JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 7

அத்தியாயம் 7

10 வருடங்களுக்கு முன் :

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

என்று சுப்ரபாதம் கேசெட்டில் பாடிக்கொண்டிருக்க பூஜை அறையில் தேவி ஸ்வாமி படத்திற்கு முன் நின்று ஆர்த்தி எடுத்துக் கொண்டிருந்தார் .

பூஜைகளை முடித்தவர் ஆர்த்தி தட்டை பூஜை அறையில் வைத்து விட்டு தன் இரண்டாவது பிள்ளையின் அறையைப் பார்த்தவர் இன்னும் தன் செல்லப் பிள்ளை கல்லூரிக்குக் கிளம்பாமல் இருப்பதை நினைத்து சற்று கோவம் வந்தாலும் .

அவன் அறைக்குள் நுழைந்தவாறே

"வினய் கண்ணா எழுந்துகோ காலேஜ் டைம் ஆகிறது. அண்ணனைப் பார் சீக்கிரம் எழுந்து குளித்து ரெடி ஆயிட்டான். நீ ஏன்டா இப்படி இருக்க . இன்றைக்கு முதல் நாள் . இப்படியா லேட்டா எழுந்துப்பாங்க. "

என்று இவனுக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார் . அதில் கண்விழித்தவன் தாயிடம்

"அம்மா அந்த தடி மாடு எழுந்தால் நானும் எழுந்துக்க வேண்டுமா? முடியாது இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்குவேன்"

"வினய் எழுந்துக்க போகிறாயா இல்லை சுட தண்ணீர் கொண்டு வந்து கொட்டட்டும்மா "

கதவின் ஓரத்தில் நின்று இவை அனைத்தையும் கவனித்தான் மூத்த மகன் வினோத் .

தன் தாயை முறைத்துக்கொண்டே அவர் அருகில் வந்தவன் " சோப்பு சாம்பு எல்லாம் எடுத்து வரேன் நீ சுட தண்ணீர் கொட்டு. இவன் இப்படியே குளிச்சு கிளம்பிவிடுவான். அம்மா நீ இவனை உண்மையாகவே திட்டிட்டு இருக்கியா இல்ல கொஞ்சிட்டு இருக்கியா? சுட தண்ணீ கொட்டுறாங்களாம்.

எட்டு மணி காலேஜ் இப்போது மணி ஏழு ஆச்சு. இன்னும் இவன் எழுந்த பாடு இல்லை,"

என்றான் பொறுப்பான தலைச்சன் பிள்ளைபோல்.

"ம்... இதோ வந்துட்டார்ல கஞ்சி போட்ட காண்டாமிருகம் "

"டேய் நான் உனக்கு அண்ணன் டா "

"தெலுகு பட டைட்டில்லா ப்ரோ "

"இது திருந்தவே திருந்தாது என்றைக்கு நீ உன்னுடைய இரண்டாவது பையனைத் திட்டி இருக்க. இதெல்லாம் திருந்தும் கேஸ் சா பார் . இவனெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று யார் அழுதது. இவனுக்கெல்லாம் ஆர்ட்ஸ் காலேஜ் தான் சரி வரும் . "

" ப்ரோ அதுவும் படிப்புதான் , நானும் அப்படித்தான் ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்திடலாம் நினைத்தேன் என்ன பண்ண. ஒரு சில அன்புத் தொல்லைகள் என்னை இன்ஜினியரிங் தான் படிக்கவேண்டுமென்று ஒரே லவ் டார்ச்சர் அதான் போனா போகிறது என்று இந்த படிப்பைப் படித்து, படிப்புக்குப் பெருமை சேர்க்கலாமென்று இருந்தால் ரொம்ப தான் அலடிக்குற ."

"அது யார் டா உன்னை லவ் டார்ச்சர் பண்ணுவது "

"இதோ இங்க நிற்கிறார்களே நம்ப வீட்டின் ஸ்ரீதேவி என்னுடைய தேவி " என்று படுத்தவாறே தாயை அணைத்துக்கொண்டான் ..

"உதைபடுவ, அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடுவ ..."

தன் தம்பியை அடிக்க செல்ல இருந்தவனைத் தடுத்தாள் தேவி .

"டேய் நிறுத்துங்க டா , நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன். சும்மா ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொண்டே இருக்கீங்க .டேய் வினய் ஒழுங்கா போய் குளிக்கிற வழியப் பார் . காலேஜ்க்கு நேரம் ஆகிறது பார் . "

என்று இருவரையும் விளக்கி வைத்தார் .

வினோத் தன் பங்குக்கும் அர்ச்சனை படித்தான். யார் என்ன கூறினால் என்ன நான் உண்டு என் தூக்கம் உண்டு என்று தன் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் வினய்.

வினோத் பொறியியல் மூன்றாம் ஆண்டு அதே கல்லூரியில் படிப்பவன். படிப்பில் முதலிடம் , அன்பானவன் , குடும்பத்திற்குப் பொறுப்பானவனும் கூட .

வினய்யும் படிப்பில் சுட்டி, அன்பானவனும் தான் . ஆனால் சற்று விளையாட்டுப் பிள்ளை பிடிவாதம் இவன் ரத்தத்தில் ஊறியது . ஆனால் தாயின் ஒரு பார்வை போதும் அதை மீறி அவனால் எதையும் செய்ய முடியாது.

இவனுடைய பிடிவாதம் தாயிடம் செல்லுபடி ஆகாது. தேவியிடம் இவனுக்குப் பாசம் அதிகம் அதே நேரம் தந்தை இல்லாமல் வளரும் தாயிடம் சற்று மரியாதையும் இருக்கும் . தேவி இவனின் பிடிவாத குணத்தை என்றும் ஆதரிக்க மாட்டார் என்று. அவனுக்கு நன்கு தெரிந்த விஷயம் தான். தேவிக்கு இரு பிள்ளைகளும் இரு கண்கள் போல.

சிறிது நேரம் சென்றபின் தன் பிடிவாதத்தை விட்டுவிட்டு மெத்தையில் எழுந்து கொள்ளும் நேரம் அவனுடைய கைப்பேசி அழைத்தது அதை எடுத்துப் பார்த்தவன் கண்கள் சிரித்தது, உதட்டில் அவளின் பெயரை உச்சரித்து, பின் கைப்பேசியை உயிர்ப்பித்தான் .

"சொல்லு டி என் இதய ராணியே "

"காலேஜ் கிளம்பிட்டியா இல்ல இன்னும் தூங்கிக்கொண்டு தான் இருக்கியா "

"என்னுடைய ராணி என்ன உத்தரவு போட்டாலும் அதை நான் செய்வேன் , சொல்லுங்கள் ராணி நான் என்ன செய்யட்டும் , இப்படியே மெத்தையில் என்னுடைய இதய ராணியை நினைத்து தலையணையைக் கட்டிக்கிட்டு தூங்கட்டுமா, இல்ல எழுந்து காலேஜ் கு கிளம்பி அங்க நீ இல்லாமல் காவியம் பாடட்டுமா ?"

"ஹ...ம்ம்ம் நீங்க மெத்தையில் புரண்டு புரண்டு படுத்து உங்களுடைய இதய ராணியை நினைச்சிட்டு இருங்க , உங்களுடைய ராணி நீ எப்போ காலேஜ் வருவீங்கன்னு கேட்டை பார்த்துட்டு இருக்கா . "

அடித்துப்பிடித்து தலையணையைத் தூக்கி எரிந்து அவன் மெத்தையின் ஓரத்தில் உட்கார்ந்தான் . காதில் கைப்பேசியை வைத்துக்கொண்டே

"என்ன டி சொல்ற நீ காலேஜ் வந்து இருக்கியா. ஐயே லூசு மாதிரி ஏதாவது சொல்லாத அப்போ உன்னுடைய லண்டன் ட்ரீம் "

"பேபி நீ இப்போ இங்க வரியா? இல்ல இப்படியே கார் எடுத்துக்கிட்டு போகட்டுமா ?"

"எங்க லண்டன் போறியா "

"உன்னோட தல, மரியாதையா இங்க வந்துசேர். எல்லா விளக்கமும் போன் லே கேட்கற."

"பேபி இப்படி அன்பா சொல்லவேண்டும், இப்போ பார் உன்னுடைய மாமனை எப்பிடி வரேன் பார் "

"சீக்கிரம் வாடா வெயிட் பண்ணுண்டு இருக்கேன் "

" பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் "

என்று பேசியை வைத்தவன். குளியல் அறைக்குள் சென்று காக்கை நீரில் நீச்சல் அடிப்பது போல் அரைகுறையாகக் குளித்து முடித்து இடுப்பில் துண்டுடன் வாசனைத் திரவியம் தெளித்துக்கொண்டு சற்று விலைஉயர்ந்த உடையை உடுத்திக்கொண்டு முன் அறைக்குள் நுழைந்தான் .
இவனின் தாயார் இவனை வித்யாசமாக பார்த்து

"ஏன்டா காலேஜ் போக சொன்னா எதோ சினிமா பட ஷூட்டிங் போற ஹீரோ கணக்கா கிளம்பிட்டு இருக்க . டேய் ஒரு நோட் புத்தகம் கூட வேண்டாமா ?"

"ம்மா நான் என்ன எலிமெண்ட்ரி கிளாஸ் படிக்குறேன் புக்ஸ் லஞ்ச்பேக் னு எடுத்துக்கிட்டு போக "

"ம்ம்ம்ம் ... தம்பி உன்னுடைய நடவடிக்கையே எதுவோ சரி இல்லையே . தேர்ட் இயர் படிக்கிற நானே கையில் நோட்ஸ் எடுத்துப்பேன் நீ என்னடா காலேஜ்கு ப்பிகர் பிக்கப் செய்யற மாதிரி கிளம்பி இருக்க ."

வினய் மனதில் 'இவன் கண்ணும் இவனும். என்னை நோட்டம் விடுவதே வழக்கமா வெச்சிருக்கான் '

"டேய் அப்படி எதுவும் லவ் கிவ் னு போயிடாத , நம்ப குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்துவராது . என்னுடைய வழக்கை போல உங்களுக்கும் அந்த நிலைமை வேண்டாம் டா ."

என்ற அன்னையை கட்டிக்கொண்டு

"மை டார்லிங் தேவி நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன் போதுமா சும்மா அழாத ம்மா , கண்ணை தொட , இங்க பார் இன்றைக்கு என்னுடைய முதல் நாள் காலேஜ். நீ சிரிச்சிட்டு வழி அனுப்பினால் தான் என்னால் நிம்மதியா இருக்க முடியும் நாள் முழுக்க ப்ளீஸ் ம்மா "

அந்த நேரத்திற்கு தாய்க்கு தேவையான ஆறுதல் வார்த்தையாகச் சொன்னானே தவிர , அவன் மனம் முழுவதும் அவனுடைய ராணியே குடி கொண்டிருந்தாள் .

தன் தாயின் கவலையோ ஒரு துளி கண்ணீரோ அவனை அசைத்தது உண்மை தான் ஆனால் அதை அவன் உணர்தானா இல்லையா என்பது அவனுக்கேய தெரியாத ஒன்று.

இதே தாயின் அன்பிற்காக தன் அன்பிற்கினியவளை கை விடும் நாள் வரும் என்று அவன் நினைத்தது இல்லை . தன் நிலைமை அறிந்தும் தன்னை விடாமல் ஆட்டி வைப்பாள் அவள், என்று அவன் நினைக்க வில்லை.

தன் தாயை அணைத்து விட்டு தன் சகோதரனோடு கல்லூரி வாழ்க்கையின் அதன் இனிப்பான நிகழ்வுகளையும் கசப்பான சம்பவங்களையும் ருசித்து அனுபவிக்கப் புறப்பட்டான்.

தன் தோலுக்கு மிஞ்சி வளர்த்த தன் இரு பிள்ளைகளைப் பார்த்து வரவேற்பறையிலிருந்த நீல் இருக்கையில் அமர்ந்தவர் அவரின் வாழ்க்கை பயணத்தைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தேவி அவனுடைய கணவர் கணேசன் மிகவும் அன்பானவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அன்யோன்னிய தம்பதியர்கள் .

இவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் புரிந்துகொண்டனர். கார் ட்ராவெல்ஸ் ஒன்று வைத்து அதில் கணேஷுடன் அவருடைய நண்பன் நீலமேகமும் உடன் சேர்த்து பிஸ்னஸ் பார்ட்னர் ஆகினர். மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நிலைமைக்கு வந்து பிறகு பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்து சந்தோசம் அடையாளம் என்று நினைத்த தருணம் அவரின் காதல் கணவனை அந்த எமன் அழைத்துச் சென்றான் . ஒரு பெரிய கார் விபத்து.

அச்சமயம் அவருடைய தோழனான நீலமேகம் தான் இவர்களுக்கு உதவியாய் இருந்தார். அவருடைய மனைவி அருள்மொழியும் தேவியும் தோழிகள் போல் பழகி வந்தார்கள்.

இதனை நினைத்துப் பார்த்தவர் தன் கைப்பேசியை எடுத்து தன் தோழிக்கு அழைத்தார். அவருடன் ஒரு சில வார்த்தைகள் பேசினால் தான் அவர் மனதிற்கு நிறைவாக இருக்கும்.

கல்லூரிக்கு வந்தவன் தன் சகோதரனின் வகுப்பு தோழர்களுடன் மரியாதையாகவும் தோழமையாகவும் பேசி பழகினான். தன் நண்பனின் சகோதரன் என்பதால் அவர்களும் இவனுக்கு மற்றவர்கள் போல் பெரிய அளவில் இல்லை எனினும் சிறியதாக ராகிங் என்ற பெயரில் எப்படி சிக்க வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களை கடந்து சென்ற பெண்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணை காட்டி அவளிடத்தில் காதல் வார்த்தைகள் கூற வேண்டும் அதாவது லவ் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்றார்கள் .

இவனும் அந்த கூட்டத்தைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.அவன் அருகில் இருந்த சீனியர் தன் அருகில் நின்றிருந்த பெண்ணின் தலையில் சூடியிருந்த ரோஜா பூவை எடுத்து வினய்யிடம் நீட்டி.
"அங்க பார் ஒரு கருப்பு மற்றும் சாம்பல் நிற சுடிதார் போட்டு ஒருத்தி அந்த கூட்டத்திலே தனியா தெரியரா பார். அவ கிட்ட இந்த பூவை கொடுத்து அவளை உருக உருகக் காதல் வார்த்தை பேசி நீ லவ் ப்ரொபோஸ் பண்ண வேண்டும் அவளும் உன்னுடைய வார்த்தையில் உருகித் திளைத்து உன்னிடத்தில் நீ கூறிய வார்த்தைகளை காதல் என்று ஏற்று, பதிலுக்கு உன்னிடம் அவளும் காதலைக் கூற வேண்டும் என்ன செல்வியா இல்லை வேற எதாவது பொண்ணை பார்க்கட்டுமா உனக்கு " என்று தன் அருகில் இருந்தவனை நோக்கி பார்வையால் வேறு பெண்ணை பார்க்க கூறினான். இவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அவன் கண்ணிற்கு இவர்கள் க்யூபிட்கள் ( cupid
) போல் தெரிந்தார்கள். என்ன இரண்டு பக்க சிறகுதான் மிஸ்ஸிங் . " எடுடா அந்த வில்லை விடுடா அவளை நோக்கி அம்பு என்று அவர்களுக்கு இவன் ஆணை இடுவதுபோல் எண்ணிக்கொண்டான்". அவர்களிடத்தில்

" வேற யாரும் வேண்டாம், அப்படி நான் காதல் வார்த்தைகள் சொல்லி அவளை ஏற்று கொள்ள வைத்தால். நீக்க மறுபடியும் எங்கள் இருவரையும் அது செய் இது செய் என்று எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது"

என்று கேட்டுக்கொண்டான் . இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சீனியர்களும் இவனுடைய அண்ணனும்,

இவனுக்கு அந்த பெண்ணின் மீது பிரியம் இல்லை அதாவது காதல் இல்லை ராகிங் என்ற வார்த்தைக்குத் தான் இவன் இப்படி செய்கின்றன் என்று நினைத்துக் கொண்டனர்.

மேலும் இவனுடைய அண்ணன், தம்பி இப்படிப் பார்த்தவுடன் காதல் செய்யும் ரகம் இல்லை, செய்யவும் மாட்டான் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தான். மேலும் இது சும்மா இந்த வயதிற்குரிய விளையாட்டுத்தனம் தான் என்று நினைத்துக் கொண்டான் .அதேபோல் அவனுடைய வார்த்தைக்கு இவர்கள் தலையை ஆடி வைத்தார்கள் .

அந்த ரோஜா பூவை பார்த்து முகம் சுளித்தான். வேறு ஒருவர் தலையில் சூடிய பூ என்னவளுக்கா? அவளுக்கு எதிலும் முதல் இடம் தருவேன் நான். என்னிடமிருந்து தொடங்குகிறது நான் தரும் அனைத்தும் அவளுக்கு தான் முதலில். என்று கர்வம் கொண்டான். பாவம் விதி அவனை பார்த்து சிரித்தது. .

"எனக்கு இந்த ரோஜா பூ வேண்டாம் . நானே பார்த்துக்கிறேன்"

என்றுவிட்டு அவளை நோக்கிச் சென்றான்.

அவளை நோக்கிச் சென்றவனை இரு ஜோடி கண்கள் அனல் வீசிக் கொண்டு பார்த்திருந்தது .

தொடரும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top