Srinithya
Guest
தருணம் ஒன்றல்ல ஓராயிரம் உண்டு...
இனிக்க,
சுவைக்க,
ரசிக்க,
திகைக்க,
திண்டாட,
கொண்டாட,
சிரிக்க,
சிந்திக்க,
அனுபவிக்க,
ஆழ்ந்து போக....,
ஒப்பற்ற நிலையைப் பெற ஓய்வின்றி நடந்த தருணம்.. ?
தலை நிமிர முடியா அவமான தருணம்..?
தம்நிலை மீட்கும் கர்வ தருணம்..?
கையறு நிலையைத் தந்த தோல்வியைத் தழுவிய தருணம்.. ?
வெற்றிக்காக உழைக்க உத்வேகம் பெற்ற தருணம்.. ?
ஆசை கொண்ட
வெற்றிக்கனியை அடைந்த தருணம்..?
கொய்த கனியைக் கொண்டாடிய தருணம்.. ?
ஆசையால் அன்பால் கட்டுண்டு வாழ்ந்த தருணம்.. ?
நம்மை நாமே செதுக்கிக் கொண்ட ஆரம்ப தருணம்..?
உன் கள்ளச்சிரிப்பை கடக்க முடியாது நின்ற தருணம்..?
இன்னிசையாய் மனதை மீட்டும் இனிய தருணம்.. ?
இமயமலையின் கனமாய் மனதை அழுத்தும் கடின தருணம்.. ?
ஈடில்லா மகிழ்வுடன் தன்னுயிரை சுமந்த தருணம்.. ?
ஒப்பில்லா மணியாய் திகழும் மழலை ஈன்ற தருணம்.. ?
ஆனாலும் இவற்றை எல்லாம் விட
உன் விழிப்பார்வையில்
தொலைந்த தருணம் - அது என்
உயிரை மீட்டும் அழகிய தருணம்... ?
உயிர் பிரிந்தாலும் மறவா உன்னத தருணம்.. ??
View attachment 283