JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 3

அத்தியாயம்- 3

தன் தோழிக்கு விடைகொடுத்து விட்டு MD அறைக்குள் சென்றாள் .

அவளை வரவேற்றான் மோகன் . அவன் இவளுக்கு முன்னாள் மேனேஜர் . இவள் மோகன், ரஞ்சனா, ஹரி மற்றும் விகாஷ் . ஐந்து பேர் கொண்ட குழுவில் டீம் லீடர் மோகன் தான். இவர்களுக்கும் கருது வேறுபாடின்றி ஏற்ற தாழ்மை இல்லாமல், ஒற்றுமையாக இருந்தனர்.

மோகன் எப்பொழுதும் இவளுடைய வேலையை பாராட்டி கொண்டிருப்பான்.

ஏனோ இவள் இந்த கிளையை விட்டு வேறு இடம் சென்றது மோகனுக்கும் ரஞ்சனாவிற்கும் பிடிக்கவில்லை .

இவளுடைய இன்றைய நிலை மோகனுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும் இவன் உதவிட வரும் பொழுதெல்லாம் இவனை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொண்டாள். பயம் பயம் யாரை நம்பவேண்டும் என்ற பயம் அவளிடத்தில் முன்பு இருந்தது . தன் நிலையை ரஞ்சனா விடம் கூறக் கூடாது என்று உறுதி மொழி வாங்கிக்கொண்டாள் . அது மட்டும் அல்லாது. அவள் அங்கிருந்து வேறு கிளைக்கு மாற்றமும் பெற்றுக்கொண்டாள்.

இப்பொழுது சரியாய் நான்கு வருடம் கடந்து அவளை நேரில் பார்க்கிறான்.

" வா, வந்து உட்கார் எப்படி இருக்க "? என்று தெரிந்தவர்கள் என்னும் ரீதியில் உபசரிக்க துவங்கினான் .

அளவிற்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு

"நான் நல்லா இருக்கிறேன் , இப்போது நீதான் மேனேஜர் SIRஹ? வாழ்த்துக்கள் "

சட்டென்று தன் நாவை கடித்துக் கொன்று

"சாரி நீ சொல்லிவிட்டேன் நீங்க எப்படி இருக்கீங்க "

அவளின் எண்ணம் புரிந்தவனாக

" நீ வா போனே சொல்லு, இப்போது யாரும் இங்க இல்லை அதுவும் இல்லாத நீ அப்படி சொல்வது தான் எனக்கும் பிடிக்கும் " என்றவனின் கூற்றில் சந்தோஷ மிகுதியில் கை குலுக்கினாள்.

மோகனும் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு

"ரொம்ப பெருமையா இருக்கு "

"எப்போதிலிருந்து நீ இங்கு வருவது இல்லையோ. அப்போதிலிருந்து நான்தான் பார்த்துக்கிறேன். எம்டீ எனக்கு மேனேஜர் போஸ்ட் கொடுத்துட்டு போய்ட்டாரு."

அதில் சிறிது அதிர்த்தவள் , பின்பு அதை புறம் தள்ளினாள்.

"சரி சொல்லு உனக்கு US போக விருப்பமா அங்க இருந்துதான் வேலை பார்க்கவேண்டும்"

என்று வேலை விஷயம் பேசத் தொடங்கி விட்டான் .

" முதலில் இந்த ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் சொல்லு, பிறகு, ஒரு சின்ன விஷயம், நான் இப்போது தனி மனுஷி இல்ல . என் கூட என்னுடைய பையனும் இருக்கிறான் அவனையும் நான் யோசிக்கணும் . அவனுக்கும் VISA எடுத்துத் தர முடியுமா அப்படி இருந்தால் நான் இந்த ப்ராஜெக்ட் எடுத்துக்க சம்மதிக்கிறேன் "

"கவலையே படாத டிபென்டென்ட் விசா கம்பெனி எடுத்துக் கொடுக்கும். உன்னுடைய ஒர்க் பத்தி நான் சொல்லித்தான் BOSSகு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்ல. அவர் இங்க இருக்கும் போதே உன்னுடைய வேலையை பார்த்து இருகார் உனக்கே அது தெரியும். அவருக்கு உன்னுடைய ஒர்க்ஸ் ரொம்ப பிடித்திருக்கிறது அண்ட் மோர் ஓவர் அதை நீ அங்க இருந்து பண்ணலாம் என்று யோசிக்குறாங்க . இப்போது நமக்கு picsar அனிமேஷன் கம்பெனியில் இருந்து ஒரு ப்ராஜெக்ட் வந்து இருக்கு. ஒரு மூவி சைன் பண்றார்கள். உன்னுடைய CARTOON டிசைன் அவர்களுக்குப் பிடிக்கும் சோ உன்ன அந்த டீம் ல போடலாம் னு யோசிக்குறார் அதுமட்டும் இல்லாது நீ நேரடியா பாஸ்கு ரிப்போர்ட் பண்ணலாம் ."

அவன் சொன்ன அனைத்தையும் சந்தோஷமாக தலையை ஆட்டிஆட்டி கேட்டிருந்தவள் பாஸ் இடம் தான் நேரடியாக வேலை செய்யவேண்டும் என்று அவன் சொன்னதும் அவளுக்கு ஓர் சில நிகழ்வுகல் மனக்கண்ணில் வந்து போனது. அந்த ஒருகணம் அவளின் உடலும் சிலிர்த்தது. முயன்று அந்த உணர்வை கட்டுப்படுத்தியவள். "இவனிடம் நான் நேரடியாக வேலைசெய்ய வேண்டுமா" . நாம் சற்று யோசிக்கலாம், ஹைம் இல்லை கொசுவிற்கு பயந்து குடியை விட்டு ஓடிப்போவதா ? எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் என்று இவளுக்குள்ளே ஒரு கணக்கு போட்டுக்கொண்டாள். பாவம் அந்த கொசு கொடுக்கும் தொல்லைகள் இல்லை இல்லை லீலைகள் அவளுக்கு தெரிந்தும் ஏனோ அவளின் மனதிற்கு அது எட்டவில்லை. அதாவது அவளின் மனதில் அவன் இன்னும் ஆழமாக கொடி ஏற்றவில்லை . இவ்வாறாக அவனின் எண்ணத்தில் அவள் சட்டென்று எரிச்சல் அடைந்தாள். ( அவளின் பாவனைகள் அனைத்தையும் அந்த அறையில் பொறுத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் உணர்வை படித்தவன் இதழில் புன்னகை மலர்ந்தது .)

அவள் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு அவள் முன் ஒரு ஆவணத்தை நீட்டி

"இதில் ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் மற்றும் உனக்கும் உன்னுடைய குழந்தைக்கும் விசா பைல் பண்ண எல்லா டாக்குமெண்ட்ஸ் இருக்கு. இதில் எல்லாம் சரியா FILL பண்ணு அண்ட் எல்லாவற்றிற்கும் அசல் நகல் (ஒரிஜினல் கோப்பி) அவசியம் மறந்திடாதே."

என்று அவளுக்கு அனைத்தையும் சொல்லிமுடித்தான்.

" எத்தனை வருஷம் ப்ராஜெக்ட் இது"

சற்று தடுமாறியவன் "ஹ... இ..இந்த ப்ராஜெக்ட் முடியும் மட்டும் நீ அங்க இருந்து வேலை பார்க்கணும் . ஏன் கேட்கிற "

என்று ஒரு வழியாகச் சமாளித்தான் .

" என்னுடைய பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் போட்டு இருக்கேன் நான் சீக்கிரம் வந்தால் உடனே சேர்த்துவிடுவேன் அதான் கேட்டேன் " இதற்கு எப்படி சமாளிப்பது என்று சிந்தித்தவனை அவளே

"இந்த ப்ராஜெக்ட் பெரியதுதான் அதுவும் இல்லாது அங்க நேரடியாக வேற வேலைபார்க்கவேண்டும் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கல. நான் நாளைக்கு பதில் கூறட்டுமா"

அதில் பதறியவன் "ஹே நீ மட்டும் தான் கார்ட்டூன் வரைவதில் இருக்க , யோசிக்கிறேன் சொல்லாத ".

சற்று யோசித்தவள் , இப்பொழுது நமக்கு கிச்சுவும் வேலையும் தான் முக்கியம். அவனுக்கு ஊர்ச்சுற்றி காட்டவேண்டும். இவனை சமாளித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் மோகனுக்கு தன் சம்மதத்தை கூறிவிட்டாள்

"சரிங்க ஒபிஸ்ர் " என்று குறும்புத் தனத்துடன் கூறினாள் . அதில் உண்மையில் அவன் மனம் நிம்மதி உற்றது . அதைத் தெரிவிக்கும் விதமாய்

"நீ இப்படி பேசி ரொம்ப நாள் ஆயிற்று , கண்டிப்பா நீ நல்லா இருப்ப நீ எதைப்பதியும் யோசிக்காத குழந்தைக்கு ஸ்கூல் நீ இங்க வர நேரத்தில் நானே ஏற்பாடு பண்ணுகிறேன் சரியா. YOU DON'T WORRY ABOUT HIM".

"ஹ்ம்ம் ஓகே.. நான் அப்போ கிளம்புகிறேன் இந்த டாக்குமெண்ட்ஸ் எப்போது சப்மிட் பண்ணவேண்டும் சொல்லு"

"இன்னும் டூ வீக்ஸ்ல "

"ம்ம்.. சரி நான் வரேன் "

என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு கிளம்பினாள் .

அவள் கிளம்பியதும் , அவன் காதில் மாட்டியிருந்த BLUETOOTH வழியாக மோகனை காச்சி கொண்டிருந்தான் இவனுடைய "BOSS".

"அவளை பெர்மனண்ட்டா இங்க இருக்க நான் என்ன என்ன வழி இருக்குனு யோசிக்குறேன் நீ யாரை கேட்டு அவள் பிள்ளைக்கு ஸ்கூல் தேடுறேனு வாக்கு கொடுக்கற ? நீ என்னிடம் தான் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் பண்ணவேண்டும் என்று ஏன் MAN சொன்ன ? அவ யோசிப்பது என்னை நினைத்து அதுவும் என்னை நேருக்கு நேர் சந்திப்பதை நினைத்து " அவள் மனதை புரிந்தவன் போல் பேசிக்கொண்டிருந்தான்.

"பாஸ் "

"அதுசரி அங்க யாரும் இல்லை என்றால் உன்னை அவள் வா போ என்று கூப்பிடலாம் ? நான் இங்கே இருக்கிறேன் என்று உனக்குத் தெரியும் தானே அதுவும் உன்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பேன் என்று ? " இவன் கூறி முடியும் சமயம் மோகன் அந்த அறையின் ஓரத்திலிருந்த கண்காணிப்பு படக்கருவியை பார்த்து தலையில் அறைந்து கொண்டான் பின்

"பாஸ் அவள் வாங்க போங்க கூப்பிட்டால் அந்நியமாக இருக்கு என்று முன்னமே என்னிடம் கூறி இருக்கிறாள் . இப்போ இருக்கும் நிலையில் அவள் இப்படி வெளியில் வந்து பேசுவது சற்று அவளுக்கும் நல்லது என்று தான் அப்படி கூறினேன். அதுவும் இல்லாது அவள் அப்படியே கூப்பிடட்டும் என் தங்கை எப்படி கூப்பிட்டால் என்ன எனக்கு ?" இவன் உணர்ச்சிவசத்தில் பேசியதைக் கேட்டவன் தன் இடது காதை இடதுகையால் குடைந்தவன் பின் அவனை வறுத்து எடுக்க தொடங்கினான்

"BOSS ME பாவம் NO BAD WORDS PLEASE "


தொடரும்
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top