JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 10

அத்தியாயம் 10

கல்லூரியை விட்டு வீட்டிற்கு வந்தவள் தன அன்னையை நோக்கி சென்றாள். தன் கணவர் எவ்வளவு சொல்லியும் இந்த கல்லூரியில் தான் படிப்பேன் என்று வீம்புக்கு இருந்து பெற்றோர் இடத்தில் சண்டை இட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் , இன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று வந்தவள் முகம் பிரகாசமாக இருப்பதை கண்டவர் மனதில் ஒரு நிறைவு வந்தது .

தன் மகளின் விருப்பத்தால் அவள் சந்தோசம் அடைந்தாள் ஒரு தாய்க்கு இதைவிட வேறு என்ன வரம் வேண்டும் அதுவும் ஒற்றை மகளின் சந்தோசம் தான் பெரியது என்று வாழும் இந்த தாய்க்கு .

"என்ன கண்ணு இவளோ சந்தோஷமா இருக்க , காலேஜ் எல்லாம் உனக்கு செட் ஆகிவிட்டதா "

"அட ஆமாம் மா , எல்லாம் செட் ஆகிவிட்டது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் "

"அப்படியா, உன்னக்கு காலேஜ் பிடித்திருக்கா கண்ணு ?"

"ஏன் பிடிக்காம அங்கதான் போய் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்தாலே உன்னுடைய பொண்ணு , பிடிக்காமல் இருக்குமா "

இவள் வரும் நேரம் தெரிந்தே மகளைக் காண மாணிக்கம் தன் வேலைகளை ஒதுக்கி வைத்து வந்துள்ளார் . வந்தவருக்கு மகளின் சிரித்த முகம் கண்டதும். அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. வாடிய மலராக இருந்தவள் முகத்தை
இவ்வளவு நாட்களாகக் கண்டவர் இன்று மலர்ந்த முகமாக இருக்கும் பெண்ணை பார்ப்பதில் அவருக்கும் சந்தோஷமே. அதை வெளியில் காட்டிக்கொள்ளாதவாறு இருந்தார்.

"நீங்க எப்போங்க வந்திங்க , உங்களுக்கு பாண்டிச்சேரி போகும் வேலை இருக்கும் சொன்னிங்க "

" ஆமாம் சொன்னேன் , அதற்குள் வேறு விஷயம் அவசரம் வீட்டுக்கு வந்தேன், அதன் அங்க போகல நாளைக்கு போறேன் ."

"அதுசரிங்க வந்ததும் வராததும் பிள்ளை கிட்ட ஏறிக்கிட்டு , அது முகத்தை பாருங்க எவ்வளவு சந்தோசம் தெரியுது ."

கணவரோடு தன் பெண்ணிற்காக வாதாட வந்தார்

"அதெல்லாம் தெரியும்மடி எனக்கு , போய் குடிக்க ஏதாவது கொண்டுவா "

"ஆமாம் இவரை நம்ப ஒன்றும் சொல்லிட கூடாது "

என்று முணுமுணுத்தார்

"என்ன சத்தம் "

"ஒன்றும் இல்லங்க, நீக்க உட்காருங்க உங்களுக்கும் இவளுக்கும் சேர்த்து காபி போட்டு எடுத்து வர சொல்லுறேன். உன்னக்கு ஏதாச்சும் வேண்டும்மா கண்ணு எடுத்துவர சொல்லட்டுமா "

தன் கணவரிடம் கேட்டுவிட்டு , கல்லூரியை விட்டு வந்த மகளுக்கும் பசிக்கும் என்று உணர்ந்து அவளுக்கு பிடித்தம் என்னவென்று தெரிந்து கொள்ள கேட்டார்.

"அதெல்லாம் வேண்டாம் மா , என்னக்கு காபி மட்டும் கொண்டு வர சொல்லு நான் என்னுடைய ரூம் போறேன் "

என்று தாயிடம் கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

"ராணி மா கொஞ்சம் இங்க வாங்க "

என்று தந்தையின் அழைப்பிற்கு அவரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவளுக்கும் அவள் தந்தைக்கும் முன்புபோல் பேச்சு வார்த்தை இல்லை. இவளுக்கு தந்தை என்றால் அவ்வளவு இஷ்டம் , தாயின் பாசம் இவளுக்கு முழுதாக கிடைக்கும் இருப்பினும் தனக்கு தந்தை தான் எல்லாம் என்று இருந்தாள்.

எப்பொழுது அவள் கேட்டு அவர் முடியாது என்றாரோ.

எப்பொழுது இவளுடைய ஆசையை இவர் புரிந்துகொள்ளாமல் அவருடைய ஆசையை தன் மீது திணிக்க ஆரம்பித்தாரோ அன்று முதல் இவளுக்கும் இவள் தந்தைக்கும் பனிப்போர் ஆரம்பம் ஆகிவிட்டது .

அவர் இவளிடத்தில் கேட்டது தங்களின் தொழில் வளர்ச்சிக்கு, லண்டன் யூனிவர்சிட்டி சென்று படித்து வந்தால் நன்றாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் அங்க புகழ் பெற்ற ஆடை அலங்கார நிபுணர்கள் இருப்பார்கள் அவர்களிடத்தில் இவள் காலை நுணுக்கங்களை கற்று கொண்டால் இங்கு அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மற்றும் தொழில் முன்னேற்றமும் அடையும் என்று இவளிடத்தில் மன்றாடி கேட்டார் . இவள் செவி சாய்த்தால்தானே .

இவளின் நினைவு முழுவதும் வினை வினை வினை ...

மைதிலியும் முதலில் பெண்ணுக்கு நல்லது என்று கணவருக்காக பேசிவந்தவர் . எப்பொழுது உண்ணாவிரதம் , மௌன போராட்டம் என்று இவள் ஆரம்பித்தாலோ அன்று முதல் தன் கணவரை வறுத்து எடுத்து விட்டார்.

"ஏங்க உங்களுக்கு கொஞ்ச மாச்சும் இருக்கா இவதான் இப்படி பிடிவாதம் பிடித்து கொண்டு இருக்கா , நீங்களும் உங்க பிடிவாதத்தில் இருந்து இறங்கி வர மாட்டேன்னு இருக்கீங்க"

"அறிவு கெட்ட தனமா பேசாத , இவ நல்லதுக்கு தானே சொல்லுறேன் , இங்க இருந்து என்னத்த இவ கிழிக்க போற்றா."

"அங்க போனால் மட்டும் என்னத்த கிழிச்சுடுவாள் , நம்ப கூட இருந்தால் பிள்ளை எப்படி இருக்கா சாப்பிடளா, காலேஜில இருந்து வந்தாலானு நம்ப கண் பார்வையில் இருப்பா , இவ அங்க போய்ட்டா யாரு இதெல்லாம் பார்ப்பாங்க "

"சரி அப்போ டெல்லில எங்க அக்கா வீட்டுக்கு அனுப்பிடலாம் அங்கையாச்சும் போய் படிக்கட்டும் , அங்க அவர்கள் இருக்கிறார்கள் இவளை பார்த்துப்பாங்க."

அவ்வளவுதான் கேட்டுக் கொண்டிருந்த யுவராணிக்கு தூக்கிவாரி போட்டது

"ஓஒ .. நாடு கடத்தலாம்னு இருந்திங்க நான் முடியாது சொன்னதும் ஊர் விட்டு ஊர் கடத்த பாக்குறீங்களா "

என்று தந்தையிடம் ஏறினால்

"உங்களுக்கு நான் இங்க இருக்கிறது பிடிக்கல்ல அப்படித்தானே , அதை நேரடியா சொல்லிடுங்க நான் எங்கையாச்சும் தங்கிக்குறேன் , அதை விட்டுவிட்டு லண்டன் போ , டெல்லி போனு சொல்லாதீங்க ,"

"பாரு உன்னோட பொண்ணு எப்படி பேசறானு நான் இவ இங்க இருக்க கூடாது நினைப்பேனா "

"நீங்களும் அப்படித்தான பேசுறீங்க, இப்போ எதுக்கு இவ டெல்லி போகணும் "

"இப்படி செல்லம் கொஞ்சிட்டு இருக்காத "

"இங்க என்ன ராணி மா இருக்கு , எதுக்கு இங்க தான் படிக்கவேண்டும்னு இவளோ சண்டை போடுற "

"என்னக்கு உங்க கூட இருக்கனும் "

"ஏன் ராணி மா , நீ தானே சொன்ன லண்டன்ல போய் படிக்கவேண்டுமென்று இப்போ நீயே இப்படி பேசுற "

இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அவர்களின் சண்டை ஓயாமல் போய் கொண்டு இருந்தது

அன்று இவள் சாப்பிடாமல் இருந்து உடம்பிற்கு முடியாமல் போக வைத்தியர் வந்து வைத்தியம் பார்க்கும் நிலைமை வந்து விட்டது . அதில் பயந்தவர் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி இருந்தார்.

அதில் யுவராணிக்கு துளியும் சந்தோசம் இல்லை . தான் கேட்டு இவர் உடனடியாக செய்து கொடுக்கவில்லை என்று தந்தையிடம் பேசுவதை சற்று குறைத்து கொண்டால்.

அவரும் இவளிடத்தில் இறங்கி வந்து பேசத்தான் செய்கிறார் இருப்பினும் அதில் குற்றம் கண்டுபிடித்து அவரிடத்தில் இருந்து தள்ளி நிற்கிறாள் அவ்வளவு கோவம் தன் தந்தையின் மீது .

"காலேஜ் எப்படி மா இருந்தது , இப்போ நீ சந்தோஷமா இருக்கியா"

"காலேஜ் நல்லாதான் இருக்கு , நானும் சந்தோஷமா தான் இருக்கேன் "

கேட்ட கேள்விக்கு வெடுக்கென்று சொல்லிமுடித்தாள்

"சரி அப்பறம் பசங்க ஏதாச்சும் தொந்தரவு பணங்கலா ராணி மா , அப்பா வந்து பேசி பாக்கட்டுமா "

கண்டுகொண்டாள் , தந்தைக்கு தன்னை பற்றிய செய்தி கல்லூரியில் இருந்து ஏதோ வந்திருக்கும் என்று இவள் கண்டுகொண்டாள் .

"எனக்கு யாரும் தொந்தரவு பண்ணல "

"அப்படி இல்ல மா இன்னிக்கு காலேஜ்ஜில் உன்கிட்ட எதோ ஒரு பையன் உன்ன வம்பு செய்தான் என்று கேள்விப்பட்டேன் "

"ஓஒ ... அப்போ நான் என்ன பண்றேன் ஏது பேசுறேன்னு தெரிந்துகொள்ள ஆள் வைத்து என்னை கண்காணிக்குறீங்க அப்படித்தானே "

"ஏன் ராணி மா அப்பட்டிலாம் பேசுற , எனக்கு அங்க வேலை செய்யும் நம்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தார், அதுவும் அந்த பையன் உன் கையை பிடித்து பேசியதாக, நான் உன்னக்காகத்தான் பேசுறேன் ராணி மா ,

அந்த பையனால் நீ மனசு கவலைகொள்ளும் விதம் ஏதாச்சும் நடந்திருந்தால் அப்பா கிட்ட சொல்லு மா நான் பாத்துக்குறேன். வேண்டுமானால் நம்ப மாறிய உன் கார் ட்ரிவிர்ரா மாற்றட்டுமா "

"எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் காலேஜ் படிப்பு முடியும் வரை யாரும் தலை இடாதிங்க .என்னை யாரும் பின் தொடரவும் கூடாது. அவன் என்னுடைய நண்பன் தான். சீனியர்ஸ் ராகிங் அவ்ளோதான் "

என்று தனது பேச்சு முடிந்தது என்று தன் அறையை நோக்கி நடந்தாள் .

தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top