JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 5

அத்தியாயம் - 5

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனநிலை என்ன வென்று அவளால் வரையறுக்க முடியவில்லை. கணவன் இறந்துவிட்டான் என்றே நினைத்துக்கொண்டிருந்தவள். தன் கண்முன் கணவனை அதுவும் உயிருடன் முழு உருவம் பெற்று இருக்கிறேனே அவனை அருகில் சென்று அணைத்துக் கொண்டு நலம் விசாரிப்பதா? தன்னை தவிர்க்க விட்டுச் சென்று, கட்டிய மனைவியின் நிலையைப் பற்றி யோசிக்காமலிருந்திருக்கிறானே இவன் மனிதப் பிறவிதானா என்று அவன் மீது வெறிகொண்ட கோவம் வந்தது? மணந்தால் பெற்றோர்கள் சொல்லும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்று தான் எடுத்த முடிவு தோற்றுவிட்டதா, தான் ஏமாந்து விட்டோமே? யார் என்ன சொன்னாலும் தன்னை பற்றிய சந்தேகம் தன்னிடம் அல்லவா இவன் தீர்த்திருக்க வேண்டும் என்று ஆற்றாமையுடன் மனதில் போராடிக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை நோக்கி அடியெடுத்து வந்து கொண்டிருந்தான்.

இதற்கு மத்தியில் அவளுடைய தொலைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று புது எண்களிலிருந்தும் வந்திருந்தது. அதனை உணரும் நிலையில் தான் அவள் இல்லையே.

அவளை நோக்கி வந்தவனைப் பார்த்தவள். ஐந்து வருடம் நான் இருக்கும் இடம் தேடி வரத்தெரியவில்லை, இப்பொழுது நான் நிற்கும் இடத்தை நோக்கி ஏன் வரவேண்டும், அப்படியே எங்கேனும் சொல்லவேண்டியது தானே அதுவும் அவளின் குழந்தையோடு.

அவள் அருகில் வந்தவன் அவளை நோக்கி அவன் பேசும்முன் அவளே அந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே தன் சந்தேகத்தைத் தெளிவுப் படித்துக்கொள்ளும் நோக்கில்

" இது அவளுடைய குழந்தையா " கண்ணை சுருக்கி அவளின் கேள்வியை நன்கு உள்வாங்கியவன்

"இது எங்களுடைய குழந்தை, பெயர் நிலா"என்றான் சற்று பெருமையுடன். உங்களுடைய பிள்ளையா? அப்பொழுது இவர்களுக்குள் கல்யாணம் ஆகிவிட்டதா? அல்லது ஆகாமலே எப்படி இது சாத்தியம் ஆகும் ?
இவளுக்குப் புரிந்தும் புரியாமலும் தலைச் சுற்றல் சற்று பெரியதாக இருந்தது.
என்ன ஒரு ஆணவம் அவனின் பதிலில். பெண்ணை பெற்றெடுத்த பெருமையா இல்லை அவளுடன் இவனுக்கு இருக்கும் உறவினை குழந்தை மூலம் சொல்லும் பெருமையா. இதில் எது என்று அவள் ஆராயும் முன் அவன்

" இப்படி பப்ளிக் ப்லேஸ்னு கூட அறிவு இல்லாமல் என்ன இப்படி பார்த்துட்டு இருக்க. அன்றைக்கு அவ்வளவு பேசின இப்போது பேயைப் பார்ப்பது மாதிரி நிற்கிற. உன்னை ஆராய்வது என் கடமை அல்ல. அவசியம் இல்லாத ஒரு விஷயம் . நீங்க இப்போது எப்படி இருக்கிறீர்கள் மிஸ் மிஸஸ் whatever ."

என்று எகத்தாளம் பேசினான் .

கணவன் இறந்து விட்டான் என்று இருந்தவள், அவனே முன்வந்து நீ இன்னும் எப்படி இருக்கின்றாய் என்று கேட்டால் ஒரு பெண்ணின் நிலை சொல்ல முடியாத அளவிற்கு வருத்தமும் கோவமும் அவளுக்கு இருந்தது.

எவ்வளவு தான் தாங்குவாள் அவளும் .

கொஞ்சம் கொஞ்சமாக உண்மை உரைக்க ஆரம்பித்தது அவளுக்கு . நிஜ உலகத்திற்கு வந்தவள் அவனுக்குப் பதில் அளிக்காமல் அவளுடைய தொலைப்பேசி ஓயாமல் அடிப்பதை உணர்ந்தாள். அதை எடுத்துப்பார்த்தவள் அதில் சுசீலா அம்மா விடம் இருந்து ஓயாமல் CALL வந்து கொண்டிருந்தது. அதனை எடுத்து காதில் வைத்தவள் சுசீலா அம்மா சொன்ன செய்தியைக் கேட்டு கால் நடுங்கச் சற்று இரண்டடி பின் வைத்தாள்.
அவளைத் தாங்கும் பொருட்டு அவன் அவளின் கையை பிடிமானத்திற்குக் கொண்டுபோகும் சமயத்தில் அவனின் கண் பார்த்து ரௌத்திரத்தில் முறைத்தாள். எகத்தாளம் பேசியவன் கூட அவளின் கோபம் கொண்ட பார்வையில் தன் கையை பின் கொண்டுவந்தான் அவன் அறியாது.

" எந்த HOSPITAL மா , கிச்சு இப்போது ஒகே தானே? நான் நான் இப்போதே கிளம்பி விட்டேன் நீங்க கவலை பாடாமல் இருங்க .நான் ..." என்று அவள் முடிக்கும் முன்

அவள் அருகில் MEDITERRANEAN BLUE METALLIC BMW CAR வந்து நின்றது.

அதனைக் கண்டவள் இதற்கு மேல் எனக்கு எதையும் தாங்கும் சக்தி இல்லை கடவுளே என்று வெம்பி அழும் நிலைக்கு வந்து விட்டாள். காரில் இருந்து மோகன் தான் இறங்கினான். அவனைப் பார்த்து சற்று தைரியம் பெற்றாள்.

இவனோ வந்து நின்ற காரை பார்த்தவன் அவளை நோக்கி கீழ் பார்வை பார்த்தான். அவன் எதோ கூறும் முன்

அவள் அங்கிருந்து செல்லும்முன் அருகில் நின்றவன் கண் பார்த்து ரௌத்திரத்தில் அவனிடம்

"என்னதான் இத்தனை வருடம் நான் தனியா இருந்தாலும் I'M A SINGLE MOTHER (ஒற்றை தாய்) பெருமையா சொல்லுவேன் (இப்பொழுது அவனை இவள் கீழ் பார்க்கும் முறையானது) அண்ட் நான் மிஸ், மிஸஸ் னு கேட்டியே அது நான் எடுக்கும் முடிவு அது எதுவாக இருந்தாலும் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இப்படி ROADSIDE ல நின்றுகொண்டு பேசறவங்க கிட்ட சொல்லவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்ல."

அவளிடம் விரைந்து வந்த மோகன் அவளை காரில் ஏறுமாறு கூறி அவளை ஏற்றிச் சென்றான். அவள் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு ஓட்டி சென்றான். பின் அவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலம் அவளின் இப்போதைய நிலைமையை எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான்.

"BOSS அவ ரொம்ப அழுது கொண்டிருக்கிறாள் ." என்று வருந்தினான் அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ

"நீங்க கொஞ்சம் CONTROL லா இருங்க . நீங்கள் இங்க வந்தால் எல்லா காரியமும் கெட்டுப்போய்விடும் பிறகு அவள் அங்க வர வைப்பது சுலபம் இல்ல ." என்று எடுத்துரைத்தான். தான் எங்குச் செல்கிறோம் யாரைப் பார்க்கப் போகிறோம் என்று மோகனிடம் கூறினோம்மா இல்லையா, இவனுக்கு எப்படி நாம் செல்லவேண்டிய இடம் தெரியும் என்று அவள் சிந்திக்கவும் இல்லை.
என்ன நடக்கின்றது என்று உணரும் நிலைமையிலும் அவள் இல்லை. தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று என்றோ அவள் அழுதது தான். அதை எல்லாம் மறந்து தன் வாழ்க்கையின் சந்தோசம் தன் பிள்ளை மற்றும் சுசீலா அம்மாவின் குடும்பம் மட்டுமே என்று இருந்து வந்த நிலையில் ஏன் மறுபடியும் எனக்கு இவனைக் காட்டி கஷ்டத்தைக் கொடுக்கிறாய் கடவுளே என்று அழுது அழுது அவள் முகம் வீங்கியது. ஓயாமல் அழுது கொண்டிருப்பவளைக் கண்டவன் ஆறுதல் அளிக்க வார்த்தை தெரியாமல் திண்டாடினான்.

மருத்துவ மனைக்கு வந்தவள் கிச்சுவை அனுமதிக்கப்பட்ட அறையின் எண் பற்றி விசாரிக்கும் முன் மோகனே அவளைக் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு ( pediatric ward ) பக்கம் அழைத்துச் சென்றான். அங்கே அவள் கண்ட காட்சி அவளை வேருடன் அறுத்து எறியப்பட்டவள் போல் உணர்ந்தாள் .

அங்கு க்ரிஷ் தலையில் கட்டுடன் தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் முகம் வாடிய வேங்கை போல் இருந்தது .

ஆமாம் அவன் வேங்கை தான் தனக்குத் தந்தை இல்லாத குறையை யாரேனும் சொல்லி காட்டினாள் அவர்களிடத்தில் வேங்கைபோல் பாய்வான் . அச்சமையும் இவ்வாறு அடிகளை வாங்கிக்கொண்டு , போரில் வென்று பரிசுகளை வாங்கிவந்தவன் போல் கவலையைத் தாய்க்கு அள்ளிக் கொடுப்பான்.

அவனருகில் சென்றவள் அவன் மெத்தைக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள் , அவன் நெற்றில் கட்டப்பட்டிருந்த இடத்தை தடவிக்கொடுத்து கொண்டிருந்தாள். அவன் கைகளில் கீழே விழுந்த சிராய்ப்பு, மற்றும் ஆங்காங்கே சிறு சிறு நகங்களால் கீறப்பட்டிருந்த கீறல்கள் இருந்தன.

அருகில் இருந்த சுசீலா அம்மா விடம் விஷயத்தை கேட்டு கொண்டிருந்தாள் .

" என்ன ஆச்சுமா . எப்படி இவளோ அடி."

"அவங்க ஸ்கூல் இருந்து கால் வந்தது பாப்பா அங்க போய் பார்த்தா இவனுடன் படிக்கிற பையனோடு சண்டை போட்டிருக்கிறான் . உனக்கும் அவர்கள் கால் பண்ணிருக்கிறார்கள் போல நீ எடுக்கலனதும் எனக்குக் கால் பண்ணிருக்கிறார்கள் ."

"என்ன சண்டையாம் ? அந்த பையனுடைய பேமிலி அங்க வந்தார்களா மா? "

"வந்தார்கள் பாப்பா, அந்த பையன் ஏதோ சொல்லப்போக இவனுக்கு கோவம் வந்து விட்டது. அதான் இவனும் சும்மா இல்லாமல் அந்த பையன் கூடப் போய் சண்டை போட்டிருக்கிறான் . அந்த புள்ள இவனை தள்ளிவிட்டுருக்கு இது காத்தாடி(காற்றாடி) போல இருந்து அடி வாங்கி கொண்டு வந்து இருக்கான் "

கவலையோடு ஆரம்பித்தவர் கிண்டலாக முடித்தார் . அவருக்குத் தெரியாது பாவம் இன்று இவள் சந்தித்த சம்பவங்களைப் பற்றி .

இவருடைய கிண்டல் கேலி எதுவும் இவளுடைய சிந்தனையில் ஏறவில்லை . அதைப் புரியாதவர் மேலும் அவளுக்கு வேறு ஒரு கனத்த கல்லை அவள் தலையில் போட்டார்.

"பாப்பா " என்று அவர் அழைத்ததில் அவரை பார்த்தவள்

"சொல்லுங்கள் சுசீம்மா "

"பாப்பா இன்றைக்கு ஸ்கூல் அவனுடைய டீச்சர் இவனுக்கு ரொம்பக் கோவம் வருது , அது இந்த வயசுக்கு மீறி இருக்கிறதாம் பாப்பா அதுக்கு இவனைக் குழந்தைகள் மன நல மருத்துவர் கிட்ட ஆலோசனை கேட்கச் சொன்னார்கள் பாப்பா "
"இரண்டு பிள்ளைகளுக்குச் சண்டை என்றால் என்ன ஏது என்று தீர விசாரிக்க வேண்டாமா ? இவனுக்கு கோவம் வருகிறது என்றால் அந்த பிள்ளை இவனை என்ன சொல்லியதோ ? அதற்கு இப்படி யா ஒரு டீச்சர் சொல்லுவாங்க ? " சுசீலா அம்மா பாவம் பிள்ளைப் பாசத்தில் அவர் ஆதங்கத்தில் பேசிக்கொண்டு இருந்தார்.

பெரியவர்களுக்கு வரும் கோவம் அழுகை துக்கம் சந்தோசம் ஆசை வெறுப்பு இப்படி எல்லா வித உணர்ச்சிகளும் சிறு குழந்தைகளுக்கும் வரும் .

பெரியவர்களுக்கே அதைக் கட்டுப்படுத்த தெரியாது ஒன்று , பாவம் குழந்தைகள் அதைச் சரியாக சொல்லவும் தெரியாது அதை வெளிக்காட்டும் விதமும் தெரியாது.

ஒருவருக்கு அதிகமான உணர்ச்சிகள் வந்தால் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அதை வெளிப்படுத்தி விடுவர் . அது அவர்கள்மேல் தவறு இல்லை. அவர்களுடைய சுற்றமும் சூழலும் முக்கியமான காரணம் ஆகும் . இவனும் அப்படிப்பட்ட சூழலில் தான் இருந்தான் .

குழந்தையின் மனநிலை பார்க்கும் பெரியவர்களால் இது தான் நடந்தது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாது. நடந்ததைப் பாதிக்கப் பட்ட குழந்தையால் மட்டுமே அதைச் சொல்லமுடியும்.

அதுவும் சிறந்த அனுபவம் வாய்ந்த குழந்தைகள் மனநிலை மருத்துவரால் மட்டும்மே முடியும்.

இதனைச் சொல்லி முடித்த சுசீலாம்மா அவளைப் பார்த்தார் . பார்த்தவர் பதறிப்போய் அவள் அருகில் வந்தார் . குழந்தையின் கட்டிலின் மேலே சரிந்து இருந்தவளை நிமிர்த்தி அவள் முகத்தில் இரண்டு தட்டு தட்டி எழுப்பிவிட முயன்றார் முடியவில்லை. அவர் மருத்துவரை அழைப்பதற்குள்ளும் அவளைப் பரிசோதிக்க டாக்டர் உள்ளே வந்தார்.

ஒரு மனுஷியால் எவ்வளவு துக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியும் . ஒன்றன்பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வண்டி போல் வந்து வந்து கொண்டிருந்தது.

என்னதான் ஒரு பெண் தைரியமான உருவெடுத்தாலும் மனதளவில் அவள் ஒரு பூ .

நம் 'BLUETOOTH" நாயகன் இவளின் நிலை அறிந்து கொண்டு கையிலிருந்த பீர் கோப்பையை வீசி எறிந்தான்.


தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top