JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 16

அத்தியாயம் 16


நட்பாராய்தல்


குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

விளக்கம் : நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.


தேஜூ அவளின் இறுதி ஆண்டின் இறுதி செமஸ்டரில் இருப்பதால் முழு நேரமும் அவளுக்குப் படிப்பிலே சென்றுவிடுகிறது. வகுப்பு அதைவிட்டால் ஹாஸ்டல் என்று இருந்து விட்டாள். அவளைச் சுற்றி இருந்த மூவரும் அவளை ஹொஸ்டலின் இருந்து ஒரு இரவு இவர்களுடன் தங்க முயன்று இருந்தனர். அதற்குரிய நாளும் கனியாக அவர்களின் கையில் வந்து அமர்ந்தது .

"தேஜு நீ இந்த இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் ப்ரோக்ராம் போவது பற்றி உன் வீட்டில் பேசி பார்த்தியா என்ன சொன்னார்கள் "

"அப்பா அம்மா ரெண்டு பேரும் கொஞ்சம் பயப்படுகிறார்கள் தான் நான் எப்படி யோ சொல்லி சமாளித்து விட்டேன். இப்போது ஒரு பிரச்சினையும் இல்ல "

"சூப்பர் , அப்போ எல்லா ஏற்படும் பண்ணிடலாம் "

"என்ன ஏற்பாடு "

"அதான் .....(தடு மாறி விட்டாள் )"

"என்ன சுனிதா "

"அது ஒன்றும் இல்லை நாம் தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும் "

"ஏன் டி காலேஜிக்கு நாம் தான் அவளோ பணம் தருகிறோம் ஏன் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்ன "

"யாரு டி நீ ஒருத்தி , அவர்கள் நமக்கு பார்த்துக் கொடுக்கும் ஹோட்டல் மற்றும் சாப்பாடு எல்லாம் சுத்த வேஸ்ட் , அது மட்டும் அல்லாது அவர்கள் அங்கேயும் வந்து ரூல்ஸ் ரெகுலேஷன் சொல்லி உசுர் எடுப்பார்கள்,"

"இருக்கட்டும் டி அதுல என்ன தப்பு? இங்கு என்னைப் போல ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்களுக்கு அவங்க பெற்றவர்கள் இந்த விஷயத்துக்கு மட்டும் தான் ஓகே சொல்கிறார்கள் அதனால் எங்களுக்கும் சந்தோஷம் தான் "

" அப்போது உனக்கு எங்களோடு இருக்க விருப்பம் இல்லையா என்ன?"
"நான் அப்படி ஏதாச்சும் சொன்னேன் ?"

"அப்போது ஓகே சொல்லு "

"எதற்கு டி "

"நம்ப தனியா ரூம் எடுத்துத் தங்குவதற்கு "

"ஏ சுனிதா நம்ப இரண்டு பெண்கள் என்றால் ஓகே. கூட அவர்களும் தங்க வேண்டுமா இது கொஞ்சம் ஓவர் டி "

"ஹே அவர்கள் ரொம்ப டீசென்ட் ஃபெல்லோ "

" என்ன டீசென்ட் டாக இருந்தாலும் கண்டிப்பாக முடியாது, அதுவும் இல்லாம எனக்கு விகாஸ் முகத்தைப் பார்க்கவே பாவமா இருக்கு டி , எப்போது நான் அவனுக்கு அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தேனோ அன்று முதல் அவன் முகம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது . அவன் ஒன்றும் இல்லை என்று கூறினாலும் எதோ தன்னை விட்டு ஒன்று போனது போல் அவன் முகம் வைத்துக் கொண்டு திரிகிறான். அவன் முன் வந்து பேசவே எனக்கு சங்கடமா இருக்கிறது . இதில் நாம் தனியாக ரூம் எடுத்து தங்கி இதெல்லாம் சரிப்பட்டு வராது "

"இதுதான் உன் முடிவா "

"ஆமாம் , சரி உங்கள் வீட்டில் நீ தனியாகத் தங்குவதை பற்றி சொல்லியாச்சா என்ன சொன்னார்கள் "

"எங்கள் வீட்டில் நான் எதற்கு தனியா தங்குவதை எல்லாம் சொல்ல வேண்டும் ? நானும் மேஜர் டி இப்போது எனக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது"(பணம் படைத்தவள் செழுமையான வழக்கை அவளை பேச வைக்கிறது )

(இவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல இந்த மக்கு இவளின் பறந்து விரிந்த பார்வையை நினைத்து மிகவும் பெருமை கொண்டாள் )

பெண்கள் மேஜர் ஆனால் உலகம் அவர்கள் சொல்படி மட்டுமே கேட்டு கொண்டு சுற்றுமா என்ன ? இல்லை தங்கள் சொற்படிதான் நடக்க வேண்டும் என்று இவளால் இவள் நினைக்கும் ஒரு விதியை எழுதிவிட முடியுமா என்ன ?

பெண்களின் வாழ்க்கையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நம் முன்னோர்கள் விதித்து வைத்ததில் தவறொன்றும் இல்லை. அதில் , சில விஷயங்களில் நாம் மாற்றம் கொண்டு வந்தே தீரவேண்டும்.

அதற்காக ஒரு ஆணும் பெண்ணும் பழகும் விதத்தில் அவர்கள் கூறிய ஒழுங்கு முறைகள் தவறொன்றும் இல்லை. ஆனால், அதனைத் தவறாக நினைத்து

இன்றைய சில பெண்கள் தொலைநோக்கு பார்வையில் நாங்கள் இருப்போம் அதனைத் தட்டி கேட்கும் உரிமை, தங்களைப் பெற்றவர்களுக்கும் இல்லை என்று கூறிக் கொண்டு இருப்பதுதான் தவறு.

: ஒரு ஆணுடன் பெண் களங்கம் இல்லா நட்புறவோடு, தூய்மை கொண்ட காதலோடும் பேசுவதிலும் தவறு இல்லை பழகுவதிலும் தவறொன்றும் இல்லை

எது தவறு

சலனம் கொண்ட மனதுடன் எல்லை மீறிய ஆசைக்கும், போதைக்கும் அடிமையாகிப் பழகுவதில் தான் தவறு .

சிறு வயது முதல் இருந்த இளவேனில் காலம், வசந்தமாக இருந்தவளின் வாழ்க்கை. இனி இருந்து முதுவேனில் காலம் வரவிருப்பதை பாவம் அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. முதுவேனில் காலத்தில் தொடக்கத்திலிருந்து. மனிதர்களின் நிறம் அவர்களின் செயல்களும் வேறுபடும் வேலை. அவள் மனதில் அவளுடைய தோழி பிந்து இறந்ததிலிருந்து குழப்பங்களும் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பது போல் அவளுக்குத் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டது.

(பங்குனி மாதத்து வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தாலும் அதனால் வெந்து சாவது மக்கள் அல்லவா. அவள் பழகும் சில மனிதர்களின் செயல்கள் அவளுக்கு அனல் காற்று வீசத் தொடங்கியது )

வினோத்தின் திருமணத்திற்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருந்த நிலையில். தேஜஸ்வினி பெங்களூருக்கு அவளின் கல்லூரியில் அழைத்து வந்திருந்த தொழில்துறை பயிற்சியிலிருந்தாள். அந்த சமயம் ஒரு நாள் அவர்களின் பயிற்சி குறித்த நேரத்திற்கு முன் முடிந்ததால் அவளுடன் வந்திருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் பெங்களூரைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு இருந்தனர் . அவளும் அவர்களுடன் சென்று இருந்தாள்.

"ஹே சுனிதா நாமும் கிளாஸ் ஹவுஸ் பார்த்துவிட்டு. அப்படியே அவர்களுடன் பக்கத்தில் மால் இருக்கிறது அங்கு போவோம். "

"எனக்கும் ஓகே தான் "

ஒரே கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக எங்குச் சென்றாலும் ஒன்றாக சென்றார்கள் . ஹரிக்கும் விகேஷ்க்கும் அவர்கள் வந்திருக்கும் இடத்தின் ரம்மியம் துளியும் அவர்களின் மனதில் பதியவில்லை. அதில் நாட்டம் செலுத்தாது அங்கு வந்திருந்த இளம் பெண்கள் மேல் நாட்டம் சென்றது.

அவர்கள் மால் வந்ததும் தனித் தனிக் குழுவாக ஆளுக்கு ஒரு திசையில் சென்றதில் இவர்களும் பிளேஸ்டேஷன் வந்த நேரம் போவது தெரியாது அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்தார்கள் .

தேஜு தற்செயலாக அவளின் கை கடிகாரத்தை பார்த்தால், அதில் மணி பத்து என்று காட்டியது அடித்துப் பிடித்து அவளுடன் வந்திருந்தவர்களை தேடிச் சென்றாள். அங்கு ஒருவரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தாள் .

"ச்ச… இப்படி நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன், அம்மா சொல்வது சரி தான் அக்கம் பக்கம் கவனம் வைத்து இரு என்று சொல்வார்கள். இப்போது அது சரியாகத்தான் இருக்கிறது. இந்த சுனிதா பொண்ணு எங்கே போச்சு. மணி பத்து இன்னும் இங்க மக்கள் கூட்டம் இருக்கிறது. அதில் எப்படி நான் மற்றவர்களை தேடி அலைவது. ஐயோ ராமா பசி வேறு உயிரை எடுக்கிறது "

அவள் புலம்பிக்கொண்டே மற்றவர்களைத் தேட துவங்கினாள்.

தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top