JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தஹ்சீனா - வேம்பு

JLine

Moderator
Staff member
இவள் ஒரு
கற்பக மூலிகைக்காரி
பல் வகைகள் கொண்ட
இவள் தன்மூச்சில் இருந்து
அடி வேர் வரை
அரும்மருந்தாகி போவாள்
பல்லாண்டு வாழும் வேம்பின்
நன்மை
ஆறாய ஆறாய
அறிவோம் ஆயிரம்
கருவேம்பு, நிலவேம்பு,
மலைவேம்பு, சர்க்கரை வேம்பு
சிவனார் வேம்பு, கறிவேம்பு
இன்னும் நிறைய முகம் கொண்ட
இவள்
நானூறு ஆண்டுகளுக்கும்
செழித்து வளரும்
செழிக்க துணைப்புரியும்
சக்தி வாய்ந்தவள்
மண்ணுக்கு மகவுக்கு,
காற்று தூய்மைக்கு..
பெண்ணுக்கு ,
அவள் கருதாங்கும் கருப்பைக்கு..
உணவுக்கு
உடலுக்கு, உடல்சரும நலனுக்கு..
நோயின் முறிப்புக்கு , தடுப்புக்கு, எதிர்ப்புக்கு..
என நீண்டுகொண்டே
போகும்
இவள் இறந்தும் மரத்துண்டு
பொருளாகி
மடி தாங்கி தாலாட்டும்
பூமி தாயின் உன்னத மகளன்றோ !!


கீழ் உள்ள படங்கள் நான் எடுத்தது
#கறிவேம்பு_Sweet_neam_leaf
#மலைவேம்பு
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top