JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 2

அத்தியாயம் 2

தன் குழந்தையின் சிரிப்பில் காலையிலிருந்த பதட்டம் சிறிதே குறைந்தது.

குழந்தையை தன் மடியில் ஏந்தியவள் அவனின் முன் நெற்றியில் வழிந்தோடிய சிகையை தன் கை விரல்களால் நீவி விட்டாள்.

" கிச்சு கண்ணா எழுந்துக்கோ டா ப்ளீஸ் கண்ணா, அம்மா இன்னிக்கு ஆபீஸ் சீக்கிரம் போகணும்"

குழந்தை பதில் ஏதும் சொல்லாமல் அவள் இடத்தில் சிணுங்கினான் .

"உனக்கும் ஸ்கூல் time ஆகிறது பார் , எழுந்து பல் தேச்சு, பால் குடித்து, குளிச்சுட்டு ஸ்கூல்கு போகணும் எழுந்துகோ டா பட்டு !!

தூக்கக் கலகத்திலே தன் அன்னைக்குப் பதில் அளித்தான்.

"மா நா டிரஸ் போடவேண்டும் அதைச் சொல்லவே இல்ல " என்று தன் உதட்டைப் பிதுக்கி கைகளை மலர் போல் விரித்துக் காட்டினான்

"ஹாஹா கண்டிப்பா என்னுடைய குட்டன் Dress போட்டுத்தான் ஸ்கூல் அனுப்புவேன் யு சில்லி பாய் ", என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள் .



" மா நா மாட்டேன் ஸ்கூல் வேண்டாம் மா ப்ளீஸ் "

"கிச்சு ரொம்ப அடம்பிடிக்கக் கூடாது எழுந்திரு , அம்மா உனக்கு ஆபீஸ்ல்லிருந்து வரும்போது உனக்கு கிண்டேர்ஜோய் வாங்கி வருவேன் ஓகே வா ",

"கண்டிப்பா வாங்கி வருவியா மா "

என்று தன் தலையைத்தூக்கி தாயின் கழுத்தில் தன் சிறு கைகளால் அனைத்துக் கொண்டு கொட்டை பல்லைக் காட்டி கேட்டான் .

அதில் சிரித்தவள் " இந்த ஊத்தப் பல்ல நல்லா தேய்த்து அலம்பு, பால் குடி உனக்கு வாங்கிவருவேன் ."

"நோ நோ நோ நா பல் தேய்க்க மாட்டேன் " என்று தன இரு உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டான் "

"அப்போ கிச்சு வாயில் பூச்சு வந்திடும் "

" நா நேற்றே பல் தேய்த்து(வி)ட்டேன் மா , நீ தான சொன்ன night dinner சாப்பிட்டு பல் தேய்த்து படு என்று. இப்போ மறுபடி பல் தேய்க்க சொல்ற நா மாட்டேன், இப்போது நான் ஏதாவது சாப்பிட்டேனா இல்லை இப்போது எதுக்கு பல் தேய்க்க வேண்டும். நான் மாட்டேன் மாட்டேன் மாட்டேன் " என்று வியாக்கியானம் செய்தவனிடம்

"அடம் பிடிக்கக்கூடாது கிச்சு " ,

"அப்போ இரண்டு கிண்டேர்ஜோய் வேண்டும் ஓகே வா "

"வாலு என்னிடமே வா நோ நோ "

"நா அப்போ பல் தேய்க்க மாட்டேன் " என்று அவனுடைய வாதம் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்தும் பாடு அவனுக்குச் சரி சொல்வதுதான் உத்தமம் என்று.

"சரி அப்போ ஒரு condition " என்ன என்பதுபோல் தாயைப் பார்த்தான் .

"இரண்டு கிண்டேர்ஜோய்ல் இப்போது ஒன்று , weekend ஒன்று, ok ?"

"ம்ம்ம் சரி, ம்மா ... ஒரு ஸ்டோரி சொல்லு ," என்று அடுத்த குறும்புக்கு அடிக்கோல் போட்டான் .

அதில் உண்மையில் கடுப்பாகியவள்

"டேய் படவா நைட் தான் ஸ்டோரி சொல்லுவேன் மோர்னிங் எழுந்துபோக ஸ்டோரி எல்லாம் சொல்லமுடியாது இப்போது நீ எழுந்துகல"

என்று பொய்யாய் கோபித்துக்கொண்டாள்

தாயிடம் அதிகம் சேட்டை செய்யாமல் அவனும் சரி என்று ஒத்துக்கொண்டான் .

அவனை அப்படி இப்படி என்று ஒருவழியாகப் பள்ளிக்குத் தயார்ப் படுத்தியவள் . சுசீலா அம்மா விடம் விரைந்து

"சுசீ மா நா இன்றைக்கு teynampet main office போகணும். அதை முடித்துவிட்டு இந்த office வந்து விடுவேன். interview முடித்த பின் நானே கூப்பிடுகிறேன் ,கிச்சுவை நீக்க இன்றைக்கு ஸ்கூல் கூட்டிட்டு போங்க." என்றாள்

"பாபா ஒன்றுமே சாப்பிடலையே bread toast போட்டுத் தரட்டுமா "

"வேண்டாம் மா நான் வரேன் " என்று அவள் இன்று சந்திக்கப்போகும் சம்பவத்தை எதிர்கொண்டு வாசலை நோக்கிச் சென்றாள் .

அன்றைய பொழுது சுமுகமாக இருக்காது என்று பாவம் அவளுக்குத் தெரிய வாய்ப்பேது. அதனை எதிர் கொள்வதற்கு ஷக்தி அந்த கடவுள் தான் தரவேண்டும் .



பேருந்தில் ஏறியவளின் மனதில் ஏதோ ஓர் உணர்வு அவளை இம்சிக்கத் தொடங்கியது. வெகு காலமாக அவளைத் தொடர்ந்து வரும் ஓர் உணர்வு அது.

அந்த உணர்வு அவளிடம் ஏற்படும் ஓர் அபூர்வ உணர்வு. அவள் ஓர் சம்பவத்தை சந்தித்து அனுபவிக்கும் முன் அவளுடைய உள் மனம் அதை அனுபவித்து விடும் .

என்னவென்று வரையறுக்க முடியவில்லை அவளால். ஏதேனும் பெரியதாக அசம்பாவிதம் வந்து விடுமோ என்ற அச்சம் அவள் மனதில் ஆட்கொண்டுள்ளது.

அவள் அடைய வேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்த்தாள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆயிற்று main office பக்கம் வந்து . இது ஒரு பன்னாட்டு நிறுவனம் .

இன்று மெயின் பிரென்ச் ஆபீஸ் ல் வெளி நாட்டிற்குச் சென்று வேலை பார்க்க வாய்ப்பு வந்தவர்களுக்கான நேர்முக தேர்வு. இந்த வாய்ப்பு முன்னமே வந்ததுதான் அப்பொழுது இருந்த மனநிலையில் அவளை சிந்திக்க விடவில்லை. இப்பொழுது இந்த வாய்ப்பை ஏற்க பெரியதாக எந்த ஒரு காரணமும் அவளிடம் இல்லை. எனினும், இவள் வேண்டாம் என்று சொல்லவில்லை .

பல இனிய அனுபவங்களை அசைபோட்ட வண்ணம் அவள் waiting hall வந்து அமர்த்துக்கொண்டாள் .

அவளுடன் வேலைபார்த்த தோழி ரஞ்சனா இவளை பார்த்ததும், அவளை அணைத்துக்கொண்டு குசலம் விசாரித்தாள்.

" hey di, எப்படி இருக்க உன்ன பார்த்து வருஷம் ஆச்சு."

" hey நான் நல்லா இருக்கேன் di . நீ இப்படி இருக்க. "

"hmmm super dooper , ஆமா நீ இப்போது எங்க இருக்க. நீ வேறு branch வேணும் கேட்டு போய்ட்டதா சொன்னார்கள் . ஏன் டி?

"அது அப்படித்தான், சரி அதைவிட்டு எத்தனை மாசம்"

என்று அவளின் மணி வயிற்றைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் .

"இப்போது கேளு டி உனக்கு நான் என்னுடைய marriage invitation கொடுக்கலாமென்று உன்னுடைய வீட்டுக்கு வந்தால் நீ வீடு மாறிட்ட சொன்னாங்க. எங்க போன ." என்று அவளை கேள்வி கேட்டுவிட்டு கொண்டிருந்தாள். பின் அவளுடைய கேள்விக்கு பதில் கூறினால்.

"ஏழு முடிஞ்சு எட்டு ஆரம்பம் ". சொல்லும்போது அவள் வதனத்தில் ஒரு சந்தோஷ களைப்பு . அதைக் கண்டவள் அவளின் பேறுகாலம் நினைவுக்கு வந்தது .

" நான் இப்போது இங்கயில்ல, ambattur போய்ட்டேன்".

" husband அங்க வேலை ஷிபிட் பண்ணதால நீயும் அங்கேயே போய்ட்டியா. அவர் எப்படி இருக்கார் . எத்தன குழந்தைகள் ." என்று அவளை பார்த்து கண் அடித்தாள். தோழிகளுக்கு இடையே இருக்கும் சகஜமான உரையாடல் தான்

நண்பர்களால் ஏற்ப்பட்ட அவமானங்கள் பெரியது இதில் நம்மை ஒருத்தி நிறுத்தி நல் மனதுடன் என் நலனை விசாரிக்கிறாள் என்றால் இவளை எந்த நிலையில் நாம் வைக்க வேண்டும். இப்போதெல்லாம் அவள் யாரையும் எளிதில் தன் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லையே.

தன் நிலையைப் பற்றி கூற வார்த்தைகள் வராத பொழுது தன்னையே சமன் படுத்தியவள் தோழியிடம் .

" husband இப்போ .....

என்று கூறவந்தவளை. அவளுடைய பெயர் அழைக்கப்பட்டது அதில் அவள் கூற வந்த செய்தியும் தடைப்பட்டது .

"சரிடி நான் interview atten போறேன். வந்து உன்னுடன் பேசுறேன் என்று விடை பெற்றவளை . மறுபடியும் அவளின் தோழி அனைத்து

"நா உன்ன பார்க்கத்தான் வந்தேன் . உன்னுடைய பேர் interview register ல பார்த்தேன் . எனக்கு இன்றைக்கு doctor appointment இருக்கு . உன்னுடைய phone number மட்டும் கொடு நாம் அப்போப்போ பேசிகளாம்."

என்று தோழியுடன் தன் தொலைப்பேசி எண்ணை பகிர்த்து விட்டு MD room கதவைத் திறந்தாள்.


தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top