JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

சங்கமித்ரா 4

சங்கமித்ரா

பகுதி 4

அந்த பெண் அவனைக் கடந்து சென்றதைக் கூட உணர முடியாமல் சிவசங்கரனை அந்த அதிர்ச்சி தாக்கி இருந்தது.

எத்தனை நிமிடங்கள் கரைந்ததோ... அவன் சிலையாக உறைந்து போய் நிற்க.

“அண்ணா என்ன அண்ணா இவ்வளவு நேரம்?.. சரி வந்து வண்டியை எடு” என்று பார்கவி அவனை நனவுலகுக்கு இழுத்து வந்தாள்.

ஒரு இயந்திரமாக தன் தங்கை சொன்னதும் காரில் ஏறி வீட்டை நோக்கி வண்டியை செலுத்தியவன் பார்கவி வீட்டில் இறங்கியதும்.. மின்னல் வேகத்தில் அவன் கைவண்ணத்தில் கார் அங்கிருந்து பறந்தது.

“அண்ணா உள்ள வா” என்று பார்கவி சொன்ன போது கார் கேட்டை எட்டி இருந்தது.

“இந்த அண்ணனுக்கு என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் நல்லா இருந்தவன் ஏன் திடீர்னு இப்படி அமைதியா மாறிட்டான்னு தெரியலையே” என்ற யோசனையில் உள்ளே சென்றாள்.

சிவாவின் மனம் உலை நீராய் தொதித்துக் கொண்டு இருந்தது.. அவனை ஒரு பெண் அடித்து விட்டாள் என்பதை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருந்தது. அது ஒரு விபத்து. அவள் கதவைத் தாளிட்டு இருந்தால் அப்படி ஒரு சம்பவத்தை அவள் தவிர்த்து இருந்திருக்கலாமே.

அப்படி பார்க்கப் போனால் அது அவள் தப்பு தானே.. அதற்கு அவனை கை நீட்டுவது எந்த வகையில் நியாயம் ஆகும்.

“ இதோட ரெண்டு முறை என் மனச ரணமா காயப்படுத்தி அவமானப் படுத்திட்ட... இந்த வலியை எல்லாம் நான் உனக்கு வட்டியும் முதலுமா திருப்பி தரல... என் பேரு சிவசங்கர் இல்ல..” என்று அவன் மனம் சூளுரைத்தது.

அவன் இருந்த மனநிலையில் அவளைத் தேடி கண்டு பிடித்து அவள் வாழ்நாள் முழுக்க அவனை நினைத்து நினைத்து அழும்படி எதாவது செய்தாக வேண்டும்.. என்று பல வக்கிரமான எண்ணங்கள் அவனுள் தோன்றின. ஒவ்வொரு நிமிடமும் அவள் முகமே அவன் கண் முன் வந்து வந்து போனது.

பீஷ்மரின் முள் படுக்கை போல் அவள் செய்த செயல் ஒவ்வோரு நொடியும் அவன் உள்ளம் எங்கும் அம்பாய் துளைத்து எடுப்பது போல் ரணமாய் வலியை ஏற்படுத்துதியது.

அவன் அலுவலகத்துக்கு செல்லாமல் கடற்கரையில் காரை நிறுத்தி இருந்தான். அவன் மணப்புழுக்கம் தீர.. பொங்கி வந்த அலைகளாவது அவனை குளிர்விக்கட்டும் என்று கடலை நோக்கிச் சென்றான்.

கடல் அலைகள் ஓய மறுத்தது போல் அவன் மன வேதனையும் குறைய மறுத்தது.

இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தவனை.. அவன் கைபேசி சினுங்கி.. அவனை சுய நினைவு பெறச் செய்தது.

“குட் ஈவ்னிங் சார், மீட்டிங்கிற்கு எல்லாரும் வந்தாச்சு சார்.. நீங்க எப்ப வருவீங்க சார்” என்று அவன் மேனேஜர் அழைக்க..

“ம்.. ஐ வில் பீ தேர் சூன்” என்று முடித்தான்.

*********
“ஏ.. மித்ரா எங்கடி திடீர்னு போயிட்ட.. டிரஸ்ஸைப் போட்டுப் பார்க்க உனக்கு இவ்வளவு நேரமா”.. என்று வர்ஷா அவள் தோழி மித்ராவை அதட்ட..

“போடி நீ வேற.. நானே கடுப்புல இருக்கேன்” என்று அவள் கண்கள் அனலாய் ஜொலிக்க..

“மித்ரா என்னடீ அச்சு... ஏன் இப்படி இருக்க” என்று தோழியின் நிலை கண்டு பயந்த வர்ஷா பதட்டத்துடன் கேட்க..

“வர்ஷா.. அந்த பையன் இன்னைக்கும் என்கிட்ட கலாட்டா பண்ணிட்டான் டீ” என்று மித்ரா வாட்டத்துடன் சொல்ல..

“அந்த பையனா? எந்த பையன்?

“அதான் டீ.. அன்னைக்கு கோவில் வாசல்ல வச்சு என்ன ஒரு கார்க்காரன் இடிச்சு... பிரச்சனை ஆயிடுச்சுன்னு சொன்னேன்ல”

”ஆமா நீ கூட செருப்பைத் தூக்கி காமிச்சேன்னு சொன்னியே”..

“ஆமாண்டி அவனே தான்”

“அய்யய்யோ... அவனும் இங்க வந்திருந்தானா... உன்ன என்னடீ பண்ணான்” என்று வர்ஷா கலவரத்துடன் கேட்க..

முகம் சுளித்த மித்ரா.. தோழி என்றாலும் இந்த அவமானத்தை அவளுடன் பகிர்வது சங்கடமாகத்தான் இருந்தது.

“நான் டிரஸ் மாத்தும் போது என் ரூமுக்குள்ள வந்துட்டான் டீ” என்று திக்கி திக்கி அவள் சொல்லி முடிக்க..

“ஓ மை காட்... அப்புறம்??”

“அப்புறமா..?? நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன். அவனை வெளிய தள்ளி கதவை சாத்திட்டேன். என் டிரஸ்ஸைப் போட்டுட்டு நேரா அவனைத் தேடி போய்... அவன் கன்னத்துல பளார்ன்னு ஒன்னு கொடுத்துட்டு தான் வந்தேன்”

“ஆமா நீ டிரஸ் மாத்தும் போது கதவை லாக் பண்ணி இருப்பீல.. அவன் எப்படிடீ உள்ள வந்தான்”

“இல்லடி நான் கதவை லாக் பண்ணல”.. என்று மித்ரா தலை கவிழ்ந்து சொல்ல..

“லூசு... அப்ப உன் மேல தான் தப்பு”

“போடீ.. அவனுக்கு போய் சப்போட் பண்ற.. எல்லா ரூமும் ஃபுல்லா இருந்தது. அந்த ஒரு ரூம் தான் ஃப்ரீயா இருந்தது. அதுல லாக் சரியா வேலை செய்யல. நேரம் ஆகுதே... கதவைக் கையால பிடிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்... ஆனா இப்படி ஆயிடுச்சு” என்று மித்ரா வருத்தத்துடன் சொல்ல..

“ விடு மித்ரா... அவனுக்கு ஃப்ரீ ஷோ பார்க்கனும்னு யோகம் இருந்திருக்கு. ஆனா நீ சொல்றத பார்த்தா.. அவன் தெரியாம உள்ள நுழைஞ்ச மாதிரி தான் இருக்கு... நீ அவனைத் திட்டி கண்டிக்கிறதோடு நிறுத்தி இருக்கலாம். அவனை அப்படி கை நீட்டி அடிச்சது கொஞ்சம் ஓவர் தான்டீ”.

“இல்ல வர்ஷா எனக்கு என்னவோ அந்த பையன் என்ன பார்த்துட்டு... என்ன பழி வாங்கத் தான் ட்ரயல் ரூமுக்கு தொடர்ந்து வந்திருப்பானோன்னு சந்தேகமா இருக்கு” என்று மித்ரா சொல்ல..

“எனக்கு அப்படி தோணலை மித்ரா.. அவன் அந்த மாதிரி எண்ணத்தோட வந்திருந்தா.. ஏன் சும்மா திரும்பி போகனும்.. உன் கிட்ட எதாவது சொல்லி இருப்பான்ல”

“நிறுத்து வர்ஷா.. நீ என்ன சொன்னாலும் அவன் பண்ணது தப்பு தான். அவன் நிச்சயம் தெரிஞ்சே தான் வந்திருக்கனும்.. அவன் என்னைப் பார்த்ததை நினைச்சாலே... இப்பவும் என் உடம்பு எல்லாம் பத்தி ஏறியது. அவன் மட்டும் திரும்ப என்கிட்ட வம்பு பண்ணட்டும்... நிச்சயம் போலீஸ் கிட்ட சொல்லாம விட மாட்டேன்.”

தோழியின் மன நிலை புரிந்த வர்ஷா.. அவளை மாற்றும் விதமாக... “ஏய் விடு மித்ரா... அவன் தெரிஞ்சு வந்தானோ.. அவன் தெரியாம வந்தானோ... நீ தான் அவனை அடிச்சிட்டீல... இனிமே அந்த விஷயத்தை மறந்திடு.. வா நாம வந்த வேலையை பார்ப்போம். ஏய்.. இங்க பாரு டீ... இந்த கலர் லெஹெங்கா தான நீ கேட்ட”.. என்று லைட் ஆரஞ்சு வண்ண அழகிய வேலைப்பாட்டுடன் மின்னிய அந்த லெஹெங்காவைக் காட்ட..

மித்ராவின் மனதும் அப்போதைக்கு அமைதியுற.. வர்ஷா காட்டிய திசையில் தன் பார்வையை திருப்பியவளின் கண்களும் பளிச்சிட..

“ஆமாண்டி... இதே கலர் தான் நான் கேட்டது. ரொம்ப அழகா இருக்குல...” என்று சட்டென அவள் கைகள் விலையைத் தேடிப் பார்க்க.. ”கொஞ்சம் பட்ஜெட்டுக்கு கூட வருதே வர்ஷா” என்று சிந்தனையில் இறங்க..

“ஏய் உங்க அக்கா கல்யாணத்துக்கு போடப்போற.. இவ்வளவு கூட சிறப்பா இல்லைன்னா எப்படி..” என்று வர்ஷா சொல்ல..

மித்ரா மனதும் அதை ஒத்துக் கொள்ள.. பின் தோழிகள் இருவருமாக ஷாப்பிங்கை உற்சாகத்துடன் தொடர்ந்தார்கள். அந்த உடுப்பை வாங்கிய தோடு.. அதற்கு பொருத்தமான அணிகலன்களையும் வாங்கி முடித்தார்கள்.

மித்ரா வீடு திரும்பிய போது... தன் வருங்கால கணவனுடன் பேசி முடித்து அவள் அறையை விட்டு அமுதா வெளிவரவும் சரியாக இருந்தது.

“அப்பா... நல்லவேளை.. இன்னைக்காவது டிரஸ்ஸை வாங்கிட்டு வந்தியே... இன்னும் ஒரு வாரம் தான் அமுதா கல்யாணத்துக்கு இருக்கு. நீ இன்னும் டிரஸ் வாங்கலையேன்னு கவலைப்பட்டேன்.” என்று வள்ளி சொல்ல..

மித்ரா வாங்கி வந்த பொருட்களை கடை பரப்ப.. “மித்ரா.. டிரஸ் சூப்பரா இருக்குடீ..”என்று அமுதா கண்களை விரிக்க..

“தாங்க்ஸ்க்கா.. எனக்கும் இந்த கலர் ரொம்ப பிடிச்சது.. மம்.. என்ன சொல்றாரு எங்க மாமா”..
“அன்பே நீ இல்லாமல் மணித் துளிகள் கூட யுகங்களாகத் தோன்றுதடி..
உன் வரவுக்காக ஏங்கி காத்திருக்கிறேன் என் பூங்கொடியே..
அமுதமே உன்னை பருகும் நாளுக்காக ஏங்கி தவம் கிடக்கிறேன்” என்று மித்ரா கவித்துவமாக வர்ணிக்க..

“வேணாம்டீ என்ன டென்சன் ஆக்காத”..

“அம்மா இங்க பாரும்மா.. அவர் எனக்காக அனுப்புன வாட்ஸ்அப் மெசேஜ் தெரியாம கைபட்டு அவளுக்கு ஃபார்வாட் ஆயிடுச்சு... அதைப் படிச்சுக் காட்டி என்ன கேலி பண்ணிட்டே இருக்கா” என்று அமுதா புலம்ப..

“மித்ரா.. சும்மா இரேன்டீ... அமுதாவ ஏன் இப்படி டென்ஷன் ஆக்குற.. மாப்பிள்ளை எழுதுன கவதை வரி எல்லாம் இப்படி மாத்தி மாத்தி தப்பா சொன்னா.. அவள் கோபப்படாம என்ன பண்ணுவா?...” என்று சீரியசாக கேட்க..

அமுதா முகம் தான் கோபத்தில் சிவந்து போனது.. “அம்மா.. உங்ககிட்டயும் காட்டிட்டாளா?..இந்த வீட்ல யாருக்குமே மேனர்ஸ்னா என்னன்னு தெரிய மாட்டேங்குது”

தமக்கையின் கோபம் மித்ராவுக்கு சிரிப்பையே கொண்டு வர “எனக்கு வந்த மெசேஜை படிக்க.. என்ன மேனர்ஸ் வேண்டி கிடக்கு”.

“இருடீ உனக்கு ஒரு நாள் கல்யாணம் முடிவாகும்ல... அப்ப வச்சிக்கிறேன்” என்று அமுதா சபதம் எடுக்க

“ம்.. அதுக்கு நீ ரொம்ப காலம் காத்திருக்கனும்மே”.. என்று மித்ரா தோள்களை குலுக்கிக் கொள்ள”..

“சரி.. சரி.. ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க.. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.. மித்ரா நீ ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டியா”...

“சொல்லிட்டேன்மா... அம்மா.. நீங்க படபடன்னு இருக்காதீங்க.. மனச ரிலேக்ஸா வச்சுக்கோங்க. எல்லா வேலையும் கரெக்ட்டா நடக்கும்” என்று வள்ளியை அமைதிப்படுத்த முயன்றாள் மித்ரா.

பின் தன் அறைக்குள் நுழைந்த மித்ரா தன் உடைகளை மாற்றி நைட்டிக்கு மாறப் போக.. அவள் எதிரில் இருந்த ஆள் உயர கண்ணாடியில் அவள் பிம்பம் தெரியாமல் அந்த இளைஞனின் பிம்பம் தெரிய.. மித்ராவின் கைகள் தானாக அவள் மேனியை மறைத்துக் கொண்டது.

ச்ச.. புல்ஷிட்.. என்று மனதுக்குள் கடிந்தவள் அவனைப் பார்க்க பிடிக்காமல்... கையில் சிக்கிய போர்வைவையை அந்த டிரஸ்சிங் டேபிள் கண்ணாடி மேல் எரிய.. அவன் உருவம் மறைந்து போனது.

மித்ரா தைரியமான பெண்ணாக இருந்தாலும்.. இந்த அவமானம் அவளுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. அந்த மனிதனை இனி வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது கடவுளே என்று கடவுளிடம் வேண்டியவள்.. கலைப்பில் படுக்கையில் விழுந்ததும் கண்ணுறங்கிப் போனாள்.

அவன் ஒரு நிமிடம் பார்த்ததையே பொறுக்க முடியாமல் துடித்து போன மித்ரா அன்று அறியவில்லை.. தன் பெண்மையையே அவன் ஒரு நாள் சூறையாடி விடுவான் என்று... விதியின் விளையாட்டை உணராமல் நிம்மதியாகத் தூங்கினாள் மித்ரா.

நாட்கள் உருண்டோட மித்ரா சொன்னது போலவே அனைத்து வேலைகளையும் அனைவரும் பங்கிட்டு செய்து முடிக்க... அமுதா திருமண நாளும் இனிதே உதயமானது.

அமுதாவின் கழுத்தில் அவள் நாயகன் வெங்கட்.. மங்கள நாணை அணிவித்து தன்னவள் ஆக்கி கொண்டான். பூக்களும் அட்சதையும் தூவப் பட்டு.. மணமேடையில் மணப்பெண்ணாக ஜோலித்த அமுதாவை பார்த்ததும் வள்ளியின் கண்கள் பூரிப்பில் லேசாக கசிந்தது.

தன் மனைவியின் உணர்ச்சி பூர்வமான நிலை புரிந்த முருகேசன்... வள்ளியின் கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்டார்.

முதல் நாள் லெஹெங்காவில் வலம் வந்த மித்ரா இன்று புடவையில் கண் கவர் தேவதையாக ஜொலித்தாள். மித்ராவின் தோழிகள்.. அமுதாவின் தோழிகள்.. என்று இளம் பெண்களின் மாநாடு பெரிதாகி.. ஆட்டம் பாட்டம் கேலி சிரிப்பொலி என்று மண்டபத்தை கலகலப்பாக மாற்றி இருந்தனர்.

“மித்ரா உனக்கு இனி லயன் கிளியர் ஆயிடுச்சு டீ”..என்று ஒருத்தி சொல்ல

“ஏய் மித்ரா புடவையில சூப்பரா இருக்கடி... உனக்கு இன்னைக்கு ஏகப்பட்ட புரப்போசல் வரப்போவுது”.. என்று ஒருத்தி சொல்ல..

“ஏய் கடுப்பக் கிளப்பாத மண்டபத்துல வயசுப் பசங்களே இல்லாம காஞ்சு போய் கிடக்கு” என்று வர்ஷா சொல்ல..

“பசங்க இல்லன்னா என்ன.. வந்திருக்கிற ஏகப்பட்ட ஆண்ட்டிகள் கண்ணு உன்னைத் தாண்டி நோட்டம் விடுது”

“போடீ லவ் புரப்போசல்னா கூடப் பரவாயில்லை... கல்யாண புரப்போசலா?? சான்சே இல்ல... அதுக்கு இன்னும் நாலு அஞ்சு வருஷம் போகனும்*.. என்று மித்ரா சொல்ல...

“ஏய் இப்படி சொல்றவளுக தாண்டி முதல்ல கல்யாணம் பண்ணி.. வயித்துல ஒன்னு இடுப்பில் ஒன்னுன்னு முதல்ல வருவீங்க” என்று ஒரு பெண் சொல்ல.. அனைவரும் அந்த கேலியில் சிரித்தாலும் மித்ராவுக்கு அந்த பெண் சொன்னது பிடிக்கவில்லை. இருந்தும் விதண்டா வாதம் செய்யப் பிடிக்காமல் அவள் மெல்லிய புன்னகையுடன் நிறுத்திக் கொண்டாள்.

பின் புதுமணத் தம்பதிகள் தேன் நிலவுக்காக ஒரு வாரம் கேரளா சென்றனர்.

**********
சிவசங்கரன் இரண்டு முக்கியமான வெளிநாட்டு பயணத்தையும் வெற்றிகரமாக முடித்து இருந்தான். இன்னும் பத்து நாட்களில் அவனுக்கும் திவ்யாவுக்கும் திருமணம்.

வேலை வேலை என்று சுற்றி முடித்து வந்தவனிடம்.. “ அண்ணா இனி இந்த பத்து நாளும் நீ எங்களோட கல்யாண வேலை தான் பார்க்கனும். சரி வேகமா குளிச்சிட்டு வா... நம்ம விமலா சித்தி இப்ப வந்திடுவாங்க.. நாம் எல்லாரும் ஷாப்பிங் போய் உனக்கு டிரஸ் எடுக்கனும்.” என்று உத்தரவிட..

சரி வேகமா வந்துடறேன் என்று அவன் அறை நோக்கி படி ஏறியவனின் இதயம் "ஷாப்பிங்" என்ற ஒரே வார்த்தையில் அந்த பெண்ணை அவன் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

தொடரும்.

அன்புடன் லக்ஷ்மி.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top