• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

நிலவினும் இனியாள்!அத்தியாயம்:-11

Roja

Active member
Episode-11

திருமண மண்டத்தில் மணி...மதியம் மூன்றைத் தாண்டியும் பந்தி நடந்து கொண்டிருக்க,தன் மனையாளிடம் அஸ்வினின் சீண்டலும் தொடர்ந்து கொண்டிருந்தது.மணமக்களுக்கே ஆன விளையாட்டுக்கள் முடிந்து இறுதியாக மாலை மாற்றச் சொல்ல,மனையாளின் கழுத்தில் மாலையை போட்ட அஸ்வின். மதி தன் கழுத்தில் மாலை போடுவதற்காக அவள் உயரத்திற்கேற்ப சிறிது குனிந்து மாலையை வாங்கிக் கொள்ள.அவனின் இந்தச் செய்கை அவனைப் பெற்றவர்களுக்கே ஆச்சரியத்தைத் தர,மதியின் பெற்றோரோ தங்களை மறந்து பார்த்திருந்தனர்.தன் மனையாளிடம் அவன் காட்டும் நெருக்கத்தைப் பார்த்து இரு பெற்றோர்களும் பூரித்திருக்க... மண்டபத்தில் இருந்த அனைவரும்"நல்ல ஜோடி பொருத்தம்பா"என்று சிலாகித்திருந்தனர்.மண்டபத்தில் எல்லாம் சிறப்பாக முடிந்திருக்க மரக்கன்றுடன் கூடிய தாம்பூலப் பையையும் வாங்கிக்கொண்டு ஒவ்வொருவராக வெளியேற...மணி ஐந்தை நெருங்கும் சமயம் மணமக்களை மட்டும் அஸ்வினின் காரில் அனுப்பி வைத்த.பெரியவர்கள் நால்வரும் இன்னும் நெருங்கிய உறவினர்களும் வேறு,வேறு கார்களில் அஸ்வினின் வீட்டை நோக்கிக் கிளம்பினர்.

டிரைவர் வண்டியை ஓட்டி வர பின் சீட்டில் மனைவியோடு அமர்ந்திருந்த அஸ்வின் ஜன்னல் புறம் திரும்பி அமர்ந்திருந்த மதியின் வெற்றிடையில் கை கொடுத்து இழுத்து,தன்னை ஒட்டி அமர்த்தி,அவளை தன் புறம் திருப்பி,தன் உதடு அவள் செவியில் உரச. கிறக்கக் குரலில்"ஐ லவ் யூ மதி" என்றவன்."ஐ வாண்ட் எ கிஸ்"! எனக் கேட்டான்....இடையில் பதிந்திருந்த கணவனின் கை மதியின் தளிர் மேனியை துடிக்க வைக்க,உதடு உரசிய காது மடல் குறுகுறுக்க,அவன் முத்தம் வேண்டும் என்றதோ மதியின் மனதை பதற வைத்தது.வழக்கம் போல் அவன் செய்கையில் அவளிடம் புதிதாய் சேர்ந்துள்ள பயம் தலைதூக்க!மெதுவாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்..அது கார் என்பதை உணர்ந்து...'கார்ல வர்றப்ப கூட இவங்க அடங்க மாட்டாங்களா'என்று மனதிற்குள் புலம்பி.டிரைவரை திரும்பிப் பார்க்க அவளையே பார்த்திருந்த அஸ்வின்....."ஓ ட்ரைவர் இருக்காங்கன்னு பாக்குறியா?அப்ப சரி வீட்ல போய் மத்தத வச்சுக்கலாம்".என்று அவள் வயிற்றில் புளியைக் கரைத்து அவள் இடையில் இருந்த கரத்தை தோளுக்கு உயர்த்தி அணைத்தவாறு அமர்ந்து விட, மதிக்குத்தான் அதற்குமேல் அமர முடியாமல் போனது.... அவளை பார்வையிட்ட படி...அவன் உல்லாசமாக அமர்ந்து வர,அவள் நெளிந்தவாரே அமர்ந்திருக்க...ஒரு வழியாக மணமக்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

அதை வீடு என்றே சொல்ல முடியாது. வெள்ளை மாளிகை என்று தான் கூற வேண்டும்...அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அஸ்வினின் வசதியையும், அவனின் ரசனையையும் பறைசாற்றியது. அன்று சுபாவோடு வந்திருந்தாலும் இன்று அஸ்வினின் மனைவியாக அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவளுக்கு அவனின் உயரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.அப்படிப் புரிந்ததாலேயே... 'இவ்வளவு வசதியா இருக்குறவங்க ஏ நம்மள மாதிரி ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க'... என்று கலங்கினாள் மதி.

ஜாதி மதம். இனம் மொழி. ஏழை பணக்காரன். முதலாளி தொழிலாளி. கருப்பன் வெள்ளையன்...இப்படி எந்தப் பாகுபாடும்.காதல் என்னும் காற்றாற்று வெள்ளத்துக்கு அணையிட முடியாது... என்பதை அறியாதிருந்தால் அந்தப் பேதை...
அக்காவின் நிலையை எண்ணி.தன் இதயத்திருடனின் உள்ளத்தை உணராதிருந்தாள் மதி...

மணமக்களுக்கு ஆழம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்று விளக்கேற்றி விட்டு, அமர வைத்து பாலும் பழமும் கொடுத்தவர்கள்....அஸ்வினை அவன் அறையிலும்,மதியை தன் அறையிலும் ஓய்வெடுக்குமாறு அனுப்பிவிட்டு இரவுச் சமையலை கவனிக்கச் சென்று விட்டார்... சுபா.
தன் அன்னை மதியை அழைத்துச் செல்லவும் தன் அறைக்கு வந்தவன் கட்டிலில் சாய்ந்து மதியையே நினைத்தவாறு லேசாகக் கண்ணயர்ந்தான்....அஸ்வின்.

சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள் குளித்து உடைமாற்றி இரவு சாப்பாட்டையும் முடித்து வர.அவர்களுக்கான முதலிரவு அறை தயாராகி இருந்தது.ரோஜா,மல்லிகை, சம்பங்கி போன்ற வாசனைப் பூக்களைக் கொண்டு.ஸ்டார் ஹோட்டல் அறைகளைக் கூடத் தோற்கடிக்கும் அஸ்வினுடைய மிகப் பெரிய அறையை ரம்யமாக அலங்கரித்திருந்த சுபா...மேஜையில் இனிப்புகளையும் பழங்களையும் அடுக்கி இருந்தார்.
உணவருந்திய அஸ்வின்... மனையாளைப் பார்த்து 'சீக்கிரம் வா' என்று சைகை காட்டி விட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட... மதியை அழைத்து அவள் தலையில் மல்லிகைச் சரத்தை சூட்டி கையில் பால் டம்ளரை கொடுத்த அன்னையையும், அத்தையையும் மருகியவாறு பார்த்திருந்த மதி! தன் அத்தையை நோக்கி "அத்த இன்னக்கி மட்டும் நான் என் அம்மா கூடத் தூங்கட்டுமா?"என்று தயங்கியவாறு கேட்டாள்.

மகளையே பார்த்திருந்த லக்ஷ்மி "இப்படியெல்லாம் பேசக்கூடாதுடா" என்று பதற அவரை அமைதிப்படுத்தி.மகளாய் நினைக்கும் மருமகளை தன் அறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்த சுபா....
"இங்க பாருடா மதி"முதலிரவு என்பது ஒவ்வொரு ஆண் பெண் வாழ்க்கையிலும் பின்னாட்களில் பொக்கிஷ நினைவுகளில் சேரக் கூடியது.மணமக்கள் கூடலை தெரிந்துகொள்ளும் முன்பாக,ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதே மிகவும் இன்பமானதாக இருக்கும்.அஸ்வின் உன்னுடைய கணவன் அவனைப் பாத்து நீ பயப்பட வேண்டாம்... அவன் உன்ன கஷ்டப்படுத்த மாட்டான், உன் மனதில் இருப்பதை அவனிடம் சொல்லம்மா,அவன் புரிந்து கொள்வான். என்று பல புத்திமதிகள் கூறி மதியை அவள் கணவன் அறைக்கு அனுப்பி வைத்த சுபா..கடவுளே காப்பாத்துப்பா என்று பெருமூச்சு விட்டார்.

தன் அறைக்குள் காத்திருந்த அஸ்வின்... மெதுவாக வந்த மனையாளை பார்வையாலே வரவேற்றவன்...அவளைத் தாண்டிச் சென்று அறைக்கதவை தாளிட்டு வர,தயங்கியவாறு அவனிடம் பால் டம்ளரை நீட்டினாள் நம் இனியாள்.
தன்னை நோக்கி நீண்ட கரத்தைப் பற்றி அதில் இருந்த டம்ளரை வாங்கி மேஜையில் வைத்தவன். அவள் அருகில் நெருங்கி நின்று அவளை தலை முதல் கால் வரை எக்ஸ்ரே பார்வை பார்த்து.... "பட்டுப் புடவையில் நீ ரொம்ப அழகுன்னு நெனச்சேன்டி... ஆனா இந்த ஷிபான் புடவையில் ரொம்ப ரொம்ப அழகா இருக்க பேபி"!என்று உருகியவாறு பற்றி இருந்த அவளின் பொன்கரத்தில் மெல்ல தன் இதழ்களை பதித்தான்...அஸ்வின். மனையாளின் எழில் அழகை விழிகளால் படமெடுத்தவாறு கரத்தில் தொடங்கிய முத்திரையை மேல் நோக்கி நகர்த்திய கணவனைப் பார்த்து மதிக்கு மூச்சை அடைத்தது...

அஸ்வினிடம் தன் எண்ணத்தை தெரிவித்து தங்களுக்கான கூடலுக்கு கொஞ்சம் அவகாசம் கேட்க நினைத்தவள் பேச வாய்ப்பே கொடுக்காத கணவனின் செய்கையில் தடுமாறி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பேச்சு வராது நிற்க...கணவனின் சூடான இதழ் தன் கழுத்தில் பதியவும் சுதாரித்து,சுபா கொடுத்த தைரியத்தில் தொண்டையைச் செருமி"என்னங்க"என்றழைத்தாள்.

அவள் மெதுவாக அழைத்தாலும் அவளையே பார்த்திருந்தவன் அவள் தன்னை அழைக்கவும் நிமிர்ந்து என்னவென்று?வினவினான்.அவன் செயலை நிறுத்தி நிமிர்ந்து என்னவென்று கேட்க... அவனைப் பார்த்தவள் "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்"... "அதுக்கென்ன அப்புறம் பேசலாம்"என்று அவன் விட்ட வேலையை தொடங்குவதற்குள்..."இல்ல இப்பவே பேசணும்!"என்று கொஞ்சம் உரக்கவே கூறினாள் மதி.

மனைவி பேசணும் என்று கூறவும் கட்டிலில் அமர்ந்தவன், மதியையும் தன் அருகில் அமர்த்தி அவள் விரல்களை வருடியவாரே...
"சொல்லு மதி என்ன விஷயம்"என்று வினவினான்.
விரல் அவனிடம் சிக்கியிருந்ததால் உள்ளே போன குரலில் பேச ஆரம்பித்த மதி. "நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்,இவ்ளோ சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல,நம்ம ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாம் என்று மதி இழுக்க"

"எதெல்லாம்"என்று அவன் இழுத்தான்!

அவனுக்கு மதி இப்படி தயங்கித் தயங்கிப் பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருந்தது... அவன் முதன் முதலில் சந்தித்த மதி இவள் அல்லவே,அவளுடைய அக்கினிப் பார்வையை அவன் மிஸ் பண்ணினான்.

கணவன் புரிந்தும்,புரியாதது போல் கேட்பதை உணர்ந்த மதி மௌனம் காக்க அஸ்வினே தொடர்ந்தான்..."அதாவது திருமணம் முடிந்தும் என்னை திருநீலகண்டர் விரதம் இருக்கச் சொல்கிறாய் அப்படித்தானே"??என்று வினவி."ஆனால் நான் நீலகண்டர் இல்லையே"!எனக் கூறி அவளைக் கலங்கடித்தவன்...."கார்ல வர்றப்போ வீட்டுக்குப் போய் தர்ரேன்னு சொன்ன முத்தத்த பஃஸ்ட் கொடு" என்று அவளே முத்தம் தருகிறேன் என்று சத்தியம் செய்தது போல் கேட்டு.அவள் இதழைப் பார்க்க.

அவன் மனையாளுக்கு நன்கு புரிந்து போனது, தன் கணவன் தான் நினைத்ததை நடத்தாமல் விடப்போவதில்லை என்று.

முகத்தில் ஏமாற்றம் படற அவனைப் பார்த்தவள் அவன் பார்வை இதழ்களைத் தாண்டி கீழே இறங்கவும் சட்டென்று எழுந்து கொண்டாள்...அஸ்வின் தன் கையைப் பற்றி இருப்பதை மறந்து மதி வேகமாக எழவும்...அஸ்வினும் கையை விடாது இழுக்கவும் கட்டிலில் அவன் மேலேயே சரிந்தாள்.

மதி தன் மேல் சரியவும் பேலன்ஸ் இழந்து இரு கையிலும் மதியை அணைத்தவாறு அவனும் கட்டிலில் சரிய அவன் மேல் மதி சரிந்திருந்தாள் இருவரும் அதே நிலையில் இருக்க... அவன் மேல் படர்ந்திருந்த மதிக்கு கணவனிடம் இருந்து வந்த ஆஃப்டர் சேவ் லோசன் வாசனையோடு கூடிய ஆண் வாசம்,அவள் நாசியை நிறைத்து கன்னி மனதை கலைக்க... வெகு அருகில் தெரிந்த க்ளீன் சேவ் முகத்துக்கு கவர்ச்சியைக் கூட்டும் அடர்த்தியான மீசையும், அவனின் ஆழமான கண்ணக்குழியும்...'ஆண்களும் இவ்வளவு வசீகரமாக இருப்பார்களா?என்று தனை மறந்து ரசித்திருக்க....

தன்னையே விழியெடுக்காது பார்த்திருந்த மனையாளின் பார்வை அவனுக்கு ஒரு ஆணாக கர்வத்தை கொடுக்க...அவனின் உணர்ச்சிகள் சிலிர்த்தெழுந்து.மதியின் கொடியிடையைச் சுற்றி இருந்த கரங்களை எடுத்து மதி மயங்கியிருந்த மனையாளின் மலர் முகத்தை ஏந்தியவன்...

அவளின் பிறை நெற்றியில் மிருதுவாக முத்தமிடத் தொடங்கி....அவளின் மூடிய இமைகள், நாசி,கன்னம் என்று முத்திரையை இறக்கி...இறுதியில் மதியின் செம்பவள உதடுகளையும் தன் முரட்டு இதழ்களால் முற்றுகையிட்டிருந்தான்!அஸ்வின்.

வேங்கையின் முற்றுகை தொடரும்🌹

"Friends 11 எபி போட்டுட்டேன் ஸ்டோரி படிக்கிறவங்க எப்படி இருக்குனு சின்னதா உங்க கருத்தை சொன்னீங்கனா அடுத்த எபி எழுத எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்...வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. By roja🌹
 
asasa11
asasa11

Members online

Latest Updates

Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}