JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

நட்பு

Srinithya

Guest
எத்தனை காலங்கள் கடந்தாலும்
தடியூன்றி தள்ளாடி நடந்தாலும்
நினைத்த நிமிடத்தில்
மனச்சிறகுகள் பறக்கும்
எல்லையில்லா
வானம் தான் நட்பு...

நினைவிலேயே துள்ளித்
திரிந்திட வைக்கும்
பள்ளிக்கால நட்பு...

விட்டுச் சிறகடிக்கும்
பட்டுப்பூச்சியாய்
வர்ணங்களை வார்த்திடும்
கல்லூரி நட்பு...

என்றென்றும் தோள்
கொடுத்துத் தாங்கிடும்
உண்மையான நட்பு...

காலமெல்லாம் நம்முடனே
நடை போடும்
உயிரான நட்பு... 😊
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top