JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் அத்தியாயம் 1

அத்தியாயம் 1

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.


அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி…





கந்த சஷ்டி கவசம் கீர்த்தனையைப் பாடிக்கொண்டே அன்றைய காலைப் பொழுதின் வேலைகளை அனைத்தையும் சுசீலா அம்மாவின் துணையோடு செய்து கொண்டு இருந்தாள்.

தான் வேலைக்குச்செல்லும் முன் அன்றாடம் செய்யும் வேலைகள் தான் ஆயினும் ஒருவித நெருடல் ஒருவித பயம் மனதை ஓர் நிலையில் இருக்கவிடாமல் செய்தது. தான் செய்து கொண்டிருக்கும் வேலையில் தடுமாறினாள். இவளைக் கவனித்துக் கொண்டிருந்த சுசீலா.

" பாப்பா விடுங்க நான் பார்க்கிறேன். நீங்க` ஆபீஸ் கிளம்பப் பாருங்க . கிச்சுக்கு சாப்பாடு டப்பா என்ன எடுத்து வைக்கவேண்டும் சொல்லுங்க .

உங்கள் முகத்தைப் பார்க்கவே கவலையா தெரியுது எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருங்க பாப்பா".

என்று அவளிடம் இருந்த வேலையையும் சேர்த்துத் தானே பார்த்துக் கொண்டிருந்தார். இவளை சில வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருப்பவர் . வயதிலும் முதிர்ச்சி அனுபவசாலியும் கூட . இவளின் வதனத்தில் வந்து ஒட்டிக்கொண்டுள்ள கவலையும் படபடப்பையும் பார்த்து இவளை ஆசுவாசப் படுத்தினார்.

" சரி மா நீங்க பார்த்து கோங்க நான் கிச்சுவை எழுப்பிவிட்டு அவனையும் ரெடி பண்ணிவிட்டு நான் ஆபீஸ் கிளம்புகிறேன் . எனக்கு டப்பா மட்டும் போதும் இப்பொவே மணி ஆகிவிட்டது .

இன்றைக்கு எனக்கு ஒரு interview இருக்கு சொன்னேன் ல அதற்கு போகவேண்டும் எப்போது முடியுமென்று தெரியாது. எதுவா இருந்தாலும் நானே call செய்வேன் . நீக்க கிச்சு வை மட்டும் ஸ்கூல் கூட்டி போய்ட்டு வாங்க மா "

என்று எப்பொழுதும் போல் படபட வென்று ஆணையிட்டு விட்டுச் சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சுசீலா அம்மா . தான் என்னதான் தடுமாறினாலும், இவள் இப்படி தன்னையே சமன் படுத்திக்கொள்ளும் பக்குவம் வந்ததை எண்ணி மனம் நிறைவதா இல்லை இந்தவயதில் ஏன் இப்படி ஒரு நிலைமை இந்த பேதைக்கு என்று கவலை கொல்வதா என்று சிந்தனையிலிருந்தார்.

இந்த ஒரு குணம் தான் இவளை மேம்படுத்தியது என்று சொல்லலாம். எந்த ஒரு நிலையிலும் தான் அடுத்தவர்களுக்குச் சொல்லும் சொல்லிலும், செயலிலும் தெளிவு இருக்கும் .

யாரையும் புண்படுத்தக்கூடாது என்று நினைக்கும் இவளிற்கு. பாவம் வாழ்க்கையில் இவள் நம்பின சிலரின் சொற்களினால் செயல்களினால் இவளிற்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா அப்பப்பா, சொல்லி மாளாது.

உறவு என்று சொல்லிக்கொள்ளத் தாய் தந்தை இன்றி அல்லாடும் பேதையானாள் .

அடைக்கலம் புகுவதற்குக் கூடப்பிறந்தவர்கள் யாரும் இன்றி பாவம் தனிமையில் தள்ளாடும் தனிமரமாக இருக்கின்றாள்.

தோள் சாய்ந்து கரைய நல்ல தோழன் தோழியின்றி துன்பத்திலும், இன்பத்திலும், யாரும் அறியாவண்ணம் துவண்டு போய்விடுபவள் தான் இந்தப் பேதைப் பெண் .

இவர்கள் யாரும் வேண்டாம் உனக்கு நான் இருக்கின்றேன் என்று கூறும் இரு ஜீவன்கள் என்றும் இவளைச்சுற்றித் தான் இருப்பார்கள்.

ஒன்று இவளை சில வருடங்களாகப் பார்த்துப் பார்த்து இவளுக்கு எல்லா உறவுகளுமாக இருக்கும் " சுசீலா அம்மா ".

இவருக்கு 64வயதாகிறது ஒரு தாயாகவும் நல்ல தோழியாகவும் இருந்து வருகிறார். இவளுடைய கடுமையான தினங்களில் இவளுடைய பிரசவ காலத்தில் இவளுக்குத் தாய் செய்ய வேண்டிய அனைத்தையும் தனியாக இருந்து செய்தவர் .

இவர் ஒரு சென்னை வாசி. வேலையின் காரணமாக இவருடைய மகனும் மருமகளும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவருக்கு இவளை விட்டு அங்குச் சென்று இருப்பது இஷ்டம் இல்லாமல் போக இவள் கூடவே இருந்து விட்டார். இவள் சந்தித்த அந்த கடுமையான தினம் இவரால் மறக்க முடியாத ஒன்று.

இவள் துவண்டு போகும் சமயத்தில் இவர் இவளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் மருந்தாகவும் அவரின் அனுபவத்தில் அவளுக்கு ஒரு நல்ல துணையாகவும் அவளுடனே வாழ்ந்து வருகிறார்.

ம்ம்ம்ம் இப்பொழுது மற்றும் ஒருவர் அவளின் உயிர் நாடி, சர்வமும் அவனே. அவரின் அறை கதவு திறந்ததும் வண்ண வண்ணமாக சுவரொட்டிகள் . அங்கங்கே superhero களின் புகைப்படங்களும் சிறு சிறு பொம்மைகளும் இருந்தன . அவனுக்குப் பிடித்த captain america wallpapers ம் ஒட்டப்பட்டிருந்தது.

புன்முறுவலுடன் அறைக்குள் நுழைந்தவள் வலப்பக்கம் போடப்பட்டிருந்த கட்டிலில் முழு கட்டிலையும் ஆக்கிரமித்துத் துயில் கொண்டிருந்தான் அந்த குறும்புக்கார கண்ணன். கிச்சு என்று அழைக்கப்படும் க்ரிஷ்.

இவனின் பாசத்தில் இவளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் அர்த்தம் அவன் மட்டுமே என்று எண்ணி தன் வாழ்க்கையின் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சிறு வண்டு தான் இருப்பினும் சில நேரங்களில் தாய்க்கே உபதேசமும் செய்வான்.

இவனிடம் பயப்படும் ஒரு விஷயம் அது அவனுடைய கோபத்திலும் அவனது கத்தலிலும் அவள் நிலைகுலைந்து போய்விடுவாள். இக் கால குழந்தைகளிடத்தில் நாம் பொதுவாகக் காணப்படும் ஒன்று தான். அவர்கள் விரக்தியில் இருக்கும்பொழுது அவர்கள் பெரியவர்களிடத்தில் கத்துவார்கள் . அது ஒருவித மனம் சார்த்த விஷயம் தான் . இவனிற்கும் அப்படித்தான் .

இவனிடத்தில் யாரேனும் இவனுடைய தந்தையைப் பற்றியோ, தாயைத்தவறாகப் பேசினாலோ அல்லது இவனுடன் படிக்கும் மற்ற பிள்ளைகள் தன்னுடைய தந்தையை ஒப்பிட்டுப் பேசினாலோ இவனுக்கு அடக்கமுடியா ஒரு வேதனை அவன் மனதில் வந்து அவனுக்கு சொல்ல முடியாத விரக்தி வந்துவிடும். தாயிடம் சண்டை இடுவான், கத்துவான் பின் அவனே அவளுக்குச் சமாதானமும் செய்வான். ஓர் அபூர்வமான குழந்தை தான் இவன் இவளிற்கு. தாயின் கண்ணீரைப் பார்த்தல் உருகும் பனிபோல் உருகிவிடுவான்.

குழந்தையின் அறைக்குச் சென்றவள், அவன் முன் நெற்றியில் படர்ந்திருந்த கற்றை முடியைத் தள்ளிவிட்டு பிள்ளையின் நுனி மூக்கை செல்லமாகப் பிடித்து ஆட்டினாள். அதில் துயில் கலைந்தவன் தன் தாயின் முகத்தைப் பார்த்து பால் வடியும் கண்ணன் போல் தான் வால் தனம் செய்யாத சமத்துப்பிள்ளை போல் முகபாவனை வைத்துக்கொண்டு தாயைப் பார்த்துச் சிரித்தான்.

தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top