JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 18

அத்தியாயம் 18

காலமும் நேரமும் யாருக்காகவும் எப்போதும் நிற்பதில்லை. காலை எப்பொழுதும் போல் இனிமையாக விடிந்தது. என்ன அவளுக்கு மட்டும் சற்று தலைவலியுடன் விடிந்தது. தன் கண்ணைத் திறக்க கூட முடியாமல் கசக்கி கொண்டு எழுந்தவள் தலையில் கை வைத்தபடி அப்படியே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

முதல் நாள் நடந்த விஷயங்கள் அவளுக்கு பெரிதாக நினைவு இல்லை. தான் மாலில் சுனிதாவை தேடியது பின் அவளுடன் சென்று ரெஸ்டாரண்டில் ஹரி மற்றும் அவர்களுடன் சாப்பிட்ட பின் தனக்குத் தூக்கம் வருகிறது என்று விகாஷ் தன்னை கைதாங்கலாக அறைக்கு அழைத்து வந்து பின் அவனே என்னிடம் ஏதோ கூறியது போல் தெரிந்தது அது என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை , பின் தானும் சுனிதாவும் சேர்ந்து அவர்களுக்குப் பிடித்த பாடலுக்கு ஆட்டம் போட்டது . இவ்வளவே அவளின் நினைவில் இருந்தது. அனைத்தும் இனிமையான நினைவுகள் தான் என்று இருந்தாள்.

அந்த நினைவுகளுடன் பெங்களூரிலிருந்து சென்னை வந்து சேர்ந்தாள். அவளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இன்றி வழக்கமாகச் சென்றது. இம்மூவரும் இப்போதைக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் பொறுமை காத்தனர். இறுதி ஆண்டு இறுதி தேர்வு அன்று தான் வினோத்தின் திருமணம் இருந்தது. அதற்கு தன்னால் செல்ல இயலவில்லை என்று மிகவும் கஷ்டப்பட்டாள். தேர்வு முடிந்து மறுநாள் அவள் தேவி வீட்டிற்குச் சென்று வினோத் மீனா இருவரையும் சந்தித்து விட்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டாள். அன்றுதான் முதல் முறை அவள் வினய் யை பார்க்கிறாள் . அவனுடன் சிரித்துப் பேசி நட்பு உறவாடி பின் தன் தந்தை தாயுடன் அவளின் சொந்த ஊருக்குச் சென்று விட்டாள்.

சென்னையில் தன் சீனியர் பரிந்துரைப்படி அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். அவளின் கிரகம் அவளுடனே ஹரியும் விகாஸ் ம் இந்த வேலை கிடைத்துள்ளது. புதிய வேலை சேர்வதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதாக அவள் தன் சொந்த ஊரிலே இருந்து விட்டாள் .

"பாப்பா யார் கேட்டு இப்போது நீ வேலைக்குப் போக இருக்க ?"

"மா... ப்ளீஸ் கொஞ்ச நாள் போயிட்டு வரேன் "

"படித்த வரைக்கும் போதும் நீ வேலையென்று எங்கும் போக வேண்டாம் "

"மா.. படித்த படிப்புக்கு வேலை பார்க்க வேண்டும் அப்போதுதான் அந்த படிப்புக்கு மரியாதை "

"உனக்குக் கல்யாணம் பண்ணலாம் என்று இருக்கோம் பாப்பா "

"சரி பண்ணுங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பவும் வேலைக்கு நான் போவேன் . அப்படி யாரேனும் இருந்தால் எனக்கும் ஓகே தான் "

அருமொழி தான் பேசுவதற்கு வார்த்தை வராமல் தவித்தார் . பின் நீலமேகம்

"விடு மா பாப்பா தான் தெளிவா சொல்ற பிறகு என்ன ? நீ போயிட்டு வா தங்கம். "

"லவ் யு ப்ளூ ஸ்கை " தந்தையை இறுக்கி அணைத்தாள் .

"சரி நீ வேலைக்கு போ இப்படி கால் சட்டை அரைச்சட்டை போடுவதெல்லாம் வேண்டாம் . ஒழுங்கு மரியாதையா புடவை கட்டிக் கொண்டு போ "

"ஏன்மா உனக்கு அருள் மொழி என்று பெயர் வைத்தது.வேறு பெயர் கிடைக்கவில்லை யா என்ன ? பெயரில் தான் அருள் இருக்கிறது. எனக்கு உன்னிடம் அருள் கிடைக்கவே கிடைக்காதா, இங்க போகாத அதைப் பண்ணாத இந்த ட்ரெஸ் போடாத இப்படி எதையாவது என்ன சொல்லிக்கொண்டு இருப்பியா. எனக்கு புடவை கட்ட வராது மா"

"ஏன் டி அம்மா சொன்னால் மட்டும் முகத்தை இப்படி கசந்து வைத்துக் கொள்வாயா. ஒரு மாதம் இங்க தான இருக்க. கல்யாணம் ஆக இருக்கும் வயது பெண் ஒழுங்கா புடவை கட்ட தெரிந்துகொள் , சமையல் செய்து பழகிக்கோ, அது உனக்குத் தான் நல்லது. வேலைக்குப் போனால் புடவை கட்டக் கூடாது என்ற சட்டம் இருக்கா என்ன ?

அவர் சொல்வது யாருக்கோ என்ற முகபாவனை வைத்துக் கொண்டு பின் அவர் வேலைக்கு செல்வதை பற்றி கூறியதும்

"அப்ப நான் வேலைக்கு போகட்டுமா மா ?" வாய் நிறைய பல் தெரிவதுபோல் இளித்து வைத்துக் கேட்டாள்

"வேண்டாம் என்று சொன்னேன் அதை நீ கேட்டியா " என்று அவள் தலையில் கொட்டு போட்டார்.

அன்னையின் கொட்டில் திறந்த வாய் மூடியது .

"எங்க தங்குவ பாப்பா ?"

"உமன்ஸ் ஹாஸ்டல் " நீலமேகம் யோசனையில் இருந்தார். அவர் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு

" ஏங்க, அவ சொல்கிறபடி உமன்ஸ் ஹாஸ்டல் தங்கட்டும். வயசு பிள்ளை திருமணத்திற்கு முன் ஒருவர் வீட்டில் தங்குவது, ஊர் ஏதாவது சொல்லும் " (அர்த்தமுள்ள பார்வையைக் கணவரிடம் வீசினார். திருமணத்திற்கு முன் பொண்ணும் பையனும் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர் கூறினார். அதைப் புரிந்து கொண்டார் நீலமேகம் . )

நீலமேகம் கட்டிய மனைவிக்கும் பெற்ற பெண்ணுக்கும் சரி சொல்வதைவிட அவருக்கு வேறு வழி இல்லை.

------------------------------------------------------------------------------------------

லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா:

ஹ்ருடை வாட்சன் எஸ்டேட் :

பரபரப்பான காலைப் பொழுது, குளித்து முடித்து வெளியில் வந்தவன் நிலையிலும் அதே பரபரப்பு இருந்தது . இடுப்பில் வெள்ளை துவாலை மட்டும் கட்டி இருந்தான். ஆறு அடி நெடிய உயரம் வளர்ந்த, உயர்ந்த ஆண் அழகன். அவன் தேகத்தில் சிக்ஸ் பேக் படிக்கட்டுகளாக இருந்தது. தன் தலையின் ஈரத்தைத் துடைத்த வண்ணம் கண்ணாடியுடன் இருந்த டிரஸ்ஸிங் டேபிள் முன் வந்து நின்றான். அதில் மெத்தையில் மேல் படுத்திருந்த எம்மாவை (emma) பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான். அவளும் தன்னை சரி செய்து கொண்டு வசீகர புன்னகை வீசினாள்.

"ஹனி எனக்கு இன்றைக்கு மிக முக்கியமான மீட்டிங் இருக்கு. அப்பா ஆபீஸ் கிளம்புகிறேன். என்னை இன்னைக்கு எதிர்பார்க்காத"

"அப்ப, நைட் எங்க இருப்ப "

"மறுபடியும் சொல்லு புரியல " நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அவள் புறம் திரும்பினான்

"எங்க இருப கேட்டேன் " ஒரு ஒரு வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கூறினாள்.

அனல் தெறிக்கும் பார்வை யை அவளிடம் வீசியவன்

"நீ என்ன நினைத்துக் கொண்டு இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறாய் ? நாம் இருக்கும் உறவில் கேள்வி கேட்பது இருக்கக்கூடாது . உன்னிடம் நான் பலமுறை கூறி விட்டேன் என்னை கட்டுப் படுத்தாதே என்று. உன்னிடம் மட்டுமே இருப்பேன் உனக்காக நான் என்றும் இருப்பேன் என்ற வசனம் பேச வில்லை நான் உன்னிடம். நீயாக வந்தாய் . இப்போவும் உனக்கு விருப்பம் இல்லை என்றால் நீ கிளம்பலாம்."

அவனின் ஆளுமையும் பணமும் தான் முக்கியம் ஆயிற்று அவளுக்கு. அவனை அடைய எந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவள் தயங்க மாட்டாள். முப்பது சதவிகிதத்தை நூறாக மாற்றாமல் ஓயமாட்டாள்.

அவன் எங்கே தன்னை விட்டுவிடுவான் என்ற தவிப்பில் அவள் இருக்க

"நான் இப்பொழுது என்ன தவறாக கேட்டுட்டேன் இப்படி கத்துற "

"என்ன கேட்கவில்லை நீ ? எங்கு இருப்பாய் என்றால் , என்ன? ஹா.... நான் என்ன தினம் ஒரு பெண் பின் அலைபவன் என்று நினைத்துக் கொண்டாயா ?"

"நான் அந்த நோக்கத்தில் கேட்கவில்லை "

"எந்த நோக்கத்தில் நீ கேட்டிருந்தாலும் இதுவே இறுதி "

அவளிடம் இதற்கு மேல் பேசினால் தன் மனநிலை மாறிவிடும் என்று வெறுப்புடன் விறுவிறு என்று தன் உடை மாற்றும் அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினான். அவன் மீது ஆத்திரம் வர தொடங்கியது அவளுக்கு. இவனை திருமணம் செய்தே தீர வேண்டும். என்று தனக்குள் ஏதோ கணக்குகள் போடத் தொடங்கினாள் .

வசீகரிக்கும் முக தோற்றத்துடன் வெள்ளை பருத்தி சட்டையும். அதனுடன் நீயான் (neon) நீல நிற சூட் ஜாக்கெட்டுடன். அதே நீயான் (neon) நீல நிற பேன்ட் அணிந்து வெளிவந்தான். அவன் இடது கை பழக்கம் உள்ளவன் என்பதால் வலது கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்து கொண்டு அதே வலது கையில் அவனுடைய ஐபாட் டை எடுத்துக்கொண்டான் . அது ஒன்றே போதும் அவனுக்கு, முழு உலகையும் அதில் அடைத்து வைப்பதற்கு . காதில் ப்ளூ டூத் மாட்டிக்கொண்டு விறுவிறு என்று தன் நிசான் GT-R50 காரை எடுத்துக்கொண்டு தன் தந்தையின் மென்பொருள் நிறுவனத்துக்கு முன் வந்து நின்றான்.

ஆம் அவன் தந்தையும் எம்மா (emma) தந்தையும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் . அதில் இவன் தந்தைக்கு தகவல் தொழில்நுட்பத்தில் கூடுதல் பயிற்சியும் அனுபவமும் இருப்பதால் மற்றும் அவருடைய எழுவது சதவிகிதம் பங்கு . அவர் தான் இந்த மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தலைவர்.

தன் தந்தையின் அறைக்குள் நுழைத்தவனை வரவேற்றார் மைக்கேல் வாட்சன்.

" come on my junior " அவரின் அன்பு பிள்ளையை கட்டி அணைத்துக் கொண்டார்

"dad"

"how is everthing ? எம்மா(emma) என்ன சொல்ற ?" குறும்புடன் அவனைப் பார்த்து கேட்டார்.
"dad please "அவளின் பேச்சு இப்பொழுது வேண்டாம் என்று எண்ணியவன் தந்தையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். பின் அவர்களின் இன்றைய முக்கிய கலந்தாய்வு சந்திப்பில் மற்ற நிறுவனத்தின் பெரும் தலைகள் அங்கே வந்திருந்தனர். ஹ்ருடை உடைய உரையாடல் அவனின் தெளிவான முடிவுகளையும் நினைத்துப் பெற்ற தந்தைக்கு பெரும் மகிழ்ச்சி கர்வம் எல்லாம் . புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? கூட்டம் கலைந்த பின் தந்தை இடம் வந்தான்.பின் ஹ்ருதையின் இந்தியா பயணம் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் .

"ஹ்ருதை நீ அம்மா கூட்டிக்கொண்டு போ, நான் இங்க பிசினஸ் பார்த்துக்கறேன். இரண்டு பேரும் அங்கே வந்து விட்டால் இங்க பிசினஸ் யார் கவனித்துக் கொள்வார்கள். உன் அம்மாவிற்கும் அங்க சென்னை போக வேண்டும் சொல்கிறாள் "

"dad நீங்களே சொல்லுங்கள் நான் அங்கு எம்மா(emma) அழைத்துக் கொண்டு போகலாம் என்று இருக்கிறேன். என்னுடைய இந்தியா பிசினஸ் ட்ரிப் அவளுடன் தான் இருந்தாக வேண்டும். அவளும் நம்ப பிசினஸ் பார்ட்னர் தான். அதுவும் இல்லை இப்போது எனக்கும் பார்ட்னர். இதைச் சொன்னால் அம்மா ஏத்துக்க மாட்டாங்க . அங்கே அவர்கள் இரண்டு போரையும் ஒரே இடத்தில் என்னால் சமாளிக்க முடியாது dad"

வாய்விட்டு மைக்கேல் வாட்சன் சிரித்து விட்டார்.

"ஹா ஹா ஹா ....... மாமியார் மருமகள் சண்டை அப்படித்தான் இருக்கும் "

அவர் மருமகள் என்று எம்மா வை (emma) விளையாட்டுக்கு சொன்னது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.

"dad..." எரிச்சலுடன் கூறினான்

"சரி சரி இந்த முறை நீ கொஞ்சம் பார்த்துக்கோ என்னை இதில் இழுக்காதே "

"சரி உங்களுக்காக "

என்று கூறியவன் தந்தையுடன் அவர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அங்கு காஞ்சனாவுக்கு தலை கால் புரியவில்லை . தன் மகன் இன்று தம்முடன் தங்குகிறான் என்று அறிந்ததும் அவனுக்குப் பிடித்த உணவை அவர் சமைப்பது, அவனுடன் அதிக நேரத்தைச் செலவிடுவது மகா இருந்தாள் காஞ்சனா. இரவு உணவு முடித்த பின் மகனுடன் சற்று பேசிவிட்டு தான் உறங்கச் சென்றார். அவர் மனதில் என்னதான் பிள்ளையுடன் சிறிது பேசி பழகினாலும் தன் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற குறை இருக்கத்தான் செய்தது. மைக்கேல் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

பின் தந்தை உடன் வீட்டி லே அவர்களுக்கென்று ப்ரேத்தேய்க இடமான மினி பாரில் தந்தையும் மகனும் அவர் அவர்களுக்கென்று பிடித்த பானகத்தை அவர்களின் மரியாதையைக் குறைக்காத வண்ணம் சிறியதே எடுத்து அருந்த தொடங்கினர்.

"ஹ்ருதை உன்னிடம் நான் பேச வேண்டும் "

"yes dad "

" ஹ்ருதை நீ என்னைப்போல் இந்த நாட்டின் பிரஜையாக இருக்கலாம். இந்த கலாச்சாரம் உனக்குப் பெரிதாக இருக்கலாம். ஆனால் உன் அம்மா இடத்தில் இதைக் காட்டாதே. அவள் தாங்க மாட்டாள். எத்தனை இரவு அவள் அழுது இருப்பாள் தெரியுமா. அவளும் இந்த நாட்டில் வளர்ந்தவள் தான். இருப்பினும், பிள்ளை என்று வந்தால் அவள் உன்னை மிகவும் தேடுவாள். உன் அம்மா சொல்லுவாள், என்னை லாஸ் ஏஞ்சல்ஸ் ராமன் என்று. உண்மையில் உன் அம்மா எனக்கு சிறுவயது தோழி அவளின் சிந்தனையும் செயலும் அவளுக்கு பிடித்தாற்போல் என்னை உருமாறி கொண்டேன். . அவளின் உண்மையான அன்பிற்கு முன் வேறு பெண்ணுடன் எனக்கு நாட்டம் வரவில்லை .அவ்வளவு காதல் அவள் மேல் எனக்கு

என்னையே இவள் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றால். அவள் பெற்ற பிள்ளை நீ, எப்படி இருக்க வேண்டும் என்று அவள் கனவு கொண்டிருப்பாள்.

திருமணம் இல்லாது நீ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறாய் அது வேண்டாம்

நீ ஏன் எம்மா(emma) வை புரிந்து நடக்கக் கூடாது. ?"

"dad , எனக்கு தெரியல அவளிடம் எனக்கு எதோ மிஸ் ஆகுது dad "

"சரி அப்போ லீனா ,"

"அவ கமிட்டேட் "

"சார்லஸ் "

"போரின் "

"வேற யாராச்சும் ?"

"dad i swear எனக்கு யார் இடமும் காதல் வரவில்லை. அம்மா உங்களை காதலிப்பது போல் என்னை யாரும் காதலிக்கவும் இல்லை . திருமணம் வேண்டவே வேண்டாம் . என்ன கேள்வி கேட்பதும் நான் அவர்களிடம் எங்கே போறேன் எங்கிருந்து வருவேன் இப்படி ரிப்போர்ட் செய்வது எனக்கு துளியும் பிடிக்கவில்லை. பாதியில் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தனியாகத்தான் வாழ வேண்டும். அதற்கு இப்படியே இருந்து விட்டு போவேன் "

"இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் காதல் வராது ஹ்ருதை. உன்னை யாரும் அப்படிக் காதலிக்கவில்லை என்றால் என்ன. நீ காதலித்துப்பார். அதுவும் உண்மையாக."

நண்பனாக மாறி தன்னுடன் பேசும் தந்தையை நினைத்து மிகவும் கர்வம் கொண்டான். தந்தை சொன்ன விஷயத்தை அவன் சிந்தனை சென்றுகொண்டிருந்தது.

"இந்தியா ஆபிஸ்க்கு தகவல் சொல்லிவிடு ஹ்ருதை "

"ம்ம்ம் சொல்லிவிட்டேன் dad , இந்த முறை நான் இந்தியாவில் இருக்கின்ற அனிமேஷன் டீம் எடுத்து ப்ராஜெக்ட் பண்ணலாம் னு இருக்கிறேன், கடந்த ரெண்டு வருஷமா அவர்கள் growth நல்லா இருக்கு. அவங்க ஆர்ட் மேக்கிங் , பிக்சர் மோஷன் , எல்லாம் கிளாரிட்டி இருக்கு. "

"ம்ம் வெரி குட் " என்று தலையை ஆட்டி அதை தெரிந்து கொண்டவர் பின்

"சரி போய் படு. உன்னுடைய இந்தியா பயணத்துக்கு வாழ்த்துக்கள். மாற்றம் வரும் என்று நம்புகிறேன் "

என்று தான் பிடித்திருந்த கோப்பையை மேல் தூக்கிக் காட்டியபின். அவர்கள் மனநிறைவுடன் உறங்கச் சென்று விட்டனர்.

தொடரும் .

 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top