Srinithya
Guest
தருணம் ஒன்றல்ல ஓராயிரம் உண்டு...
இனிக்க,
சுவைக்க,
ரசிக்க,
திகைக்க,
திண்டாட,
கொண்டாட,
சிரிக்க,
சிந்திக்க,
அனுபவிக்க,
ஆழ்ந்து போக....,
ஒப்பற்ற நிலையைப் பெற ஓய்வின்றி நடந்த தருணம்..
தலை நிமிர முடியா அவமான தருணம்..
தம்நிலை மீட்கும் கர்வ தருணம்..
கையறு நிலையைத் தந்த தோல்வியைத் தழுவிய தருணம்..
வெற்றிக்காக உழைக்க உத்வேகம் பெற்ற தருணம்..
ஆசை கொண்ட
வெற்றிக்கனியை அடைந்த தருணம்..
கொய்த கனியைக் கொண்டாடிய தருணம்..
ஆசையால் அன்பால் கட்டுண்டு வாழ்ந்த தருணம்..
நம்மை நாமே செதுக்கிக் கொண்ட ஆரம்ப தருணம்..
உன் கள்ளச்சிரிப்பை கடக்க முடியாது நின்ற தருணம்..
இன்னிசையாய் மனதை மீட்டும் இனிய தருணம்..
இமயமலையின் கனமாய் மனதை அழுத்தும் கடின தருணம்..
ஈடில்லா மகிழ்வுடன் தன்னுயிரை சுமந்த தருணம்..
ஒப்பில்லா மணியாய் திகழும் மழலை ஈன்ற தருணம்..
ஆனாலும் இவற்றை எல்லாம் விட
உன் விழிப்பார்வையில்
தொலைந்த தருணம் - அது என்
உயிரை மீட்டும் அழகிய தருணம்...
உயிர் பிரிந்தாலும் மறவா உன்னத தருணம்..
View attachment 283