JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 19


அத்தியாயம் 19இதோ தேஜஸ்வினி வேலைக்கு சேர்த்து ஒரு மாத காலம் ஆயிற்று. அவளுக்கு ரஞ்சனா தோழியாக கிடைத்தாள். தன்மையுடன் பேசும் அவளை மிகவும் பிடித்தது தேஜுவிற்கு .மோகன் அவளுக்கு சீனியர். கல்லூரி காலத்திலும் இன்றும் அவளுக்கு உதவும் நல்ல தோழன். அவன் சொல்லித்தான் இந்த கம்பெனி வேலைக்கு வந்தாள். அதில் அவளுக்குப் பிடித்த கார்ட்டூன் டிராயிங் டிபார்ட்மென்ட். ஆம் அவளுக்குப் படம் வரைவது என்றால் மிகவும் பிடித்த ஒன்று . வித விதமான கதாபாத்திரம் உள்ள சிறு சிறு படங்கள் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவள் . மோகன் அவளின் திறமையைப் பார்த்துப் பல சமயம் வியந்து பாராட்டி உள்ளான்.

இதோ பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது அவர்களின் அலுவலகம். இன்று அவர்களின் MD.Mr. watson வருகிறார் என்று அவர்களுக்கு தெரியப்படுத்தினான் மோகன்."அவருக்கு என்ன வயது இருக்கும் ""அவர் single லா""மோகன், ஆள் எப்படி, மிகவும் கோபம் வருமா ?""அவருக்கு கேர்ள் பிரண்ட் இருக்கிறார்களா " இப்படி கேள்வி கேட்டு ஒரு வழி ஆகிவிட்டனர்.MEDITERRANEAN BLUE METALLIC RANGE ROVER கார் வந்து அவர்களின் அலுவலகம் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஹ்ருதை வாட்சன் உள்ளே சென்றான்.மிக வசீகர தோற்றத்துடன் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல் இருந்தவனை பார்த்து அங்கிருந்த அனைவரும் கண் சிமிட்டாமல் வாய் அரை அங்குலம் திறந்து இருந்தது. ஆண்களுக்கே அவனைப் பார்த்து சற்று பொறுமையாக தான் இருந்தது.அவன் பின்னாலே எம்மா(EMMA ) வந்தாள் . கருப்பு நிற லாங் கவுன் அதுவும் அபாயகரமான ஆடை. அவளின் பார்வையில் கர்வம் தெரிந்தது . ஏதோ இந்த அலுவலகம் தன்னால் தான் உருவாக்கப்பட்டது என்ற மிதப்பில் இருந்தாள்.MD அறைக்குள் நுழைந்தவுடன் அந்த கிளையின் மேனேஜர் மற்றும் மோகன் வரவேற்றனர். அவர்களுக்கு சிறு தலை அசைப்பு பதிலுக்குக் கொடுத்தவன், இன்முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தான். சென்னையில் உள்ள தங்களின் இரு branch மேலாளர்கள் மற்றும் எம்மா வையும் தனக்கு முன் அமரவைத்து தற்பொழுதைய நிறுவனத்தின் நிலைமையும் பின் அவர்கள் இப்பொழுது இருக்கும் இந்த கிளையை, அனிமேஷனுக்கு மட்டும் பிரத்தியேக அலுவலகமாக மாற்ற ல் ஆனது. பின் புதிதாக ஆரம்பிக்கும் அனிமேஷன் மூவி பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.இந்தியா வந்து இதோ அவனுக்கு மூன்று மாத காலம் ஓடிவிட்டது . நிற்க நேரம் இல்லாது ஓய்வில்லாமல் ஓடிவிட்டது . இந்நிலையில் ஒருநாள் அவன் அனிமேஷன் படத்திற்கு வந்துள்ள வரைபடங்களைப் பார்வையிட்டு ஒரு சில படங்களைப் பார்த்து அதனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று நினைத்தவன் மோகனை அழைத்துப் படத்தை வரைந்தவர் தன் அறைக்கு அனுப்புமாறு கூறினார். கதவு தட்டப்படும் திசையை பார்த்து உள்ளே நுழைய அனுமதி அளித்தான்.

"எஸ் கம் இன் " கம்பீரமாக ஒலித்த குரல் கேட்டு உள்ளே நுழைந்தாள் தேஜஸ்வினி .

உள்ளே வந்தவள் முகம் பார்த்தவன், கண் இமைக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் இதயத்தின் ஓசையை அவனால் கேட்க முடிந்தது. இந்நாள் வரை இல்லாத உணர்வு இவளின் மதி முகத்தைப் பார்த்ததும் உணரமுடிந்தது. ஒப்பனை செய்திருக்கிறாள் ஆனால் விகாரமாக இல்லை . இதழில் சாயம் பூசி இருக்காளா அல்லது அது அவளின் பிறப்பில் இருந்தே உள்ள ரோஜா வனம்மா . கண்ணுக்கும் புருவத்திற்கும் கூட ஒப்பனை இல்லை. வில் போல் வளைந்து இருக்கும் புருவங்கள். டயமென்ட் நோஸ் பின் . எங்கெங்கோ பார்த்திருக்கிறேன் ஆனால் அவை ரசிக்கும் படியாக இல்லை. நெற்றியில் அம்மா போல் அழகிய ஸ்டிக்கர் இந்த முகத்தில் உள்ளதை போல் பார்த்து ரசித்தது அம்மாவிடம் பின் இவளிடம் வாவ் .. . அவளை மேலிருந்து கீழ் நோட்டமிட்டான். பவள நிற சில்க் காட்டன் புடவை. ஆங்காங்கே தங்க நிற ஜரிகையால் நெய்யப்பட்ட சிறு சிறு பூக்கள். மிகவும் எளிமையான புடவைதான். இருந்தும் பார்க்க மிக அழகாக புடவை உடுத்தி இருந்தாள். அவனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க ஒரு கிளர்ச்சி உருவானது. (ஒருவேளை இதுதான் அழகில் மயங்குவதோ).அவளை நோட்டம் இட்டவன் பார்வை ஓரிடத்தில் வந்து நின்றது. அவளின் இடை அழகு பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது, அவள் அறியாது அதை ரசிக்க விரும்பினான் . பார்த்த நொடியில் பிடித்த முகம் , இவள் என்னவள், எனக்கானவள் என்று முடிவெடுத்து விட்டான் பின் என்ன தயக்கம் என்று எண்ணம் உருவானது.அந்நேரம் எம்மா வும் இல்லை. தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அதை எடுத்துப் பேசியவள் உடனடியாக அம்பத்தூர் வரவேண்டும் என்று அழைப்பு வந்தது அதை அவள் அவனிடம் சொல்லிவிட்டு சென்று இருந்தாள். இவனுக்கும் வசதியாகத்தான் இருந்தது."எஸ் சார் ?"தன் நிலை மீண்டவன். தன் இடதுகையால் பின் தலையை கோதி கொண்டான்"உங்க நேம் என்ன ?"(பேர் கேட்கத்தான் இந்த POTATO என்ன கூப்பிட்டதா ?)"மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது "(அச்சச்சோ கண்டுபிடிச்சிட்டானே )"ஓ ஓ .. ஒன்னும் சொல்லல சார் ""அப்போ உங்க பெயர் சொல்லுங்க ""தேஜு , தேஜஸ்வினி ""WELL MISS."என்று கண்ணை சுருக்கி அவன் கேள்வியாக இழுத்து நிறுத்தியவன் அவளின் முகம் பார்த்து. காதல் வந்துவிட்டது அதை உணர்த்தும் விட்டான் இருந்தும் அவளின் திருமணம் ஆனவளா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே இந்த கேள்வியை கேட்டிருந்தான். அவன் கேள்வி புரிந்தவளாய்"மிஸ். தான் "


"GOOD VERY GOOD" சந்தோஷத்தின் உச்சியிலிருந்து.கையில் வைத்திருந்த ஐபாட் அவள் புறம் திருப்பி அவளின் வரைபடங்களை பாராட்டத் தொடங்கினான்.


அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின் எவ்வளவு பெரிய மனிதர் அவர் தான் வரைந்த படத்தை பாராட்டுவது என்பது பெரிய விஷயம் ஆயிற்று அவளுக்கு. அவள் உள்ளம் மகிழ்ந்தாள். அவனுக்கு நன்றி என்னும் ஒரு வார்த்தை கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.


செல்லும் அவளையே பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்து மோகனுக்கு அடுத்த அழைப்பு விடுத்தான்."மோகன் என்னுடைய கேபின் வாங்க "

அறையினுள் நுழைந்த மோகன் அவன் முன் வந்து நின்றான் . வந்தவனை உட்கார அனுமதி அளித்த ஹ்ருதை நேரடியாக தேஜுவை பற்றிய விசாரணையில் இறங்கினான்."தேஜு எப்படி ?""BOSS " அதிர்ச்சியில் மோகனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை"தேஜு வை பற்றி சொல்லு""BOSS தேஜு ஹோம்லி கேர்ள், நீங்க நினைப்பதுபோல் அவள் இல்லை""நான் என்ன நினைக்கிறேன், உனக்கு என்ன தெரியும் ?""BOSS, நீங்க எம்மா(EMMA) கூட இருப்பது போல் அவளுடனும் நீங்க ..." அவன் என்ன கூற வருகிறான் என்று புரிந்தவன் போல் அவன் முன் தன் இடது கையை அவன் முன் நீட்டி அவன் பேசுவதற்கு இடைமறித்தான்."எங்களுக்குள் இருக்கும் உறவு அது வேற . இப்போது நான் நினைத்தால் எம்மா( EMMA ) வுடன் பிரேக் அப் பண்ண முடியும் . தேஜு வுடன் எனக்கு உருவான உணர்வு என்னால் விவரிக்க முடியவில்லை பிரேக் அப் செய்யவும் விரும்பமாட்டேன் . அவளுடன் நான் வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பீலிங் எனக்கு பிடிச்சிருக்கு . எனக்கு அவள் வேண்டும் ""BOSS உங்களுக்கு பீலிங் இருக்குனு சொல்லிட்டீங்க. அதே பீலிங் அவளுக்கு இருக்கணும். அவளுக்கு ஒரு சில கோட்பாடுகள் இருக்கு . அவளுக்கு இந்த காதல் என்று ஒன்று வராது அவள் பெற்றவர்கள் காட்டும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்வேன் என்று இருக்கும் பெண். அவள் பின்னால் நான்கு வருடம் விகாஷ் அலையோ அலை அலைகிறான்."அவன் பேச்சில் ஆத்திரம் கொண்டவன்" முதலில் அவனை இந்த ஆபீஸ் இருந்து புனேவுக்கு மாற்றம் கொடுக்கிறேன். என்னவளின் காதல் முதலும் முடிவும் என்னுடன் தான். அவளை நான், என்னை காதலிக்க செய்வேன் என்னை சுற்றி வர வைப்பேன் " தீர்மானமாக உரைதான்தினமும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவனிடம் இருந்தது. என்றிலிருந்து அவளை தன்னில் சரிபாதியாகக் கண்டு கொண்டானோ அன்றிலிருந்து எம்மா வுடன் தனிமையில் இருக்கும் நேரத்தை தவிர்த்து வந்தான். அவளுடன் தங்காது தன் தாயுடன் தங்குவது வழக்கம் கொண்டான். எம்மா விற்கு கோபம் கட்டுக்கடங்காது வந்தது இதற்கான காரணத்தை அவனிடம் கேட்டதற்கு. உனக்கும் எனக்கும் இனி ஒத்துவராது என்று தெளிவாகக் கூறினான். அதை ஏற்க மறுத்த எம்மா அவனிடத்தில் சண்டை இட்டாள். இந்த முடிவுக்கு அவள் சம்மதம் தெரிவித்தால் அவளுக்குத் தகுந்த முறையில் அவளின் பங்கினை பணமாகக் கொடுத்து கவனித்துக் கொள்வதாக கூறினான். தனக்குத் தேவை பணம் என்று இருந்தவள் அவனின் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். பின் அவளும் அவன் வழி போகாது அமெரிக்கா சென்றுவிட்டாள்.

பணம் என்ற ஒற்றை வார்த்தையில் இவள் தன்னை விட்டுச் சொல்கிறாளே என்று அவனுக்கு அவளை நினைத்து அறுவறுப்பாக தான் இருந்தது .
பணத்தை புரிபவள் என்று தெரிந்து விட்டது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அவளை பார்ட்னெர்ஷிப் இல் இருந்து விளக்கி வைத்தான்.யுவராணி க்கு லண்டனில் உள்ள பிரபலமான ஆடை காலை நிறுவனத்தில் மூத்த ஆடை காலை நிபுணர் ஒருவரிடத்தில் தொழில் பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகுநாள் ஆசை. அதைத் தந்தையிடமும் கூறி இருந்திருக்கிறாள் . அவளின் எந்த ஒரு ஆசையை அன்பு தந்தை மறுத்ததில்லை. இந்த கல்லூரியில் தான் அவள் படித்தே தீர வேண்டும் என்று அவள் படுத்திய படுத்தலில் இவர் தான் தோற்றுப் போனார். அவர் அன்று சொன்னதை மகள் இன்று கேட்கிறாள் என்று அவருக்கு ஆனந்தமே. மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் தந்தையாக அவளுக்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் . இதில் இவளுக்கும் மிகுந்த சந்தோஷமே. இருப்பினும் தந்தையிடம் போய் வருவதாக கூறிவிட்டு காதலின் பிரிவை நினைத்து ஏங்கி கொண்டிருந்தாள். அவள் அங்கு செல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. .
என்னதான் தந்தை இடத்தில் அவளின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாலும் அவளுக்கு தன் உயிர் காதலை விட்டு பிரிய துளியும் மனம் வரவில்லை . இருந்தும் நான்கு வருடம் பிரிவுக்கு ஆறுமாத காலம் ஒன்றும் பெரியது இல்லையென்று வினய் பேசிப்பேசி அவள் அழுகையை சற்று கட்டுப்படுத்தினான். ஊருக்குச் செல்வதற்கு முன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவளின் வீட்டிற்கு அழைத்தாள். அதற்காகத் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத நேரம் அழைத்திருந்தாள் . அவளின் வீட்டு வாயில் பாதுகாவலன் தந்தையின் விசுவாசி பாவம் அவளுக்கு காதலனை பார்க்கும் ஆசையில் அது நினைவுக்கு வராமல் போயிற்று. அவளின் தந்தைக்கு அழகாக இவன் வந்துள்ள விடயத்தைக் கூறி இருந்தார் அந்த விசுவாசி. அது தெரியாது இவர்களின் காதல் காவியும் இனிதே நடந்து கொண்டிருந்தது .


தொடரும்

 

Nuha

Member
Interesting super sis 💖 friends Perla 3 um மூதேவி ah vanthu sernthuruku..cha அதுங்க throgatha pathi theju therinjipaalaa.. ஹூருதை entry nice modern கலாச்சார US guy. Theju va pidicha reason nice. Avan உத்தமன் இல அவன் தேடலுக்கு பின்ன கிருஷ்ணனும் இல்ல. குட். Anaa?? Vinai vikas Perla vithi enna செஞ்சி vachichoo தெரியலயே seekram அடுத்த update podunga...
 
thank you Nuha sis !! மூன்று பேரின் துரோகம் நிச்சயம் தேஜுவிற்கு தெரியவும் . அன்று அவளின் நிலை வேறாக இருக்கும் !! hrudhai watson அவன் வட்டத்தில் அவன் இதயம் ஆசைப்படும் வாழ்க்கை வாழநினைக்கும் நவீன கலியுக கண்ணன்!! விகாஸ் வினய் ஹ்ருதை மூவரும் அவள் விதியில் வந்து செல்வது உறுதி !!
 

Nuha

Member
thank you Nuha sis !! மூன்று பேரின் துரோகம் நிச்சயம் தேஜுவிற்கு தெரியவும் . அன்று அவளின் நிலை வேறாக இருக்கும் !! hrudhai watson அவன் வட்டத்தில் அவன் இதயம் ஆசைப்படும் வாழ்க்கை வாழநினைக்கும் நவீன கலியுக கண்ணன்!! விகாஸ் வினய் ஹ்ருதை மூவரும் அவள் விதியில் வந்து செல்வது உறுதி !!
♥️♥️♥️
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top