JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 20 Part 1

அத்தியாயம் 20
பகுதி 1

"ராணி மா என்ன இது ? நீ அழுவதை பார்க்கத்தான் என்ன வர சொன்ன? ப்ளீஸ் அழாதே மா. "

"எப்படி அழாமல் இருக்க முடியும், உன்னை விட்டு என்னால் ஆறு மாசம் பார்க்காமல் இருப்பது முடியாது டா "

"இங்க பார் ஆறு மாசம் இப்படி ஓடிப் போய்விடும் "( தன் விரல்களால் ஒரு சொடுக்கு போட்டான் )

அவன் எவ்வளவோ சமாதானம் செய்து ஒன்றுக்கும் அவளின் அழுகை குறைவது போல் தெரியவில்லை அவனுக்கு. அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளின் அழகு வதனத்தை கையில் ஏந்தி , அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டிக்கொண்டு மூக்கும் மூக்கும் உச்சரியபடி ரகசியமாகக் கேட்டான் .


"உனக்கு என்னை அவளோ பிடிக்குமா டி ?" என்று

"என்னடா நீ இப்படி கேட்டுட்ட , என்னுடைய உலகமே நீ தாண்டா , உன்னை சுற்றித்தான் எனக்கு இருக்க பிடிக்கும். "

அவள் காது மடல்களை தன் இதழ்களால் உரசியபடி அவளிடம் ரகசியமாக
“ ராணி மா”
“ஹ்ம்ம் “
“ஆறு மாதம் பிரிவு நமக்கு ?”
“ஹ்ம்ம்.. அதுதான் இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு இருக்கேன் “
“இந்த ஆறுமாத கால பிரிவு தெரியாமல் இருக்க மாத்திரம் ஒன்னு இருக்கு “ பின் விஷமமாக அவளைப் பார்த்து கண்ணாடி தான்.

காதலனின் இத்தகைய செயல்களின் கோவிப்பது போல் நடிக்க முயற்சித்து அது முடியாது போக அவனை இருக்க அணைத்துக் கொண்டாள் பின் அவன் புஜத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு

"பாடவா கொன்னுடுவேன். "

"ஆறு மாதத்திற்கு தேவையான காதலை மொத்தமும் தரவேண்டாமா ராணி மா"

"டேய் பாடவா வேண்டாம் சொன்ன கேளு அப்பா அம்மா இப்போ வந்துடுவாங்க "

வாய்விட்டுச் சிரித்தான் பின் தீவிரமான குரலில்

"உனக்கு என் மேல் இவ்வளவு தான் நம்பிக்கையா ராணி மா. உன்னை எதுவும் செய்து விட மாட்டேன் "

"அப்படி நான் சொன்னேனா. நீ எது செய்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் . நீ எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் உன்னை என்னவன் ஆக்காம விடமாட்டேன் "

“எனக்கும் அப்படி தான் , எந்த நிலையிலும் உன்னை நான் விடமாட்டேன். என் உயிர் போகும் நிலையிலும் உன் மடி வேண்டும். நான் எந்த தவறு இழைத்தலும் என்னை ஏற்கும் மனம் உன்னிடத்தில் எனக்கு வேண்டும்”

ஆறுமாத கால பிரிவு கூட அவர்களுக்கு எதோ உள்ளுக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது.

இருவருக்கும் உண்டான பயம் தான் அது. அதை இருவரும் சொல்லிக்கொள்ளவில்லை. எங்கே தன் பயத்தை கூறினால் அவள் இன்னும் வாடி விடுவாள் என்று அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். பயத்தில் ஒருவருக்கு ஒருவர் தழுவிக் கொண்டு ஆறுதல் படுத்திக் கொண்டார்கள் .

கதவு திறக்கப்பட்டது அவர்களின் மன நிலை களையப்பட்டது !!

யுவராணி யின் தந்தை அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்திற்கும் நிலை கண்டு கொதித்து எழுந்து விட்டார். வினய் அருகில் வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து அவன் கன்னங்கள் சிவக்க மாறி மாறி அடிக்க ஆரம்பித்துவிட்டார். முதல் இரண்டு அடிகளில் தனக்கு என்ன நேர்ந்தது என்று கிரகித்துக்கொள்ள தடுமாறியவன். அவரின் மூன்றாவது அடி அடிக்கும் பொழுது அவரின் கையை பிடித்து தடுத்து விட்டான் . பின் அவரை பார்த்து முறைத்து, அவரின் கையை தட்டிவிட்டு, யுவராணியை தன் புறம் அழைத்துக் கொண்டான். இடையோடு சேர்த்து அணைத்தான் , ராணியின் தந்தையை நோக்கி ‘யுவராணியை காதலிப்பதாகவும் இவளையே தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி னான். யுவராணியும் தன் தந்தை இடத்தில் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள் . அவளின் தந்தைக்கு இதில் துளியும் விருப்பமில்லை.

"என்னம்மா சொல்ற ஹ ! நம்ப அந்தஸ்து என்ன? இதோ நேற்று முளைத்த காளான் எல்லாம் பணக்காரன் ஆக முடியாது . நமக்கென்று ஒரு தராதரம் வேண்டாமா ? "

"அப்பா எனக்கு இவன் முக்கியம், காதலிக்கும் முன்பும் பின்பும் அதை பற்றி எதுவும் நான் யோசிக்கவில்லை. எப்போதும் இல்லை. ஏத்துக்கோங்க ப்பா… நம்மகிட்ட தான் அது இருக்கே "

"சார் எனக்கு ராணியை மிகவும் பிடிக்கும் எனக்கு உங்களைப்போல் அந்தஸ்து இல்லை என்றாலும், நீங்கள் பணம் படைத்தவர்கள் தான். என்னால் முடிந்தவரை ராணி யை ராணி போல் பார்த்துக் கொள்ள முடியும். என்னை நம்பி உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் . "

பற்ற மக்களின் கண்ணீரை என்றும் பார்க்க பொறுக்காதவர். மகளுக்காக சற்று இறங்கி வர முற்பட்டார் . அதில் நான் பணம் படைத்தவன் என்று சற்று ஆணவ தொனியில் பேசத்தொடங்கினார்

"உன்னை நம்பி என் பெண்ணை திருமணம் செய்துவைக்க முடியாது . அதே நேரம் அவளின் விருப்பம் நீ என்றால் அதை மறுத்துக் கூறவும் எனக்கு மனம் வரல. அப்போ ஒன்று பண்ணலாம். அவளை உனக்கு திருமணம் செய்துவைக்க எனக்கு சம்மதம் என்று சொன்னால். அதுக்கு நீ இந்த வீட்டோடு மாப்பிள்ளையாக வர வேண்டும்.. முன்ன நான் சொன்னது போல தான் எனக்கு உன் மீது துளியும் நம்பிக்கை இல்லை, .உன்னுடன் என் பொண்ண கல்யாணம் செய்து வைத்து அவள் கஷ்டப்பட நான் விட மாட்டேன் அதுக்கு நீ எங்க வீட்டுடன் இருந்துட்டா என்னாகும் என் பொண்ணு சந்தோஷமா இருப்பா, எந்தவித கஷ்டத்தையும் அனுபவிக்க மாட்டேன் என்ன உனக்கு சம்மதமா ? "

அவரின் இந்த அடாவடியான நிபந்தனை அவனுக்கு வெறுப்பை உண்டாக்கியது. காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து தருமாறு அவரிடம் வந்து கேட்டால். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சொல்கிறார் இவர் என்னவென்று கூறுவது? என் மீது நம்பிள்ளை இல்லை என்றால், என்னை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கினால் மட்டும் வராத நம்பிக்கை வந்துவிடுமா என்ன?. பணம் படைத்தவன் அகம்பாவம் முழுவதும் நிறைந்த மனிதன்

" என்ன தம்பி. நா பேசினதுக்கு ஒன்னும் சொல்லாம இருக்க ? மௌனம் சம்மதம் னு எடுத்துக்கலாம், தானே.” என்று வில்லன் போல் சிரித்தார்.

“என்னுடன் இருந்தால் உங்கள் மகளுக்கு கஷ்டம் வந்து விடுமா ? நீங்கள் வருவதற்கு முன் கூட என்னுடன் தான் இருந்தாள். நீங்களும் தான் பார்த்தீர்கள் அவள் ஒன்றும் கஷ்டத்தில் இல்லையே. “
“தம்பி கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள். மீண்டும் சொல்றேன் அதுக்கு நீ சம்மதித்தால் மட்டுமே என் மகளுடன்
உனக்கு திருமணம்"

"அதற்கு நான் சம்மதம் தெரிவிக்க வில்லை என்றால் ?"

"என் பெண்ணை உனக்குத் திருமணம் கட்டி வைக்க முடியாது ?"

"உங்கள் சம்மதம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தல் யார் தடுத்தாலும் முடியாது என் ராணி நான் சொல்வதை கேட்பாள்" என்று அவள் புறம் திரும்பியவன் அவளின் பதிலை எதிர்பார்த்து.

அவனின் முகத்தை பார்த்து அவனிடம்

"இல்லை வினய், அப்பா சொல்வதை யோசித்துப் பார்க்கலாம். இங்க எங்க வீட்டில் இருக்கலாம் . நீ கவலைப்படாதே உனக்கு எந்தவிதத்திலும் குறை இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . உனக்காக தானே நான் அம்மாவிடம் சண்டை போட்டு இந்த காலேஜ் படிக்க வந்தேன். இப்பொழுது ஏன் நான் என் அப்பாவிற்காக இதைச் செய்யக் கூடாது ? ஐந்தில் என்ன வந்துவிடப்போகிறது. "

எந்த நிலையிலும் காதலி தன் பக்கம் இருப்பாள் என்ற நம்பிக்கை அவனுள் இருந்தது. ஆனால் இன்று அவன் காதலை சோதிக்கும் நாளாக அமைந்தது.

காதலி தன் பக்கம் இல்லை என்று தெரிந்து அவளின் கையை தன் இடம் இருந்து பிரித்தவன் அவளை ஏளனம் கொண்ட சிரிப்பு சிரித்து .

"என்னை பொறுத்தமட்டில் ஒரு ஆண், பெண்ணை தன் வீட்டில் மகாராணி போல் பார்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு ஆண் சம்பாதித்து வந்து அவன் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கிக்கொள்ள வேண்டும். நீ என்னவென்றால் உன் வீட்டில் என்னை வைத்துக்கொண்டு என்ன பார்த்துக்கொள்வதாக என்னிடமே சொல்ற. வேலை காரர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஹ்ம்ம்… நான் என்ன, எதற்கும் திராணி இல்லாதவன் ? புருஷ லட்சணத்தில் ஒன்று, கணவன் வெளியில் சென்று பெண்டாட்டிக்கு சம்பாதித்து வந்து அவளை ராணி போல் பார்த்துக் கொள்வது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளை ஆக என்னை மாற்ற நினைக்காதே எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை "

"என்ன உளறல் வினய் இது.புருஷ லட்சணம் அது எது என்று ஏதோ பேசிட்டு போற? ஏன் நான் சம்பாதித்து நீ உட்காந்து சாப்பிடுவதில் உனக்கு என்ன கஷ்டம் வந்து விட போகிறது? ஏன் நான் சம்பாதிக்க கூடாது ? இல்லை நான் வேலைக்கு போனால் உன் ஆண் கெளரவம் குறைந்துவிடுமா ? அப்படி பார்க்க போனா உங்க அம்மா சம்பாத்தியத்தில் தான் நீ இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க. அவங்களும் ஒரு பொம்பள தானே ...?"

அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் கோவத்தின் எல்லையில் இருந்தவன், எதிரில் இருப்பவர்கள் யார் எவர் என்று மறந்த நிலையில் அவளின் தொண்டையை வலது கரத்தால் பிடிக்க சென்றிவிட்டான். அவள் தனக்காக நிற்பாள் என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம். நம்பிக்கை வைத்து தோற்றவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதில் அவள் மீது வெறித்தனமான கோபம் வந்தது. இப்பொழுது தேவை இல்லாமல் தன் தாயை பற்றி பேசியது மேலும் கோபத்தை அதிகரிக்க செய்தது. ஆனால் அவள் மீது கோபம்தான் ஒழிய வெறுப்பு எள் நுனியும் இல்லை.


"நீ சம்பாதித்து அதில் நான் சாப்பிடவேண்டும் என்ற நிலை எனக்கு வரவே வராது ராணி. அப்பறம் என்ன சொன்ன என் அம்மா சம்பாதித்து தான் நான் வளர்ந்திருக்க என்றா? ஆமாம் அதற்கு என்ன இப்போ ? நான் பெருமையா சொல்லுவேன் டி அங்க அம்மா உழைப்பில் நானும் என் அண்ணனும் வளர்ந்தோம் அதற்கு என்ன இப்போ. என் அம்மாவை பற்றி பேசுற தகுதி உனக்கு இல்லை. நீ எனக்கு தான் ராணி என் அம்மாவிற்கு இல்லை. நீ உன் பிள்ளைக்கு ரோல் மாடல் லா இருந்துக்கோ . அதற்கு என்னிடம், என் குடும்பத்துடன், உன் உடைய பணக்கார வேலையை காட்டாதே .

உன் பணத்தை பார்த்து உன்னை பார்த்து நான் உன் பின் வரவில்லை . நீ நீதான் வந்தாய் . அப்போ இருந்த காதல் இப்போ உன் அப்பா சொன்னதும் உன் பின் உன் வீட்டோடு இருக்க வேண்டும் என்று கட்டளை விதிக்காத ..
ம்ம் ஆனா ராணி என்னை பிடித்து காதலை முதலில் சொன்னது நீ , நான் இல்லை , இப்போ அதே காதல் ஆனால் என் ராணி மனசு மாறிட்டா. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உன் பின் என்ன வர சொல்ற .
என் உடன் வா னு நான் சொல்றேன் நீ வரல . இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு ராணி மா. புரிந்துகொள் .
நீ உன் சம்பாத்தியத்தில் உன் அப்பனுக்கும் அம்மாவுக்கும் உட்கார்ந்து சாப்பாடு போடு. ஏ சி அறையில் உட்கார்ந்து உட்கார்ந்து உன் அப்பனுக்கு ரத்தம் சுண்டி போச்சு அதான் மூளை வேலை செய்யவில்லை . சொல்லிவை அவரையும் ஒரு ஆளாக மதித்து நான் சோறு போடுவேன் என்று .

எதை கூறி நம் காதலை பிரித்து உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க கூடாது என்று சரியாக கணித்து இந்த வேலையை செய்து இருக்கிறார். அதை புரிந்துகொள்ள பார் இவர் கூறுவது என்றும் நடக்காத ஒன்று”.

அவன் பிடித்த பிடி அவளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை . என்னதான் கோவத்தில் அவன் அவளின் தொண்டையை பிடிக்க சென்றாலும் அவன் கண்ணுக்கு தெரிந்தது தன் ராணியின் அழகு வதனம் மட்டுமே .
தன் கோபத்தில் முகம் வாடியது என்று கண்டு கொண்டவன். தன் செய்கையால் மேலும் அவளை காயப்படுத்த விரும்பவில்லை.பிடிப்பது போல் இருந்த கை உண்மையில் கழுத்தை நெறிக்க வில்லை

இவன் செய்கையில் யுவராணியை பெற்றவர்களுக்கு ஒரு நொடி உயிர் போனது.

தொடரும்
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top