதில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், பெண்ணின் இதயம் வேகமாக துடித்தது.

ப்ளீஸ் ஷ்யாம் சார்.. ஏற்கனவே பிரச்சனை ல இருக்கேன். நீங்க வேற... என்று திணறியவளின் அருகில் வந்தவன், " சரி, என்ன பிரச்சனை ண்ணு முதல்ல சொல்லு... அதை முடிச்சிட்டு என்னோட பிரச்சனையை பாக்கலாம் என்றான்.

அவன் குரலின் தாக்கத்தில் இப்போது நடக்கும் விஷயங்களை எந்திர கதியில் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு, சமாளிக்க முடியாத பாரத்தில் கண்கள் தம் வேலையை செய்ய, ஷ்யாம் அவளை தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.

கவலை படாத சியா.. நீ மேற்கொண்டு பாக்கவேண்டியதை பாரு... என்னோட பர்சனல் அக்கௌன்ட்லேந்து உனக்கு கடன் தரேன். நிதானமா திரும்ப கொடு... போதும் என்றுவிட்டான்.

ஆணின் மனதுக்குள் ஓடும் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் புரிப்படுமா ?
இவளது பிரச்சனை பற்றி பேசியவன் தான் முதலில் சொன்ன விஷயம் பற்றி திரும்ப பேசவில்லை.

சியாவுக்கு இப்போது அவன் திருமண செலவுக்கு கொடுப்பதாக சொன்ன கடன் பற்றிய நினைவு உண்டு. அவன் சொன்ன மற்றய விஷயங்கள்.. ம்ஹும்... சுத்தமாய் நினைவில் இல்லை.

அவனது திட்டமும் அதுதானே?

இளங்கோவின் வீட்டில் பெண் பார்க்க ஒருநாள் வருவதாகவும், பெண்ணின் ஜாதகம் கொடுத்து விட்டு செல்லுமாறும் சொல்லவே சியாவின் அம்மா தனது கைப்பையில் இருக்கும் ஊர்மிளாவின் ஜாதகத்தை எடுத்து இளங்கோவின் அம்மாவிடம் தர, சியாவின் மனதில் சுருக் எனும் கலவையான உணர்வு. இது நிச்சயம் பொறாமை இல்லை.

தன்னை பற்றி என்றேனும் அம்மா யோசித்திருக்கிறாளா என்று தோன்றியதை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

இப்போதெல்லாம் ஷ்யாமின் அருகாமை அவளது நுட்பமான நூதன உணர்வுகளை தூண்டி விடுகிறது.

அவனது உயரம், குடும்ப பாரம்பர்யம் இவற்றை மனதில் இருத்தி தனது மனதை அடக்கி வைக்கிறாள்.

அந்தந்த வயதில் வரும் உணர்ச்சிகள் தவறு இல்லை. ஹார்மோன்கள் சரியாக வேலை செய்தால் இந்த உணர்வுகள் நிச்சயம்!

ஆனால், பெண்ணை பெற்றவர்கள் இவற்றை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவேண்டுமே தவிர பெண்ணை இயந்திரம் போல் பாவித்து தமது பொறுப்புகளை அவளது தலையில் கட்ட கூடாது.
இது பிள்ளையை பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

சியாவின் வாழ்க்கை நிச்சயம் வலியே!
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top